Wednesday, March 11, 2020

NARAYANEEYAM




ஸ்ரீ நாராயணீயம் -      J K  SIVAN
தசகம்  1   - சுலோகம் 6 -10.


               
               ஸர்வம் கிருஷ்ணமயம் ஜகத்

 तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं
लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।
लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:
सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥

தத்தே ப்ரத்யக்₃ரதா₄ராத₄ரலலிதகலாயாவலீகேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜநத்₃ருஶாம் பூர்ணபுண்யாவதாரம்|
லக்ஷ்மீநிஶ்ஶங்கலீலாநிலயநமம்ருதஸ்யந்த₃ஸந்தோ₃ஹமந்த:
ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகா₃ரநாத₂ ||6||
             
குருவாயூரப்பா,  எனக்கு  உன்னை, உன் திவ்ய  சுந்தர ரூபத்தை தியானம் செய்வதைத்தவிர   வேறெதிலும் எனோ நாட்டமில்லை.  உன்னைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு   அழகிய,   சூல்கொண்ட  கருநிற மழை மேகங்களைத்  தான்  ஞாபகப்படுத்தும்.  எனக்கென்னவோ  சூரியகாந்தி  எப்போதும்  சூரியனையே  நோக்கி இருப்பதில் தான் அதன் அழகே  கண்ணைப் பறிக்கிறது. என் மனதும் அவ்வாறே,   உன் நினைவு ஒன்றிலேயே  பரிபூர்ண  ஆனந்தம் அடைகிறது.  நற் செயல்களால் விளையும்  பலனே  இப்படி ஒரு பிறவி எடுக்க உதவுகிறது.  அதுவே  பெரும் புண்யம். குருவாயூரப்பா  நினது கரிய காருண்ய தேகம் லட்சுமி விளையாடுமிடம்.  உன் திவ்ய தரிசனம்  பக்தர்களின் மனதில்  அம்ருத மழை. 1.6


कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा-
मित्येवं पूर्वमालोचितमजित मया नैवमद्याभिजाने।
नोचेज्जीवा: कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं
नेत्रै: श्रोत्रैश्च पीत्वा परमरससुधाम्भोधिपूरे रमेरन्॥७॥

கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா ப₃ஹுதரப₄வகே₂தா₃வஹா ஜீவபா₄ஜா-
மித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்₃யாபி₄ஜாநே|
நோசேஜ்ஜீவா: கத₂ம் வா மது₄ரதரமித₃ம் த்வத்₃வபுஶ்சித்₃ரஸார்த்₃ரம்
நேத்ரை: ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா₄ம்போ₄தி₄பூரே ரமேரந்||7||


''குருவாயூரப்பா,  உன் மேல்  ஒரு காலத்தில்  எனக்கு ஒரு வருத்தம்.  நீ  கல் நெஞ்சன் என்று. எதற்காக  துன்பத்தை தரும்  பிறவிகளை எல்லா ஜீவராசிகளும்  எடுத்து அனுபவிக்க வைக்கிறாய் என்று. பாவம் அதனால எவ்வளவு துன்பங்களை அன்றாடம் அவை சந்திக்கவேண்டி இருக்கிறது?  இப்போது எனக்கு அப்படி ஒரு எண்ணம் கிடையாது.  நிறைய  பிறவி எடுக்க எடுக்க தானே  உன்னை  உன் அழகை பரமானந்தத்தோடு கண்டு களிக்க உன்  பெருமைகளை மகிமைகளை காதார கேட்டு ஆனந்திக்க  இயலும்?  ஞானமும் வளரும்.  1.7

नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान -
प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च।
इत्थं निश्शेषलभ्यो निरवधिकफल: पारिजातो हरे त्वं
क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्॥८॥

நம்ராணாம் ஸந்நித₄த்தே ஸததமபி புரஸ்தைரநப்₄யர்தி₂தாந -
ப்யர்தா₂ந் காமாநஜஸ்ரம் விதரதி பரமாநந்த₃ஸாந்த்₃ராம் க₃திம் ச|
இத்த₂ம் நிஶ்ஶேஷலப்₄யோ நிரவதி₄கப₂ல: பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்₃ரம் தம் ஶக்ரவாடீத்₃ருமமபி₄லஷதி வ்யர்த₂மர்தி₂வ்ரஜோ(அ)யம்||8||

குருவாயூரப்பா,  உன்னிடம் எனக்கு பிடித்தது என்ன தெரியுமா,  உன் முன் நிற்போர்க்கு  அவர்கள் 
 வேண்டியது , அதோடு அவர்களுக்கு  எது வேண்டும்  என்று தெரியாததால்  உன்னிடம் வேண்டாதது  எல்லாவற்றையுமே வாரி வழங்குபவன்  நீ.   கேட்டதெல்லாம் தரும் கல்பவிருக்ஷம் நீ.  சுலபமாக அடைய முடியும். மோக்ஷத்தையும் கொடுக்கும். அப்படியிருக்க,  இதன் மஹிமையை அறியாமல்  ஏனோ  சில அஞ்ஞானிகள், அழியக்கூடிய பொருட்களைக் கொடுக்கும் இந்திர லோகத்தின்  இந்திரன் தோட்டத்தில்  இருக்கும் பாரிஜாத மரத்தை தேடுகிறார்கள்?1.8

कारुण्यात्काममन्यं ददति खलु परे स्वात्मदस्त्वं विशेषा-
दैश्वर्यादीशतेऽन्ये जगति परजने स्वात्मनोऽपीश्वरस्त्वम्।
त्वय्युच्चैरारमन्ति प्रतिपदमधुरे चेतना: स्फीतभाग्या-
स्त्वं चात्माराम एवेत्यतुलगुणगणाधार शौरे नमस्ते॥९॥

காருண்யாத்காமமந்யம் த₃த₃தி க₂லு பரே ஸ்வாத்மத₃ஸ்த்வம் விஶேஷா-
தை₃ஶ்வர்யாதீ₃ஶதே(அ)ந்யே ஜக₃தி பரஜநே ஸ்வாத்மநோ(அ)பீஶ்வரஸ்த்வம்|
த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத₃மது₄ரே சேதநா: ஸ்பீ₂தபா₄க்₃யா-
ஸ்த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகு₃ணக₃ணாதா₄ர ஶௌரே நமஸ்தே||9||

உண்ணி  கிருஷ்ணா,  குருவாயூரப்பா,  எனக்கு தெரிந்து மற்ற தெய்வங்கள் எல்லாமே  பக்தர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்பவர்கள்.  நீ ரொம்ப வேறே மாதிரி அப்பா,  நீ  அவர்களுக்கு அவர்கள்  அறியாமலேயே  மோக்ஷத்தையே  தருபவன்.   மற்ற தெய்வங்கள் உலகத்தை  அவர்கள் பெற்ற சக்தியால்  ஆளுமை செய்பவர்கள்.   வாசுதேவா  நீ  எப்படியப்பா  ஒவ்வொரு  ஆத்மாவிலும் புகுந்து அவர்களை ஆண்டு, அகிலத்தையும்  ஆண்டு, உன்னையும்  ஆண்டு கொள்கிறாய்.  ஜீவன்கள் அதிர்ஷ்டம் செய்தவை என்பதால் உன்னால்  பரமானந்தத்தை பெறுகின்றன. அதில் திளைக்கின்றன.  நீ தானே  பரமாத்மன். ஆனந்தஸ்வரூபன், உன்னை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறேன்.1.9

तेजस्संहारि वीर्यं विमलमपि यशो निस्पृहैश्चोपगीतम्।
अङ्गासङ्गा सदा श्रीरखिलविदसि न क्वापि ते सङ्गवार्ता
तद्वातागारवासिन् मुरहर भगवच्छब्दमुख्याश्रयोऽसि॥१०॥

ஐஶ்வர்யம் ஶங்கராதீ₃ஶ்வரவிநியமநம் விஶ்வதேஜோஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ருஹைஶ்சோபகீ₃தம்|
அங்கா₃ஸங்கா₃ ஸதா₃ ஶ்ரீரகி₂லவித₃ஸி ந க்வாபி தே ஸங்க₃வார்தா
தத்₃வாதாகா₃ரவாஸிந் முரஹர ப₄க₃வச்ச₂ப்₃த₃முக்₂யாஶ்ரயோ(அ)ஸி||10||

10. குருவாயூர் கிருஷ்ணா,  ப்ரம்மா  சிவன்  முதலான சகல தெய்வங்களும் தொழும்  தேவாதிதேவா,  சர்வ சக்தியும்  கொண்ட  சர்வேஸ்வரா, முற்றும் துறந்த முனிவர்கள் தேடும்  முழு முதல் தெய்வமே, ஸ்ரீ உன் மார்பில் வாசம் செய்யும்  ஸ்ரீ நிவாஸா, எங்கும் எதிலும்  நீ யாக இருந்தும் எந்த பற்றுதலும் இல்லாதவனே,   பகவான்  என்ற   சொல்லுக்கு  பாத்திரமானவனே, முரனை வதம் செய்த  முராரி.  கிருஷ்ணா முகுந்தா முராரே....1.10

இன்னும் வரும் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...