ஒரு இசை மனத்தை மகிழ்ச்சி அடைய செய்வது மட்டும் இன்றி உடல் நோயைக் கூட போக்கும், ராகங்கள் எந்தெந்த நோய்க்கு மருந்து என்று கர்னாடக சங்கீத ஜாபிதாவே இருக்கிறது, என்றும் எல்லோரும் அறிந்த ஒரு சில சினிமா பாட்டுகளும் சக்தி உள்ளவை, நெஞ்சில் இடம் பெற்று மகிழ்ச்சி தருபவை, காரணம் பாட்டின் இசை, பாடும் அபூர்வமான குரல், காட்சி, படம் பிடிக்கப் பட்ட நேர்த்தி, கதையின் வலு எல்லாமே,
60-65 வருஷங்களுக்கு முன்பு சோகப் படங்கள் தான் பெரும்பாலும் பிடித்து இருந்தது, வசூல் தந்தது, இந்தியா முழுவதும் இது தான் நிலை , தேவதாஸ், பாசமலர் படங்கள், அம்பிகாபதி, லைலா மஜ்னு போன்ற படங்கள் சக்கை போடு போட்டன. டிக்கெட் வாங்கி உள்ளே நுழைந்தவர்கள் அழுது கொண்டே வெளியே வந்த காலம் அது. அதற்கும் முன்பு நல்ல தங்காள் போன்ற நாடகங்கள், கூத்துகள். அதற்கும் முன்பு என்னை கேட்கவேண்டாம்.எனக்குத் தெரியாதே.
௭னக்கு 10-11 வயதில் நியூ க்ளோப்(இப்போது ,,,,, ஷாப்பிங் காம்ளெக்ஸ்) சினிமா தியேட்டரில் பாபுல் என்ற கருப்பு வெளுப்பு இந்தி படம் பெரியண்ணா பிச்சையுடன் (ரத்னம் அய்யருக்கு வீட்டில் இப்போதும் இதே பெயர் தான். அந்தக்காலத்தில் குழந்தைகள் நீண்ட ஆயுளுடன் வாழ பிச்சை, மண்ணாங்கட்டி, வேம்பு, சோம்பு என்று பெயர் வைப்பார்கள். ''சே, பெயரே நன்றாக இல்லையே. இவன் வேண்டாம்'' என்று எமன் வேறு ஆளைத் தேடுவான் என்று ஒரு நம்பிக்கை) நடந்து போனேன், கோடம்பாக்கத்திலிருந்து மவுண்ட் ரோடு வரை.
படம் ஹிந்தியில். எனக்கு பாஷையும் தெரியாது. ஏதோ படம் பார்க்க ஒரு வாய்ப்பு அவ்வளவு தான். பாபுல் என்று பெயர். இப்போது புரிகிறது. காதல் சோக கதைகளில் சம்பிரதாய வழக்கப்படி, ஒரு ஆள் ரெண்டு பெண், அல்லது ரெண்டு பெண் ஒரு ஆள், அல்லது ரெண்டு ஆள் ஒரு பெண்.. இப்படி தானே இருக்கும். இந்த கதையில் ஒரு ஆள் ரெண்டு பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு தவிப்பது தான்.
காதல் தெரியாத புரியாத வயது எனக்கு. ,திலிப் குமார் என்ற தலை கலைந்த சிரிக்காத தலைவலி வயிற்று வலி மருந்து விளம்பரத்துக்கு ப் பொருத்தமான ஹீரோ,
அதெல்லாம் சரி,இதில் என்ன சிலாக்யம்? 65 வருஷங்களுக்கு அப்பறம் நினைக்க , ஞாபகம் வைத்துக்கொண்டு எழுத என்ன இருக்கிறது? ரொம்ப ஞாயமான கேள்வி.

தலத் மஹ்மூத் என்ற தேன் குரல் என்றும் அழியாமல் நேற்று இரவு வரை என் நெஞ்சில் அன்று குடி புகுந்தது,
"அப்பா வீட்டை விட்டு நெஞ்சில் குடி கொண்டவன் வீடு நோக்கி போனேன் , ஆனால் கடைசியில் சாஸ்வதமான வீடு நோக்கி போகிறேன் ,,,chodu babul kaa gar,,,!
கதாநாயகி கனவில் வந்த கருப்பு உடை க்காரன் வெள்ளை குதிரை மேல் வந்து தூக்கிக் கொண்டு போகும்போது பேய்க்காற்று வீசி, விளக்கு சாய்ந்து அணைந்து நர்கீஸ் திலீப் குமார் தோளில் சாய்ந்து மெல்லிய சோக குரலில் தலத் பாட அவள் இறக்கும் கடைசி நிமிடங்கள் மஹமத் ரபி குரலில் இணைந்து கருப்பு போர்வை ஆள் ""வீட்டுக்கு போகிறேன் " என்று பாடும்போது படம் மனதை பிழிந்து விட்டு முடியும், அந்த காட்சி யூட்யூபில பார்த்து இணைத்துள்ளேன்,எப்படி இருக்கு??? இன்னும் சில படங்கள் பற்றி சொல்ல விருப்பம். இது ஒப்புக்கொள்ளப்பட்டால் அதுவும் வரும்.

https://www.youtube.com/watch?v=yu2tFdJ7CXk
No comments:
Post a Comment