Tuesday, January 18, 2022

MOOKA PANCHASATHI

 மூக பஞ்சஸதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆர்யா சதகம்   ஸ்லோகம் 21-30 

पुरतः कदा न करवै पुरवैरिविमर्दपुलकिताङ्गलताम् ।
पुनतीं काञ्चीदेशं पुष्पायुधवीर्यसरसपरिपाटीम् ॥ २१॥

21. Puratha kadha nu kara vai pura vairi vimardha pulakithanga lathaam,
Punathim Kanchi desam pushpa aayudh veerya sarasa pari paatim.

புரதஃ கதா ன கரவை புரவைரிவிமர்தபுலகிதாங்கலதாம் |
புனதீம் காஞ்சீதேஶம் புஷ்பாயுதவீர்யஸரஸபரிபாடீம் ||21||

பரமேஸ்வரனை ஸ்படிகத்திலான லிங்கம்,  பாதரசத்தாலானது,  சந்திரகாந்தக் கல்லால் ஆனது,  ஹிமயமலைக் கல்லாலானது, மரகதக்  கல்லால் ஆனது என்று பார்க்கும்போது  சிவன் தெரிய  மாட்டார். அந்தந்த  உலோகம், கல், வஸ்து  மட்டும் தான் தெரியும்.  அம்பாள்,   தானே  மண்ணெடுத்து கையினால்  பிடித்து வைத்த  சிவலிங்கத்தை அவள் மண்ணாக பார்க்கவில்லை. அதை அருவத்தின் உருவமாக பார்த்தாள்,  உமாமகேஸ்வரன் அவளுக்கு மணலாக இல்லாமல்  மஹேஸ்வரனாக தென்பட்டான். அவனைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தாள். ஆசையாக ஆலிங்கனம் செய்து  கொண்டாள். எல்லாவற்றிலும் உள்ள சர்வேஸ்வரன் மண்ணிலும்  தன்னை அவளுக்கு  காட்டினான். காஞ்சி  நகருக்கே பெருமை தரும் ஏகாம்ரநாதர்,   காமராஜபீடம், சக்தி ஸ்தலம் ஆகியவை.  அம்பாள் காஞ்சிபுராதீஸ்வரி. மன்மதனுக்கு உயிரளித்து, அவன் ஆயுதங்களை தானும் கையில் ஏந்திய  காமாக்ஷியை  தரிசனம் செய்யும் பாக்யம் கிடைக்குமா? என்று ஏங்குகிறார் மூகர் .

पुण्या काऽपि पुरन्ध्री पुङ्खितकन्दर्पसम्पदा वपुषा ।
पुलिनचरी कम्पायाः पुरमथनं पुलकनिचुलितं कुरुते ॥ २२॥

 22. Punyaa kaapi purandhri punghitha kandharpa sampadhaa vapushaa,
Pulinachari Kampaaya pura madhanam pulaka nichulitham kuruthe.

புண்யா கா‌உபி புரன்த்ரீ புங்கிதகன்தர்பஸம்பதா வபுஷா |
புலினசரீ கம்பாயாஃ புரமதனம் புலகனிசுலிதம் குருதே ||22||

காமாக்ஷி எனும் பாலை, கையில் மன்மத பாணங்கள் , கரும்பு தநுஸு ஏந்திக்கொண்டு  ஆனந்தமாக  கம்பா நதிக்கரையில் நடக்கிறாள்.  ஆங்காங்கே  காணும்  மணல் திட்டுகள் மேல் ஏறி இறங்கி அமர்ந்து  தனிமையில் இனிமை காண்கிறாள். எங்கும்  காணும்  புதுமை, எளிமை, வளமை அவள் மனத்திலுள்ள  கருணை,  அன்பை  பிரதிபலிக்கிறது.   உடல் இப்படி நடமாடுகிறதே தவிர அம்பாளின் உள்ளம் சதா  அந்த சதாசிவனையே  நினைத்து  அவனை காண்பதெப்போ என்று தேடுகிறது. ஏங்குகிறது.


तनिमाद्वैतवलग्नं तरुणारुणसम्प्रदायतनुलेखम् ।
तटसीमनि कम्पायास्तरुणिमसर्वस्वमाद्यमद्राक्षम् ॥ २३॥

  23. Thanimadvaitha valagnam tharunaa aruna sampradhayatha anulekham,
Thata seemini Kampayaa tharunima sarvaswam aadhyam adraksham.

தனிமாத்வைதவலக்னம் தருணாருணஸம்ப்ரதாயதனுலேகம் |
தடஸீமனி கம்பாயாஸ்தருணிமஸர்வஸ்வமாத்யமத்ராக்ஷம் ||23||

அதோ போகிறாளே , கம்பா நதிக்கரையில்   நீர் கலந்த மிருதுவான  வெண்ணிற  மணலில்  கால்களை  அளைந்து  கொண்டு. ஆஹா  மெதுவாக  செல்லும்போதும் என்ன அழகு.  
துடியிடை, ஒடிந்துவிடும் இடை  என்பார்களே, அது இந்த சிவந்த ரோஜா இதழ் நிற  அழகியிடம் தான் காண்கிறது. இவ்வளவு இளமையான  அழகிய  அம்பாள்  உதயகால சூரியன்  மாதிரி ஜொலிக் கிறாள்.அவளை  தரிசிக்க என்ன பாக்யம் செய்திருக்கிறேன்'' என்று வியக்கிறார்  மூகர். 

पौष्टिककर्मविपाकं पौष्पशरं सविधसीम्नि कम्पायाः ।
अद्राक्षमात्तयौवनमभ्युदयं कंचिदर्धशशिमौलैः ॥ २४॥

24. Poushtika karma vipaakam Poushpa saram savidasimni Kampaya,
Adraksham aatha youvanam abhyudhayam Kanchi dardasasimoulou.

பௌஷ்டிககர்மவிபாகம் பௌஷ்பஶரம் ஸவிதஸீம்னி கம்பாயாஃ |
அத்ராக்ஷமாத்தயௌவனமப்யுதயம் கம்சிதர்தஶஶிமௌலைஃ ||24||

இச்சையை தூண்டுபவன் காமன்.  மன்மதன். காமனின் ராஜ்யத்தில் நிறைந்து காண்பவர்கள் யௌவன மங்கைகள், தேக ஆரோக்யம் கொண்ட புஷ்டியான ஆண்கள். 

பார்த்துவிட்டால்  கண்ணை அதிலிருந்து அகற்ற முடியாமல் செய்யும் பொன்னிற மேனியன், பிறைச் சந்திரனை முடியில் சூடியவன், பித்தா பிறைசூடி  என்று பாட வைப்பவன், வர்ணிக்க முடியாத கம்பீரம், புஷ்டி, யௌவனம் நிறைந்த ஏகாம்ரநாதன்,  வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன்.  அப்படிப் பட்டவரின்  மேன்மையான மூர்த்தியை,  நடை பயிலும்  காமாக்ஷியை  கம்பா நதிக்கரை  பிரதே சத்தில் கண்குளிர  தரிசித்தேன். 
 
संश्रितकाञ्चीदेशे सरसिजदौर्भाग्यजा ग्रदुत्तंसे ।
संविन्मये विलीये सारस्वतपुरुषकारसाम्राज्ये ॥ २५॥

25. Samsritha Kanchi dese sarasija dourbhagya jagard uthamse,
SAmvinmae vileeye saaraswatha purushakara samrajye.

ஸம்ஶ்ரிதகாஞ்சீதேஶே ஸரஸிஜதௌர்பாக்யஜாக்ரதுத்தம்ஸே |
ஸம்வின்மயே விலீயே ஸாரஸ்வதபுருஷகாரஸாம்ராஜ்யே ||25||

நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தை அடைந்தவன், அங்கே என்ன பார்த்தேன்? விடியற் காலையில்  சூரியன் உதயத்தில் காத்திருந்து மொட்டவிழ்ந்து கண் திறந்த மலர்கள், இரவில் சூரியன் மறைந்ததும்,  தாமும் கண்களை மூடிக்கொள்கிறது.  சூரியன் நண்பன், சந்திரன் வேண்டாதவன்.  காஞ்சி கம்பாநதி  தீரத்தில் காமாக்ஷி அம்பாள் சூரியன் போல  ஜொலிக்கிறாள், ஒளிர்கிறாள்.  சந்திரனை பார்க்க தேவையில்லை. அவளே  சந்திர பிம்பம் தானே என்று சொல்வதை விடை  சந்திரன் ஒளி பெறுவது அவளாலே என்று சொல்லலாம்.   இந்த பிரதேசமே  அம்பாளின் சாம்ராஜ்யம். அவள் தான் மஹா ராணி. ஆட்சி புரிபவள்.  மதுரையை அரசாளும் மீனாக்ஷி  போல் காஞ்சியை அரசாளும் காமாக்ஷி.

मोदितमधुकरविशिखं स्वादिमसमुदायसारकोदण्डम् ।
आदृतकाञ्चीखेलनमादिममारुण्यभेदमाकलये ॥ २६॥

26. Modhitha Madhu kara vishikham swadhima samudhaya sara kodandam,
Adhrutha Kanchi kelanm aadhimam aarunya bhedhamaakalaye.

மோதிதமதுகரவிஶிகம் ஸ்வாதிமஸமுதாயஸாரகோதண்டம் |
ஆத்றுதகாஞ்சீகேலனமாதிமமாருண்யபேதமாகலயே ||26||

ஏன்  காமாக்ஷியை  சுற்றி இத்தனை  வண்டுகள், தேன்  உறிஞ்சிகள்?  காரணம் சொல்லவா வேண்டும்.  மது நிறைந்த இதழ் விரிந்த மலர்களை பாணங்களாக   கைகளில் வைத்திருக்கிறாளே , தேன்  சிந்துதே அவற்றிலிருந்து.      வண்டுகள் தேன்  உறிஞ்சிகள் வேறு எங்கும் போய் தேட வேண்டாமே , அவள் அழகை ரசித்துக்கொண்டே  வயிறு முட்ட குடிக்கலாமே.  இது போதாது என்று கையில் கரும்பு வில் வேறு.  அதன் இனிமை எட்டு ஊருக்கு  எல்லா இனிமை விரும்பிகளையும்   ஈர்க்குமே .  பக்தர்களுக்கு கண்ணுக்கும் சுவை, நாவிற்கும் இனிமை.  எவ்வளவு அழகு நிறைந்த  சிவப்பி, இளம் மங்கை கம்பா  நதிக்கரையில் ஆனந்தமாக நடமாடிக்  கொண்டு செல்கிறாள். பார்க்க ஆயிரம் கண்கள் போதாது. கரம் சிரமேற் குவித்து  ஆனந்தமாக  த்யானிக்கிறேன்.

उररीकृतकाञ्चिपुरीमुपनिषदरविन्दकुहरमधुधाराम् ।
उन्नम्रस्तनकलशीमुत्सवलहरीमुपास्महे शम्भोः ॥ २७॥

 27. Uraree kutha Kanchi pureem Upanishad aravinda kuhara Madhu dharam,
Unnamrastha kalaseemuthsava laharimupasmahe Shambho.

உரரீக்றுதகாஞ்சிபுரீமுபனிஷதரவின்தகுஹரமதுதாராம் |
உன்னம்ரஸ்தனகலஶீமுத்ஸவலஹரீமுபாஸ்மஹே ஶம்போஃ ||27||

புஷ்பங்களிலிருந்து  தேன் பெருகி  வழிந்து  ஓடுவது என்று சொன்னது உதாரணம்.  அவள் தான் அம்ருத கலசம்.  அவளிடமிருந்து பெருகி வெளியேறுவது தான் வேதங்களின் சாரமான
 உபநிஷத்துக்கள் என்னும்  தேன்  சாறு.  குருவான  பரமேஸ்வரனுக்கு  மகிழ்ச்சி தரும், ஆனந்தமளிக்கும்,   காஞ்சி  மாநகருக்கு பெருமை தரும் காமாக்ஷியை  தரிசிக்க  பாக்யம் செய்தேன். 

एणशिशुदीर्घलोचनमेनःपरिपन्थि सन्ततं भजताम् ।
एकाम्रनाथजीवितमेवम्पददूरमेकमवलम्बे ॥ २८॥

  28. Yena sisy deerga lochanam yena paripandhi santhatham namathaam,
Yekamra nadha jeevitham yevam pada dooramekam aavalambhe.

ஏணஶிஶுதீர்கலோசனமேனஃபரிபன்தி ஸன்ததம் பஜதாம் |
ஏகாம்ரனாதஜீவிதமேவம்பததூரமேகமவலம்பே ||28||

மான்குட்டி கண்களைப்  போல் மிரள  மிரள விழிக்கும் அழகை எப்படி சொல்வேன்?   அவளை எப்போதும் தேடி தரிசிக்கும் பக்தர்களின் பாபங்களை போக்கும்  அந்த  கடைக்கண் பார்வையை என்ன சொல்லி வர்ணிப்பேன்?  அம்பாளின் ஸ்வரூபம் இப்படி தான் என்று எவராலுமே  சொல்ல முடியாதே. நான் எப்படி சொல்வேன்.    அவள்  ஏகாம்ர  ஈஸ்வரனின் பிராணன். மூச்சுக்காற்று.  எட்டாத உயரத்தில் இருப்பவளை என்ன வென்று சொல்வேன். நான் தரையில் விழுந்து நமஸ்கரிப்பது ஒன்றே சரி.

स्मयमानमुखं काञ्चीभयमानं कमपि देवताभेदम् ।
दयमानं वीक्ष्य मुहुर्वयमानन्दामृताम्बुधौ मग्नाः ॥ २९॥

 29. Smayamana mukham Kanchi maya maanam kamapi devathaa bedham,
Dhayamanam Veekshya muhurvaya mananda amrudhambhudhou magnaa.

ஸ்மயமானமுகம் காஞ்சீபயமானம் கமபி தேவதாபேதம் |
தயமானம் வீக்ஷ்ய முஹுர்வயமானன்தாம்றுதாம்புதௌ மக்னாஃ ||29||

அம்பாளின் எழில் நிறைந்த புன்னகை காஞ்சி நகரையே புத்துணர்ச்சி பெற வைக்கிறது.  கருணையே உருவெடுத்த தெய்வம் அந்த அற்புத மங்கை.  எவ்வளவு முடியுமோ  அவ்வளவு அவள் முக தரிசனம் பெற்று ஆனந்த சாகரத்தில் மூழ்குவது ஒன்றே எனக்கு பிடித்த  வேலை.

कुतुकजुषि काञ्चिदेशे कुमुदतपोराशिपाकशेखरिते ।
कुरुते मनोविहारं कुलगिरिपरिबृढकुलैकमणिदीपे ॥ ३०॥

30. Kuthuka jushi Kanchi dese kumudha thapo rasi paka shekharithe,
Kuruthe mano vihaaram kula giri paribruda kulaika mani dheepe.

குதுகஜுஷி காஞ்சிதேஶே குமுததபோராஶிபாகஶேகரிதே |
குருதே மனோவிஹாரம் குலகிரிபரிப்றுடகுலைகமணிதீபே ||30||

அம்பாள், காமாக்ஷி,   ஹிமவான்  புத்ரி. குலத்துக்கு பெருமையளிக்கும் வகையில்  அந்த ஸ்த்ரீ ரத்னம்  காஞ்சியில் மஹாராணியாக  பெருமை சேர்க்கிறாள். ஆஹா,   காஞ்சியில் வசிக்கும் அவளும்  உற்சாகமாக இருக்கிறாள், அவள்  ஆட்சியில் வசிப்பவர்களையும்.  உற்சாகமாக, ஆனந்தமாக இருக்கச் செயகிறாளே. சரியான குல ரத்னம் அவள்.  நீலோத்பல மலர்களை
 ஆனந்திக்கச் செய்யும்  சந்திரனை பிறையாக சூடிய  மகேஸ்வரன் மனது நிறைந்தவளே, பிறவி எடுத்த பயனை உன்னை தரிசித்து த்யானம் செய்வதின் மூலம் அடைந்து விட்டேன் தாயே. 
     


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...