Friday, January 7, 2022

SURDAS

 ஸூர்தாஸ் -   நங்கநல்லூர்  J K  SIVAN 


7. நான்  பிருந்தாவன  வாசி  

பிருந்தாவனம்  ஒரு  முறை செல்லலாம்  என்று  ஏற்பாடுகள் செய்தபோது கொரோனா குறுக்கிட்டு  அதுமுதல் இன்றுவரை  மறுபடியும்  செல்ல  இயலவில்லை.  என்றோ  ஒருநாள்  அது நிறைவேறும்  என்று நம்பிக்கைக்கு சுடர் விடுகிறது.  பிரிந்தவனமும் நந்தகுமாரனும்  மொபைல்  போனில் ஒலித்தபிறகே  என்னுடன்  பேச இயலும்.   மனதிலேயே  பிருந்தாவனம், அதற்குள் கிருஷ்ணன் ராஸலீலை அனுபவிக்க முடியுமே.  


ஒரு கேள்வி. 

எத்தனை நாள்,  மாசம், வருஷம் உபவாசம் இருந்தாயே,   நிர்ஜலமாக நீர் கூட பருகாமல்...ஊர் ஊராக போய் எத்தனை புண்ய நதிகள், தீர்த்த ஸ்நானம் செய்தாயே,  டயரியில் குறித்து வைத்திருப்பாயே. அப்படியெல்லாம் செய்தும்  கிருஷ்ணனை அனுபவிக்க முடிந்ததா? இதெல்லாம்  தலையைச் சுற்றி மூக்கை தொடுவது  ஆகும்.

ஒரு
 கணமாவது  அந்த  நந்தகுமாரனை, யசோதா நந்தனை நாவினிக்க மனங்குளிர நினைத்து  ஒரு வரியாவது  பாடினது,  போற்றினது  உண்டா?  அது  போதும்.   ஆஹா, ஓரிருமுறையாவது   அற்புதமான  கிருஷ்ணன் திருநாம பஜனை, சுகம் சங்கீதமாக கேட்கும்போது  எப்படி  மனம் பாகாக  உருகுகிறது. எப்படி  கண்களில் தாரை தாரையாக பக்தி  பரவசம் ஆறாக  பெருகுகிறது?

 இதை விட்டு,  உபவாசம்,  ஸ்னானம்  என்று மேலே சொன்ன உடல் சம்பந்தப் பட்ட விஷயங்கள் பலனளிக்குமா? மனதில்லாமல்  உடல் மூலம்  இறைவனை அடையமுடியாது.   ஸ்ரவணம் காது   வழியாக , கிருஷ்ணனை நெஞ்சில் நிரப்புவது. புரிகிறதா? அவன் சரண கமலத்தை மனதில் இருத்திக் கொள். நீயே கதி கிருஷ்ணா என்று உன்னை அவனுக்கு மனதாரக்  கொடு.

 

நந்தலாலா உன் மனதில் குடி  புகுந்து விட்டால், மூன்று லோகமும் கூட ஒரு துரும்புக்கு சமமாகும். நந்தகுமாரன் இருந்த யமுனாநதி தீரத்தில் பிருந்தா வனத்தில் ஒரு முறையாவது  நின்று கைகூப்பும் ஆனந்தம் கிடைத்தால் ஸ்வர்கத்தில் இட ம் இருக்கிறது வா என்றால் கூட நான்  போகமாட்டேன்.  நீயே  அங்கே  இருந்துகொள் என்று  சொல்லி விடுவேனே .

ஆமாம் ஸூர் தாஸ் தான் அழகாக சொல்கிறாரே
    ''ஹரியை மனதில் நினைத்தவன்  அந்த கணமே  பிரிந்தாவனவாசி  ஆகிவிடுகிறான்.  ரொம்ப சரி. உண்மை.'

 jo sukh hot Gopaalahin gaaye
so nahin hot kiye jap tap ke kotik teerath nhaaye
diye let nahin chaari padaarath, charan kamal chit laaye
teeni lok trin sam kari lekhat, nand-nandan ur aaye
banseebat brindaaban jamunaa, taji baikunth ko jaaye
soordaas hari ko sumiran kari, bahuri na bhav chali aaye.

                  

 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...