Sunday, February 23, 2020

KALABAIRAVASHTAKAM

கால பைரவாஷ்டகம்  J K SIVAN
ஆதி சங்கரர் 
                                                                               
  காசி புராதீஸ்வரா  

ஆதி சங்கரரின்  கால பைரவாஷ்டகம் பக்தியின் சாறு.  எட்டு  ஸ்தோத்திரங்கள் கொண்டது. முதல் ஸ்தோத்ரம் ஏற்கனவே  படித்தோம். இன்று ரெண்டாவது ஸ்லோகம்.                                                             
भानुकोटिभास्वरं भवाब्धितारकं परं
नीलकण्ठमीप्सितार्थदायकं त्रिलोचनम् ।
कालकालमंबुजाक्षमक्षशूलमक्षरं
काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥२॥

Bhaanu-Kotti-Bhaasvaram Bhavaabdhi-Taarakam Param
Niila-Kannttham-Iipsita-Artha-Daayakam Trilocanam |
Kaala-Kaalam-Ambuja-Akssam-Akssa-Shuulam-Akssaram
Kaashikaa-Pura-Adhinaatha-Kaalabhairavam Bhaje ||2||

பானுகோடிபாஸ்வரம்

பவாப்திதாரகம் பரம்
நீலகண்டமீப்ஸிதார்ததாயகம் த்ரிலோசனம் |
காலகாலமம்புஜாக்ஷமக்ஷசூலமக்ஷரம்
காசிகா புராதிநாத காலபைரவம் பஜே ||௨||

சதாசிவா, உன் மகனை,  கணேசனை,   வணங்கும்போது ''சூர்ய கோடி சம பிரபா'' என்போமே. அது உன் குடும்ப சொத்தா?   கண்ணைப்பறிக்கும் பொன்னார் மேனியனே, நீயும் நூறு நூறு கோடி சூர்ய பிரகாசமானவன். பவ சாகரத்தை கடக்கும் தோணி, நீல கண்டா, அது எப்படி ஹாலஹால விஷம் கூட உன் மேனிக்கென்று ஒரு தனி அழகைத்  தருகிறது. மயில் கழுத்து போல் மயக்குகிறது. எமது பெண்களுக்கு மயில் கழுத்து நிற புடவை என்றால் எத்தனை மோகம். சிவம் என்றால் மங்களம் தானே. உன் பெயர் சொன்னாலே சுபிக்ஷம் தானே. அரவிந்த லோசனா, இந்த அழகிய இரு கண்களை அரை மூடி நீ த்யானத்தில் இருக்கும் காந்த சக்தி அகிலத்தை வளைத்து விடுமே, ஆனால் அதன் மீது இருக்கும் முக்கண்ணோ,   தீயவர் கண்டஞ்சும் தன்மையது. 
பரம சிவா, நீ காம தகன காரணன் மட்டுமல்ல. திருபுராந்தகன் மட்டும் அல்ல. காலனுக்கே காலன். ம்ருத்யுஞ்சயன் . கால சம்ஹார மூர்த்தி. சூலாயுத பாணி. திரி புவனத்தையும் காக்கும் ரக்ஷை உன் திரிசூலம். முடிவில்லாதவன் நீ மோன குரு. கால பைரவேஸ்வரா, காசிபுராதினாதா, உன்னை பஜித்து மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...