Sunday, March 15, 2020

KAALABAIRAVASHTAKAM




கால  பைரவாஷ்டகம்  J K SIVAN
ஆதி சங்கரர் 


   


அதியமான் கட்டிய  காலபைரவர் ஆலயம்  

கடை ஏழு வள்ளல்கள்  என்று  7 பேரை பற்றி  எங்கள் தமிழ் வாத்தியார்  கணபதி  ஒரு  மர  நாற்காலியில் தூங்கு மூஞ்சி மரத்தடியில் சொல்லிக் கொடுத்த  போது  அதை புரிந்து கொள்ளும் வயதில்லை. அதன் அருமை தெரியவில்லை.  ஏதோ பாடம், மனப்பாடம் பண்ணவேண்டியது. இல்லையென்றால் அடிப்பார் என்று தான் தெரிந்தது.  அதியமான் கடையெழு வள்ளலில் ஒருவன்  மனதில் பதிந்தான்.

அவன்  ஊர் தகடூர்.   கோட்டை கொத்தளத்துடன் வாழ்ந்த  குட்டி ராஜா அவனுக்கு பெரிய தாராள மான மனசு.இல்லை என்றால் வள்ளல் ஆக  முடி யுமா?  அவன் தாராளமானதுக்கு, பெரிய மனது பற்றி ஒரு சின்ன கதை சொல்ல வேண் டாமா ?

அவன் மேல் அன்பு கொண்ட  யாரோ ஒருவர்  அவனுக்கு ஒரு அபூர்வமான நெல்லிக் கனி  கொடுத்தார்கள்.   சாதாரண நெல்லிக்காய் அல்ல அது.   அதை சாப்பிட்டால்  நிச்சயம்  நூறு வயதுக்கு மேல்  வாழலாம் என்று காரண்டீ இருந்தது.  நெல்லி காய் சாறு  கொரோனா கிருமி நாசினியாம். யாரோ  வாட்சப்பில் சொன்னது நிஜம் தானா?   ஒரே ஒரு நெல்லிக்காய் இப்படி கிடைத்தால் நாம் என்ன செய்வோம். ரெண்டாம் பேருக்கு சொல்லாமல் டபக்கென்று விழுங்கி விட்டு  எத்தனை வருஷம் ஆகி விட்டது என்று எண்ணுவோம்? 

அதியமான் என்ன செய்தான்  தெரியுமா? 
 அவனுக்கு தமிழ் மேல் அவ்வளவு பற்று தாகம்.   அடிக்கடி அவனைத் தேடி புலவர்கள், கவிகள்  எல்லோரும் வருவார்கள். கை நிறைய பரிசுகள் கொடுத்து அனுப்புவான்.  ஒளவை அடிக்கடி அதியமானை த்தேடி வருவாள்.  அவளுக்கு அவன் தமிழ் தாகம் தெரியும். அவனுக்கு ஒளவையின் கவித்தைத்திறன் ரொம்ப பிடிக்கும். ஆகவே  அவன் நாளைக்கு ஒளவை வருவாளே ,அந்த நெல்லிக் கனியை  அவளுக்கு கொடுத்து அவள் உண்டால்  நீண்டகாலம் தமிழும் வாழுமே  என்ற எண்ணம்.  அவளுக்கு அதை கொடுத்தான். 
ராஜா  நீங்கள் ஏன் அதை சாப்பிடவில்லை  என்று மந்திரி  காரணம் கேட்டபோது, அந்த நெல்லிக் கனியைத் தான் உண்பதை விட   ஔவை உண்டால் ஔவையுடன் சேர்ந்து தமிழும் செழித்துச் சிறக்கும் என்று கூறினான்  அதியமான்.  அதியமான் ஒரு குட்டி ராஜ்யத்துக்கு ராஜா. அதிக படைபலம் இல்லை.    எதிரிகள்  படையெடுத்து எந்த நேரமும்  அவன் ராஜ்ஜியம் போய்விடும், அவனும் கொல்லப்படுவான்.  அதியமான் இப்படி கவலையில் மனநிம்மதி இல்லாமல்  இருந்தான்.  மனநிம்மதி கிடைக்கவும், பகை மன்னர்களால் ஆபத்து எதுவும் நேராமல் இருக்கவும் என்ன செய்யலாம் என்று ராஜ குருவையும் அமைச்சர் பிரதானிகளையும்  கலந்து ஆலோசித்தபோது   படைபலத்தையும் மீறி தெய்வ  சக்தி துணை இருந்தால் நல்லது . காவல் தெய்வமான கால பைரவர்தான் சரியான துணை  என்று  சொன்னார்கள். 

சிவாலயங்களில் ஈசான்ய மூலையில் நாய் வாகனத்துடன் காட்சி தரும் கால பைரவர்தான் தன்னையும் காப்பாற்றும் தெய்வம் என்று அறிந்ததும்  அதியமான்  கால பைரவருக்கு ஓர் ஆலயம் கட்ட  முனைந்தான்.  அமைச்சர்களில் சிலரை வீரர்களுடன் காசிக்கு அனுப்பி, கால பைரவர் சிலையை கொண்டு வர  செய் தான்.  கோயில் கட்டி ரெடியாக இருந்தது.  விக்ரஹம்  வந்தது. பிரதிஷ்டை ஆயிற்று. 

ஆலயத்தில்  நவக்ரஹங்களின்  சக்தி  இருக்க வேண்டும் என்று அவற்றையும் பிரதிஷ்டை செய்தான் அதியமான்.  தகடூரை காக்க  காலபைரவர் கையில்  திரிசூலம், வாள் . இன்றும்  தரிசிக்கலாம்.   ஆலய சிற்பங்கள் பழமை வாய்ந்தவை. 

காசிக்கு அடுத்து தனிச் சந்நிதியில் இருக்கும் கால பைரவர்  தகடூரில் தான்.   அதற்கு தட்சிண காசி கால பைரவர் ஆலயம் என்று பெயர். முக்தி க்ஷேத்திரம்.   தருமபுரி,  கர்நாடகா, கேரளா போன்று  பல இடங்களில் இருந்து பக்தர்கள் திரளாக வருகிறார்கள். 

ஞாயிற்றுக்கிழமைகளில் ராகுகால பூஜை; மாதம்தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று காலை கணபதி, லட்சுமி, அஷ்டமி  நாளில் அஷ்ட பைரவ ஹோமம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் குறிப்பிடத் தக்கது. மேலும் அன்று நள்ளிரவு 1,008 கிலோ மிளகாய் மற்றும் 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார ஹோமமும் நடைபெறுகிறது.

தட்சிண காசி கால பைரவருக்கு பூசணி தீபம் ஏற்றி வழிபட்டால், எதிரிகளின் தொல்லைகள் அகல்வதுடன், காரியங்கள் சித்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார் கள். கார்த்திகை  தேய்பிறை அஷ்டமியன்று  வீசேஷம். 

தகடூர் காலபைரவர்  ஆலயம்   தர்மபுரி- சேலம்  பாதையில்  7 கி.மீ. தொலைவில்  உள்ளது.  தட்சிண காசி கால பைரவர் திருக்கோயில் என்று பெயர்.    தர்மபுரியில்  இருந்து 10 நிமிடத்துக்கு ஒரு  பஸ்  அதியமான் கோட்டைக்குச் செல்கிறது. பேருந்து ஸ்டாப்புக்கு  அருகிலேயே  காலபைரவர் கோவில். 
  
ஆதிசங்கரரின்  கால பைரவாஷ்டகம்  ரெண்டாவது ஸ்லோகம்.


 भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं
नीलकण्ठमीप्सितार्थदायकं त्रिलोचनम् ।
कालकालमंबुजाक्षमक्षशूलमक्षरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥२॥    
''சதாசிவா,  உன் மகனை கணேசனை  வணங்கும்போது  ''சூர்ய  கோடி  சம பிரபா''  என்போமே.  அது  உன்  குடும்ப  சொத்தா?

கண்ணைப் பறிக்கும்  பொன்னார்  மேனியனே, நீயும்  நூறு  நூறு  கோடி  சூர்ய பிரகாசமானவன்.  பவ சாகரத்தை கடக்கும் தோணி,  நீல கண்டா,  அது  எப்படி  ஹாலஹால  விஷம்  கூட உன்  மேனிக்கென்று   ஒரு  தனி  அழகைத்  தருகிறது.  மயில் கழுத்து  போல்  மயக்குகிறது. சிவம்   என்றால்  மங்களம் தானே. உன் பெயர் சொன்னாலே  சுபிக்ஷம்  தானே.  அரவிந்த லோசனா, இந்த  அழகிய  இரு  கண்களை  அரை மூடி நீ  த்யானத்தில்  இருக்கும்  காந்த சக்தி அகிலத்தை  வளைத்து விடுமே, ஆனால்   அதன் மீது  இருக்கும்  முக்கண்ணோ தீயவர்  கண்டஞ்சும் தன்மையது.    

பரம சிவா,  நீ  காம தகன காரணன்  மட்டு  மல்ல. திரிபுராந்தகன் மட்டும் அல்ல.  காலனுக்கே  காலன்.   ம்ருத்யுஞ்சயன் .  கால சம்ஹார  மூர்த்தி.  சூலாயுத பாணி.  திரி புவனத்தையும்   காக்கும்  ரக்ஷை  உன் திரிசூலம்.  முடிவில்லாதவன்  நீ  மோன  குரு.   கால  பைரவேஸ்வரா,  காசிபுராதினாதா,  உன்னை  பஜித்து  மகிழ்கிறோம்.    




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...