ஸ்ரீ நாராயணீயம் J K SIVAN
தசகம் 4
அஷ்டாங்க யோகமும் பலனும்
இந்த தசகம் நாராயணீயத்திலேயே பெரிய தசகம். 15 ஸ்லோகங்கள் இருக்கிறது
कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।
स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥
கல்யதாம் மம குருஷ்வ தாவதிம் கல்யதே பவதுபாசனாம்
ஸ்பஷ்டமஷ் தவிதயோகாச்சார்யாயா புஷ்டயாஷு தவதுஷ்டிமாப் நுயாம்
.
குருவாயூரப்பா, கண்கண்ட தெய்வமே, கருணாசாகரா, நீ எனக்கு செய்ய வேண்டியதெல்லாம் என் தேக உபாதையை நீக்கி ஆரோக்கியத்தை அளிப்பது ஒன்று தான். எதற்கு கேட்கிறேன் என்று உனக்கே தெரியும். சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும். என் உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதைப்பற்றிய நினைப்பே இல்லாமல் என் மனம் உன் மேல் முழுதும் ஈடுபடும். உனைப் போற்றி பாடி, வணங்கிக்கொண்டே இருப்பேன்.உன் கருணை மழையில் நனைவேன். அஷ்டாங்கயோகத்தில் சிறப்பாக செயல்படுவேன். என் உண்மையான முயற்சி அறிந்து நீயும் மகிழ்வாய். யம , நியம, ஆசன, பிராணாயாம, ப்ரத்யாஹார, தாரணா, தியான, சமாதி நிலைகள் தான் அஷ்டாங்கம் எனப்படும் எட்டு வகை யோக மார்க்கம். நாராயண பட்டத்ரி உடல் நலம் சரியானால் ஆனந்தமாக அஷ்டாங்க யோகத்தில் ஈடுபடுவேனே என்று ஏங்குகிறார்.
ब्रह्मचर्यदृढतादिभिर्यमैराप् लवादिनियमैश्च पाविता: ।
कुर्महे दृढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्परा: ॥२॥
ப்ரஹ்மசர்யத் ருட தாதி, பிர்யமைராப்லவாதி, நியமைச்ச பாவிதா:
குர்மஹே த்ருட மமீ ஸுகாஸநம் பங்கஜாத் யமபி வா பவத்பரா: || 2 ||
பகவானே, ஸ்ரீ கிருஷ்ணா, உன் மேல் கொண்ட பக்தி அன்றி வேறே எதையும் நான் நம்பவில்லையே. என் உடம்பு உன்னால் குணமாகி, நான் முதலில் என்ன செய்வேன் தெரியுமா? முதலில் சுய அடக்கம், பிரம்மச்சர்யம், அஹிம்சை, சத்யம், சாஸ்த்ராசார சம்பிரதாயங்கள், நியம, அனுஷ்டானம், உள்ளும் புறமும் பரிசுத்தமாக அல்லவோ உன்னை தியானம் பண்ணு வேன். சுகாசன, பத்மாசனங்களில் சௌகர்ய மாக அமர்ந்து உன்னை என் மனது, ஹ்ருதயம் பூரா நிரப்பிக் கொள்வேன்.
பட்டத்ரி தான் யமம், நியமம், ஆசனம் தாரணம், சமாதி நிலை, இத்யாதிகளில் எப்படி க்ரிஷ்ண த்யானத்தில் ஈடுபடுவேன் என்று எடுத்துரைக்கிறார் பார்த்தீர்களா?
तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मला: ।
इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥
इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥
தாரமந்த - ரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபி யம்ய நிர்மலா: ! இந்த்ரியாணி விஷயாததாபஹ்ருத் யாஸ்மஹே பவது பாஸ்நோந்முகரா: | 3 ||
பிரணவ மந்த்ரமாகிய ஓம் எனும் உன்னத மந்த்ரத்தை இடைவிடாமல், மூச்சு விடாமல், என் மனம் தியானம் செய்யும். அதனால் எனக்கு தான் லாபம். பரிசுத்தமாக இப்படி பிராணாயாமம் பண்ணுவதால் புலன்கள் வாலாட்டாது. அதனால் விளையும், காம க்ரோத லோப மோஹ சமாச்சாரங்கள் இருக்கும் இடம். தெரியாது. மனம் உன்னிலேயே ஆணி அடித்ததுபோல் நிலையாக நிற்கும். இந்த ஆனந்தத்தை விட பேரானந்தம் வேறு உண்டா சொல் கிருஷ்ணா?
अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।
तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥
அஸ்புடே வபுஷி தே ப்ரயத்நதோ தாரயேம திஷணாம் முஹுர்முஹு தேந பத்திரஸ்-மந்தரார்த் ரதா-முத் வஹேம ப வதங்க ரிசிந்தகா: | 4 1
யாருக்கு தான் தெரியாது கிருஷ்ணா? எந்த வேதத்தாலும் உன் திவ்ய சௌந்தர்ய ரூபத்தை விளக்க முடியாது. என் மனதை முழுதும் உன் திருமேனியில் செலுத்தி முயற்சி செய்து உன் தாமரைத் திருப்பதங்களில் மனது லயிக்கும் போது கிடைக்கும் பக்திரசத்திற்கு ஈடு இணையேது? எவ்வளவு ருசி அனுபவிக்க முடியும். இதைவிட வேறு பாக்யம் உண்டா?
யாருக்கு தான் தெரியாது கிருஷ்ணா? எந்த வேதத்தாலும் உன் திவ்ய சௌந்தர்ய ரூபத்தை விளக்க முடியாது. என் மனதை முழுதும் உன் திருமேனியில் செலுத்தி முயற்சி செய்து உன் தாமரைத் திருப்பதங்களில் மனது லயிக்கும் போது கிடைக்கும் பக்திரசத்திற்கு ஈடு இணையேது? எவ்வளவு ருசி அனுபவிக்க முடியும். இதைவிட வேறு பாக்யம் உண்டா?
विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।
अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥
விஸ்புடாவயவ-பேத ஸுந்தரம் தவத் வபுஸ்-ஸுசிரபலேநாவலாத் | அப்பரமம் மநஸி சிந்தயாமஹே த்யாநயோக நிரதாஸ் த்வதாஷ்ரயா: || 5|
கிருஷ்ணா, குருவாயூரப்பா, உன்னை இப்படி சிரத்தை யாக தியானிப்பதன் மூலம் மனது பயிற்சி பெற்றுவிடும். உன் திவ்ய ஸ்வரூபம், தெளிவாக என் முன் தியானம் செய்ய தர்சனம் தரும். உன்னை பூரணமாக சரண்அடைவோர்க்கு மட்டுமே இது சாத்தியம் என்றும் அறிவேன். என் ஏகாக்ர சித்த த்யானம் உன் தரிசனம் பெற்று தரும்.
ध्यायतां सकलमूर्तिमीदृशीमुन्मिषन्मधुरता
सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥६॥
குருவாயூரப்பா நான் என்ன செய்யப்போகிறேன் என்று விளக்கமாக சொல்லட்டுமா? எனது இடைவிடா தியானத்தின் மூலம் எனக்கு உன் திவ்ய சௌந்தர்ய அங்க தர்சனம் கிடைக்கும். நீ சகுண பிரம்மமாக எனக்கு காட்சி தருவாய். ஆஹா அந்த ஆனந்தத்தில் எங்கும் எதிலும் அரூபமாக நிறைந்திருக்கும் நிர்குண ப்ரம்ம ஸ்வரூபத்தையும் என்னால் உணர முடியும். இதற்கு மேல் எனக்கு சுகானந்தம் தரும் விஷயம் வேறு இருக்க முடியுமா?
तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक ।
आश्रिता: पुनरत: परिच्युतावारभेमहि च धारणादिकम् ॥७॥
தத்ஸமாஸ்வத நரூபிணீம் ஸ்திதிம் த்வத்ஸமாதி மயி விப்பவநாயக ஆம்ரிதா: புநரத: பரிச்யுதா-வாரபே மஹி ச தாரணாதிகம் || 7 ||
ஹே குருவாயூரப்பா, உண்ணி கிருஷ்ணா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, அஷ்டாங்க யோக உபாசனையில் சமாதி நிலையில் எல்லாம் மறந்து நீ ஒன்றே என ப்ரம்மஸ்வரூபமான உன்னுடன் இரண்டறக்கலந்து நான் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் நிலத்து நிற்காமல் சற்றேனும் நழுவி விட்டால் என்ன பண்ணுவேன் தெரியுமா. மறுபடியும் என் மனத்தைக் குவித்து உன்னை சிக்கெனைப் பிடித்து மனதில் நிலை நிறுத்தி தாரணை என்னும் தியான அஷ்டாங்க யோக ம் மூலம் மீண்டும் நிர்விகல்ப சமாதியில் உன்னை அடைவேன். ராமகிருஷ்ணர் விவேகானந்தர், ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், பரமாச்சாரியார், ராகவேந்திரர் போன்றோர் எளிதில் இதை அடைந் தவர்கள்.
ஹே குருவாயூரப்பா, உண்ணி கிருஷ்ணா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, அஷ்டாங்க யோக உபாசனையில் சமாதி நிலையில் எல்லாம் மறந்து நீ ஒன்றே என ப்ரம்மஸ்வரூபமான உன்னுடன் இரண்டறக்கலந்து நான் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் நிலத்து நிற்காமல் சற்றேனும் நழுவி விட்டால் என்ன பண்ணுவேன் தெரியுமா. மறுபடியும் என் மனத்தைக் குவித்து உன்னை சிக்கெனைப் பிடித்து மனதில் நிலை நிறுத்தி தாரணை என்னும் தியான அஷ்டாங்க யோக ம் மூலம் மீண்டும் நிர்விகல்ப சமாதியில் உன்னை அடைவேன். ராமகிருஷ்ணர் விவேகானந்தர், ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், பரமாச்சாரியார், ராகவேந்திரர் போன்றோர் எளிதில் இதை அடைந் தவர்கள்.
इत्थमभ्यसननिर्भरोल्लसत्त्वत्
मुक्तभक्तकुलमौलितां गता: सञ्चरेम शुकनारदादिवत् ॥८॥
இத்த, மப் யஸந நிர்ப ரோல்லஸத்-த்வத்பராத்ம ஸுக, கல்பிதோத்ஸவா: / முக்த பக்தகுலமௌலிதாம் கதா: ஸஞ்சரேம கநாரதாதி,வத் | 8 ||
உன்னை விட்டால் வேறு யாரிடம் இப்படி மனம் விட்டு பேசுவேன். என் மனோரதங்களை தெரிவிப்பேன். ஸ்ரீ கிருஷ்ணா, குருவாயூர் குட்டா, இதைக் கேள். இப்படி நான் தாரணை மூலம், அஷ்டாங்க யோக சித்தி பெற்று உன்னை சமாதிநிலையில் நேரே தரிசித்து ஆனந்தமாக இருக்கும் நிலையில் நான் வேறு யாரையெல்லாம் இப்படி உன்னை தரிசிக்கிறார்க்ளோ அவர்களோடு உலவுவேன். யாரென சில பெயர்கள் சொல்லட்டுமா? ஜீவன் முக்தர்களான நாரத ப்ரம்ம ரிஷி, சுகப்பிரம்ம ரிஷி பிரஹலாதன் போன்றோருடன். போதுமா? ஆனந்த
மாக அவர்களோடு நானும் உன்னைப் போற்றி பாடுவேனே ...
நாராயணீயம் 4வது தசகம் தொடரும்.
No comments:
Post a Comment