Wednesday, February 12, 2020

SOORYAMOOLAI SIVAN TEMPLE




​யாத்ரா விபரம்     J K  SIVAN  







                  கண்ணுக்கு நல்ல சூரிய கோடீஸ்வரர் 
                                 
​பேட்டைக்கு பேட்டை  கோவில் எழுப்பாதீர்கள்.  தமிழகத்தில் எண்ணற்ற  பழங்கால கோவில்களுக்கு சென்று  அவற்றை தரிசித்து எங்கெங்கு தேவையோ  அரசினர் உதவி எதிர்பாராமல்  எல்லோரும் சேர்ந்து    எவை புனருத்தாரணம் செய்யப்பட  வேண்டிய  நிலையில் உள்ளதோ அவற்றிற்கு  உதவலாம்.   பழங்கால கோவில்கள் புராணங்களில்  சொல்லப்பட்டவை. ஒவ்வொன்றின் பின்னாலேயும்  ஒரு  சங்கதி  உண்டு. 

 கும்பகோணத்துக்கு கிழக்கே 15 கி.மீ ​ தூரத்தில்   கஞ்சனூர்  வழியாக திருலோக்கி ​ நோக்கி சென்றால் ​சூரியமூலை எனும்  கிராமத்தில்  ஒரு ஆயிரம்  வயது தாண்டிய பழைய  அற்புத  ​கோயில்​. 
.
சுட்டெரிக்கும் சூரியன் அதீத சக்தி  வாய்ந்தவன்.  அவனுக்கு இன்னொருவர்  மூலாதார சக்தியை கொடுத்தால் எவ்வளவு சக்தி இருக்கவேண்டும்.  அது ​சிவபெருமான் அருள்.  ஆகவே  சூரியன்​ இழந்த தனது மூலாதார ​ சக்தி பெற்ற  ஸ்தலம் ​ என்பதால்  சூரிய  மூலை​​ என ​பெயர்  பெற்றது.   சூரியன்  எதனால் சக்தி இழந்தான் என தெரிந்து கொள்ள  ரெண்டு  கதைகள்:

சூரியனார் கோவிலில் புராணம் சொல்கிறதபடி, ஒருகாலத்தில்   குஷ்ட நோய்வசப்பட்டு வாடிய  சூரியன் இந்த  சூரியமூலை க்ஷேத்ரத்தில் வந்து சிவனை அம்பாளை தரிசித்து சாப விமோச்சனம் பெற்று முழு சக்தியும்  பெற்றான்.​ சூரியன்  மூலாதார சக்தி பெற்றதால்  இந்த க்ஷேத்ரம்  சூர்ய மூலை என பெயர் பெற்றதாம். ​

சிவ பக்தர்களுக்கு  முக்கியமாக  பிரதோ‌ஷ காலம்  என்பது தினமும்  சாயங்காலம்  சூரியன் மறையும்
நேரத்தில்.  ஆகவே  சூரியனால் எப்படி பிரதோஷ வழிபாட்டில் பங்கு பெற  முடியும்?  அது அவனுக்கிட்ட  அன்றாட பணி முடிந்து ஒய்வு பெரும் நேரம். சூரியன்  தனது இயலாமைக்கு வருந்தினான்.  நேரே யாக்ஞவல்கிய மாமுனியிடம் சென்று சூரிய பகவான்தனது  மனக்குறையை சொன்னபோது, அவர் '' சூர்யா  நீ கவலைப்படாதே,   உனக்காக  நான் அன்றாடம் தொழுது வணங்கும் சூர்யகோடி ப்ரகாசரை  ( இது தான் சூர்யமூலை  ஆலய  சிவன் பெயர் )  வேண்டிக் கொள்கிறேன்'' என்கிறார்.  அம்பாளின் பெயர் பவளக்கொடி  நாயகி.   யாஞவல்க்யர்   சூரியனிடம்  வேதோபநிஷதங்கள் பயின்றவர். சூரியன் அவரது  குரு.
 
தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.

''கோடீஸ்வரா,   என் குரு  சூரிய பக​​வானிடமிருந்து நான் இதுவரை   கற்ற சகல  வேதங்களையும் உனக்கு தக்ஷணையாக பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக,  உனக்களிக்கிறேன். சூரியன் குறையை போக்கி அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார்.  

வேதாக்னி யோக பாஸ்கரச் சக்கர உருவத்தில்  மந்த்ர  அர்த்த  பலன்களைப்  பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார். யாக்னவல்க்யர் சமர்ப்பித்த வேத மந்திர சக்திக ளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் ​ ​அற்புத விருட்சமாக ​  இலுப்பை மரமாக ​வளர்ந்தது. அதுவே ​ஆலயத்தை சுற்றி  வளர்ந்து இலுப்பை காடாகியது. சூர்ய மூலை  கோவில்  ஸ்தல விருக்ஷம் இலுப்பை மரம்.  இலுப்பை  கொட்டையில்  இருந்து எடுக்கும்  எண்ணெய் ஆலய  தீபங்களுக்கு  உகந்தது.  யாக் னவல்க்யர் இலுப்பை எண்ணையில்  தீபம் ஏற்றி சூர்ய கோடீஸ்வரரை வழிபட்டார்.  

 சூர்ய கோடீஸ்வரர்  ஆலயத்தில்  கோடி அகல் தீபம் எரிந்த  போது   எவ்வளவு கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும்.   தினமும்  சாயந்திரம்  இப்படி  வழிபாடு பிரதோஷ நேரத்தில் நடந்தது.  அடுத்த நாள் காலை  சூரியன் உதயமானன். சூர்யமூலையில் சூர்ய கோடீஸ்வரர்  ஆலய  கோடி தீபங்களை தரிசித்து  பிரதோஷ வழிபாட்டினால் கிடைக்கும்  பலனை பெற்றான் என்று புராணம் முற்றுப்புள்ளி வைக்கிறது.  இந்த ஆலயத்தில் சூர்ய கோடீஸ்வரரை  சூரியன் ஒளி  காலை முதல் மாலை வரை  ஆராதிக்கிறது என்று  நம்பிக்கை.   இதற்கு ஆதாரம்  கற்பகிரஹத்தில்  சூரியகோடீஸ்வரர் லிங்கத்தின் நிழல் பின்னால் சுவற்றில் தெரிகிறது.​  உதய சூரியனின்​ கிரணத்தை  மறைக்க கூடாதென்பதற்காக  ராஜ கோபுரம்  இல்லாத கோவில்.

​இன்னொரு கதை:      ​​க்ஷன்  தான்  நடத்திய யாகத்திற்கு ​  சிவனைத்தவிர  மற்றவர்கள் எல்லோரையும்  யும் அழைத்தான். ​ கர்வத்தால், அகம்பாவத்தால்  சிவபெருமானை அ​வமதித்தான். சிவபெருமான்​ செல்லாத  இந்த யாகத்திற்கு சந்திரனும் சூரியனும் முதலில் சென்று அமர்ந்தனர்.  எனவே இருவரும் தங்கள் ஒளியை இழந்தனர்.​  ​சூரிய​னின் ஒளி​ குன்றியதால்   எங்கும் இரு​ள். தக்ஷனின்  யாகத்தில் பங்கேற்றது தவறு என  தவறு என உணர்ந்த சூரியன்​  தனது குரு  யாக்னவல்கியரை  மீண்டும் ஒளி பெற வழி  கேட்டான்.    அவர்  அவனுக்கு  சூரிய மூலை  கிராமத்து  இலுப்பை காடுகளை காட்டினார்.  சூரியன் ​ சூர்ய மூலை  கிராம சூர்ய கோடீஸ்வரரை வணங்கினான் . அங்கு சென்றதும் தனது இழந்த  ஒளியை பெற்றான். தினமும்  அவனது முதல் ஒளிக்கதிர்  சூர்யகோடீஸ்வரர் மேல் பட்டு வணங்கியபிறகு தான் மற்ற இடங்களுக்கு ஒளி தருகிறது என்று ஐதீகம். 

சிவன் சந்நிதி கிழக்கு பார்த்து. அம்மன் தெற்கு பார்த்து.  கோஷ்டத்தில்  தெற்கு பார்த்து  ஆனந்த தட்சிணாமூர்த்தி புன்னகைத்த நிலையில்.  தெற்கு மூலையில்  சக்தி விநாயகரும், மேல் பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியன் சந்நிதி.   பிராகாரத்தில்   நாகலிங்கம், துர்க்கை , சண்டிகேசுவரர்கள்   அருளால் பாலிக்கிறார்கள். ​  

 குபேர மூலையில், பத்மாசன​த்தில்  வீற்றிருக்கும் மகாலட்சுமியின் வல​து காலில் ​ ஆறு விறல்கள் .  சிற்பி அற்புதமாக  சிலை வடித்திருக்கிறான் .‘ஆறு’ சுக்கிரனுக்குரிய​ நம்பர்.  எனவே சுக்கிரனின் ​ சக்தி  அவளிடம் ​பூரணமாக  உள்ளது. எப்போதும் சுக்கிரனுடைய அனுக்கிரகத்திலேயே இருப்பதால், அவளை ​வழிபடும் பக்தர்களுக்கு  செல்வத்தை  வாரி வழங்குபவள். 

குருவின் சக்தி பவளக்கொடி அம்மனுக்கும், சுக்கிரனின் சக்தி மகாலட்சுமிக்கும் தீர்க்கமாக இருப்பதால், இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குச் சூரிய பகவான், குரு  மற்றும் சுக்கிர பகவானின் அருள் ​எதேஷ்டமாக கிடைக்கிறது. 

பித்ரு சாபங்களும் நீங்கும். பித்ரு சாபங்களைப் போக்குபவர், இங்கிருக்கும் சொர்ண பைரவர். அவரிடமும் மெய்சிலிர்க்க வைக்கும் ஓர் ஆச்சர்யம் இருக்கிறது!’

சென்னைக்கு  அருகே  அரசர்கோவில் என்ற ஊரில்  படாளம் அருகே   சுந்தரமாஹாலக்ஷ்மிக்கு  ஆறுவிரல்கள்  பார்த்திருக்கிறேன். அங்கேயும்  தினமும் சுக்ரன் வந்து மஹா லக்ஷ்மியை வழிபடுவதாக  புராணம். அது பற்றி போட்டோவுடன்  ஏற்கனவே எழுதினேனே.   ஞாபகம் இருக்கிறதா? ​

ஒரு  தனி மண்டபத்தில் நவக்கிரகங்கள் தத்தம்  வாகனங்களோடு. ​  எல்லா க்ரஹங்களும்  ​ இங்கு​  சூரியனையே  பார்த்தபடி  
அமைந்திருப்பது   சிறப்பு.  இங்கே  உள்ள பைரவர்  சொர்ண பைரவர்​. பித்ரு சாபம் நீக்குபவர். ​  தீபாராதனையின் போது  அவர் கழுத்தில்  பவழம் மாதிரி சிகப்பாக  ஒரு  ஒளி தோன்றும். தீப ஒளியில் அசையும் ஆச்சர்யத்தை  தரிசிக்கலாம்  பைரவரின் கழுத்து  பவழ ஒளி சகல தோஷங்களையும்  போக்குகிறது என்று பக்தர்கள் வணங்குகிறார்கள்.   சூரியன்  சந்நிதி  விசேஷம்.. 

துர்க்கையின் ஒரு பாதத்தில் மட்டும் மெட்டி உள்ளது. ​ வலது காலை சற்று  முன்பக்கமாக நீட்டி வைத்துக்கொண்டு காட்சி தருகிறாள்.   காண வரும் பக்தர்களை அவளே​ முன்னால் வந்து வரவேற்ப​து  போல தோன்று​ம்.

சுக்ராச்சாரியார், தான் இழந்த கண் பார்வையை மீட்க பல தலங்களுக்கு சென்று பூஜைகள் செய்தார். அகத்திய முனிவர் முன்னிலையில் இத்தலத்தில் ஹிருதய மந்திர ஹோம பூஜ  களைச் செய்தார். சூரிய கோடீஸ்வரரை வழிபட்டார். இழந்த பார்வையை மீண்டும் பெற்றார் என்கிறது தல வரலாறு. ராமபிரானுக்கு அகத்திய முனியவர் ஹிருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும் இலங்கை போர்க்களத்தில் உபதேசித்தார். அதன் பின்னரே ராமபிரான் சீதையை மீட்டதாக கூறப்படு    கிறது. ராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி சாந்தமான சுபஹோரை காலங்களில் ஆதித்ய ஹிருதய மந்திரங்கள் பலவற்றை பல நேரங்களில் ராமனுக்கு உபதேசித்து விளக்கினார். இப்படி மந்திர  உபதேசங்களை ராமனுக்கு நிகழ்த்திய தலங்களில் கீழச் சூரிய மூலையும் ஒன்று..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...