Friday, March 6, 2020

OLDYS PRAYER



                  ஒரு  பெரிசு  வேண்டுகிறது......J K  SIVAN 


கிருஷ்ணா   ஒரு நிமிஷம் நில்,  
நான் சொல்வதைக் கேள்.
எத்தனை  வருஷங்களாக  நான்  உன்னை விடாமல் தொடர்ந்து வழிபடுகிறவன். நினைத்துப்  பார்க்கிறேன்.  ஓ. எனக்கு இப்போது  81 ஆகி  82ஐ நெருங்குகிறேனா. அப்படியென்றால்   அரை நூற்றாண்டுக்கும் மேல்  தொடர்பு உடையவர்கள் இல்லையா?...
இப்போது தான் உன்னை சிலதுகள் கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது . 

''எனக்கு பேச்சு குறையவேண்டும். நிறைய பேசுகிறேன். அது நல்லதல்ல. சர்தார்ஜி, சினிமா, மற்றவரை கிண்டல் அடித்து  ஜோக் எல்லாம் பேசி   கேட்டது போதும்.  அலுத்துவிட்டது.  இனி  ஜோக் எதுவும் எனக்கு  கேட்க வேண்டாம், அதைப்பற்றி பேசவும் பிடிக்கவில்லை....  அவர் என்ன சொன்னார், இவர் என்ன சொன்னார் என்று மேற்கோள் காட்டுவதும் நின்று போகவேண்டும்.  
நீ என்ன சொன்னாய் என்பது மட்டும் மறக்காமல் இருக்கவேண்டும்.
யார் எதை செய்தாலும், எதை சொன்னாலும்  என் அபிப்ராயம் கூறுவேனே  அது இன்றோடு  ஸ் டாப் ..
அதால்   இழந்த  நிம்மதி கொஞ்சமா நஞ்சமா.....
 எது எப்படி நடக்கவேண்டுமோ  அது அப்படி உன் மூலம் தானே டா நடக்கிறது. அதில் என் அபிப்ராயம் எங்கே வந்தது?
அடுத்தவன் சமாச்சாரம் வேண்டாம். அவன் இப்படி செய்திருக்கவேண்டும், அப்படி செய்தது தப்பு, கூடாது  என்று சொல்வேனே அந்த ஆள்  இனி நான் இல்லை என்று ஆக்கிவிடு.
எனக்கு ரெக்கை கொடேன். உன் சம்பந்தப்பட்ட இடம் எல்லாம் பறந்து சென்று சீக்கிரம் பார்க்கவேண்டும்.
என் காதுகளை மட்டும் இன்னும் துல்லியமாக  கேட்க வைத்துவிடு.  பிறர் சொல்வதை கேட்கும்  பொறுமை வேண்டும். அது ஏனோ  இத்தனை வருஷம்  குறைந்து கொண்டே போய்விட்டது.   குறுக்கே நிறைய பேசுகிறேன்.  பிறர் கூறும் வலி, துன்பம்  அவர்களுக்கு குறைய வேண்டும் என்ற எண்ணம்  ஏற்படட்டும். என் வலி எனக்கு தெரிகிறதே.
என் உதடுகள் தேவையின்றி இனிமேல்  திறக்கக்  கூடாது.
என் வலி துன்பமே  ஊர்ப்பட்டது  இருக்கும்போது  மற்றவர் பற்றி குறை சொல்ல நான் யார். எங்கிருந்து யார் கொடுத்தார்கள் அந்த அதிகாரத்தை எனக்கு  என்று இதுவரை புரிந்துகொள்ளாமல் இருந்துவிட்டேன். 
என் வயதில் நிறையபேர்  அவர்கள் வியாதி நோய், துன்பம், தூக்கமின்மை, பசியின்மை பற்றி எல்லாம் விடாமல் பேசுகிறார்களே. நான் எவரிடமும் என் குறை சொல்ல கூடாது. உன்னைத்தவிர....
 வேறு யார் கேட்டு என்ன பண்ணமுடியும்? வயதானாலே  வியாதி பற்றிய பேச்சு தான் அதிகம்.  மற்றவர்களிடம் தனது வியாதி பற்றி சொல்வதில் அப்படி என்ன  ஒரு சுகம்?    அது சரி,.. ஆனால்
 கேட்பவர்களுக்கு?
கிருஷ்ணா  என்னை திருத்து. 
நான் எல்லோருக்கும் இனிய விஷயங்களை பற்றி மட்டுமே   சொல்ல, எழுத, நினைக்கச் செய்.
நான் ஞானியாக, ரிஷியாக முனிவராக, துறவியாக நிச்சயம் ஆகவே  முடியாது.  விருப்பமும் இல்லை. துறவிகளுக்கு எப்படியோ,தெரியாது..   மற்றவர்களுக்கு துறவிகளோடு  ஒரு நிமிஷம் கூட   ' ஜெல்'   ஆகாது.
எனக்கு சிந்திக்க தெரியட்டும். அதற்காக  எல்லோரையும் வெறுத்து கதவை சார்த்திக்கொண்டு உள்ளே உட்காரவேண்டாம்.நான்  அதிசய அபூர்வ பிறவி இல்லை. யோகி கிடையாது.
நான் எல்லோருக்கும் உதவுகிறேன். அதற்காக  யாரையும்  விரட்டி அதிகாரம் பண்ண மாட்டேன். சுதந்திரமாக செயல்படுவேன். பிறர் விரும்பும்படியாக. அன்போடு. எப்படி  நடந்து கொள்ளவேண்டும் என்று எனக்கு  தெரியவேண்டும்.  
வயது நிறைய ஆகிவிட்டது. எத்தனை வருஷங்கள் ஒன்றா இரண்டா....எண்பதுக்கு மேல்...
வயதானால்  அறிவாளிகளா.... நான்  அப்படி ஒன்றும் இல்லையே..
 என் அனுபவம் ஒரு பாடமா.... நிச்சயம் தவறுகளை திருத்திக்கொள்ள உதவுகிறது.
இதுவரை  நான் இன்னும்  ''திருந்தாத''  விஷயங்கள்  இருந்தால் என்னை கைதூக்கி மேலே இழுத்து விடு கிருஷ்ணா.  என் வாயில் வரும் பேச்சுகள் ரசிக்கும்படியாக இருக்கட்டும்.இல்லாவிட்டால் மௌனமாக இருக்கச்செய்,
எப்போது என் வாய் ஒரேயடியாக மூடும் என்பது உனக்குத்தானே  தெரியும்.  
 கிருஷ்ணா, அப்போது எனக்கு என்று ஒன்றிரண்டு நண்பர்களாவது இருக்க வேண்டாமா?
பிரார்த்தனை சக்தி வாய்ந்த ஒரு நல்ல உபகரணம்.   
தனது சித்தத்தை  உபயோகித்து  மனிதன் ஸ்வர்கத்தை  தனது போக்கில் மாற்ற எண்ணுவதை,  முயற்சிப்பதை  விட  கடவுள் சித்தத்தை  உலகத்தில் வாழும்போது   நம்பி, உபயோகித்து   சுகப்படலாமே. சரிதானே?.





:

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...