திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள்
J K SIVAN
45 வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே
ராமாயணத்தில் எல்லோராலும் மெச்சப்படும் ஒரு பாத்திரம் பரதன். கம்பர் ராமாயணத்தில் கங்கைக்கரையில் முதன்முதலில் குகன் பரதன் வருவதைப்பார்த்து அவனை தவறாக எண்ணி பிறகு அவனுடன் பேசி அவன் மனநிலை அறிந்ததும் சொல்வதை எவ்வளவு அழகாக சொல்கிறார் :
''தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி தன்னைத்
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில் தேக்கி
போயினை என்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ அறியின் அம்மா''
அன்றாட வாழ்க்கையில் ஒரு கிரவுண்டு நிலத்திற்காக ஒருத்தனை ஒருத்தன், அப்பன் பிள்ளை, ஆத்தா, அண்ணன் தம்பிகளை வெட்டி கொல்வதை, ஏமாற்றுவதை, நிறைய படிக்கிறோம், பார்க்கிறோம்.
ஒரு ராஜ்யமே தன் காலடியில் கிடந்தபோதும், அதை நெருப்பை மிதிக்க அஞ்சுவது போல் ஒதுக்கி 14 வருஷம் தானும் எவரும் சொல்லா மலேயே மரவுரி தரித்து ராமனுக்காக காத்தி ருந்த தம்பி பரதன். ஆகவே நொடியில் பரதன் குணத்தை அறிந்த குகன் ''அடே பரதா , உன்னுடைய பெருமை நான் அறிந்து கொண் டேன். அடடா, பரதா, உன்னை ஒரு தராசு தட்டில் போட்டு, இன்னொரு தட்டில் ஆயிரம் ராமர்களை போட்டாலும் உனக்கு ஈடாக மாட்டார்கள். நீ ராமனைக்காட்டிலும் மேன்மையானவன் ''என்கிறான்.
தனது தாய், தந்தையிடம் வரம் பெற்று, ராமனை காட்டுக்கு 14 வருஷம் அனுப்பி தன்னை ராஜாவாக்கி, கொடுத்த வாக்கினை மீறாமல், அதன் விளைவாக, சோகத்தில் தந்தை இறந்தார், அண்ணன் ராமன் 14 வருஷம் வனவாசம் சென்றுவிட்டான் என அறிந்து துடிக்கிறான் பரதன். தாயை பேய் என கருதி, மன்னிக்காமல் அவளுடன் பேசுவதைக் கூட நிறுத்தி விட்டான் பரதன்.
''இதெல்லாம் கேட்டும் கண்டும் நான் இன்னும் சாகாமல் இருப்பதே தவறு என ராமனை கண்டு அவனே ராஜ்ய பொறுப்பேற்கவேண்டும் என அழைக்க கானகம் செல்கிறான்.
ராமனைக்கண்டு எவ்வளவோ மன்றாடி திரும்ப அயோத்தி வந்து ராஜாவாக வேண்டும் என்று மன்றாடுகிறான். ராமனோ ''பாரதா, நான் தந்தை சொல்லை மீறமாட்டேன்'' என்று அவனை திருப்பி அனுப்புகிறான். வேறு வழியின்றி ராமனைக் கெஞ்சி பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடியும் வரை ராமா எனக்காக உன் பாதுகையை க் கொடு, அது நாட்டை ஆளட்டும். வனவாசம் முடிந்த மறு கணமே ராமா நீ திரும்பி வந்து ராஜ்யபார பொறுப்பேற்கவேண்டும், இல்லையென்றால் நான் தீக்குளித்து மரணத்தை தீண்டுவேன்'' என்று கறாராக பரதன் சொல்லி ராமன் ஒப்புதலை பெறுகிறான்.
அயோத்தி நகரம் திரும்பி செல்லாமல் வழியே நந்திக்ராமம் எனும் இடத்தில் இருந்து கொண்டே ராஜ்யத்தை ராமனின் பாதுகை முடிசூடி ஆள , அதன் சேவகனாக இருந்து திறம்பட நாட்டை பாதுகாத்து குடிமக்களை பரிபாலிக்கிறான்.
இப்படி பரதன் போன்ற ஒரு பாத்திரத்தை உலகின் வேறெந்த மத நூல்களிலும் காண முடியாது என்பது ஒரு அதிசயம் , ஆச்சர்யம்.
எப்போதும் நம்மை விட எல்லா விஷயங்களும் அதிகமாக தெரிந்து வைத்திருப்பவள் திருக் கோளூர் பெண்மணி .ஆகவே தான் ஸ்ரீ ராமா னுஜரே, நான் என்ன பரதனா ? அண்ணன் மேல் விஸ்வாசம் மிக்கவனாக அவன் பாதுகையைப் பெற்று , போற்றி, முடிசூட்டி, அதை அரசாள வைத்து அதன் சேவகனாக அதன் தொண்ட னாக வழிபடும் மனப்பக்குவம் கொண்டவளா? என்றாவது நான் இறைவனிடம் அப்படிப்பட்ட பக்தி பூண்டவளா? எப்படி நான் திருக்கோளூர் போன்ற க்ஷேத்ரத்தில் குடியேறி வசிக்க தகுதியானவள் ? என்று கேட்கிறாள்.
No comments:
Post a Comment