Monday, March 9, 2020

BALANCE




நிறைவும்  குறைவும்  J K SIVAN

''கடவுள்  நம்மைப் போலவே தானே  ஸார்?''

''அப்படித்தான்.  என்ன சந்தேகம்? உருவமில்லாதவருக்கு  நாம் வேண்டும்  உருவம்  நம்மைப்போலவே  கொடுத்திருக்கிறோமே ''

'' கடவுள்  சிரிப்பார், நகைச்சுவை பிடிக்கும்  இல்லையா?''

''என்ன இப்படி ஒரு கேள்வி . ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள். 

கடவுள் உலகை படைத்துக்கொண்டிருந்தார்.  அருகில் இருந்த ரிஷிகளுக்கு விளக்கமும் அளித்துக் கொண்டிருந்தார். 

''எல்லாமே  அதது சரியாக இருக்கவேண்டும். கூடவோ குறைவோ கூடாது.  ஒரு விகிதாச்சா ரமாக ஜீவன்கள் பிறக்கவேண்டும். நல்லது கேட்டது இரண்டும் சேர்ந்து இருக்கவேண்டும். அப்போது தான் எதை தேர்ந்தெருத்து அவன் அதன் மூலம் பலனை அனுபவிப்பான். தெரிந்து கொள்வான். நான் சொன்னால் புரியாது. தானாகவே  தெரிந்து கொள்ளவேண்டும்.''

''ஓஹோ  அப்படியா?''

''ஆமாம்  ஒரு பத்து மான்கள் படைத்தால் ஒரு சிங்கம் இருக்கவேண்டும்''

நாடு நகரங்கள் கூட  அப்படித்தான் உண்டாகி றதா?''

''பின்னே ?  இதோ அமெரிக்கா இருக்கிறது. அதை சுபிக்ஷமாக படைத்தாலும், அங்கே  ஜனங்கள் ஒரு பயத்தோடு,  ஒரு  பாதுகாப்பின்மை  அச்சத்தோடு தானே  வாழ்கிறார்கள்.  எப்போது எவன் எவனை எதற்காக கொல்வான்  என்றே  தெரியாதே''

ஆப்பிரிக்கா ...இயற்கை வளத்தோடு படைக்கப் பட்டது. ஆனால் அதே சமயம் இயற்கை தட்ப வெட்ப நிலை ஏறி இறங்கி சம சீதோஷ்ண நிலை இல்லை . சுகம் துக்கம் கலந்தது.

தென் அமெரிக்கா இதோ தெரிகிறதே. அங்கே பாருங்கள்.  நிறைய  காடுகள் கொடுத்தேன். அதே சமயம்  கொஞ்சமாக நிலப்பரப்பு. அதனால் காடுகளை வெட்டி அழிக்கிறார்கள். காடுகள் தரும் செல்வம் கு
றையத்தான் குறையும். 
 ஆகவே, ஒன்று கூடுதலாக இருந்தால் இன்னொன்று அதற்கேற்ப  குறைந்து  சமப்படுத்தும்.

பகவானே, இதோ தெரிகிறதே பளபளவென்று  ஒரு அருமையான நாடு.  அது என்ன?

அது தான்  இந்தியா, பாரத தேசம் என்பார்கள் அது. என்னுடைய சிறந்த படைப்பு''

அதில் என்ன விசேஷம்?''

''அருமையான ஜனங்கள், நட்போடு பழகுபவர் கள். நிறைய  நல்ல நீர் ஓடும் நதிகள், மலைகள் எல்லாம் கொடுத்திருக்கிறேன். ஒரு பண்பாடுடன்  வாழ  வழி தந்தேன்.  தொழில் நுட்பம், படிப்பு, எல்லாம் இருக்கிறது.  தங்க மனம் கொண்டவர் கள். ''

ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது என்று சொன்னீர்களே, இங்கே  எல்லாமே இருக்கிறதே. இதை எப்படி சமன் செய்திருக்கிறீர்கள். ''

''ஓ  அதற்கும் ஒரு குறை  உண்டே ''  என்று கடவுள் சிரித்தார் 

 உப தேவதைகள் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க  கடவுளே சொல்கிறார்:

''எல்லாம் அவர்களுக்கு கொடுத்தாலும்  அவர்கள் அருகே உள்ள அண்டை நாடுகளை  பாருங்கள்  இந்தியாவின் துன்பம் புரியும்''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...