தீர்த்த நாராயணர் J K SIVAN
தீர்த்த நாராயணர் ஒரு சித்த புருஷர். மஹா யோகி. பகவானின் அம்சம் என்றே சொல்லலாம். அவரைப் பற்றி நிறைய எழுத விஷயம் இருக்கிறது. அவரைப்பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன்.
250 -300 வருஷங்களுக்கு முன் வடக்கே, கிரி துர்க்கம் என்ற ஊரில் கங்காதர சாஸ்திரிகள், மங்களாம் பிகை தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் ஊரில் உள்ள ஒரு சிவன்கோவிலில் வேண்டிக்கொள்ள அனந்த பத்மநாபன் பிறந்து ஐந்து வயதில் உபநயனம், குருகுலவாசம். வேதாத்யனம் முடிந்து வீடு திரும்பி சின்னவயதிலேயே சங்கரசாஸ்திரி மகள் சுசீலாவோடு கல்யாணம். சிலநாளிலேயே க்ஷேத்ர யாத்திரை போக தீர்மானம்.
வாரணாசியில் டுண்டி விநாயகரிலிருந்து ஆரம்பித்து, கோகர்ணம் ,உடுப்பி, சுப்ரமணியா , எல்லாம் சென்று பூரி ஜகந்நாதர் தரிசனம். அனந்த பத்மநாபனின் பக்தி ஸ்தோத்ரம் ஜலப்ரவாஹம் போல் வெளிவந்ததில் மகிழ்ந்த ஜகந்நாதன், ''இனி நீ தீர்த்த நாராயணன்'' என்று நாமம் சூட்டினார். நமக்கு தீர்த்த நாராயணர் கிடைத்தார்.
சுப்ரமண்யாவில் முருகன் அதேபோல் அவர் ஸ்லோகத்தில் மகிழ்ந்து ' ஹே பக்தா, தீர்த்த நாராயணா, நீ சோழ தேசம் போ.ஒரு மஹானை தரிசிப்பாய். பிறகு நீ ஈஸ்வர ஸ்வரூபியாவாய்'' என்று அருளினான்.தீரத்த நாராயணர் சிதம்பரம் சென்றார். வழியில் கஞ்சனூரில் நடந்த அதிசயம் காதில் விழுகிறது கஞ்சனூர் செல்கிறார்.
கஞ்சனூரில் சிவன் பெயர் அக்னீஸ்வரர், அம்பாள் கல்பகேஸ்வரி. வைஷ்ணவர்கள் அதிகம் அங்கு இருந்தார்கள். அவர்களில் வாசுதேவாச்சாரியார் என்பவர் மகன் சுதர்சனன். அவன் வைஷ்ணவன் என்றாலும் அவர்கள் எதிர்ப்பை மீறி சிவாலயங்களுக்கும் செல்வான். வைஷ்ணவர்கள் கோபம்கொண்டு ஊர் ச்சபை கூடியது.
''சுதர்சனா , நீ செய்த கொடிய பாதக செயலுக்கு தக்க தண்டனை காத்திருக்கிறது. என்ன சொல்கிறாய்?''
''ஐயா, பெருமாளுக்கே குருவான பரமேஸ்வரனை ஆராதிப்பதில் என்ன தவறு?''
' ஓஹோ அப்படியா, கூரிய கழுவின் முனை மேல் உன்னை அமர்த்துகிறோம். உன் உடல் பாதிப்பு ஏதும் பெறாமல் மஹா விஷ்ணுவை காட்டிலும் சிவன் மேலானவன் என்று மூன்று முறை சொல்கிறாயா?''
''சரி''
வரதராஜர் சந்நிதி முன் தைரியமாக கழுவின் மேல் அமர்ந்து மூன்று முறை சொல்லவேண்டியதை சொன்னார். கழுவினால் எந்த பாதிப்பும் இல்லை. அக்னீஸ்வரர் அசரீரியாக ''இனி நீ ஹரதத்த சிவாச்சாரியார்'' என்று பட்டமளித்தார். அவர் மஹா விஷ்ணு அம்சம்.
''முருகன் சோழ தேசத்தில் ஒரு மஹானை சந்திப்பாய் '' என்று சொன்னது ஒருவேளை இந்த ஹரதத்த சிவாச்சார்யரைத்தானோ? என்று தீர்த்த நாராயணர் மனதில் கொண்டார். ஹரதத்தரை சந்தித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி ஆசி பெறுகிறார்.
''தீர்த்த நாராயணா, நீ சுப்பிரமணிய சுவாமி அனுக்கிரஹம் பெற்றவன்.சச்சிதானந்த ஸ்வரூபமாக விளங்கப்போகிறாய். சிலகாலம் ஹரதத்தரோடு கஞ்சனூரில் அக்னீஸ்வரரை வழிபடுகிறார். ஒரு நாள் கனவில் ஹரதத்தர் கைலாசம் போவது போல் காட்சி தோன்றுகிறது.
''குருவே நான் இப்படி ஒரு கனவு கண்டேன்.''
''தீர்த்தநாராயணா, உன் கனவு வாஸ்தவம். நான் பூலோக கைலாசம் போகப்போகிறேன்.'' அன்றே வடநாட்டு யாத்திரை கிளம்பிவிட்டார் ஹரதத்தர்.
தஞ்சாவூரில் ஒரு ஏழைப்பெண் தனது மூளை வளர்ச்சி இல்லாத மகன் குப்புவுடன் வாழ்ந்தாள்.
.கஞ்சனூர் சம்பவம் கேள்விப்பட்டு அவள் அவர் ஆசி பெற்று மகன் குணமடைய ஹரதத்தரை தேடி சென்றாள். அவரைக் காண முடியாவிட்டாலும் அங்கே தங்கி தினமும் அக்னீஸ்வரர் அபிஷேகத்துக்குக் குடம் குடமாக நீர் கொண்டுவருவது, சந்தனம் அரைப்பது போன்ற வேலையை செய்தான். பகவான் அக்னீஸ்வரர் அனுக்ரஹித்தார். ஆம் ஆலயத்தில் தீர்த்தநாராயணரை குப்பு சந்தித்து வணங்கினான்.
''குப்பு, அக்னீஸ்வரர் கிருபையால் உனது குறை நீங்கி விட்டது. இனி நீ குப்த சிவன் '' என்று ஆசிர்வதித்தார் தீர்த்தநாராயணர். குப்பு அவரை குருவாக ஏற்று, மந்த்ர சித்தி பெற்று மேன்மையுற்றான். திருவையாரைச்சேர்ந்த பஞ்சநதம் கஞ்சனூர் வந்து குப்தசிவனை தரிசித்து பஞ்சாக்ஷர உபதேசம் பெற்று திருவையாறு திரும்புகிறார். திருமழபாடியில் ஒரு மஹான் நிஷ்டையில் இருப்பது அறிந்து அவர் தான் குப்த சிவன் சொன்ன மஹான் என கருதி கை கட்டி நிற்கிறார் பஞ்சநதம்.
நிஷ்டை கலைந்த மஹான் எதிரே நிற்கும் பஞ்சநதத்தை பார்த்து ''நீ குப்த சிவன் அனுப்பினவனா?'' என்று கேட்டதும் அதிர்ந்து போகிறார்.
தீர்த்த நாராயணர் தொடர்வார்.....
THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Friday, March 13, 2020
THEERTTHA NARAYANAR
Subscribe to:
Post Comments (Atom)
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...
No comments:
Post a Comment