Wednesday, February 12, 2020

CHAITANYA



ஸ்ரீ சைதன்ய மஹா பிரபு     J K  SIVAN 
  ஸிக்ஷாஷ்டகம் 

                                                                        
              கிருஷ்ணா!    நீ நாமம்  எந்த ருசி ரா!    

கலியுகம் கண்ட முழுமையான நிதர்சனமான ஒரு கிருஷ்ணபக்தர்  ஸ்ரீ  சைதன்ய மஹாப்ரபு. வாழ்ந்த காலம் 1486-1535. முகலாயர் ஆண்ட காலத்தில்  அவரை  ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் என்று சொன்னால் குறையே இல்லை.  வங்காளத்தில் நவத்வீபத்தில் பிறந்தவர். இந்த ஜம்புத்வீபம் உய்வதற்கு வந்தவர் என்பதால் அங்கு பிறக்க தோன்றி இருக்கிறது.

இன்று உலகமெங்கும் ஹரே ராம  ஹரே ராம ஹரேராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண  ஹரே ஹரே  என்ற மந்திரம் ஒலிக்க  காரணமானவர்  சைதன்ய பிரபு. அவர் எழுதிய  ஸிக்ஷாஷ்டகம் எனும் எட்டு ஸ்லோகங்கள்  நிறைய பேருக்கு  தெரிந்திருக்காது.

சிக்ஷை  என்பது  குரு  சிஷ்யர்களுக்கு பாடம் சொல்லித்தருவதாக நாம்  புரிந்து கொண்டிருக்கிறோம். அப்படியே வைத்துக் கொண்டால் அது ரொம்ப சரி.   கிருஷ்ண பக்தி எப்படி இருக்கவேண்டும்  அவன் நாம  ருசி எத்தகையது  என்று அழகாக இந்த  எட்டு  ஸ்லோகங்களில் சைதன்யர்  அவரது ஆறு  சிஷ்யர்கள்  கோஸ்வாமிகளுக்கு 
விளக்குகிறார். அவர்கள்  இதை பற்றி தலைகாணி தலைகாணியாக  புத்தகங்கள்  எழுதினாலும், மணிக்கணக்காக  பிரசங்கங்கள் செய்தாலும்  சைதன்யர் எழுதிய ரத்ன சுருக்கமான ஸ்லோகங்கள் தனிப்பெருமை  பெற்றவை. 

 चेतो-दर्पण-मार्जनं भव-महा-दावाग्नि-निर्वापणं
श्रेयः-कैरव-चन्द्रिका-वितरणं विद्या-वधू-जीवनम्
आनन्दाम्बुधि-वर्धनं प्रति-पदं पूर्णामृतास्वादनं
सर्वात्म-स्नपनं परं विजयते श्री-कृष्ण-सण्कीर्तनम् ॥१॥

ceto-darpaṇa-mārjanaṁ bhava-mahā-dāvāgni-nirvāpaṇaṁ
śreyaḥ-kairava-candrikā-vitaraṇaṁ vidyā-vadhū-jīvanam
ānandāmbudhi-vardhanaṁ prati-padaṁ pūrṇāmṛtāsvādanaṁ
sarvātma-snapanaṁ paraṁ vijayate śrī-kṛṣṇa-saṇkīrtanam ॥1॥

ஆஹா!    ஸ்ரீ கிருஷ்ணா,    உன்  நாமத்தைப்   பாடி,   சொல்லி,   ஆடி,  மகிழும்  அனுபவத்துக்கு  ஈடு  இணையே இல்லை.  ஸ்ரீ கிருஷ்ணா  என்று உன் நாமம் நான் சொல்லும்போதே  என் மனதில், இதயத்தில்,  உடலில், உள்ளத்தில்,   படிந்த பல ஜென்ம அழுக்குகள், வாசனைகள் எப்படி  குப்பை கூளங்களை  அக்னி எரிக்குமோ,   அப்படி  என் பிறவி துன்பத்தை, மறுபடி மறுபடி எடுத்து வாதனையில் உழலும்  பிறவித துன்பத்தையே  அழித்து விடுகிறது.   எல்லோருமாக  ஒன்று சேர்ந்து ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா  ஹரே ராமா ஹரே ராமா என்று உன் பெயர் பாடும்போது, அந்த சப்தம் ஒலிக்கும் இடமெல்லாம் பரிசுத்தமாக ஆகிவிடுகிறதே!    என்ன மந்திரம் தந்திரம் இது?  இதற்கு மிஞ்சிய  ஒரு  சந்தோஷம் தரும் சாதனம் எங்கேனும் இருக்க முடியுமா?  அலைமேல் அலை எழும்பி ஓயாமல்  ஆடுவதைப்   போல் என் மனதில்,  இதயத்தில்,  உன் நாமம்  மேலும் மேலும் ஆனந்த சாகரத்தில்  அலை மோதுகிறது.  பல கால  அழுக்கு  கறை  நீங்கிய கண்ணாடியாக  இதயம்  பளிச்சிடுகிறது. மனம் துல்யமாக பிரகாசிக்கிறது. இந்த  ஆனந்தத்  தேன்  தரும்   அம்ருதத்தை  விடாமல்  ருசிக்க  பக்தர்கள் அதனால் தான் உன்னை சுற்றி வண்டாக  ஓடி வருகிறார்கள். உன் நாமத்தை  நா மணக்க  உச்சரிக்கிறார்கள்.  ஆடுகிறார்கள், பாடுகிறார்கள்.  தேடுகிறார்கள்.

नाम्नामकारि बहुधा निज-सर्व-शक्तिस्
तत्रार्पिता नियमितः स्मरणे न कालः
एतादृशी तव कृपा भगवन्ममापि
दुर्दैवमीदृशमिहाजनि नानुरागः ॥२॥

nāmnām akāri bahudhā nija-sarva-śaktis
tatrārpitā niyamitaḥ smaraṇe na kālaḥ
etādṛśī tava kṛpā bhagavan mamāpi
durdaivam īdṛśam ihājani nānurāgaḥ ॥2॥

என் கிருஷ்ணா,  உலகத்தின் ஜீவ ராசிகளுக்கு  உன் திருநாமம்  ஒன்றே சகல நன்மைகளையும் தருகிறது. உன் கருணையால்  ஆனந்தம் நிலைக்கிறது.   அதற்கு   ஒரு நாமம்  போதுமா?  அதனால்  தான்  அவரவர் விரும்பி உச்சரிக்க உனக்கு லக்ஷக்கணக்கான  நாமங்களோ?   கிருஷ்ணா  கோவிந்தா..... என்று எத்தனை  எத்தனையோ நாமங்களால் உன்னை ...உச்சரிக்கும்  ஜீவன்களின் உள்ளத்துக்கு  எத்தனை ஜீவ சக்தி அளிக்கிறாய்? உன் நாமத்தை  உச்சரிக்க  ஒரு கட்டுப்பாடும் இல்லை, ஒரு  நெறிமுறை,  வரைமுறையும் இல்லை. அவரவர்  தங்கள் மனது விரும்பியபடி  எப்படி வேண்டுனாமலும் எங்கு வேண்டுமானாலும்  உன்னை நினைத்து  பாடலாம், பேசலாம், ஆடலாம். எல்லாருக்கும் உன் காருண்ய  தயை அமோகமாக  உண்டே.   உன்னை  அடைய  வழி காட்டுகிறாய்.  ஐயோ,   நான் பாவி இதை  முன்பே அறிந்துகொள்ளாமல்  காலம் கடத்தி விட்டேனே.!

तृणादऽपि सुनीचेन
तरोरऽपि सहिष्णुना
अमानिना मानदेन
कीर्तनीयः सदा हरिः ॥३॥

tṛṇād api sunīcena
taror api sahiṣṇunā
amāninā mānadena
kīrtanīyaḥ sadā hariḥ ॥3॥

ஆரவாரமே  இல்லாமல்  அமைதியாக  மனமினிக்க  உன் நாமத்தை உச்சரிக்கிறேன். என் நிலைமை என்ன தெரியுமா உனக்கு?     நாயினும்  கடையேன் என்பார்களே  அது மட்டுமல்ல,  காலடியில் கிடக்கும் ஒரு தூசியாக என்னை அறிகிறேன்.  மரத்தை விட, நிலத்தை விட  பொறுமையாக  இருக்கிறேன்.  அகம்பாவமோ, வறட்டு கர்வமோ, டம்பமோ  என்னை விட்டு அகன்றால் தான் நீ தெரிகிறாய் என்று உணர்கிறேன்.   இந்த சரீரம் எடுத்ததே பரோபகாரத்துக்கு  என்று அறிந்து என்னை  முழுதுமாக  மற்றவர் பணிக்கு சேவைக்கு  அர்ப்பணித்து விட்டேன்.  அப்படி ஒரு மனோ நிலையில் தான் உன் நாமம் தரும் ருசியை, இனிப்பை   முழுமையாக  எப்போதும் அனுபவிக்க முடியும்.  எவ்வளவு புனிதன் நீ?

இன்னும்  ஐந்து ஸ்லோகங்களை  அடுத்த பதிவில் சேர்ந்து படிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...