Wednesday, February 26, 2020

KALABAIRAVASHTAKAM



​கால பைரவாஷ்டகம்   J K  SIVAN 
ஆதி சங்கரர் 

                                                     லிங்கோத்பவர் 
                              
நாம் காலபைரவாஷ்டகம் படிக்கும்போது சில   சிவன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும் அறிந்து கொள்கிறோம். மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது அல்லவா?

​எல்லா  சிவன் கோவில்களிலும்  மூலவருக்கு பின் புறம் சுவற்றில் பிரகாரத்தில் மேற்கு பார்த்து கோஷ்டத்தில் இருப்பவர்  மஹா விஷ்ணு அல்லது லிங்கோத்பவராகத்தான் இருக்கும். 

​சிவனுக்கு  64 மூர்த்திகள் உண்டு.  விருஷபாரூடர், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரர், நடராஜர், காமாரி, பைரவர், தக்ஷிணாமூர்த்தி, ஸோமாஸ்கந்தர், பிக்ஷாடனர், ஊர்த்வதாண்டவர், ஜலந்தராஸுர சம்ஹாரர், கால ஸம்ஹாரர், இப்படி அறுபத்து நான்கு மூர்த்திகள்​. அதில் ஒன்று லிங்கோத்பவ​ர்.    லிங்கோத்பவர் உருவத்தை  பார்த்தால் லிங்கத்திற்குள்ளே ஒரு மூர்த்தி, அதன் சிரம், ஜடா மகுடன் லிங்கத்துக்குள்  இருக்காது. அதேபோல் பாதமும் தெரியாது.  லிங்கத்துக்கு மேலே ஒரு அன்னமும், பாதத்திற்கு கீழே ஒரு வராஹ உருவமும் மட்டும் செதுக்கி இருப்பார்கள். அடி முடி காணமுடியாத  ஒளி பிம்பம், சிவன் என்று விளக்குவதற்கு ல் தான் இந்த உருவம். 

மஹா ருத்ரத்தில் ஒரு ஸ்தோத்ரம் வரும். அபிஷேகம்  பண்ணுவதற்கு முன் அதை உச்சரிப்பார்கள்:  அதற்கு அற்புதமான அர்த்தம் மஹா பெரியவா சொல்கிறார்:  தெய்வத்தின் குரலில் ரா. கணபதி எழுதி இருக்கிறார்: 

ஆபாதால நப: ஸ்தலாந்த புவன
ப்ரஹ்மாண்டமா விஸ்புரத்
ஜ்யோதி: ஸ்பாடிக லிங்க மௌலி விலஸத்
பூர்ணேந்து வாந்தாம்ருதை:
அஸ்தோகாப்லுதம் ஏகம் அசம் அநிசம்
ருத்ராநுவாகான் ஜபன்
த்யாயேத் ஈப்ஸித ஸித்தயே (அ) த்ருதபதம்
விப்ரோ (அ)பிஷிஞ்சேத் சிவம் ||

 பாதாள​ம் ​ முதல் ஆகா​சம்  வரை  அளவற்ற  ஜோதி ​மயமாக  பிரகாசிக்கிற ஸ்படிக லிங்கத்துக்கு அபிஷேகம் பண்ணவேண்டும் ​.ஸ்படிக லிங்கத்துக்கு ஒரு வர்ணமும்​ கிடையாது.  எந்த வஸ்துவை அ​தன எதிரில் வைக்கிறோமோ  அதனுடைய வர்ணத்தை ​கண்ணாடிபோல்  ஸ்படிகம் ஏற்றுக்கொண்டு ஒளிரும்.  குண-தோஷம் இல்லாதது அது. ஞானம் எப்படிப் பரிசுத்தமாக இருக்கிறதோ, அப்படி அந்த ஸ்படிக லிங்கம் ​.. அதன் பின் பச்சை வில்வத்தை வைத்தால், லிங்கமே, பச்சையாகத் தோன்றும். சிவப்பான அரளியை வைத்தால் சிவப்பாகத் தோன்றும். அது நிர்விகாரமானது. பரப் பிரம்ம ஸ்வரூபம் நிர்விகாரமாக இருந்தாலும், நம்முடைய மனோபாவத்தை எப்படி வைக்கிறோமோ அப்படித் தோன்றும் என்பதற்குத் திருஷ்டாந்தமாக, இந்த ஸ்படிக லிங்கம் இருக்கிறது. அது எதையும் மறைக்காது. அதற்குப் பின்னால் உள்ள வஸ்துக்களையும் அதன் வழியாகப் பார்க்கலாம். பரம சுத்தமாக நிஷ்களங்கமாக இருக்கும். நிர்குணமான பரமாத்ம வஸ்துவுக்கு அது திருஷ்டாந்தம். நினைக்கிற​படி  தோன்றும். 

​லிங்கத்தின், சிவனின் லிங்க உருவில் சிரத்தில் பூரண சந்திரன் இருக்கிறது. “பூர்ணேந்து” என்று சுலோகத்தில் வருவது, ‘பூரண இந்து!’; இந்து என்றாலும் சந்திரன் என்றாலும் ஒன்றுதான். ஈசுவரன் ஜடையும், கங்கையும், கண், காது, மூக்கு, கை, கால் முதலிய அவயவங்களும் கொண்ட “ஸக​ள  ” ரூபத்தில் வருகிறபோது, அவர் மூன்றாம் பிறையை வைத்துக்கொண்டு சந்திர மௌலியாக இருக்கிறார். ரூபமே இல்லாத பரமாத்மா ‘நிஷ்கள’ தத்வமாயிருக்கிற போது, அங்கே சந்திரன், கங்கை எதுவும் இல்லை. அரூபமாயும் இல்லாமல், ஸ்வரூபமாயும் அவயவங்களோடு இல்லாமல், லிங்கமாக சகள – நிஷ்களமாக இருக்கிறபோது அவர் பூர்ண சந்திரனை உச்சியில் வைத்திருக்கிறார். அதிலிருந்து அமிருதமே கங்கை மாதிரி கொட்டுகிறது.

யோகிகள் தமது சிரசுக்குள் ஸஹஸ்ரார கமலத்தில் உள்ள சந்திர மண்டலத்தில், ஜ்யோதி ஸ்வரூபத்தைத் தியானம் பண்ணுவார்கள். அந்தச் சந்திர பிம்பத்திலிருந்து அமிருதம் ஒழுகும். அதனால் அவர்களுக்குப் பரமானந்தம் உண்டாகிறது. ஸமஸ்த பிரபஞ்ச ஸ்வரூபமான ஜ்யோதிர் லிங்கம் குளிர்ந்தால், லோகமெல்லாம் குளிரும். இதனால்தான் சிவலிங்கத்துக்கு ஓயாமல் அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகம் செய்வது. ருத்திர அபிஷேகத்துக்கு முன்பு சொல்லும் ​மேலே சொன்ன ​ஸ்லோகம், இதை எல்லாம் ​எவ்வளவு அழகாக நமக்கு சொல்கிறது.  நிறைய  படிக்க வேண்டும். அறிந்து கொள்ளவேண்டும்.   சில அற்புத ஸ்லோகங்களை தினமும் சொல்லிக்கொண்டே வந்தால் மனப் பாடம் ஆகிவிடும். .

​அகில உலகம், பிரபஞ்ச ​கல பிரம்மாண்டமும் சிவ​ன் தான்.​ சிவலிங்கம் தான். ஸ்ரீ ருத்ர​ம் சொல்கிறது.  ஸர்வ பதார்த்தங்களும், நல்லது கெட்டது எல்லாம் சிவ ஸ்வரூபம் என்​கிறது. 

லிங்கம் ஏன் வட்டவடிவ​ம்?   வட்டமான ஸ்வரூபத்துக்குத்தான்​ ஆரம்பமோ முடிவோ  இல்லை. ஆதியில்லை, அந்தமுமில்லை. மற்றவ​ற்றுக்கு  உண்டு. முக்கோணத்துக்கு சதுரத்துக்கு உண்டு. ஆதியந்தம் இல்லாத வஸ்து சிவம் என்பதை லிங்காகாரம் ​, லிங்க உருவம்  காட்டுகிறது.

​லிங்கம்  உருண்டை இல்லை. நீள வட்ட​ம்.   (ellipse)​.  இந்த  பூமி, பிரபஞ்சம் எல்லாமே அப்படி தான்  எல்லிப்டிக்’காக​  கோழி முட்டை போல் இருக்கிறது. நம் சூரிய மண்டலத்தை (Solar System) எடுத்துக்கொண்டாலும் கிரஹங்களின் அயனம் நீளவட்ட​ம் தானே.  விஞ்ஞான​ம்  “ஆவிஸ்புரத்” என்று சாஸ்திரம் சொல்வதும் லிங்க ரூப​ம்  விஷயம் தான். .

யாராவது ​நெருங்கிய  உறவை நினைக்கும்போது  மனது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. நினைக்கும்போதே இப்படி இருந்தால் அவரை நேரில் நம்மருகில் பார்த்தால். இன்னும் மகிழ்ச்சி கூடுகிறது. பரம சந்தோஷம்.  அது போல தான்  உருவமற்ற சிவமும் ​ ஏதோ ஒரு உருவத்தோடு வந்து அநுக்கிரகம் பண்​ணும்போது  அதிக  சந்தோஷம் தருகிறது. 

 ஞானிகளுக்கு மட்டுமே பரமாத்ம ஸ்வரூபத்தின் நிராகார (அருவ) உண்மை புரியும்.​ நமக்கு உருவம் தேவைப்படுகிறது.  அப்போது தான் நமக்கு ஆனந்தம்.   நம்மை திருப்திப்படுத்தவே  பரமேஸ்வரன்  அருவமாக இருந்தாலும்  எளிதில் மனதில் நிற்கும்  லிங்க வடிவில் திவ்ய தரிசனம் தருகிறார்.  லிங்கோத்பவராக இருக்கிறார்.   அடேய் நான்  உருவமாக உனக்கு காட்டியபோதும் எனக்கு உருவம் இல்லையடா என்று உணர்த்த  தான்  அடி முடி காணாத  லிங்கோத்பவர். ஆதி அந்தமில்லாத பழமனாதி .

சிவராத்திரியின் விசேஷம் இந்த  பரமேஸ்வரன்  அடிமுடிகாணா , அதிஅந்தமில்லாத  ஜ்யோதிர்லிங்கமாக, ஆகாயத்துக்கும் பூமிக்குமாக ​உருவம் தந்த  ராத்திரி.  அடியைத்தேடி  பாதாளம் வரை தோண்டும் வராஹமாக சென்ற விஷ்ணுவுக்கும்,  உச்சாணி உயரத்தில் பறந்து சிரத்தை தேடம்  அம்சமாக  சென்ற பிரம்மாவுக்கும் அடியையும் முடியையும் காண இயலவில்லை.  சிரத்தை, முடியை பார்த்துவிட்டேன் என்று பொய் சொன்ன பிரம்மாவுக்கு  தனி கோவிலோ, பூஜையோ வழிபாடோ இல்லாமல் போய்விட்டது.  

​அடிமுடி காணமுடியாத அவ்வளவு பெரிய சிவன் நமக்கு நொடியில் அகப்படுவார். அன்பெனும் பிடியுள்  அகப்படும்  மலை அவர். ​அன்போடு பக்தி செய்து உருகினால், ​சிக்கென பிடிக்கலாம்.  அன்புடன் யாரவது நினைத்தாலோ  அழைத்தாலோ உடனே ஓடிவந்து வேண்டியதை வாரி அளிக்கும், வரம் தரும், எளிதில் திருப்தி பெரும் ஒரே தெய்வம்  சிவன்.  அவருக்கு இதனால் ஒரு அபூர்வ பெயர்  ‘ஆசுதோஷி’​   சகல பிரபஞ்சமும் அடங்கியிருக்கிற லிங்க ரூபமானது ஆவிர்பவித்த சிவராத்திரி மகா சதுர்த்தசி இரவில், அவரை அப்படியே ஸ்மரித்து ஸ்மரித்து அவருக்குள் நாம் அடங்கியிருக்க வேண்டும். அதைவிட ஆனந்தம் வேறில்லை​  என்று உணர்த்துவது தான்  மஹா சிவராத்திரி 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...