நம் உடம்பு: நங்கநல்லூர் J K SIVAN
மணி மணியான விஷயம்.
அவசியம் அவசியம் அவசியம் படிக்கவேண்டும்.
இந்த உடம்பு நம்முடையது என்று பெருமைப்பட நமக்கு யோக்கியதையே இல்லை. அற்புதமான இந்த உடலை நாம் கேட்காமலேயே, நமக்கு ஒன்றும் தெரியாமலேயே, எல்லோருக்கும் சரி சமமாக இறைவன் அளித்திருக்கிறான். ஒரு நிமிஷம் கூட நாம் அவனை இந்த உடம்பை கொடுத்ததற்காக நன்றி சொல்வதில்லை. அருமையாக அவன் கொடுத்ததை, அலக்ஷியமாக அல்பத்தனமாக நாம் கெடுத்துக் கொள்கிறோம்.
நமது உடம்பு எப்படி செயல் படுகிறது என்பதை ஆராய்ச்சி செய்த பல விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள் என்று அறிந்து கொள்வோம்.
நமது உடலில் எத்தனையோ பாகங்கள் இருக்கிறது. அவற்றின் பெயர், உருவம், அவற்றின் வேலை, கானால் நமக்கு கிடைக்கும் நன்மை எதையும் நாம் தெரிந்து கொள்ள முயல்வதில்லை.
பிறந்தது முதல் கடைசியில் நாலு பேர் தோளில் பிரயாணம் வரை அது எதையும் எதிர்பாராமல், எப்படி செயல்படுகிறது என்பதை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் மணி மணியாக நம் உடலின் சில பாகங்கள் எப்படி, எப்போது, செயல்படுகிறது என்று சொல்கிறார்கள். படியுங்கள்.
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்று கண்டுபிடித்து அதை கடிகார முள்ளினால் சுற்றவைத்து கையில் கட்டிக்கொள்ள கண்டுபிடித்தவனும் ஒரு விஞ்ஞானி. இப்போது கைக்கடிகாரம் மறைந்து போய்விட்டது. எல்லாமே மொபைலில் இருக்கிறதே.
நம் உடம்பில் முக்கியமான சில பாகங்களையும் அவை எப்போது எப்படி வேலை செய்கிறது என்பதை மட்டும் அறிவோம்.
நம் உடம்பில் ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் வேலையை செயது முடிக்க ரெண்டுமணி நேரம் கேட்கிறது. கரெக்ட்டாக அந்த ரெண்டு மணிநேரத்தில் தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த உறுப்புக்கு கடிகாரத்தை தந்து விடுகிறது.
1. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை
இது நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் மூச்சை நன்றாக இழுத்து விட்டு, சுவாசப் பயிற்சி செய்து காற்றில் உள்ள பிராணவாயுவை உடலுக்குள் நிறைய சேகரித்தால் நமது ஆயுள் நீடிக்கும். தியானம் செய்ய அருமையான நேரம் இது. பாவம், ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
2. காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை
இது நமது உடம்பில் உள்ள பெருங்குடலின் நேரம். அவசரப்படாமல் காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
3. காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
மஹாராஜா வயிற்றின் நேரம் இது. இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் ஜீரணமாகும். BREAKFAST எனும் காலை உணவை ராஜா மாதிரி போல சாப்பிட வேண்டும் என்பார்கள். எதை கடித்து விழுங்கினாலும் நன்றாக ஜீரணம் ஆகிவிடும்.
4. காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை
இது SPLEEN மண்ணீரலின் நேரம். நாம் காலை உணவாக சாப்பிட்டதை எல்லாம் ஜீரணம் செய்யும் வேலை இந்த மண்ணீரலுக்கு. சாப்ப்பிட்ட தோசை, இட்டலி, ரொட்டியை உடலில் ஊட்ட சத்துவாக மாற்றும், ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. அதனால் மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
5. முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை
இது நமது இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,
அதிகமாகப் படபடத்தல் எதுவும் செய்யக்கூடாது. ஆமாம். கண்டிப்பாக. அதனால் இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
அதிகமாகப் படபடத்தல் எதுவும் செய்யக்கூடாது. ஆமாம். கண்டிப்பாக. அதனால் இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
6. பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை
SMALL INTESTINES சிறு குடலின் நேரம் இது. இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
7. பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை.
சிறுநீர்ப்பையின் நேரம் இது. நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
8. மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
KIDNEY சிறுநீரகங்களின் நேரம். பகல் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபா டுகள் செய்ய சிறந்த நேரம்.
9. இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,
pericordium பெரிகார்டியத்தின் நேரம் இது. பெரிகார்டியம் இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் அதிர்வு தாங்கி என்று சொல்லலாம். Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
10.இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை
இது எந்த உறுப்பை பற்றியும் அல்ல. triple heater, ட்ரிபிள் energiser என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
11.இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை
பித்தப்பை gall bladder இயங்கும் நேரம். இந்த நேரத்தில் தூங்காமல் கண் விழித்திருந் தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
12.இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை
கல்லீரலின் liver நேரம் இது . இந்த நேரத்தில் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை அது செய்யும்போது நாம் குறுக்கே சென்று தொந்தரவு செய்வதால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவோம் என்கிறார்கள்.
No comments:
Post a Comment