Thursday, February 27, 2020

SHEERDI BABA

மனிதருக்குள் ஒரு தெய்வம்             J K SIVAN
ஷீர்டி  பாபா

            ஸத் குரு உபதேசம் 

ஸத்குரு  என்றால்  சாயிபாபா  நினைவு தான் வரும்.  அவர்  எதிரே நிற்பது போல் தோன்றும்.  அவரது உருவச்சிலையை மனதில் நிறுத்தி கண்களை மூடி த்யானம்  செய்யும்போது அவர் எழுந்து வந்து நிதானமாக தனது கரத்தில் கொண்டு வந்த  'உதி' யை (சாம்பலை)  ''இந்தாடா''  என்று நெற்றியில் இடுவது போல் தோன்றும்.

 ஒரு  கரத்தால் முகத்தை பிடித்து அன்பு கனிய பார்த்து, வலது கரத்தால் தலையை தடவி ஆசீர்வாதம் வழங்குவது போல் தோன்றும்.  அவர் கண்களில் இருக்கும்  தயை, கருணை விவரிக்க முடியாத அனுபவம்.   கண்களில்  ஆனந்தத்தி
ல்  ஆறாக  நீர் வழியும்.    வேதநூல்கள்  எதை படித்தாலும் அதில் வரும் சொல்லும்  செயலும்   ஸ்ரீ சாய் பாபாவையை  எனக்கு நினை வுறுத்துகிறது.  அவர்  ராமனாகவும்  தோன்றுகிறார், கிருஷ்ண னாகவும் காட்சி தருகிறார்.  அவரிடமிருந்து வெளிவரும் சொற்கள்,   லோக க்ஷேமத்துக்காக  கிருஷ்ணனாக  அவர் உபதேசித்த   பகவத் கீதையோ,   உலகை விட்டு மறையும் முன்பு
கடைசியாக  பக்தர் உத்தவருக்கு உபதேசம் செய்தவையோ? என்று தோன்றுகிறது.  
எழுத உட்கார்ந்தால்  அவரே என் கையை பிடித்து குழந்தையை எழுத வைப்பது போல் என்னை ஏதோ அவர் நினைத்தவாறே எழுத வைக்கிறாரோ? என்றல்லவோ  தோன்றுகிறது.  

பாபாவை நினைத்து  சாஷ்டாங்கமாக  வணங்கினால் ,  இதயத்தையும்  ஆன்மாவையும்  அவருக்கு  அர்ப்பணம் பண்ணிவிட்டால்.   நாம் கேட்காமலேயே   மனித வாழ்க்கைக்கு தேவையான  தர்மம், (நெறிமுறை) அர்த்தம்  (செல்வம்)  காமம் (விருப்பங்கள்)  மோக்ஷம் (முக்தி)   ஆகிய  நான்கையும் வாரி வழங்குபவர். 

கடவுளை அடையும்  வழிகளான  கர்ம, ஞான, யோக, பக்தி  மார்க்கங்களை தெளிவிப்பவர். இதில் பக்தி மார்க்கம் என்பது கொஞ்சம் முள், மேடு பள்ளம் நிறைந்தது.   சுலப வழியல்ல.  இருப்பினும் மற்ற வழிகளை விட இது நிச்சயம் நம்மை போகவேண் டிய இடத்துக்கு ஸ்வஸ்தமாக கொண்டு செல்லும். வழித்துணைவன் ஹான்  சத்குரு ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா  வழிகாட்டும்போது  மோக்ஷத்தை அடைவதில் என்ன கஷ்டம்.

ஷீர்டி பாபாவின்  அதிகார பூர்வ காரண்டீ  ஞாபகம் இருக்கிறதா?''

'' பக்தா,  நான் இருக்கையில் உன் வீட்டில்  உனக்கும் மற்றவர்களுக்கும்  உடுக்க உடையோ, உண்ண  உணவுக்கோ  பஞ்சம் வரவே வராது.   என்னுடைய ஒரே லக்ஷியம் என் பக்தர்கள் நீங்கள் அனைவரும்  உலகில் சுகமாக வாழவேண்டும் என்பதே. உங்கள் மனதை முழுதுமாக  என் மீது வைத்து என்னை வழிபடும் என் பக்தர்களே, யாமிருக்க பயமேன்?
 ஸ்ரீ கிருஷ்ணன் இதைத்தான் பகவத் கீதையிலும் சொன்னான். உன் நேரத்தை  உண்பதிலும் உறங்குவதிலும் தொலைக்காமல் , எதையும் தேடாமல் என்னைக் கேள்.  என் அருளாசி உனக்கு உண்டு.  உலக வாழ்வின்  பற்றுதல் இல்லாமல்    கர்வம், அதிகாரம், பெருமைகளும் மமதைகளும்  இல்லாமல்  வேண்டாம். . பகவான் உருவம் மனதில் ஆழமாக பதியட்டும். புலன்கள் மனதோடு சேர்ந்து அவனை மட்டுமே தேடட்டும். வேறு எந்த  ஆர்வமும் ஈர்ப்பும்  வேண்டாம். என்னை நினை. உன் மனம் வேறெதனாலும்  கவரப்பட்டு சலனம் அடையாது. உடல், செல்வம், சொந்த பந்தம் வீடு வாசல் உறவு இதில் மனம்  ஈடுபடாது.   உலக  இதர கவர்ச்சிகளில் மாட்டிக்கொள்ளாது.  அமைதி நிறைய   பெறும் .  என் பக்தர்கள் ஒன்று சேர்ந்து  ஆனந்தமாக  சத் சங்கத்தில் ஈடுபட்டால்   மனம்  புனிதமாகி  ஆனந்தம் பெற

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...