திக்கற்றவர்க்கு தெய்வமே துணை
J.K. SIVAN
J.K. SIVAN
நமது தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது. எத்தனையோ வருஷங்களாகி விட்டது. நாமெல்லாம் சுதந்திர மனிதர்களா? ஆண்களில் பலர் சுதந்திர ஆசாமிகள் என்றாலும் பெண்களில் பலர் இன்னும் அடிமைகளே. நியாயம், நேர்மை, நீதி கிடைக்க இன்னும் நேரம் வராத எத்தனையோ படித்த, படிக்காத ஏழை, பணக்கார பெண்களில் ஒருத்தி சிந்து தாய். உரிமைக்கு குரல் கொடுத்தாலும் தப்பு, அதுவே பெரும் குற்றம். இது இன்னும் துரதிர்ஷ்டவசமாக எத்தனையோ பெண்களின் வாழ்க்கையில் ஒரு சோகமான வெளிப்படை ரகசியம்.
ஆணாதிக்கம் முழுதும் விலகாதபோது பெண்களுக்கு எது சுதந்திரம், ஏது சுதந்திரம்?
வடக்கே இது இன்னும் மோசம்.
வடக்கே இது இன்னும் மோசம்.
ஒரு கிராமத்தில் அவள் இருந்த பகுதியில் ஒரு நாட்டாமை தலை கொழுத்து அக்கிரமங்கள் பல செய்தபோது தட்டிக்கேட்க எவருக்கும் தைரியம் இல்லாதபோது சிந்து குரல் கொடுத்தாள் . அதன் பலன்? சிறுவயதினளான அவளை புருஷன் வீட்டை விட்டு விரட்டிவிட்டான். தெருவில் பிச்சை எடுத்து பிழைக்கவேண்டிய நிர்பந்தம். வயிறு என்று ஒன்று இருந்து வாட்டுகிறதே. பசிமட்டும் இல்லையென்றால், நாம் அனைவருமே பாக்கியவான்கள். தன கைக்குழந்தை பெண்ணையும் காப்பாற்றி ஆகவேண்டுமே. இந்த வாழ்க்கை அவளுக்கு ஒரு தைரியத்தை கொடுத்தது. அனாதை என்றால் என்ன? யார் அனாதை? என்று யோசித்தாள் . இறைவன் படைப்பில் யாருமே அனாதை அல்ல. யாரோ இருவர் இருக்கத்தான் செய்வார் காப்பாற்ற. அந்த யாரோ நானாக இருந்தால்? இப்படி உருவானாள் சிந்து.
தன்னைப்போல் பிச்சை எடுக்கும் பெண்களை குழதைகளை ஒன்று சேர்த்தாள் . ஆயிரக்கணக்கில் சேர்ந்தார்கள்.எல்லோரையும் நேசித்தாள்.பாகுபாடே கிடையாது அவளிடம். எல்லோரையும் அரவணைத்தாள் . நாம் ஒருவருக்கொருவர் உழைத்து உதவிக்கொள்வோம். தனியொருவருக்குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் அல்ல ஆக்க பூர்வமாக மாற்றி அமைப்போம் என முடிவெடுத்தாள் . இதற்கு படிப்பு பெரிசாக ஒன்றும் தேவையில்லையே. தைரியம், அஞ்சா நெஞ்சம் ஒன்று தானே ஆதாரமாக தேவை.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை விலக்க அரும்பாடுபட்டாள் . சமூகத்தில் அவளை சிலர் பாராட்டி உதவினர் . நல்ல உள்ளங்கள் என்றும் உண்டே.
''ஆஞ்சல்'' நிறுவனம் வளர்ந்தது. ஆயிரக்கணக்கில் குழந்தைகள் அதில் சேர்ந்து உதவி பெற்றனர். ஒரு அயோக்கியனுக்கு பயந்து அவளை சிறுவயதில் கர்ப்பிணியாக வீட்டை விட்டு அடித்து விரட்டிய கணவன்
எழுபது வயதில் அவளை தஞ்சம் அடைந்து மன்னிக்க வேண்டி அவனும் அந்த அனாதை இல்லத்தில் சேர்ந்து சுகமாக வாழ்ந்தான். இன்று ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் நலமாக வாழ அவளது நிறுவனம் உதவுகிறது. உலகம் சிந்துவை அறிந்து கொண்டுவிட்டதே. அந்த நிறுவனத்தின் முகவரி
எழுபது வயதில் அவளை தஞ்சம் அடைந்து மன்னிக்க வேண்டி அவனும் அந்த அனாதை இல்லத்தில் சேர்ந்து சுகமாக வாழ்ந்தான். இன்று ஆயிரக்கணக்கான சிறுவர் சிறுமிகள் நலமாக வாழ அவளது நிறுவனம் உதவுகிறது. உலகம் சிந்துவை அறிந்து கொண்டுவிட்டதே. அந்த நிறுவனத்தின் முகவரி
Sanmati Bal Niketan
Belhekar Vasti,
Manjari (Budruk)
Taluka- Haveli ,Dist.- Pune, PIN - 412307. Maharashtra, India.
Belhekar Vasti,
Manjari (Budruk)
Taluka- Haveli ,Dist.- Pune, PIN - 412307. Maharashtra, India.
Contact Person : Mrs. Mamata
Phone : +91-20-26870403/ 26823879.
Mobile: +91- 93 71 07 42 56
Email: mamata@mysaptsindhu.org
sindhutai@mysaptsindhu.org
Phone : +91-20-26870403/ 26823879.
Mobile: +91- 93 71 07 42 56
Email: mamata@mysaptsindhu.org
sindhutai@mysaptsindhu.org
No comments:
Post a Comment