Dear Friends,
I am glad to advise you that in the 11th annual Hindu Spiritual and Services Fair being held at Guru Nanak College complex at Velacheri, Chennai, from 29.1.20 till 3.2.2020 we have a stall numbered U 9 at the end near Food Court area. The working hours are from 9 am till 8.30 pm.
We look forward to your visit with family and friends and collect your requirement of SREE KRISHNARPANAM SEVA TRUST PUBLICATIONS ON MEAGRE DONATION JUST TO COVER THE SUBSIDISED COST OF PRINTING.
Most of the time I am available at the Stall to receive you all and meet you.
எங்கள் ஸ்டால் U 9
29.1.2020 இன்று காலை 9 மணிக்கு குருநானக் காலேஜ் சென்று இரவு 9 மணிக்கு திரும்பினேன். நடுநடுவில் ஒரு சில நிமிஷங்கள் நிற்பதும் சற்று நடப்பதும் போக மீதி நேரத்தை ஒரு நாற்காலியில் உட்கார்ந்தே நாள் முழுதும் கடத்துவது 81+ல் சிரமம் தான். உங்களுக்கு ஒரு நிம்மதி என்ன வென்றால் எனது விடாத எழுத்திலிருந்து 6 நாள் விடுதலை. எனக்கு நடு நடுவே ஐந்து பத்து நிமிஷங்கள் அவ்வபோது வீட்டிலிருந்தால் படுப்பது இங்கே முடியாது.
நான் கவனித்தவரை வயது வித்தியாச மின்றி ஆண்கள் தான் அநேகர் தேனீக்களாக ஒவ்வொரு ஸ்டாலி லிருந்தும் நோட்டீஸ் சேகரிக் கிறார்கள். கைநிறைய, சிலர் பை நிறைய. பெண்கள் கையில் அவ்வளவு கலர் காகிதங்களை காணோம். முக்கால் வாசி பெண்கள் தனியாக வருவதில்லை. ஏதாவது மென்று கொண்டே, கொரித்துக் கொண்டே ,அல்லது சுகமாக நாக்கால் ருசி பார்த்துக்கொண்டே இருபக்கமும் உள்ள ஸ்டால்களை பார்த்தும் பார்க்காமலுமாக நடந்தார்கள். நிறைய பேர் கையில் மைதா மாவில் செய்த கோனில் cone குல்ஃபீ. kulfi யைப் பார்த்ததால் எங்கள் ஸ்டால் stall வரிசைக்கு அடுத்த வரிசையில் இருந்த உணவு தின் பண்டப் பகுதி நன்றாக கவனிக்கப் படுகிறது என்று புரிந்தது.
இலவச சில நிமிஷ த்யானம், யோக பயிற்சி பெறுகிறார்கள். அடுத்த ஸ்டால் சென்றால் நிச்சயம் அந்த அனுபவம் மறந்துவிட நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாய்ப்பு என்று தோன்றுகிறது. போலீஸ் காரர்கள் ஒலிபெருக்கியில் மொபைல் போன், கைப்பை திருடர்களைபற்றியே ஸ்தோத்ரம் செய்து கொண்டிருந்ததை பொதுமக்கள் செவிமடுப்பதில்லை. அநேகர் திருட்டு கொடுத்துவிடுவது இந்த வருஷமும் கொஞ்சமாவது குறைய வேண்டும்.
வருஷா வருஷம் இந்த HSSF THE HINDU SPIRUTUAL & SERVICES FAIR ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி நிறுவனம் அருமையாக ஒரு 6 நாள் பல தரப்பட்ட சேவை மையங்களுக்கு இலவசமாக இடமளித்து அவர்களை ஊக்குவிப்பது தொடர்ந்து பதினோரு வருஷங்களாக நடந்துவருகிறது.
சேவா நிறுவனங்களில் தொண்டு புரிவோர்க்கு இலவசமாக காலை மதிய இரவு உணவு தருகிறது. பார்க்க வரும் ஜனங்களுக்கும் கண்காட்சிக்கு நுழைவு கட்டணம் இன்றி இலவச அனுமதி.
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் ஸ்டால் U-9 வரிசையில் உள்ளது. கடைசி வரிசையில் இருந்தாலும் நமக்கு அடுத்து உணவு தின்பண்ட ஸ்டால் வரிசை என்பதால் நிறைய அதற்கு வருபவர் களின் நடமாட்டம் நமது வரிசைக்கும் ''புல்லுக்கு மாங்கு பொசியுமாம் '' மாதிரி பார்வை யாளர்கள் வருகை தருகிறார் கள்.
சில தெரிந்த முகங்கள், பல தெரியா தவை. சில சிறுவர்களுக்கு இலவசமாக புத்தகங் கள் வழங்கினேன்.
ஸ்ரீ V .R . சித்தானந்தம், ஸ்ரீ A .K .ரமணன் போன்ற நண்பர்கள் வருஷா வருஷம் எனக்கு உதவி செய்து கொண்டு என்னோடு அவ்வப்போது முடிந்த நேரத்தில் ஸ்டாலில் இருந்து பார்வை யாளர்களுக்கு சேவை செய்வது எனது பூர்வ ஜென்ம புண்யம்.
இந்த வருஷமும் அநேக முகநூல் FB , வாட்ஸாப்ப், மின்னஞ்சல் EMAIL நண்பர்களை, வாசகர்களை சந்திக்க இந்த வாய்ப்பை உபயோகிக்க எண்ணம். உங்கள் பேராதரவை அன்புடன் எதிர்பார்க் கிறேன்.
HSSF கண்காட்சி குருநானக் காலேஜில் காலை 9 மணி முதல் இரவு 8.30மணி வரை 29.1.2020 லிருந்து 3.2.20 வரை நடை பெறுவதால் முடிந்தபோது அனைவரும் வருக , என்று எங்கள் ஸ்ரீ கிருஷ்ணார்ப் பணம் சேவா டிரஸ்ட் ஸ்டாலுக்கும் (U 9) விஜயம் செய்க என்றும் வேண்டுகிறேன். புத்தகங்கள் அங்கேயே பெறலாம்.
No comments:
Post a Comment