Tuesday, July 4, 2017

அப்போதே சுகர் சொன்ன கலிகால உண்மைகள்... J.K. SIVAN
''caracara-guror visnor
isvarasyakhilatmanah
dharma-tranaya sadhunam
janma karmapanuttaye'' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.17
''அப்பா பரீக்ஷித் மஹாராஜா, பகவான் கிருஷ்ணன் கீதையில் என்ன சொன்னார் என்று உனக்கு இப்போது தெரிந்திருக்குமே. எப்போதெல்லாம் தர்மம் குறைகிறதோ, அதர்மம் மேலோங்குகிறதோ, அப்போதெல்லாம், தருமத்தை ரக்ஷிக்க நான் அவதரிப்பேன்''
ஆகவே கலிகாலத்தில் தாவர சங்கம, சேதன, அசேதன வஸ்துக்கள் யாவும் அதர்மத்தால் பாதிக்கப்படும்போது, பரமாத்மன், எல்லாவற்றையும் உள் நின்று உணர்ந்து ரக்ஷிப்பவன், அந்த காக்கும் தெய்வம் மஹா விஷ்ணு சும்மாவா பார்த்துக்கொண்டிருப்பான். சாதுக்களை, சத் புருஷர்களை அக்கிரமத்திலிருந்து காக்க அவதரிப்பார்.
''sambhala-grama-mukhyasya
brahmanasya mahatmanah
bhavane visnuyasasah
kalkih pradurbhavisyati'' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.18
சொல்கிறேன் கேள். எப்படி விஷ்ணு அவதரிப்பார் என்று கேட்டாயல்லவா? பாரத தேசத்தில் எங்கோ ஒரு ஓர். சிறு கிராமம் , அதற்கு பெயர் சம்பலா என்று வரும். அதில் ஒரு பிராமண குடும்ப த்தில், அந்த ஊரில் பிரபல்யமான பிராமணர் ஒருவரின் குடும்பத்தில், கல்கி என்ற பெயரில் தான் விஷ்ணு அவதரிப்பார்.
''asvam asu-gam aruhya
devadattam jagat-patih
asinasadhu-damanam
astaisvarya-gunanvitah'' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.19
''vicarann asuna ksaunyam
hayenapratima-dyutih
nrpa-linga-cchado dasyun
kotiso nihanisyat' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.20
''மகரிஷி பிரபு, ஆச்சர்யமாக இருக்கிறது கேட்கவே. அவர் எப்படி இருப்பார் என்று சொல்லமுடியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன்.
''அதென்ன தெரிந்தால்? நன்றாகவே தெரிகிறது எனக்கு ஞானதிருஷ்டியில்.
மிக உயர்ந்த ஜாதி குதிரை. சாரா வல்லமை வாய்ந்தது. உயரமானது. வெள்ளை வெளேரென்று கண்ணை பறிக்கிறது அதன் நிறம். இம்மென்று முன்னே இரு நூறு காதம் என்பார்களே அதைவிட வேகமாக அது பறக்கும். அதற்கு பெயர் என்ன தெரியுமா? தேவ தத்தம். அதன் மீது தான் விஷ்ணு கல்கியாக ஜம்மென்று ஏறி அமர்ந்திருப்பார். ஒரு கையில் கூறிய பெரிய வாள் ஒளி வீசும். அந்த குதிரையை அதர்மவான்களை, அக்ரமக்காரர்களை தனது காலால் மிதித்து, நசுக்கி உயிரை பிரித்துவிடும். அஷ்ட ஐஸ்வர்யங்கள், நவ நிதி என்கிறார்களே, அனைத்தையும் கல்கி தனது வசம் கொண்டவர். இருந்தும் ஆத்ம ஞானத்தில் மூழ்கியவர். ராஜ உடைகளில் ஜொலித்து மக்களை ஏமாற்றும் எண்ணற்ற கொடியவர்களைஅழிப்பவர். ராஜ உடை என்றால் கிரீடம் பள பளக்கும் துணிகள் அல்ல. கதரில் எளிமையாக உடுத்து கோடியில் புரள்பவர்களையும் கலிகாலத்தில் குறிக்கும் போல இருக்கிறது. அந்த காலத்தில் போல் ராக்ஷசனாக பல தலைகள், கைகளோடு பெரிய உடம்போடு இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. அவனை விட கொடியவர்கள், சிரித்துக்கொண்டே நம்மைப்போல நம்முடனேயே இருந்து நம்மை ஆள்வதாக சொல்லிக்கொண்டு கொல் பவர்களை சொல்கிறாரோ என்னவோ? குதிரைமேல் வருபவர் என்பது பல குதிரைவேகம் (horse power ) கொண்ட வாகனமாக இருக்கலாம். வாள் என்பது துப்பாக்கியாகவோ நவீன ஆயுதமாகவோ மாறி இருக்கலாம். சுகரின் கற்பனையை விரிவு படுத்திக் கொள்ளவேண்டியிருக்கும்.
''atha tesam bhavisyanti
manamsi visadani vai
vasudevanga-ragati-
punya-gandhanila-sprsam
paura-janapadanam vai
hatesv akhila-dasyusu'' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.21
அப்படி அந்த மஹாபுருஷன் அவதரித்து நயவஞ்சகர்களை, சுயநலவாதிகளை, மக்களை ஏமாற்றி அல்லல்படுத்துபவர்களை, நல்லவர்கள் போல் நடித்த திருடர்களையெல்லாம் எல்லாம் அடையாளம் கண்டு அழித்து மீண்டும் எங்கும் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட வைப்பார். நியாயம் பிறக்கும். நேர்மை நியாயம், சுதந்திரத்தின் நறுமணம் சந்தனக்குழம்பைவிட அதிகமாக மணக்கும். அமைதி நிம்மதி தென்றல் எங்கும் வீசும்.
''tesam praja-visargas ca
sthavisthah sambhavisyati
vasudeve bhagavati
sattva-murtau hrdi sthite'' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.22
வாசுதேவன் இவ்வாறு பூமியில் தோன்றி நன்மையோ நல்லாட்சியோ நிறுவி, மக்களை சந்தோஷமாக வாழவைத்து அதனால் எல்லோரும் திரண்டு ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். மனமும் இதயமும் நன்றியினால் நிரம்பி மக்கள் மகிழ்வார்கள்.
yadavatirno bhagavan
kalkir dharma-patir harih
krtam bhavisyati tada
praja-sutis ca sattviki ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.23
இவ்வாறு எங்கும் அநீதி மறைந்து, அநியாயம் அழிந்து, அக்கிரமம் தொலைந்தால் அடுத்து எஞ்சுவது தர்மம் நியாயம் தானே. எனவே சத்யயுகம் மீண்டும் தோன்றும் என்கிறார் சுக ப்ரம்ம ரிஷி. மக்கள் சாத்வீகமாக வாழ்வார்கள் என்று அர்த்தம்.
yada candras ca suryas ca
tatha tisya-brhaspati
eka-rasau samesyanti
bhavisyati tada krtam ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.24
ஒரு சின்ன ஜோஸ்ய விஷயம். சுகர் என்ன சொல்கிறார் என்றால் அப்படி க்ரித யுகம் மீண்டும் தோன்றும்போது சந்திரன், சூர்யன், புஷ்ய நக்ஷத்திரத்தில் பிரஹஸ்பதி எனும் புதனுடன் கலந்து கிரகத்தில் கடக ராசியில் இருப்பார்கள். இதற்கு மேல் சொல்ல எனக்கு ஜோஸ்யம் தெரியாது. தெரிந்திருந்தால் நிறையவே சம்பாதித்திருப்பேன். இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்க நேரமே கிடைத்திருக்காதே.
''ye ’tita vartamana ye
bhavisyanti ca parthivah
te ta uddesatah prokta
vamsiyah soma-suryayoh'' ஸ்ரீமத் பாகவத புராணம் 12.2.25
பரீக்ஷித் மஹாராஜா, நீ கேட்ட கேள்விகளுக்கு எனக்கு தோன்றியவரையில் கலிகால நிலைமை, ஆள்பவர்கள், அப்போது மக்கள் வாழ்க்கை, மீண்டும் எப்படி நல்ல நிலைமை எப்போது திரும்பு என்றெல்லாம் விவரமாக சொல்லிவிட்டேனப்பா'' என்கிறார் சுகப்பிரம்ம ரிஷி. நாமும் இந்த தொடரை இத்துடன் முடிப்போம். வேறு ஏதாவதில் நுழைவோம்.
Image may contain: one or more people and people sitting

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...