Tuesday, January 4, 2022

ADHI SANKARA

 ஆதி சங்கரர்  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

பகவான் ஸ்ரீ கிருஷ்ண மானஸ பூஜா ஸ்தோத்ரம் - 2

दशाङ्गं धूपं सद्वरद चरणाग्रेऽर्पितमिदं
मुखं दीपेनेन्दुप्रभ विरजसं देव कलये ।
इमौ पाणी वाणीपतिनुत सुकर्पूररजसा
विशोध्याग्रे दत्तं सलिलमिदमाचाम नृहरे ॥ ५ ॥

Dhasangam dhoopam sadwaradhacharanograrpithaye,
Mukham deepenandu prabha varajasa deva kalaye,
Imou paanee vane parinutha sa karpoora rajasa,
Vishodhyagre daham salila midhamaachama nruhare., 5

I am offering at your feet the smoke coming from ten incenses,
I am showing the light of camphor kept in a small cup at your face,
And Oh God who is worshipped by Brahma, please accept this water,
Offered with my hands, rubbed with divine camphor and do achamanam.

த³ஶாங்க³ம் தூ⁴பம் ஸத்³வரத³ சரணாக்³ரே(அ)ர்பிதமயே
முக²ம் தீ³பேனேந்து³ப்ரப⁴வரஜஸா தே³வ கலயே |
இமௌ பாணீ வாணீபதினுத ஸகர்பூரரஜஸா
விஶோத்⁴யாக்³ரே த³த்தம் ஸலிலமித³மாசாம ந்ருஹரே || 5 ||

என் மனதில் உன்னை முழுசாக நிறுத்தி, இருத்தி, உனக்கு பூஜை பண்ணுகிறேன். இதோ இருக்கிறதே, கமகமவென்று எட்டு ஊருக்கு நறுமணம் வீசுகிறதே இதன் பெயர் தசாங்கம். பத்து வித விதமான மூலிகைகளைக் கொண்டது. இதை பொசுக்கினால் நறுமணப் புகை கனமாக உன்னை சூழ்ந்து கொண்டு உன்னை நறுமண லோகத்தில் கொண்டு வைக்கிறது பார். கற்பூரம் ஏற்றி உனக்கு ஓங்கார வடிவத்தில் ஹாரத்தி காட்டுகிறேன். உன்முகம் கற்பூர ஜோதியில் பிரகாசிப்பதை காண எவ்வளவு என் மனதில் சந்தோஷம் தெரியுமா?. கோவில்களில் அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நெய்வேத்தியம் ஸ்தோத்ரம் எல்லாம் முடிந்து இந்த கற்பூர ஹராத்திக்காக மணிக்கணக்காக காத்திருக்கும் ஹிந்துக்கள் புண்யசாலிகள்.சிருஷ்டி கர்த்தா ப்ரம்மா வணங்கும் பரந்தாமா, இதோ உனக்கு  வாய் கொப்புளிக்க என் இரு கரங்கள் நிறைய பரிசுத்த ஜலம் , பச்சை கற்பூரம் போட்டு நீட்டுகிறேன் வாங்கி வாய் நிறைய கொப்புளித்து விட்டு  துப்பு. பொழுது விடிந்து விட்டதே..

सदा तृप्तान्नं षड्रसवदखिलव्यंजनयुतं
सुवर्णामत्रे गोघृतचषकयुक्ते स्थितमिदम् ।
यशोदासूनो तत् परमदययाऽशान सखिभिः
प्रसादं वाञ्छद्भिः सह तदनु नीरं पिब विभो ॥ ६ ॥

Sadha thrupthannam shadrasava dakhila vyanjana yutham,
Suvarnamathre gho grutha chashaka yukthe sthithamidham,
Yasodha soono thathapara madhayayasyana sakhibhi,
Prasadam vanchadhbhi saha thadhanu neeram pibha vibho., 6

ஸதா³ ம்ருஷ்டான்னம் ஷட்³ரஸவத³கி²லவ்யஞ்ஜனயுதம்
ஸுவர்ணாமத்ரே கோ³க்⁴ருதசஷகயுக்தே ஸ்தி²தமித³ம் |
யஶோதா³ஸூனோ தத்பரமத³யயா(அ)ஶா ஸஸகி²பி⁴꞉
ப்ரஸாத³ம் வாஞ்ச²த்³பி⁴꞉ ஸஹ தத³னு நீரம் பிப³ விபோ⁴ || 6 ||

யசோத நந்தனா, வாசலில் பார்  உன்னுடைய எத்தனை நண்பர்கள் விஷமக்காரர்கள் உனக்காக காத்துக் கொண்டு நிற்கிறார்கள். அவர்களுக்கும்    சேர்த்து இதோ கொண்டுவந்திருக்கிறேன் பார்  பதினாறு வகை சுசி ருசியான தின்பண்டங்கள். பண்டம் பதினாறு  என்றாலும்  ருசி அறுசுவை தான்!. உருக்கிய பசுநெய்க்கே தனி மணம் எப்போதும்  உண்டு.. ஒரு தங்கக்கிண்ணம் நிறைய அதை கமகம என்று மணக்க வைத்திருக்கிறேன். உணவில் வேண்டியமட்டும் கலந்து கொள் . நிறைய வாசமிகு குடிநீர் வேறு வைத்திருக்கிறேன்.

सचूर्णं ताम्बूलं मुखशुचिकरं भक्षय हरे
फलं स्वादु प्रीत्या परिमलवदास्वादय चिरम् ।
सपर्यापर्याप्त्यै कनकमणिजातं स्थितमिदं
प्रदीपैरारार्तिं जलधितनयाश्लिष्ट रचये ॥ ७ ॥

Sachurnam  thamboolam mukha ruchikaram bakshaya hare,
Phalam swadhu preethyaparimala vadaswaadhaya chiram,
Saparya paryapthai kanaka mani thala sthithamidham,
Pradheepai raaraarthim jaladhi thanayaslishta rachaye., 7

ஸசூர்ண தாம்பூ³லம் முக²சுசிகரம் ப⁴க்ஷய ஹரே
ப²லம் ஸ்வாது³ ப்ரீத்யா பரிமளவதா³ஸ்வாத³ய சிரம் |
ஸபர்யாபர்யாப்த்யை கனகமணிஜாதம் ஸ்தி²தமித³ம்
ப்ரதீ³பைராரார்திம் ஜலதி⁴தனயாஶ்லிஷ்ட ருசயே || 7 ||

வயிறார திருப்தியாக அறுசுவை உண்டிக்கப்புறம் விருந்துபசாரத்தில்  என்ன கொடுப்பார்கள்? கல்யாணத்தில், பெரிய விழாக்களில், விருந்திற்கு பிறகு தட்டு நிறைய தாம்பூலம்.  துளியூண்டு பச்சைக்கற்பூரம் தொட்டு தடவிய  வெற்றிலைக்கு, வாசனையான  சுண்ணாம்புக்கு  தூளாக்கிய  வாசனை பாக்குக்கு,   எத்தனை நறுமணம்.  ஹே . ஹரி நானும் உனக்கு வாசமிகு பழங்களைத் தோல் சீவி,துண்டாக்கி, வித விதமான ருசியுள்ளவைகளை ஒரு தங்கத்தட்டில் வைத்திருக்கிறேன் பார். அந்த தட்டில் தான் எத்தனை நவரத்ன மணிக் கற்கள் பளபளவென்று கண்ணைப் பறிக்கிறது பார். உன்னைச்சுற்றி சரம் சரமாக நெய் தீபங்கள் ஏற்றி அதில் அவை தரும் ஒளியில் எல்லாமே திவ்யமான காட்சி. நீ தீபாவளிக்காரன் ஆச்சே. உனக்கு தீபம் எவ்வளவு பிடிக்கும் என்று அறிவேன். சமுத்ரராஜன் தனயை எனும் ஸ்ரீ லட்சுமி பாற்கடலில் தோன்றியவள் பக்கத்தில் இருந்து உன்னை எவ்வளவு ஆசையோடு அணைக்கிறாள்!

विजातीयैः पुष्पैरतिसुरभिभिर्बिल्वतुलसी-
युतैश्चेमं पुष्पाञ्जलिमजित ते मूर्ध्नि निदधे ।
तव प्रादक्षिण्यक्रमणमघविद्ध्वंसि रचितं
चतुर्वारं विष्णो जनिपथगतिश्रान्तिद विभो ॥ ८ ॥

Vijaatheeyai pushpai rabhisurabhir vilwa thulasi,
Yuthaischemam pushpanjalimajitha they moordhni nidhadhe,
Thava pradhikshinya kramana makha vidwamsi rachitham,
Chathurvaram vishno janipadha gathi sranthi vidhusha., 8

விஜாதீயை꞉ புஷ்பைரதிஸுரபி⁴பி⁴ர்பி³ல்வதுலஸீ
யுதைஶ்சேமம் புஷ்பாஞ்ஜலிமஜித தே மூர்த்⁴னி நித³தே⁴ |
தவ ப்ராத³க்ஷிண்யக்ரமணமக⁴வித்⁴வம்ஸி ரசிதம்
சதுர்வாரம் விஷ்ணோ ஜனிபத²க³திஶ்ராந்த விது³ஷாம் || 8 ||

எத்தனை வித மலர்கள் இருந்தாலும் உனக்கென்றே ஒரு தனி அபிமானம் எதற்கு என்று நான் நன்றாக அறிவேன். அதனால் தான் நிறைய பச்சை பசேலென்று புதிதாக பறித்த வாசமிகு துளசி, வில்வம் ரெண்டையும் கொண்டு வந்திருக்கிறேன். நீ ஹரிஹரன், அவற்றால் உன் சிரசை அலங்கரிக்கிறேன். எவராலும் வெல்ல முடியாத உன்னை என் மனதால் வென்று விட்டேன். ஆதி அந்தமில்லா அற்புதமே, ஆதிமூலமே, நான் உன்னை நான்கு முறை மனதால் ப்ரதக்ஷிணம் செய்கிறேன். என் சர்வ, சகல பாபங்களையும் நீக்குபவன் நீ ஒருவனே அல்லவா?

नमस्कारोऽष्टाङ्गस्सकलदुरितध्वं सनपटुः
कृतं नृत्यं गीतं स्तुतिरपि रमाकान्त सततं ।
तव प्रीत्यै भूयादहमपि च दासस्तव विभो
कृतं छिद्रं पूर्णं कुरु कुरु नमस्तेऽस्तु भगवन् ॥ ९ ॥

Namaskaroshtanga sakala duritha dwamsana patu,
Krutham nruthyam sthuthirapi ramakantha tha imam,
Thave preethyai bhooya dehamapicha dasa sthava vibho,
Krutham chidhram poornam kuru kurunamasthesthu Bhagawan., 9

நமஸ்காரோ(அ)ஷ்டாங்க³꞉ ஸகலது³ரிதத்⁴வம்ஸனபடு꞉
க்ருதம் ந்ருத்யம் கீ³தம் ஸ்துதிரபி ரமாகாந்த த இத³ம் |
தவ ப்ரீத்யை பூ⁴யாத³ஹமபி ச தா³ஸஸ்தவ விபோ⁴
க்ருதம் சி²த்³ரம் பூர்ணம் குரு குரு நமஸ்தே(அ)ஸ்து ப⁴க³வன் || 9 ||

ஆணானவன் ஆணவம் போக அஷ்ட அங்கங்ககள், எட்டு பாகங்கள் உடலில் பூமியில் பதியுமாறு நமஸ்காரம் பண்ணவேண்டும். எல்லா துன்பங்களிலிருந்து விடுதலை பெற,  லக்ஷ்மிபதே, லக்ஷ்மி நாராயணா, உன்னை போற்றுகிறேன், பாடுகிறேன், ஆடுகிறேன், நான் உன் அடிமை, ஒரு விளையாட்டு பொம்மை அல்லவா? நான் என்ன தப்பு தவறுகள் செய்கிறேன் என்று எனக்கே தெரியாது. அவற்றை பொறுத்து என்னை ஆட்கொள்ளவேண்டியது உன் பொறுப்பு.

सदा सेव्यः कृष्णस्सजलघननीलः करतले
दधानो दध्यन्नं तदनु नवनीतं मुरलिकाम् ।
कदाचित् कान्तानां कुचकलशपत्रालिरचना-
समासक्तः स्निग्द्धैस्सह शिशुविहारं विरचयन् ॥ १० ॥

Sada sevya Krishna sajala Ghana neela karathale,
Dhadhano dhadyannam thadanu navaneetham muralikaam,
Kadachith kanthaanaam kucha kalasa pathrali rachana,
Samasaktham snighdhou saha shishu viharam virachayan., 10

ஸதா³ ஸேவ்ய꞉ க்ருஷ்ண꞉ ஸஜலக⁴னநீல꞉ கரதலே
த³தா⁴னோ த³த்⁴யன்னம் தத³னு நவனீதம் முரளிகம் |
கதா³சித்காந்தானாம் குசகலஶபத்ராளிரசனா
ஸமாஸக்த꞉ ஸ்னிக்³தை⁴꞉ ஸஹ ஶிஶுவிஹாரம் விரசயன் || 10 ||

எனக்கு பொழுது விடிந்தால் மீண்டும் பொழுது மறையும் வரை கிருஷ்ணா, கார்மேக வண்ணா, கைகளில் நிறைய வெண்ணை, தயிர்சாதம்,  ஓரத்தில் புல்லாங்குழல் கொண்ட மன்னா, உன் நினைப்பு ஒன்று தான். உனக்கு சேவை செய்வதே என் விருப்பம். விஷமம் விளையாட்டில் உன் சகாக்களோடு உனக்கு நிகர் எவர்?

मणिकर्णीच्छया जातमिदं मानसपूजनम् ।
यः कुर्वीतोषसि प्राज्ञः तस्य कृष्णः प्रसीदति ॥ ११ ॥

Mani karnee chaya jatha midham Manasa poojanam,
Ya kurvee thoshasi pragna thasya krishna praseedhathi., 11

மணிகர்ணேச்ச²யா ஜாதமித³ம் மானஸபூஜனம் |
ய꞉ குர்வீதோஷஸி ப்ராஜ்ஞஸ்தஸ்ய க்ருஷ்ண꞉ ப்ரஸீத³தி ||

ஹே  கிருஷ்ணா, உன்னை மேலே சொன்னவாறு   கங்காஜலம் போன்ற பரிசுத்த மனத்துடன்  
உன்னை  எவன் உணர்ந்துகொண்டு, விடிகாலை  ப்ரம்ம முகூர்த்தத்தில்  வணங்குகிறானோ, அவனை உனக்கு பிடிக்குமல்லவா?  இந்த  10 ஸ்லோகங்களில்  ஆதி சங்கரர்  ஸ்ரீகிருஷ்ணனை  பூஜிப்பது படுக்கும்போதே  நமக்கு எவ்வளவு  ஆத்மானந்தத்தை தருகிறது.  நிறைய பேருக்கு சொல்லுங்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...