இரு வங்கியர்கள்
அவர் ஒரு உயர்ந்த மனிதர். எல்லாவிதத்திலும், உயரத்தையும், சேர்த்து தான் சொல்கிறேன். சிரித்த முகம். உதவி செய்ய துடிக்கும் நீண்ட கரங்கள். வீட்டிற்கு வந்தவர்கள் யாரும் ஏதேனும் ஒரு தின்பண்டம், ஜில்லென்று, அல்லது சூடாக ஏதேனும் ஒரு பானம் சாப்பி டாமல் வெளியே செல்ல முடியாது. வங்கியில் பணி புரிந்தபோதும் சரி இப்போதும் வீட்டிலும், எங்கு சூரியநாராயணன் இருக்கிறாரோ, அங்கே தரையில் ஒரு காகிதமோ, தூசியோ, ஸ்டேப்ளர் பின், குண்டூசி எதுவுமே இருக்காது. பொறுப்பாக அதை தெருவில் போடாமல் எங்கு குப்பை தொட்டி இருக்கிறதோ அங்கு சென்று போட்டுவிட்டு வருபவர். சிறிய சிறிய காரியங்களிலிருந்து தான் ஒரு மனிதனின் குணத்தை சரியாக அனுமானிக்கமுடியும் என்பது மனோ தத்துவம்.
ஜாடிக்கேத்த மூடி போல் அவர் மனைவி. இருவருமே வங்கியில் நிர்வாகிகளாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள். ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் ஆரம்பித்ததிலிருந்து பழக்கம். எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு நிறைய பிஸ்கோத்துகள்; குளிர் பானங்கள், கல்கண்டு, ரோஜா மலர்கள் சந்தனம், பன்னீர் வழங்க தவறுவதேயில்லை. இது மட்டுமல்ல, எங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற தமது இல்லத் திலேயே மாடியில் இடம் கொடுப் பவர்கள்.
ரோட்டரி தலைவராக பணியாற்றியவர், அகில இந்திய யூனியன் பேங்க் ஒய்வு பெற்றோர் சங்க அமைப்பாளர், செயலராக (2012-2016) பணியாற்றியவர். இன்னும் அங்கத்தினராக பணி தொடர்கி றார். மனைவி இன்னர் வீல் தலைவியாக, அங்கத்தினராக இன்னும் பணியாற்றி பல எண்ணற்ற சேவைகளை புரிபவர்கள். இருவருமே விளம்பரம் பிடிக்கா தவர்கள். சிறந்த நிர்வாக திறமை கொண்ட ஜோடி.
எல்லோரையும் விட அவர்கள் இல்லத்தில் இருக்கும் கிருஷ்ணம்மா எனும் கண்ணன் பெயர் கொண்ட மூதாட்டி 93+ எனக்கு மிகவும் பிடித்தவர். இன்னும் மலர்ந்த சிரிப்போடு என்னை அடையாளம் கண்டு அழைப்பவர். அவரை வணங்காமல் ஒருநாளும் எங்கள் கிருஷ்ணார்ப் பணம் நிகழ்ச்சிகள் நடந்ததில்லை.
ஆம் நாம் சொல்வது ஸ்ரீ ரொட்டேரியன் S. சூர்யநாராயணன், ஸ்ரீமதி ஜெயலட்சுமி சூர்யநாராயணன் தம்பதியர் பற்றி தான். வீட்டில் பிள்ளையார் ஒரு குட்டி கோவிலில் வரவேற்கிறார். எங்கள் நிகழ்ச்சி கள் நம்பர் 20, ராம்நகர் முதல் தெரு, நங்கநல்லூர் , குருவாயூ ரப்பன் ஆலயம் எதிரே, என்று விளம்பரப் படுத்துவது தை அவர்கள் இல்லத்தை தான்.
நிறைய தான தர்மம் காரியங்களை கணவனும் மனைவியுமாக போட்டி போட்டுக்கொண்டு நடத்துவது ஒரு அதிசயம், இந்த அபூர்வ தம்பதிகளை நண்பர்களாக நான் பெற்றதை ஒரு ஈடற்ற செல்வமாக கருதி அவர்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகிறேன்.
இன்னொரு ஆச்சர்ய செய்தி சொல்கிறேன். 2019ல் ஸ்ரீ சூர்ய நாராயணன் தனது 70வது ஆண்டு பூர்த்தி விழா அழைப்பிதழில் (பீமரத சாந்தி ) பரிசுகள் தரவேண்டாம். பணமாக தருபவர்கள் தொகை அனைத்தும் நான்கு தர்ம காரிய நிறுவனங்களுக்கு சமமாக பங்கிட்டு வழங்கப்படும் என்று அறிவித்து, எங்கள் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா சங்கம் அன்பளிப் பாக ஒரு கணிசமான தொகை பெற்றது.
பணம் வரும் மனம் வரவேண்டாமா?
சுறுசுறுப்பான இந்த அதிசய தம்பதிகளின் ஒரே மகன் முன்பு சிங்கப்பூரிலிருந்து இப்போது பெங்களூர் வந்து வசிப்பதால் ஒரு சூட்டிகை யான பெயர்த்தி ''சக்தி'' யுடன் சந்தோஷமாக அவ்வப்போது நேரம் கழித்துவிட்டு மீண்டும் சென்னை வந்து ''சிவன் ' நிகழ்ச்சி களையும் கவனித்துக் கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment