தொண்டைமண்டல நவகிரஹ ஸ்தலங்கள் J K SIVAN
பொழிச்சலூர்
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வர சுவாமியார் !!
இந்த வருஷம் சிவராத்திரி எதிர்பாராத விதமாக அற்புதமாகவே அமைந்து விட்டது. நண்பர் ஸ்ரீ சந்திரசேகரன் ஒரு சிறந்த சிவபக்தர் மட்டுமல்ல இந்த சிவனின் ஆத்ம நண்பரும் கூட . அவரும் அவரது மனைவியும் விடிகாலையில் ஆறு மணிக்கே கிளம்பி நங்கநல்லூர் வந்து உடனே காபி கூட சாப்பிடாமல் கிளம்பிவிட்டோம். 21.2.2020 அன்று முழுதும் உபவாசம் இருக்கலாம் என்று ஒரு ஆசை.
அந்த நேரத்தில் சென்னை விமான நிலைய சாலையில் அவ்வளவு கூட்டம் காணவில்லை என்பதால் சீக்கிரமே பொழிச்சலூர் அடைந்துவிட்டோம். வழி சொன்ன வெள்ளைக்கார பெண் கூகுள் map பெண்மணி சந்து போன்று எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாள். எத்தனை மீட்டர் எந்த பக்கம் செல்லவேண்டும், கோவில் எங்கே இருக்கிறது என்று தப்பில்லாமல் தப்பாது சொல்கிறாள்.
அகஸ்தீஸ்வரர் ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் பொழிச்சலூரை வாடா திருநள்ளாராக பண்ணியவர் என்றாலும் அவரை எல்லோரும் சேர்ந்து சாமியார் ஆக்கிவிட்டார்கள். அவர் பெயரை அகஸ்தீஸ்வர சுவாமியார் என்று போட்டுவிட்டார்கள். லிங்கத்துக்கு நல்ல வேளை தாடி மீசை ஒட்டவில்லை.` கொஞ்சம் தள்ளி பம்மல் தாண்டி அனகாபுத்தூரில் தெருவின் ஓரத்திலேயே ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் இருக்கிறார். அவரை சுவாமியார் என்று பெயர் மாற்றவில்லை.
1000ம் வருஷத்திய கோவில். பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் ஆலயம் சனீஸ்வர பகவான் ஆலயம், பரிகார ஸ்தலம். தொண்டைமண்டலத்தில் சனிகிரஹ க்ஷேத்ரம். சென்னை திரிசூலம் விமான நிலத்திற்கு தென் திசை பின்னால் பல்லாவரத்திலிருந்து 2. கி.மீ. ஒரு விஷயம். இந்த கோவிலில் பகவானுக்கு நைவேத்யம் படைக்கும் போது எங்கிருந்தோ நிறைய காகங்கள் வருகிறதாம், சனீஸ்வரன் வாஹனம் அல்லவா காகம். பக்தர்கள் காகங்களுக்கு நிறைய ஆகாரங்கள் தருகிறார்கள். காகங்களுக்கு ஆகாரம் தருவதன் மூலம் பித்ரு ஆசிர்வாதம் கிடைப்பது மட்டுமல்ல, பாவங்களுக்கும் பிராயச்சித்தம்.

அகஸ்தீஸ்வரர் ஸ்வயம்பு லிங்கம் . 12ம் நூற்றாண்டு சோழர்களால் கட்டப்பட்ட ஆலயம். அகத்தியர் கைலாசத்திலிருந்து ஹிமயத்திலிருந்து பொதிகைக்கு திரும்பும்போது வழியில் இங்கே தங்கி வழிபட்டதாக ஒரு ஐதீகம்.
சனீஸ்வர பகவானுக்கு தனி சந்நிதி. சனி ஒருவனுக்கு தான் நவகிரஹங்களில் ஈஸ்வரன் பட்டம் என்று சொல்வதை விட சனைச்சரன், என்றால் ஒரு கால் விந்தி விந்தி மெதுவாக நடப்பவன் என்று ஒரு அர்த்தம். அதனால் தான் ஒரு கிரஹத்திலிருந்து இன்னொரு கிரஹம் மாறுவதற்கு, சனிப்பெயர்ச்சிக்கு ஏழரை வருஷம் எடுத்துக் கொள்கிறான். ஏழரை நாட்டான் சனி என்று அந்த கால கட்டத்தில் வாட்டி எடுத்துவிடுவான். பொங்கு சனி வாரி கொடுப்பவன்.
நங்கநல்லூரிலிருந்து புறப்பட்டு முதலில் சனீஸ்வர பகவான் ஆலயத்தில் ஆரம்பித்து பொழிச்சலூர் சென்று விட்டு அங்கே அபிஷேகம் நடந்து தீபாராதனை முடித்தவுடன் குன்றத்தூர் சென்றோம். அங்கே ராகு தரிசனம். அதை பற்றி அடுத்து எழுதுகிறேன். இந்த சிவராத்ரி ஒன்பது கிரஹ ஆலயங்களும் தரிசிக்கும் எண்ணத்தோடு புறப்பட்டோம் அல்லவா?.
No comments:
Post a Comment