80 வருஷ பழைய படம் ஒன்று . J.K. SIVAN
ஒருநாள் யூ டிட்யூபில் திடீரென்று ஒரு பழைய படம் பார்க்க நேர்ந்தது. அதற்கு சற்று முன்னால் தான் யூ டியூபில் ஒரு பெரிய மனிதன், அரசியால் செல்வாக்கு உள்ள ஒரு அதிகாரி வீட்டில் வருமானவரி வேட்டைகள், கொள்ளிடத்தில் எப்படி மணல் வாரி எடுக்கலாம் எனும் கலை, வயல்களில் நீர் இல்லாமை, அம்மா, சின்னம்மா, டீ. கே. பட்டம்மா பற்றி எல்லாம் மாற்றி மாற்றி என்னென்னவோ நகர்ந்து வந்தது. ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத நிகழ்வுகள். இப்படி எல்லாம் கண்ணில் பட்டுக்கொண்டே வந்தபோது ஒரு சேனலில் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி சகுந்தலையாக நடித்த ஒரு கருப்பு வெளுப்பு படம். அட ஆச்சர்யமாக இருக்கிறதே. இதை விடக்கூடாது என்று அந்த சேனலை விட்டு நகராமல் கொஞ்சநேரம் அந்த படத்தை பார்த்ததின் பிரதிபலிப்பு இது.
நான் பிறந்த சில மாதங்களுக்கு பிறகு 1939ல் MSS ம் அவர் கணவர் T சதாசிவமும் சேர்ந்து ராயல் டாக்கீஸ் என்று ஒன்றை நிறுவி, எல்லிஸ் ஆர். டங்கன் என்ற வெள்ளைக்கார டைரக்டரை நியமித்து எடுத்த படம் சகுந்தலை. மஹாபாரதத்தில் ஒருகதை. திரைக்கதை வசனத்தை சதாசிவம் எழுதினார் என்று சொல்வதை விட சில பிராமணர்கள் ஆணோ பெண்ணோ, அக்காலத்தில் சாதாரணமாக பேசுவதை கேட்டு அதை அப்படியே இந்த படத்தில் பேச வைத்திருக்கிறார் என்பது புலப்பட்டது.
வாயைத் திறந்தாலே பாட்டு வெள்ளமாக பாயும்போது , வசனத்தை எங்கே தேடுவது ? நெட்டையாக முன் பல் துருத்திக்கொண்டு G.N.B யை இப்படி நான் பார்த்ததில்லை. வயிற்றுவலி நோயாளி போல அவர் பரிதாபமாக சிரித்தார். படு கேவலமாக ஒரு ராஜ உடையை அந்த காலத்தில் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். GNB குரல் காந்த சக்தி கொண்டது. நிறைய கேட்டிருக்கிறேன். நான் அவர் குரலின் ரசிகன். இந்த படத்தில் அவர் குரலுக்கும் உருவத்துக்கும் எட்டு பொருத்தம். GNB யை ரசிக ரஞ்சனி சபாவில் கதர் வேஷ்டி அரைக் கை கதர் வெள்ளை சட்டை, வெற்றிலை பாக்கு சிவப்பு வாயோடு, குங்குமப் பொட்டோடு நரைத்த தலையில் பார்த்து மயங்கி இருக்கிறேன். அந்த GNB யா இது.? இந்த படத்திலும் அவர் நிறைய பாடுகிறார். ''மனமோகனாங்க'' என்ற பாட்டு என்றும் நாடு ராத்ரி தூக்கத்திலிருந்து எழுந்து கூட கேட்கலாம். ரொம்ப பிரபலம். சகுந்தலை படத்தில் அவர் முகத்துக்கும் மீசைக்கும் சம்பந்தமில்லை. எப்படி மூன்
று மணி நேரம் இதை பார்த்தார்கள்? என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஒருவேளை அந்த காலத்தில் இது தான் யதார்த்தமான பேச்சு, பழக்கம், காதல் சேஷ்டைகளோ என்று கூட தோன்றியது. முக்கால்வாசி பழைய 80 வருஷ படங்களில் தாத்தாக்கள் பாட்டிகள் ''மடி'' யாக காதல் பண்ணிய காட்சிகள். காமெடி இப்போது நம்மால் ரசிக்க முடியாத அளவில் அப்போது இருந்தி ருக்கிறது. இந்த படத்திலும் டிட்டோ. DITTO. காலம் மாறினால் எப்படி மனோ பாவம் மாறுகிறது என்பதை ''சகுந்தலை'' படம் நிரூபித்தது. எம்.எஸ். எஸ் தாமரைக் குளத்தில் காலை விட்டு அளைந்து கொண்டு பாடுவது, எழுந்து ஒரு 10% டான்ஸ் குளத்தை ப்ரதக்ஷணமாக சுற்றி ஆடிக்கொண்டு, பிறகு , மலர் ஊஞ்சலில் ஆடிக்கொண்டு நீளமாக பாடுவதை கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வேண்டியிருந்தது. வயதான MSS இன்றெல்லாம் பார்க்கும்படியாக இருந்தாரே அவரா அன்று ''இப்படி'' என்று சொல்லும்படியாக , கண் மட்டுமே அவரை அடையாளம் காட்டியது.

இந்த படத்தை முக்கால்வாசிக்கு மேல் கண்ணை மூடிக்கொண்டே காதை மட்டும் நீட்டிக்கொண்டு பார்த்தேன் என்று சொன்னால் அது சும்மனாங் காட்டி இல்லை.
No comments:
Post a Comment