Sunday, January 16, 2022

SURDAS

 


ஸூர்தாஸ் - நங்கநல்லூர்  J K  SIVAN

11.  அன்புக்கு நீ அடிமை

எதெல்லாம் உயர்ந்தது என்று பல நாள் யோசித்தேன். புனிதமான இதயத்தில் நிரம்பிய அன்பு, பிரேமை யாரிடம் வைக்கிறோமோ அது மட்டுமே மற்ற எல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று உணர்ந்தேன்.   அளவற்ற  பிரேமை  உன்மேல் எனக்கு  உள்ளதால், கண்ணா, அதை உநாக்கே  அர்ப்பணித்தேன். அது ஒன்றே உன்னையும் என்னையும் கெட்டியாக பிணைத்துள்ளது.

நீ இதை யாரிடமெல்லாம் கண்டு உன் மனதை பறிகொடுத்தாய் என்றும் எனக்கு தெரியும். ஞாபகப் படுத்தட்டுமா கிருஷ்ணா?

சமாதானம் பேச தூது சென்றாயே அப்போது யார் வீட்டில் தங்கினாய்? விரும்பி  எங்கே ஆகாரம் உண்டாய்? விலையுர்ந்த சுவையான அபூர்வ பழங்கள், உணவுகள் உனக்கு அளிக்க துரியோதனன் முன் வந்தானே, ஒரு கணமும் யோசிக்காமல் ''நன்றி,  துரியோதனா வேண்டாம், நான் விதுரன் குடிசைக்கு செல்கிறேன். அவருடன் பேசி நாளாயிற்று'' என்று பதிலளித்து விட்டு,  விதுரன் அளித்த பழங்களின் தோலை மட்டுமே உண்டாய். இது மட்டுமா? நீயே முன் அவதாரத்தில் ராமனாக இருந்தபோது அதே போல் சபரி எனும் காட்டில் வாழ்ந்த முதியவள் அளித்த பழங்களை ரசித்து ருசித்து உண்டவன் அல்லவா?.

''சபரி, நீ கொடுத்த பழங்கள் போல் இனிய பழங்கள் நான் சாப்பிட்டதே இல்லை '' என்றவன் ஆயிற்றே..

''ஐயோ , அர்ஜுனன் தவறு செய்யாமல் என்னை மட்டும் கேட்க வேண்டுமே, முட்டாளாக என் படைகளை தான் வேண்டும் என்று கேட்டு  விடக் கூடாதே என்று துடித்து, நீ உள்ளூர கவலைப்பட, அவன் நீ விரும்பியபடியே, '' கிருஷ்ணா, உனது நாராயணி சேனை எனக்கு தேவை இல்லை. எனக்கு நீ மட்டுமே ஆயுதம் தாங்காத தேரோட்டியாக இருந்தால் போதும்'' என்று துணிந்து கேட்டானே .

எல்லோராலும் மதிக்கப்பட்ட விருஷ்ணி யாதவ குல பேரரசன், சர்வ சக்தி வாய்ந்தவன் நீயும் அவனுக்கு தேர்ப்பாகனாக தேர் தட்டில் கீழே அமர்ந்து அவனது காலின் கீழே இருந்து தேரை செலுத்தினாயே . அது எதனால்??
மனமொப்பிய அன்பினால், பிரேமையால், நட்பின் பாசத்தால் மட்டும் அல்லவா?
நீ எங்கே? ஒன்றுமறியாத பாமர சாதாரண பிருந்தாவன கோபியர் எங்கே?
அவர்களோடு ஒருத்தனாய் கை கோர்த்து விளையாடியதும் அவர்கள் உன் மேல் வைத்த பாசத்தாலும் கள்ளங்  கபடற்ற நேசத்தாலும், அன்பாலும், கவரப்பட்டதால் தானே.

அன்புக்கு அடிமையான உன்னை இந்த  ஸூர்தாஸ் எவ்வளவு கடுமையாக வார்த்தைகளால் நிந்தாஸ்துதியாக பாடுவதும் கூட உன் மேல் உள்ள அபரிமித அன்பினால் மட்டுமே தான் என்று உனக்கு தெரியுமல்லவா?
நீ எல்லா சக்திகளிலும் மிக உயர்ந்த சக்தி, என்று தெரிந்தும் உன் மேல் கொண்ட பரிவினால் பாசத்தால், பக்தியால் தானே தீன ரக்ஷகா, நான் உரிமை கொண்டாடுகிறேன்.
சூர்தாஸின் அந்த அற்புத பாடல் இது தான்

सबसे ऊंची प्रेम सगाई, सबसे ऊंची प्रेम सगाई ।
दुर्योधन के मेवा त्याग्यो, साग विदुर घर खाई । सबसे ऊंची प्रेम सगाई ।
जूठे फल शबरी के खाये,बहु विधि स्वाद बताई । सबसे ऊंची प्रेम सगाई ।
राजसूय यज्ञ युधिष्ठिर कीन्हा, तामे जूठ उठाई ।सबसे ऊंची प्रेम सगाई ।
प्रेम के बस पारथ रथ हांक्यो, भूल गये ठकुराई । सबसे ऊंची प्रेम सगाई ।

ऐसी प्रीत बढ़ी वृन्दावन,गोपियन नाच नचाई । सबसे ऊंची प्रेम सगाई ।
प्रेम के बस नृप सेवा कीन्हीं, आप बने हरि नाई । सबसे ऊंची प्रेम सगाई ।

Sabase Unchi Prem Sagai, Sabase Unchi Prem Sagai ।
Duryodhan Ke Mewa Tyagyo, Saag Vidur Ghar Khai । Sabase Unchi Prem Sagai । 
Joothe Phal Shabari Ke Khaye, Bahu Vidhi Swad Batai । Sabase Unchi Prem Sagai ।
Rajasuy Yagy Yudhishthir Keenha, Tame Jooth Uthai । Sabase Unchi Prem Sagai ।
Prem Ke Bas Parath Rath Hankyo, Bhool Gaye Thakurai । Sabase Unchi Prem Sagai ।
Aisi Preet Badhi Vrindavan, Gopiyan Nach Nachai । Sabase Unchi Prem Sagai ।
Prem Ke Bas Nrap Sewa Keenhin, Aap Bane Hari Nai । Sabase Unchi Prem Sagai ।
Soor Kroor Ehi Layak Nahin,Kehi Lago Karahun Badai । Sabase Unchi Prem Sagai ।

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...