ஸ்ரீ ராமானுஜர் J K SIVAN
அத்வைத விசிஷ்டாத்வைத வாதம்
ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு இருந்த சிறந்த கல்வி கேள்விகளில் தேர்ந்த பண்டிதர்களில் ஒருவர் யஞமூர்த்தி. அத்வைத சித்தாந்தத்தை பின்பற்றிய யஞமூர்த்தி பல பண்டிதர்களை வாதத்தில் வென்றவர். நிறைய விரிவுரைகள் வேதாந்த ஸாஸ்த்ரங்களுக்கு எழுதியவர். அதிகம் இவரைப் பற்றி அறியமுடியவில்லை.
''குருநாதா, யாரோ ஒரு வைஷ்ணவர் சிறந்த ஞானி என்று போற்றப்படுகிறார். எங்கும் அவர் பிரபலமாக பேசப்படுகிறாராம். அவருடன் வாதத்தில் எவராலும் ஜெயிக்க முடியவில் லையாம்''
''யார் அவர்? என்ன பெயர் ? எங்கிருக்கிறார்?''
''ராமானுஜர். காஞ்சியில் இருந்தவர். அடிக்கடி இப்போதெல்லாம் ஸ்ரீ ரங்கம் வருகிறார். ஸ்ரீ வைஷ்ணவத்தை காற்றை விட வேகமாக பரப்புகிறாராம். அவரது புதிய கோட்பாடு விசிஷ்டாத்வைத வாதத்தை எவராலும் வெல்ல முடியவில்லை யாம்' அக்காலத்திய விவாதங் கள், எதிர்ப்பவருக்கு தக்க மரியாதையுடன், சம்பிரதாய கோட்பாடுகளை மட்டுமே விவாதப் பொருளாக வைத்தார்கள். எவருடைய கோட்பாடு பெரும்பாலோரால் ஆமோதிக்கப் பட்டு , ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அவர் வென்றவர் என்று ஏகமனதாக கௌரவிக்கப் பட்டனர். நிரம்ப கற்றவர்கள் பொருத்தமாக வேத சாஸ்திர பிரமாணங்களை முன் வைத்து மற்றவர் சந்தேகங்களை நிவர்த்தி செய்து ஏகோபித்து ஒப்புக்கொள்ள வைத்தனர். மன்னனே இந்த வாதங்களை விரும்பி அரசவை மண்டபத்தில் பலரும் பாராட்டும்படி ஏற்பாடு செய்த காலம். தமது வாதத் திறமையால் யஃனமூர்த்தி அட்வைதத்தை எங்கும் பரப்பி வந்த நேரம். .மாயாவாத (அத்வைத) கோட்பாடை பின்பற்றிய யக்ஞ மூர்த்தி என்னும் புகழ்பெற்ற இந்த மஹா பண்டிதர் எல்லா சமஸ்தானங் களுக்கும் சலென்று பண்டிதர்களை வித்வான் களை எல்லாம் தமது வாதத்தில் ஜயித்து, (ஏகதண்ட) ஸந்யாஸாச்ரமத்தையும் ஏற்றுக் கொண்டு, சிஷ்யச் செல்வம், கல்விச் செல்வம் முதலானவற்றோடு கூடியவராக ஒப்பற்ற பெருமையோடு, புகழ் வாய்ந்த பண்டிதர்.
ஒரு நிமிஷம் யோசித்த யஃனமூர்த்தி, ஆம் நானும் கேள்விப்பட்டேன். ராமானுஜர் என்ற இளம் வயதினர் பெயர் சபைகளில் ஆடி படுகிறது. சிறந்த வித்துவான். சகல கலைகளும் கற்ற ஸ்ரீ வைஷ்ணவராம். அவரது விசிஷ்டாத்வைத கோட்பாடு காட்டுத் தீயெகிறார்கள்.
''அவருக்கு சேதி அனுப்புங்கள். அவரை சந்தித்து ஒரு விவாதம் நடத்தி அவர் கோட்பாடுகளை முறியடிக்கவேண்டும்’’ என்று யக்ஞ மூர்த்தி தயாரானார். ராமானுஜரை ஜெயிப்பதற்காக, சுவடிகளில் பல சாஸ்திர நூல்களை எழுதி, ஆயிரக்கணக்கான அச்சுவடிகளை ஓர் வண்டியில் கட்டி எடுத்துப் போட்டுக் கொண்டு, தன் வித்யாகர்வம் தோற்றமளிக்கும் வகையில் படாடோபமாக சிஷ்யர்கள் சூழ வேகமாக ஸ்ரீரங்கத்திற்கு வந்தார் .
வாசலில் கட்டியம் கூறி வாத்ய கோஷம் ஒலித்தது. ராமானுஜர் தனது ஆஸ்ரமத்தில் சிஷ்யர்களுக்கு ஸ்ரீ வைஷ்ணவ பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு சிஷ்யர் அவசரமாக உள்ளே ஓடிவந்தனர் ராமானுஜரை வணங்கி எதிரே சேதி சொல்ல நின்றார்
.''என்ன என்று ஜாடையாக கேட்ட ஸ்ரீ ராமாநுஜரிடம்
‘’ ஒரு பெரிய பண்டிதர், யஞ மூர்த்தி யாம் . உங்களை பார்க்க வந்திருக்கிறார், சிறந்த தர்க்க வாதம் பண்ணுபவர் என்று சிஷ்யர்கள் சொன்னார்கள் ’’
''தக்க மரியாதையோடு அவரை அழைத்து வாருங்கள்''
''வாருங்கள்'' என்று இனித்த முகத்துடன் எழுந்து நின்று அவரை வரவேற்று ஆசனம் அளித்து
‘’நான் எந்த விதத்தில் உங்களுக்கு உதவலாம்?’’ என்று ராமானுஜ ஆசார்யர் கேட்டார்.
“ ஓ நீர் தான் இராமாநுஜரோ, உம்மைப்பற்றி கேள்விப்பட்ட ஆவலில் என்னோடு நீர் நேரே சாஸ்த்ர தர்க்கம் புரிய வேணும், முடிந்தால் ஜெயிக்கவேண்டும் என்ற கோரிக்கையோடு வந்திருக்கிறேன் ” என்றார் யஞ மூர்த்தி சிரித்துக்கொண்டே. அவர் சிரிப்பில் எதிரே நிற்பது ஒரு தூசி என்ற அஹங்காரம் த்வனித்
தது.
இராமானுஜரும், சிரித்துக்கொண்டே,'' போட்டி யா? நீங்கள் பெரியவர். என்னோடு வாதம் செய்ய முற்பட்டது எனக்கு பெரும். கௌரவம் பெருமை. வாதம் என்றால் யாராவது ஒருவர் தானே ஜெயிக்க முடியும். ஒருவேளை என்னால் நீர் வாதத்தில் ஜயிக்கப் பட்டீரானால் தாங்கள் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ள சம்மதமா? என்று கேட்டார் யதிராஜர்.
யஜ்ஞமூர்த்தி கை கொட்டி சிரித்தார்.
“இராமாநுஜரே! உங்களுக்கு அப்படி ஒரு ஆசையா. இருக்கட்டும். உம்மால் ஜயிக்கப்பட்
டால், உமது மதத்தைத் தழுவி, என் தலையில் உமது பாதுகைகளைத் தாங்கி, உமது பெயரை
யே எனக்குப் பெயராகக் கொள்கிறேன். சரியா. நிச்சயம் அது நடக்கப்போவதில்லை . நான் இப்போது கேட்கிறேன், அது போலே நீர் இப்போது என்னால் ஜயிக்கப்பட்டால் என்ன செய்வீர்”
''யஃனமூர்த்தி பண்டிதரே , வித்வானே! உம்மால் நான் ஜயிக்கப்பட்டால் நான் இது வரை எழுதியுள்ள க்ரந்தங்களைக் கைவிட்டு விடுகிறேன். இனி எந்த நூலும் எழுதவும் மாட்டேன். தங்களுக்கு திருப்தியா?''
யஜ்ஞமூர்த்தியும், யதிராஜரும் தமது சாஸ்த்ர
வாதப் போருக்குப் பதினெட்டு நாட்களை, பாரதப்போர் போல, முடிவாக ஒப்புக்கொண்டு சாஸ்த்ரங்களில் தம் திறமையனைத்தையும் காட்டி வாதம் செய்தனர். பதினாறு நாட்கள் வெற்றி தோல்வியில்லாமல் அத்வைத x விஸி ஷ்டாத்வைத ஞானப்போர் புரிந்தனர். அதன் விவரங்கள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் நம்மைப்போன்றவர்களுக்கு புரியவும் போவதில்லை.
பதினேழாவது நாளன்று யஜ்ஞமூர்த்தியின் விதண்டா வாதங்களாலே, குறுக்கு வெட்டு எதிர் வாதங்களால், ஸ்ரீ ராமானுஜரின் நேர்மையான வாதங்கள் தள்ளப்பட்டன போலத் தோற்றமளித் தன. மிகவும் சந்தோஷத்தோடு, வெற்றி உற்சா கத்தோடு யஞ மூர்த்தியும் அன்றைய வாதம் முடித்து தன் மடத்திற்குச் சென்றார்.
அன்று தான் முதன் முதலாக ராமானுஜர் சற்று கலங்கினார். தமது மடத்திற்குச் சென்ற இராமானுஜர் நெஞ்சு உடைந்தவராக தமது திருவாராதனைப் பெருமாளான காஞ்சி வரதராஜப் பெருமாளை தியானித்தார்.
“பேரருளாளப் பெருமாளே! புருஷோத்தமனே! நெடுங்காலமாக இந்த வைஷ்ணவ தர்சனம் நம்மாழ்வார், நாதமுனிகள், ஆளவந்தார் காலங்களில் எங்கும் எப்போதும் தோல்வி யடையாதபடி வைணவ சம்ப்ரதாயம் தேவரீரால் பாதுகாக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் இருந்து வருகிறது. ஜகன்னாதா, அடியேன் காலத்தில் அது தோல்வி யடையுமோ? இதுவரையில் தேவரீருடைய ஸ்வரூபம், குணம் முதலியவை உண்மை என்று விளங்கும் படி உன்னத ஸ்ரீ வைஷ்ணவ ப்ரமாணங்களை தேவரீர் முன்வைத்து பல உதாரண புருஷர்கள் மூலம் நடத்திக் கொண்டு வந்தீர். இப்போது என் காலத்தில் ஒரு மாயா வாதியை ஏவி விட்டு, அவர் சந்தோஷத்தோடு அந்த ப்ரமாணங்களையே அழிக்கத் திருவுள் ளமோ? உமது அலகிலா விளையாட்டு அப்படியாகில், நான் உமது அடிமை, என்ன செய்ய முடியும். . உமது சித்தம் அதுவாக இருந்தால் அப்படியே செய்யும். எதுவும் உம்மால் ஆகும். எல்லாம் உம் செயலே" என்று மனம் நொந்து வரதராஜனிடம் விண்ணப்பித்தார்.
அன்றிரவு உணவு கொள்ளாமல் உறங்கச் சென்றுவிட்டார் ராமானுஜர். வெகு நேரம் கண்ணயறவில்லை. தமது பொறுப்பில் தவறுவோமோ வழி தேடியவாறு வருத்தத்
தோடு தூங்கிவிட்டார்.
சற்று கண்ணயர்ந்து உறங்கிய ராமானுஜரின் கனவில் கருணைக் கடலான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் புன்னகையோடு தோன்றி எழுப்பி “குழந்தாய் ராமானுஜா ! எதற்கு உனக்கு வருத்தம்? நீர் வல்லவரன்றோ! ஒரு பெரிய அறிவாளியை உமக்கு சிஷ்யனாக அளித்தி ருக்கிறேன், உமது பரமாசார்யரான ஆளவந் தாரால் இயற்றப் பெற்ற "மாயாவாத கண்டனம்" ஆயுதமாகக்கொண்டு நாளை நீ யஜ்ஞமூர்த்தியை ஜயிப்பாய்'' என்று ஆசிய ருளினார்.
கனவு களைந்து புத்துணர்ச்சியோடு ராமானுஜர் எழுந்தார். உடனே ஆளவந்தார் இயற்றிய மாயாவாத கண்டன ஓலைச்சுவடிகளை தேடி எடுத்து இரவெல்லாம் உள் வாங்கினார். பொழுது புலர்ந்தது. நித்ய அனுஷ்டானங்கள் பூஜை முடிந்து மிகுந்த உற்சாகத்தோடு ஒரு புதிய ராமானுஜர், தெளிந்த மனத்தோடு, நிமிர்த்திய நெஞ்சோடு யஜ்ஞமூர்த்தியை வெற்றி கொள் வதற்காக, வாதம் புரிய சபைக்குள் நுழைந்தார்.
ராமானுஜர் மிகுந்த நம்பிக்கையோடு, தைரியத்தோடு, உற்சாகத்தோடு முகத்தில் ஒளியோடு வாத ஸபையில் இவ்வாறு நுழைவதைக் கண்ட யஞமூர்த்தி, விதிர் விதிர்த்தார். வியப்புடன் யோசித்தார்.
“ராமானுஜர் நேற்று மிக வருந்தியவராய், துயரத்தோடு தோல்வி எதிரே தெரிபவர் போல், தம் இருப்பிடம் சேர்ந்த யதிராஜர், இன்று அதிக கம்பீரமான கஜேந்திரனைப் போல விளங்குவதற்குக் காரணம் என்னவாக இருக்கும் ?. ஒரு வேளை என் வாதத்தை முறியடிக்க கைவசம் ஏதோ சாஸ்திர ப்ரமாணத்தோடு வந்திருப்பாரோ? இந்த பதினாறு நாட்களிலே அவரை வெல்வது சுலபமில்லை, இதுவரை சந்தித்த பண்டிதர்கள் சாஸ்திரிகள் போல் இவர் இல்லை என்று புரிந்ததே. இன்று ஒருவேளை , பல பேர் முன்னிலையில் நான் தோற்று விட்டால்? என்னால் தாங்க முடியாத அவமானம். ..எனக்கு மூச்சு இருக்கும் வரை ஒரு பெரிய இழுக்கு.. இதுவரை நான் கட்டிய கொட்டைகள் சரிந்து விழ விடக்கூடாது. மாட்டவே மாட்டேன் .மரியாதை யாக, பெருந்தன்மையோடு அவரை சேர்ந்து விடுவது நல்லது'' என்று முடிவெடுத்தார் .
சற்று தயக்கத்தோடு, அதே சமயம் கௌரவமாக அவர் பேச்சு ஒலித்தது.
‘ராமானுஜரே! நீர் இவ்வுலகில் ஹரியின் அம்சாவ தாரமாகப் பிறந்தவர் என்பதை சந்தேகம் இல்லை.. உமது வாதங்கள் நேர்த்தியாக இருந்தது. நானும் நேற்றெல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்ததில் உமது விசிஷ்டாத்வைத கோட்பாடுகள் சத்துடையவை, உன்னதமானவை ,ஏற்றுக் கொள்ளக் கூடியவையே என தீர்மானித்
து விட்டேன். அவை சிறந்தவை என இந்த சபையில் ஏகமனதாக ஒப்புக்கொள்கிறேன்.
ஆச்சர்யமாக எல்லோரும் கரக்கம்பம் சிரக்கம்பத்தோடு அதை ஏற்றனர். யஞமூர்த்தி ராமானுஜரை ப்ரதஷிணம் பண்ணிானார்.
கரங்களை சிரமேற் கூப்பி கண்களை மூடியவாறு ’வரதராஜா’’ என்று மனமார வேண்டிய ராமானுஜர், நன்றிப்பெருக்கால் வழியும் ஆந்த கண்ணீரை துடைத்தவாறு
“யஜ்ஞமூர்த்தி பண்டிதரே, ! இது என்ன? ஏன் நீர் தொடர்ந்து இன்று என்னுடன் வாதம் துவங்க வில்லை?” என்று கேட்டார்.
''குருநாதா, தேவரீர்க்கு பகவான் விஷ்ணுவே ப்ரத்யக்ஷமாக ஸேவை ஸாதித்திருக்கிறார் என்பதை உணர்கிறேன். நீர் ஒரு அவதார புருஷர். இப்போது தேவரீருக்கும் விஷ்ணுவுக்கும் வேற்றுமை யில்லை; ஆகையால் தேவரீர் திரு முன்பே அடியேன் எப்படி வாதம் தொடர்வேன் . தெரிந்த முடிவு தானே!
''எனது ஏக தண்டத்தை தூர எறிந்து விட்டேன் . “யதிராஜரே! உம்மால் நான் ஜயிக்கப்பட்டே ன். சரணமடைந்த என்னை ரக்ஷிப்பீர். யஜ்ஞோ பவீதம் த்ரிதண்டம் முதலானவற்றை அளித்து என்னை உமது சீடனாக்குவீர்” என்று கைகூப்பி வேண்டிய யஞ மூர்த்தி ''அருளாளப் பெருமாள்’ என்னும் வரதராஜ பேரருளாளன் திரு நாமத் தோடு, தமது ‘எம்பெருமானார்’ என்னும் நாமத்தையும் சேர்த்து, ‘அருளாளப் பெருமாள் எம்பெருமானார்’ தேவராஜமுனி என்னும் திரு நாமத்துடன் அப்போது முதல் ஸ்ரீ ராமானுஜர் தொண்டனானார்.
பெரிய மடம் ஒன்று கட்டுவித்து, பெருமையிலே தன்னையொத்த யக்ஞ மூர்த்தியை அம் மடத்தி லே வாசம் செய்ய வைத்தார் ராமானுஜர்.