Tuesday, February 11, 2020

FAMILY




நல்லதொரு குடும்பம்  பல்கலைக் கழகம்.
J K SIVAN
நமது வாழ்க்கை  எப்படி செல்கிறது என்று அநேகருக்கு  தெரிந்திருக்கும்.
 முதல் 25 வருஷங்கள் அப்பாவின்  ராஜ்ஜியம். அவர் தான் சம்பாதிப்பவர் குடும்ப  பாரத்தை சுமப்பவர். காட்டு ராஜா  சிங்கம்.   அவருக்கு உதவியாக அம்மா  வீட்டில் நிர்வாகம். குழந்தைகளை  வளர்த்து படிக்க வைப்பது  என்பதில் இருவருக்கும் அக்கறை. பொறுப்பு.  வீட்டில் அப்பாவின் சொல்லுக்கு மதிப்பு அதிகம். அப்பா  இட்டதே முடிவு. கோபக்கார  நரசிம்ம மூர்த்தி.  அவர் தானே  எல்லா செலவுகளையும் சந்திப்பவர்.   அப்பா என்றாலே  பயம் தன்னாலே வந்துவிடுகிறது. இப்படி முக்கால் வாசி குடும்பங்கள் ஓடுகிறது.  இந்த மாதிரி செட்  அப்பில் அம்மா வெளியே சென்று வேலை செய்து சுயமாக சம்பாதிக்காதவள்.   இது  என்  காலத்தில் இருந்த நிலைமை.  கொஞ்சம் கொஞ்சமாக  அப்புறம்  காட்சி மாறிவிட்டது.  அம்மாவும் கூட  வெளியே  காலை இரவு செல்பவள். இருவரும் சம்பாதிக்கிறார்கள். குழந்தைகளோடு சில மணி நேரம் தான்.   மற்ற நேரம் யாரோ ஒரு ஆயா, பல குழந்தைகளோடு ஐம்பதில் ஒன்றாக  குழந்தைகளை,  காசுக்காக, (ஆசையாக, பாசமாக இல்லை), கவனிக்கிறாள்??? என் காலத்திலிருந்த  அப்பா- பிள்ளை, அம்மா- பிள்ளை பாசம்  இடைவெளி பெறுகிறது.

அப்புறம்  25 வருஷங்கள்  பிள்ளைகள் பெண்கள்  படித்து, ஏதோ தொழில் கற்று,  பெரியவர்களாகி  வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்கள். இப்போது  அப்பாவின் இடத்தை அம்மா பெற்று அவளது  ராஜ்ஜியம்.  பிள்ளை பெண்களுக்கு
அம்மாவோடு செலவழிக்கும் நேரம் அதிகம்.  அவள் எடுக்கும் முடிவுகள் தான் அதிகம்.   அப்பா  துணை முதல்வர், உதவி ஜனாதிபதி....கூடவே நிற்பதோடு சரி.  அவருக்கும் வேலையிலிருந்து ஒய்வு கிடைத்திருக்கும்  அல்லது நெருங்கி கொண்டிருக்கும்.  அவர் குரல் அதிகம் முன்பு போல்  ஒலிக்காது. அம்மாவின் அதிகாரம் சில இடங்களில் அவளை அதிகார பீடத்திலிருந்து ஓரம் கட்ட வைக்கிறது.

ரொம்ப  ஸாரி ,   அடுத்த கட்டம் கொஞ்சம்  கஷ்டமானது.  அடுத்த 25 வருஷங்கள் பிள்ளைகள் ராஜ்ஜியம்.   அடுத்த தலை முறையின் குடும்பம்  பிராதனமாகி விடுகிறது.  அம்மா அப்பாக்கள்  இப்போது தாத்தா பாட்டிகள் .  உபரி நம்பர்கள்.
 பாட்டி செல்லம் பேரன் பேத்திகளை அவள் பக்கம் இழுக்கிறது. தாத்தா அநேக இடங்களில்  runaout,   lbw  ஆகிவிடுகிறார்.  பாட்டிக்கும்  தாத்தாவை விட  பிள்ளை பெண்களிடம் தான் சார்பு அதிகம். நெருக்கம் அதிகம்.  இதனால் பல வீடுகளில் கிழங்களுக் கிடையே  விரிசல் ஏற்படுகிறது.
 சில வீடுகளில் அப்பாவும் அம்மாவும்  கால்பந்துகள். சிக்ஸர் அடிக்கப்படும் கிரிக்கட் பந்துகள்.   இந்த பக்கம் அந்தப்பக்கம் உதை பட்டு  தள்ளப்படுபவர்கள். பெண்கள் பிள்ளைகளால்  ஊர்  ஊராக  பங்கு போட்டுக்கொண்டு இழுக்கப்படுபவர்கள். இழுக்க இழுக்க  பெண்கள் பிள்ளைகளுக்கு  அப்பா அம்மாக்களின்  இறுதி வரை இன்பம் தனிமை அவர்களை அணைக்கிறது. கூட்டுக்குடும்பங்கள் அழிந்து விட்டதால் இப்படி ஒரு நிலைமை.  பிள்ளைகள் பெண்களை நம்பி வாழும் வயாதானவர்களின்  சிரமம் வெளியே சொல்லமுடியாத நிலையை அடைகிறது.   வெளிப்படுத்தமுடியாத உணர்ச்சிகளை  மென்று விழுங்குவதால் கி உடல் நிலை பாதிக்கப்படுகிறது.

மூன்றாவது நிலையில் பிள்ளைகள்-மருமகள்கள் இடையே வாக்கு  வாதம், வேற்றுமை,  மோதல் இருந்தால் குழந்தைகள் அம்மா பக்கம் சாய்கிறார்கள்.  அப்பா பாடு கஷ்டம்.  பிள்ளையாக இருந்து இப்போது அப்பாவாக ஆனவன் தனது அப்பாவின் நிலையை  பின்  தொடர்கிறான். அவன் உடல் நிலையும்  முன்பு போல் இல்லை. உணர்ச்சிகளால் பாதிப்பு.

மேலே சொன்னதிலிருந்து என்ன தெரிகிறது.?
அப்பா ராஜ்யத்தில் சிங்கமாக  சர்வாதிகாரியாக இருந்தபோது அம்மா வாய் பேசாமல் சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கிறாள். அதிகாரம் அவள் பக்கம் சாய்கிறபோது அப்பாவை நெருக்குகிறாள். இது  நியாயம் தானே?  
அதிகாரம் ஆண்களிடம் இருக்கும்போது அவர்கள்  குடும்பத்தின் இதர உறுப்பினர்களை பற்றியும் நினைத்து பார்த்து முடிவுகளை எடுக்கவேண்டும்.  ஆனைக்கொரு காலம் பின்னால் பூனைக்கொரு காலமாக மாறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  குழந்தைகளுக்கு அம்மாதான் பிரதானம்.  அப்பாக்கள்  குடுமப சம்பவங்களில், சங்கடங்களில் இதை மனதில் கொண்டு முடிவெடுக்கவேண்டும். அதிகார துஷ்ப்ரயோகம் கூடாது.

அப்பா சேர்த்து வைக்கும் சேமிப்பை எல்லோர் நலத்துக்கும் உதவுமாறு பாரபக்ஷமின்றி வைக்கவேண்டிய அவசியம் புரிகிறது.தங்களுக்கும் பிரத்யேகமாக ஏதாவது ஏற்பாடு செயதுகொள்ளுவதின் அவசியம் உணர வேண்டும். .

பிள்ளைகள், பெண்கள், குழந்தைகளும் தந்தை எப்படியெல்லாம் தனது தேவைகளை குறைத்துக்கொண்டு இரவும் பகலும்  அவர்களுக்காக  படாத பாடு பட்ட அப்பாவை நினைத்து பார்க்கவேண்டும்.  அதை பணத்துக்கு ஈடு கட்ட முடியவே முடியாது.  இதை நினைவில் கொண்டு மரியாதையோடு அன்போடு கிழ அப்பாக்களை சந்தோஷமாக, மகிழ்ச்சியோடு பராமரிக்க வேண்டும்.

ஒரு கதையில் அப்பாவை ஒரு வேலைக்காரனாக, தனிமைப்படுத்தி அவனுக்கு அலுமினியம் தட்டில் சோற்றை வைத்து  தோட்டத்தில் தனியே ஒரு அவுட்  ஹவுஸில்  வைத்த பணக்கார ''பெரியமனிதனாகி'' விட்ட பிள்ளையின் புதல்வன் தாத்தா இறந்தபிறகு அந்த அலுமினியம் தட்டை எடுத்து வைத்துக் கொள்கிறான். ''எதற்கடா அந்த அழுக்கு தட்டு உனக்கு?'' என்று  கேட்ட அப்பாவிடம், ''  நான் பெரியவனாகி உனக்கு சாப்பாடு கொடுக்கவேண்டாமா. நீ தாத்தாவுக்கு அப்படி தானே கொடுக்கிறாய்?"'என்று வெகுளியாக கேட்ட பேரன் நிலைமையை வரவழைத்துக் கொள்ளக்கூடாது.

பெரியவர்கள்  வாடி வருந்தி  நொந்து மனமொடிந்து இட்ட சாபம் நிறைய குடும்பங்களை வாட்டுகிறது என்று கேள்விப்பட்டுஇருக்கிறேன்.
இன்றைய அம்மாக்களே, எந்த காரணத்தை கொண்டு குழந்தைகளை அப்பாவுக்கு எதிராக  திருப்பாதீர்கள். அம்பு திசைமாறி உங்களையே பின்னால்  தாக்க நேரிடும். குழந்தைகளை இப்படி தான் வளர்க்கவேண்டும் என்று வரைமுறை எதுவும் எந்த புத்தகத்திலும் கிடையாது. அன்பு பாசம் ஒன்று தான் அங்கு இழையோட வேண்டும்.  குழந்தைகளை கோவில்களுக்கு  அழைத்து சென்று  பழக்கபடுத்த வேண்டும்.  விலங்குகள், பறவைகள், ஏழை எளியவர் மேல்  கருணை கொள்ள செய்யவேண்டும். அவர்களை  சுயநலம், பொய் , பொறாமை, சண்டைக்குணம்  உள்ளே புகாமல்   ஜாக்கிரதையாக வளர்க்கவேண்டும்.  இப்போதைக்கு இது போதும். 



                                                                                                                                                                         

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...