நான் பெற்ற செல்வம் 4 J K SIVAN
'' கோயமுத்தூர் கிருஷ்ணய்யர் ''
நண்பர்களை நேரில் பார்த்து தான் நட்பாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பார்க்காமலேயே டெலிபோனில் பேசி, கடிதங்கள் மூலம், செயதிகள் மூலம் கூட ஒருவர் மனதை மற்றவர் புரிந்து கொண்டு நட்பை வளர்க்க முடியும் என்பதற்கு முன் உதாரணம் ஸ்ரீ V. S. கிருஷ்ணன் எனும் கோயம்பத்தூர் அன்பர். சிறந்த படிப்பாளி, ஆங்கிலத்தில் அற்புதமான புத்தகங்கள் எழுதிய முருக பக்தர். திருப்புகழில் தன்னை இழப்பவர். அருணகிரி திருப்புகழ் பற்றி நிறைய எழுதி இருக்கிறார். ஸ்ரீ ரமண மகரிஷி பக்தர்., மஹா பெரியவாளிடம் தேவதா விஸ்வாஸம். வயதில் மட்டுமே என்னை விட சில மாதங்கள் இளையவர் என்றாலும் ஞானத்தில் எவ்வளவோ மடங்கு மூத்தவர். சிந்தனையாளர். பெரிய உத்யோகங் களில் இருந்தவர். எனக்கு நண்பராக கிடைத்தது மேலே நான் சொன்னபடி எனக்கு கிடைத்த செல்வம். கிருஷ்ண பிரசாதம். ஸ்ரீ க்ரிஷ்ணய் யரோடு என்னை இணைத்தவன் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் மூலம் பலரை நான் சந்திக்க தெரிந்துகொள்ள வைத்த ஸ்ரீ கிருஷ் ணன் தான் அவன் பெயர் கொண்ட ஒரு பெரியவரையே எனக்கு அறிமுகப்படுத்தி அவர் புத்தகங்களை நான் ரசித்து படிக்க வைத்த வன். அவர் புத்தகம் ஒன்று ''SAINTS OF SOUTH INDIA'' எனக்கு பரிசளித்தார். அதில் தென் இந்தியா பெற்றெடுத்த 38 அரும் பெரும் மகான்களை, அவதாரங்களை, பற்றி எழுதி இருக்கிறார். அதை படித்த பிறகு தான் எனக்கும் சித்தர்கள், யோகிகள், மஹான்கள், ஆச்சார்யர்கள் என்று பலரைப் பற்றி பாரத தேசத்தில் அவ்வப்போது தோன்றிய சிலரை பற்றி சுருக்கமாக எனக்கு தெரிந்த வரையில் எழுத ஒரு ஆர்வம் ஏற்பட்டது.
அவர் சென்னை வந்தாலோ, நான் கோயம் பத்தூர் போனாலோ அவரை நிச்சயம் நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீ வி.எஸ். கிருஷ்ணன் ஒருமுறை எழுதிய அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஆங்கிலத்தில் அவர் எழுதியதை, படித்தது நினைவில் நிற்கிறது. அதை எனக்கு தெரிந்த தமிழில் சுருக்கமாக தருகிறேன்:
1963ல் காஞ்சி சங்கரமடம் சென்று பெரியவா தரிசனம் செயது ஆசி பெறவேண்டும். நான் சென்றபோது மடத்தில் நீளமான பக்தர்கள் வரிசை. நான் ஹனுமார் வாலின் நுனியில். வரிசையோ ஆமைவேகத்தில் நகர்ந்தது. பக்தர்கள் கூட்டம் சீக்கிரம் நகராதா? என்று எனக்குள் ஒரு ஆத்திரம். எதற்கு அவசரம் என்றால் நானாக பெரியவா தரிசனம் பெற காஞ்சி மடம் வரவில்லை. ஒரு அத்யாவசிய சூழ்நிலை. புரியும்படி சொன்னால் தான் புரியும்.
எனக்கு கல்கத்தாவில் வேலை. எங்கள் நிறுவன முதலாளி ஸ்ரீ S .V, நரசிம்மன். காஞ்சி பரமாச் சார்யாளின் தீவிர பக்தர். எனக்கு அப்போது பெரியவாளை பற்றி அவ்வளவாக தெரியாது. மூன்று வருஷமாக இந்த நிறுவனத்தில் உழைக்கிறவன். கொஞ்சம் லீவ் கிடைத்த போது என் சொந்த ஊர் திரிஸ்ஸுர் போய் சொந்த பந்தங்களை பார்க்க துடித்தேன். நரசிம்மனிடம் போய் விடுமுறை கேட்டேன்.
''கிருஷ்ணா, உனக்கு லீவ் தரேன். ஆனா நீ ஒண்ணு பண்ணனும். முதலில் மெட்ராஸ் போ. அங்கிருந்து . காஞ்சிபுரம் போய் அங்கே சங்கர மடத்திலே பெரியவா இருப்பா. அவா கிட்டே எனக்கு ஆசீர்வாதம் வாங்கிண்டுட்டு உன் ஊருக்கு போ '' என்கிறார் நரசிம்மன்.
''இந்த ஐடியா எனக்கு ஜீரணிக்க முடியல. எரிச்சல். எவ்வளவு சீக்கிரம் அவசரமா சொந்த ஊருக்கு போக துடிக்கிறேன். என்னை போயி காஞ்சிபுரம் போ அங்கே இங்கே போ என்கிறாரே. முதலாளி சொன்னப்புறம் என்ன செய்யமுடியும்? இந்த காஞ்சிபுரம் ட்ரிப் ரெண்டு நாள் லீவை சாப்பிட்டுடுமே . அதை அழகாக ஊரிலே சொந்த பந்தங்களோடு கழிக்கலாமில்லையா?
ஆகவே தான் நீளமான வரிசையில் கடைசியில் நிற்கும் எனக்கு எப்போது அது நகரும்னு அவசரம். என் உடம்பு தான் வரிசையில் நின்றது. மனசெல்லாம் திரிஸூர்லே.
வரிசையில் ''கடனே''ன்னு நின்னேன்.
தூரத்தில் பரமாச்சார்யாள் தரையில் அமர்ந்திருக்கிறார். அவரை சுற்றி ஒரு கூட்டம். பக்தர்கள்,தொண்டர் கள். மந்த ஹாசமான புன்னகையுடன் எல்லோருக்கும் குங்கும பிரசாதம் அளித்துக் கொண்டிருந் தார். அபய .ஹஸ்தம் கேட்காமலேயே ஆசி அளித்துக் கொண்டிருந்தது. எனக்கும், எல்லோருக்
''என் கிட்டே வா '' என்று சைகையில் அழைத் தார். அருகே நகர்ந்தேன்.
''எங்கிருந்து வரே ''
''கல்கத்தாவிலிருந்து '
'' வேத பவன் நடத்தறாரே அதன் தலைவர் நரசிம்மன், அவரை உனக்கு தெரியுமா?''
எனக்கு தூக்கி வாரி போட்டது.
''நான் அவர் கம்பெனில தான் வேலையாயிருக் கேன். அவர் தான் உங்க கிட்டே வந்து ஆசீர் வாதம் வாங்கிண்டு வா என்று சொல்லி என்னை அனுப்பினார்'' மென்று விழுங்கி கஷ்டப்பட்டுக் கொண்டு பேசினேன்
.
''அப்படியா, அவர்கிட்டே என்னோடைய ஆசிர்வாதத்தை தந்தேன் என்று போய்சொல்லு
'' நீ எப்படி இருக்கே, வேலை பிடிக்கிறதா?''
''ஆஹா என்ன ஒரு பெரும் பாக்யம் எனக்கு. ஜகதகுரு, உலகமே புகழும் ஒருத்தர், ரொம்ப தூசு, சாதாரண மான என்னைப் பார்த்து நலம் விஜாரிக்கிறாரே. என்னாலே என் காதை நம்ப முடியலே. நம்பினால் நம்புங்கோ, இல்லாட்டா போங்கோ. பத்து நிமிஷம் பெரியவா என் னோடு செலவழிச்சா.. எவ்வளவு பெரிய மனுஷாள் எல்லாம் காத்திண்டு இருக்கா. சிலர் பல நாள் காத்திருந்தும் ஒரு நிமிஷம் கூட கிடைக்கறதில்லேயாம். எனக்கு பத்து நிமிஷம் !!
அவரோடு பேசும்போது என்னை அறியாமலே ரொம்ப அந்நியோன்னியமா ஒரு பிராண சிநேகிதன் கிட்டே பேசுவது போல் தான் தோணித்து. அவர் கிட்டே இனம்புரியாத ஒரு காந்த சக்தி இருக்கு என்று உணர்ந்தேன். பக்தர்களை அப்படியே கட்டி கவர்ந்து இழுக்கும் சக்தி. அவர் ஒரு அவதார புருஷன். சந்தேகத்துக்கு இடமே இல்லை. என் குரு அவர்னு அப்பவே தோணிடுத்து. அவர் எளிமை, காருண்யம், தன்மை, சாந்தம், தெய்வீகம் எல்லாமே ... அப்பப்பா, வார்த்தைகளே வரலே எனக்கு சொல்றதுக்கு.... அடிமையாயிட்டேன்.. வருஷம் அம்பதுக்கு மேலே ஆனாலும் இப்போது தான் அரைமணிக்கு முன்னாலே நடந்தது மாதிரி அந்த சந்திப்பு என்னை கட்டிப்போட்டுடுத்து.
என் திரிசூர், அதில் பந்தம் சொந்தம்..... சே எல்லாம் எப்படி ஒரு மாயையின் உருவம்னு தோணிடுத்து . அதுக்காக இவரை இழந்திரு ப்பேனே. நரசிம்மன் புண்யம் கட்டிண்டார்.
கோவிந்தன் தான் ஸத்யம். அவனை குரு மூலம் தான் அடைய முடியும். இதை அப்புறம் அவரைப்பற்றி எழுதப்பட்ட புத்தகம் ''தெய்வத் தின் குரல் '' படித்து புரிந்து கொண்டேன். குரு ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் யாரோ, ஏதோ ஒரு உருவத்தில் தான் வருகிறார். எனக்கு நரசிம்மன் உருவத்தில் வந்தார். எனக்கு பரமாச்சார்யா அனுபவம் பெற வைத்தார். அன்று பெரியவா திருவடியில் சரணம டைந்தவன் தான் .. இனி மூச்சு நிற்கும் வரையில். அப்புறமும் கூட......''
In the attached photo the person standing with Sri VSK is Sri Anand Vasudevan, the editor of emagazine ''Amritha Varshini'' who introduced Sri Krshnan to me.
Comments
J.k. Sivan
Write a comment...
No comments:
Post a Comment