Friday, March 13, 2020

SHEERDI BABA



மனிதருள் ஒரு தெய்வம்      J K  SIVAN
ஷீர்டி பாபா

                                                          

            இரு மத  அமைதி விழாக்கள் ஊர்வலங்கள்                      

ஷீர்டியில் வருஷா வருஷம்  ஸ்ரீ ராம நவமி சிறப்பாக கொண்டாடுவார்கள்.

கோபர்காவுன்  என்கிற  கிராமத்தில்  கோபால்ராவ் குண்டு  என்பவர்  சர்க்கிள் இன்ஸ்பெக்டர்.  ஷீர்டி பாபா பக்தர்.  மூன்று மனைவிகள் இருந்தும் குழந்தை பாக்யம் இல்லாதவர்.  ஷீர்டி பாபாவை சென்று வணங்கி வேண்டியதில் அவர் அருளாசி பெற்று உடனே ஒரு பிள்ளை  குழந்தை பிறந்தது.  பரம  சந்தோஷத்தோடு ஒரு விழா கொண்டாட ஏற்பாடு செய்தார்.

உருஸ்  என்பது  முஸ்லீம் மஹான்கள் சமாதியில் கொண்டாடப்படுவது. ஒருவேளை  பாபா  முஸ்லீம் என்று நினைத்தாரோ என்னவோ  ஒரு ''உருஸ் ''கொண்டாட விழைந்தார்  கோபால்ராவ்.  சீரடி பாபா பக்தர்கள்  தாதியா படேல், தாதா கோட்டே பட்டில் , மதரவோ  தேஷ்பாண்டே,  ஆகியோருடன் கலந்து  பேசி பாபாவிடம்  சொல்ல  '' எதை வேண்டுமானாலும் பண்ணுங்கள்'' என்று ஆமோதித்துவிட்டார்.

வெள்ளைக்காரன் காலத்தில் அவன் உத்தரவு இல்லாமல் இம்மியும் எதுவும் நடக்கமுடியாதே .  கிராம  குல்கர்னி  ( நம்ம  முன்சீப்  மாதிரி போல்  இருக்கிறது)  உர்ஸ் எல்லாம் நடக்க கூடாது என்று எழுதிவிட்டதால்  வெள்ளைக்காரன்  கலெக்டர் அனுமதி தரவில்லை. பாபா  தான்  எதைவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று அனுமதி தந்துவிட்டாரே.  வெள்ளைக்காரனுக்கு மீண்டும்  எடுத்துச் சொல்லி எழுதினார்கள். அனுமதி தந்தான்.

உர்ஸ்  ராமநவமி  அன்று.  பாபாவுக்கு  மனதில்  ரெண்டு  மதத்தினரையும் இணைக்கும் ஒரு விழாவாக இது இருக்கவேண்டும் என்று தோன்றியதோ என்னவோ, ரெண்டு விழாக்களையும்  கோலாகலமாக நடத்த அந்தந்த  சாரார்  ஏற்பாடு செய்தார்கள்.   சிறிய  கிராமம்.  பெரிய கும்பலை தாங்காதே.  குடி நீர் வசதி கிடையாது.  ஏற்கனவே  ஊரில் இருந்த  ரெண்டு பெரிய  கிணறுகள்  வறண்டுவிட்டன.  ஒன்றில் உப்புத்தண்ணீர். குடிக்க முடியாது. பாபாவின் அருளால் திடீரென்று  உப்புத்தண்ணீர் கிணற்றில்  ஸ்படிகம் போல் சுத்தமான  அம்ருதம் போன்ற  குடிநீர் நிறைய  சுரந்தது.  தாதியா  பட்டீலிடம்  கவலை நீர் இறைக்கும் சால்கள் இருந்தது. நிறைய இறைத்து தொட்டிகளில் நிரப்பினார்கள்.  கைகால் கழுவ, குளிக்க, குடிக்க   எல்லோருக்கும் எதேஷ்டமாக நீர்  கிடைத்தது.

கிடுகிடுவென்று  கடைகள் மலிந்தன.  பொழுது போக்க  நாட்டியம் மல்யுத்த  விற்பன்னர்கள் வந்து விட்டார்கள்.  வாத்ய கோஷ்டிகள் எங்கிருந்தெல்லாமோ வந்தன.  தின்பண்டங்கள் எங்கும் கிடைத்தன.  கோபால்ராவ் குண்டுவிற்கு ரொம்ப சந்தோஷம்.   அவர் நண்பர்  தாமு அண்ணா கஸார் என்பவருக்கும் இருமனைவிகள்  ஆனால்  குழந்தைச் செல்வம் இல்லை.   கோபால் ராவ் சொல்லி, தாமு  ஷீர்டி பாபாவை வணங்கி வேண்டுகிறான்.   ''உனக்கு தான் ரெண்டு பிள்ளையாச்சே. போ போ. தூக்கிக் கொண்டு வா ''  என அனுப்பினார். விரைவில் ரெண்டு பிள்ளைகள் பிறந்தன.

தாமு  ஒரு  பெரிய  கொடி செய்து விழாவிற்கு அளித்தார் . நானாசாஹேப் நிமோன்கர்  ஒரு வண்ணக் கொடி அளித்தார்.  ஷீர்டி  சுற்றிய  ஊர்களில் ஊர்வலம் போய்  வந்தபிறகு   அந்த கொடிகள் மசூதிக்கு  இரு  பக்கங்களிலும் கட்டப்பட்டது. அந்த மசூதியின் பெயர்  துவாரகாமாயி.  இப்போதும் அந்த பழக்கம் உள்ளது.  அந்த ஊர்வலத்தில் இன்னொரு  பழக்கமும் அமுலுக்கு வந்தது.

அமீர் ஷக்கர் தலால்  என்பவருக்கு ஒரு யோசனை உண்டாயிற்று.  அவர்  கொர்லா எனும் ஊரில்  வசித்த இஸ்லாமிய பக்தர்.  சந்தனத்தை அரைத்து குழைத்து  பெரிய  தட்டுகளில் பூசி அது ஊர்வலமாக போகும்.   அந்த சந்தனத் தட்டுக்கள் முன்னால்  வாசனை திரவியங்கள், சாம்பிராணி, அகில் புகை எல்லாம்  மணக்கும். பாண்ட் வாத்தியங்கள் ஒலிக்கும்.   கிராமம் பூரா  ஊர்வலம் போனபின்  மசூதிக்கு திரும்பி வரும்.  தட்டில் பூசிய  சந்தனம்,  பில்லைகள்  மசூதி சுவற்றில் வாரி வீசப்படும். விரட்டி மாதிரி   தட்டப்படும் இந்த  வைபவம்  அமீர் ஷக்கர் பொறுப்பில்  முதல் மூன்று வருஷங்கள் நடந்தது. அவருக்குப் பின் அவர் மனைவி பொறுப்பேற்றாள் .

இப்படி நடந்திடும்போது  ஒரு நாள்  கொடிகள்  ஹிந்துக்களாலும், சந்தன தட்டுகள்  முஸ்லிம்களாலும்  ஊர்வலம் எடுத்துச்செல்லும்போது. ஊரே  திரண்டது.  இரு மதத்தினரும்  ஒற்றுமையாக  வழிபாட்டு முறைகளோடு ஊர்வலம் சென்றார்கள்.  இரு சாராரும்  பாபா பக்தர்கள். தாத்யா கோட்டே  படீல் எல்லா மேற்பார்வை வேலைகளும் பார்த்துக் கொண்டார். பக்தர்களுக்கு தேவையான விஷயங்களை  ராதாகிருஷ்ண மாயி  என்ற  பெண் பாபா பக்தர் பொறுப்பேற்று நிறைவேற்றினார்.  அவல் வீட்டில் விருந்தினர் கூட்டம்.  அவர்களை கவனிப்பதோடு  ஊர்வல தேவைகளையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவளுக்கு.

 மசூதியின்  தரை எல்லாம் பெருக்கி கழுவி சுத்தம் செய்வது சுவற்றுக்கு வெள்ளையடிப்பது போன்ற வேலைகளையும் செய்து வந்தாள். பாபா மூட்டிய  துனி யின் புகை, சாம்பல் எல்லாம் சுவற்றில் படிந்து கறுப்பாகிவிடும். எனவே  இரவில்  பாபா தூங்கும் வேளையில்  அவள் சாவடியில்  சுவற்றை துடைத்து வெள்ளை பூசி வேலை செய்வாள். துணியையும் அவ்வப்போது  தொடர்ந்து எரியும்படியாக பார்த்துக் கொள்ளவேண்டும். விடாது ஏழைகளுக்கு உணவு தானம் நடந்து வந்தது. அதையும்  கவனித்துக் கொள்ளவேண்டும்.   ஏழைகளுக்கு அன்னதானம்  பாபாவிற்கு பிடித்த காரியம். விழாக்காலத்தில்  ஊர்வலம் செல்லும்போது  பெரிய பெரிய அண்டாக்களில் சமையல் வேலை நடந்தது.  சமையல் காரர்கள் இலவசமாக உழைத்தனர். இனிய தின்பண்டங்களை, உணவை   ராதாகிருஷ்ணா மாயி  சத்திரத்தில்  தயார் செய்தார்கள்.
சமையல் சம்மந்தப்பட்ட  பொருள்கள், பண்டங்களை  பணக்கார, வசதியுள்ள   பக்தர்கள்  பங்கு போட்டுக் கொண்டு செய்தார்கள்.

 இப்படி தொடர்ந்து நடந்து வந்த  இரு மத  விழா ஊர்வலங்கள்  1912 வரை  சிறப்பாக நடந்து  பிரபலமடைந்து சில மாற்றங்களை  சந்தித்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...