Friday, January 21, 2022

HANUMAN CHALISA

 ஜெய்  ஹனுமான்  -   நங்கநல்லூர்   J K  SIVAN 


ஹனுமான்  பிராணவாயு.  ஆக்ஸிஜன்.  சீதையை கண்டுபிடித்து  ராமனுக்கும்  சீதைக்கும்  புத்துயிர் அளித்தவன். லக்ஷ்மணன் மற்றும் வானரசேனை மயங்கி உயிரிழந்த நிலையில் பறந்து சென்று நொடியில்  சஞ்சீவினி எனும் மூலிகை கொணர்ந்து அனைவரையும் உயிர் பெற உதவியவன். இன்றும் எண்ணற்ற பக்தர்களை கணக்கில்லாத துன்பங்களிலிருந்து மீட்டு  நல்வாழ்வு அளிப்பவன், என்றும் நிரந்தரமான சிரஞ்சீவி. எங்கெல்லாம் ராம சப்தம் கேட்கிறதோ, அத்தனை இடங்களிலும் ஒரே சமயத்தில் காற்றாக விரைந்து  செவி குளிர கேட்க  அலுக்காதவன்.  

அவனைப்பற்றி  40  ஸ்லோகங்கள் எழுதியவர்  ராமபக்தர் துளசிதாசர். அதற்கு  ஹனுமான் சாலிஸா என்று பெயர்.  பால் குடிக்கும் குழந்தைகள் கூட  யு ட்யூபை திறந்தால்  ஹனுமான் சாலீஸா ஒப்பிக்கிறார்கள்.  அனுப் ஜலோதா  வரை  ஹனுமான் சாலீஸாவை ராகமாக நெஞ்சை அள்ளும்படி  பாடியவர்கள், பாடுபவர்கள் எண்ணமுடியாதவர்கள். அனைவருக்கும் என் நமஸ்காரம்.

ஹனுமான் சாலீஸா  எழுதும் முன்பு சில  அதிசய விஷயங்கள்:  

18வது ஸ்லோகத்தில்  "
जुग सहस्र जोजन पर भानू। लील्यो ताहि मधुर फल जानू॥ १८ ॥
juga sahasra jojana para bhānū।  līlyo tāhi madhura phala jānū॥ 18 ॥
யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ |லீல்யோ தாஹி மதுர பல ஜானூ || 18 ||

துளசி தாசர் என்ன சொல்ல வருகிறார்?
 ஒரு யுகம்  = 12000 years.   ஸஹஸ்ரம்  என்றாலே 1000 என்று உங்களுக்கு தெரியும்.   ஒரு யோஜனை என்பது 8 மைல் .ஆக ,  ஒரு யுகம் X ஸஹஸ்ரம் X யோஜனை  = 12000 x 1000 x 8 miles = 96000000 miles
இப்போதெல்லாம் மெட்ரிக்  அளவில்  ஒரு மைல் என்பது 1.6kms. அப்படியென்றால்  96000000 miles = 96000000 x 1.6kms = 96000000 miles/1536000000 kms  பூமியிலிருந்து உயரே  தூரத்தில் உள்ள  சூரியன்.  துளசி தாசருக்கு இங்கிலிஷ், நமது  விஞ்ஞான  பாடங்கள்  தெரியாது.தூரதர்சினி கருவி எதுவுமில்லை, மரத்தடியில்,  கங்கை ஆற்றங்கரையில் ஓலைச்சுவடியில் எழுதுபவர். அவர் சொன்ன கணக்கும்  அமெரிக்காவில் NASA  விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்வதும்   ஏறக்குறைய ஒன்றாகவே இருப்பது எப்படி?  
அது தான் பகவானால் கொடுக்கப்பட்ட ஞான திருஷ்டி. குட்டி ஹனுமான் அவ்வளவு உயரம், தூரம்  தாவி, சூரியனை தொட்டு சூடு பட்டவன்.

ஏற்கனவே  காயத்ரி மந்த்ரம்  பற்றி எழுதும்போது சில  அளவுகள், தூரங்கள், அதன் சக்திய  அதிசயங்களை கூறியிருக்கிறேன். காயத்ரி மந்த்ரம் உச்சரித்தால்   ஒரு நொடிக்கு 110,000  ஒலி அலைகள் பிறக்கிறது. மிகச்சிறந்த சக்தி வாய்ந்த மந்திரம். ஆன்மீக சக்தியை அளிக்க வல்லது.
தென்னமெரிக்காவில் சூரினாம்  எனும்  நாட்டில்  அவரகளது ரேடியோ பரமாரிபோ தினமும் மாலை 7 மணிக்கு 15 நிமிஷங்கள்  காயத்ரி மந்திரத்தை ஒலிபரப்புகிறது.  ஆனால் அது பிறந்த பாரத தேசத்தில் காயத்ரி ஜபம்  செய்கிறவர்களை  விரல் விட்டு எண்ணிவிடலாம்.   பூணலை அறுக்க சிலர்  ஒரு முக்கிய காரியமாக  அலைகிறார்கள்.
காயத்ரி மந்திரத்தை பற்றிய  முந்தைய கட்டுரையை மீண்டும்  எழுதுகிறேன்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...