Monday, May 23, 2022

SHEERDI BABA

 

Search Facebook
Manage group

Group by J.K.Sivan friends page
SREE KRISHNARPANAM SEVA TRUST
Private group
·
6.6K members

Featured
Members won't see this section when it's empty.
J.k. Sivan
Admin

·
strno
u
w
0
J
f
if8
n
1u
s
o
li
t
·
#மனிதருள்__ஒரு_தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN ஷீர்டி பாபா
''எண்ணையிலாதொரு தீபம் எரிந்தது.'....
வனாந்திர, வறண்ட அந்த பூமியில் சுள்ளென்று வெய்யில் வாட்டும். மரங்கள் செடிகள் அதிகம் இல்லை. நீரின்றி எங்கும் முள்ளும் காய்ந்த சருகுகள் கொண்ட சில மரங்களும் புதர்களும் தான் தாவரம். அதிகம் வீடுகள் இல்லாத கிராமம். கிராமத்தின் தேவைகளை மட்டும் சொற்ப லாபம் தேடி விற்கும் சில பெட்டி கடைகள். பழைய இடிந்து போன மசூதியில் பாபா அடைக்கலமாகி இருந்தார்.
ஷீர்டியில் பாபா தினமும் ம… See more
0 Comments


J.k. Sivan
Admin

·
osno6a8m76h
t
1i
u
0
5
o
s
0
w
n
c
J
·
#மனிதருள்__ஒரு_தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN ஷீர்டி பாபா
''எண்ணையிலாதொரு தீபம் எரிந்தது.'....
வனாந்திர, வறண்ட அந்த பூமியில் சுள்ளென்று வெய்யில் வாட்டும். மரங்கள் செடிகள் அதிகம் இல்லை. நீரின்றி எங்கும் முள்ளும் காய்ந்த சருகுகள் கொண்ட சில மரங்களும் புதர்களும் தான் தாவரம். அதிகம் வீடுகள் இல்லாத கிராமம். கிராமத்தின் தேவைகளை மட்டும் சொற்ப லாபம் தேடி விற்கும் சில பெட்டி கடைகள். பழைய இடிந்து போன மசூதியில் பாபா அடைக்கலமாகி இருந்தார்.
ஷீர்டியில் பாபா தினமும் ம… See more
0 Comments


Post removed
SriRangam's post has been removed from your group.
J.k. Sivan shared a link.
Admin

·
tresdoop
4
m
184t44
s
h
r
·
கணீர் குரல் கண்டசாலா - நங்கநல்லூர் J K SIVAN
1953-54ல் நான் சூளைமேட்டிலிருந்து கோடம்பாக்கம் ரயில் பாதை கேட்டைக் கடந்து இப்போதைய வடக்கு தியாகராயநகரை தாண்டி வேங்கட நாராயணா தெருவில் இருந்த தியாகராயநகர் உயர் நிலைப் பள்ளிக்கு நடந்து போன ஒன்பதாவது வகுப்பு மாணவன். வழியில் உஸ்மான் ரோடு வரும். அதில் ஒரு வெள்ளை மாளிகை. அதன் மாடியில் ஒருநாள் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் என்பவர் நின்றுகொண்டிருந்தார். அவர் பெயர் மட்டும் எனக்கு தெரிந்ததே தவிர நேரில் பார்த்ததில்லை, சினிமாவு… See more
ENGUME ANANDAM ENCHANTING SONG BY GANTASALA OF 1950S sung by J K Sivan
YOUTUBE.COM
ENGUME ANANDAM ENCHANTING SONG BY GANTASALA OF 1950S sung by J K Sivan
2 Comments
Seetha Swamy
Good old memories ji
Reply4h
Padma Seetharaman
Nice memories
Reply2h


J.k. Sivan
Admin

·
tesdoop
r
1
7
618l4t4
s
h
·
#ஆதி_சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
காலபைரவாஷ்டகம்
அஷ்டகம் 8
இந்த பதிவுடன் ஆதி சங்கரரின் கால பைரவாஷ்டகம் நிறைவு பெறுகிறது.
சிவாலயங்களின் ஸ்ரீ பைரவருக்கு ஒரு சந்நிதி உண்டு. அவரை க்ஷேத்ர பாலர்என்கிறோம். பைரவர் என்றாலே நடுங்க வைப்பவர் என்று அர்த்தம் என்று அம்மா சொல்வாள்.
சிவனிடமிருந்து பெற்ற சக்தியால் நம்மை காப்பாற்றும் தெய்வம் கால பைரவர். யமதர்மன் காலன் என்ற பெயருடையவன். அவனையே சம்ஹாரம் செய்த மூர்த்தி காலசம்ஹார மூர்த்தியான சிவன், காலகாலன். கால பைரவர் சிவனின் அம்சம்.
கால… See more
2 Comments
Brinda Srikanth
Sri bairavaya namah
ReplySee Translation15h
Thiagarajan Swaminathan
Om Sri Kalabairavaya Namaha 🙏🙏 🙏
Reply9h


J.k. Sivan
Admin

·
prodn
M
i8
2
0
2
42
P
1
g
1
t
8
h
9
M
a
y
u
5
:
a
a ·
!#காலபைரவாஷ்டகம் - நங்கநல்லூர் J K SIVAN ஆதி சங்கரர்
அஷ்டகம் - 6
ஆதி சங்கரர் மாதிரி இன்னொருவரை இனி எந்த ஜென்மத்திலும் காண முடியாது. யாரால் அவர் போல ஸம்ஸ்க்ரித ஸ்லோகங்களை அருவி போல் கொட்டமுடியும்? அவருடைய எத்தனையோ ஸ்தோத்திரங்கள், ஸ்லோகங்களில் கால பைரவாஷ்டகம் ஒரு அற்புதமான ஸ்லோகம். அதன் சந்தங்கள் செவிக்கினியவை. அர்த்தங்களோ அந்த சிவனையே நேரில் கொண்டு வந்து நிறுத்துபவை.
See more
4 Comments
Krishnan Nc
Ohm Sri Kalabairavaya Namaha.
Reply4d
Brinda Srikanth
Sri bairavaya namah
ReplySee Translation1d


About
SREE KRISHNARPANAM SEVA TRUST , NANGANALLUR, is an association of persons aiming to serve the next generation with information about our spirit… See more
Private
Only members can see who's in the group and what they post.
Visible
Anyone can find this group.
General
Topics in this group
#ஸ்ரீவைஷ்ணவமஹநீயர்கள்
Pinned by admin • 157 posts
#swamijistime
Pinned by admin • 154 posts
#சித்தர்கள்மஹான்கள்மஹரிஷிகள்
Pinned by admin • 121 posts
Recent media
Edit post
J.k. Sivan
#மனிதருள்__ஒரு_தெய்வம் - நங்கநல்லூர்J K SIVAN
ஷீர்டி பாபா
''எண்ணையிலாதொரு தீபம் எரிந்தது.'....
வனாந்திர, வறண்ட அந்த பூமியில் சுள்ளென்று வெய்யில் வாட்டும். மரங்கள் செடிகள் அதிகம் இல்லை. நீரின்றி எங்கும் முள்ளும் காய்ந்த சருகுகள் கொண்ட சில மரங்களும் புதர்களும் தான் தாவரம். அதிகம் வீடுகள் இல்லாத கிராமம். கிராமத்தின் தேவைகளை மட்டும் சொற்ப லாபம் தேடி விற்கும் சில பெட்டி கடைகள். பழைய இடிந்து போன மசூதியில் பாபா அடைக்கலமாகி இருந்தார்.
ஷீர்டியில் பாபா தினமும் மாலை வேளைகளில் கடைத்தெருக்களுக்குச் செல்வார். கடைக்காரர்களை விளக்கேற்ற எண்ணெய் கொடுங்கள் என்று கேட்பார்.
இரவெல்லாம் விளக்குகள் அந்த மசூதியில் எரிந்து கொண்டே இருக்கவேண்டும் என்று அவர் விருப்பம். அணையா ஜோதிக்கு தான் எண்ணெய் கேட்பார். பாபாவுக்கு தீபங்கள் ரொம்ப பிடிக்கும்.
''என்ன இந்த பக்கிரி தினமும் வந்து நம்மை எண்ணெய் கொடு என்று தொந்தரவு பண்ணுகிறார். இன்று ஒருநாள் அவர் வந்து எண்ணெய் கேட்டால் நாம் யாருமே அவருக்கு எண்ணெய் கொடுக்கக்கூடாது '' என்று கடைக்காரர்கள் ஒன்று கூடி தீர்மானித்தார்கள்.
பாபா வழக்கம்போல் அன்று மாலையும் கடைத்தெருக்களுக்கு சென்று ஏதோ கொடுத்து வைத்தவர் போல் உரிமையோடு எண்ணெய் கேட்டார். ஒருவருமே ஏற்கனவே நாம் தீர்மானித்தபடி அவருக்கு ஒரு சொட்டு கூட எண்ணெய் கொடுக்கக் கூடாது என்று முடிவெடுத்துவிட்டதால் யாருமே அவருக்கு எண்ணெய் தந்து உதவ விலை. ஒருவர் விடாமல் எல்லோரையும் கேட்டார். பிறகு எண்ணெய் இல்லாமல் அமைதியாக திரும்பி வந்தார். அவர் முகத்தில் கோபமோ, ஆத்திரமோ, எரிச்சலோ எதுவுமே தென்படவில்லை. மசூதியில் வந்து அமர்ந்தார். இரவு நெருங்கியது.
அருகே இருந்த மண் குவளையிலிருந்து சிறிது ஜலம் எடுத்து குடித்தார். என்ன தோன்றியதோ, வாயில் இருந்த ஜலத்தில் சிறிது எண்ணெய் இல்லாமல் காலியாக இருந்த ஒரு தகரக் குவளையில் கொப்புளித்தார். தகரக் குவளையை இவ்வாறு புனிதமாக்கிவிட்டு அதில் ஜலம் நிரப்பினார். அந்த குவளை நீரை எடுத்துக் கொண்டு எல்லா விளக்குகளிலும் திரியை போட்டுவிட்டு எண்ணெய்க்கு பதிலாக குவளையிலிருந்த ஜலத்தை நிரப்பினார். விளக்குகளை ஏற்றினார்.
என்ன ஆச்சர்யம். எல்லா விளக்குகளும் பளிச்சென்று எண்ணெய் விட்ட விளக்குகளைப் போலவே ''ஜகஜ்ஜோதியாக'' என்போமே, அப்படி எரிந்து இரவெல்லாம் தீபச்சுடர் வீசின. கடைக்காரர்கள் இதெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். எப்படி எண்ணெய் இல்லாமல் விளக்குகள் எரிந்தன? அதுவும் வெறும் தண்ணீரிலா?
''ஆஹா என்ன தவறு செய்துவிட்டோம். எப்படிப்பட்ட ஞானி இவர?'', இவருடைய மஹிமையை உணராமல் போய்விட்டோமே என்று வருந்தினார்கள். தாங்கள் செய்த செயலுக்கு வருந்தி வெட்கப்பட் டார்கள். எல்லோருமாக ஒன்று சேர்ந்து அவரிடம் போய் மன்னிப்பு கேட்டார்கள்.''இனி உண்மையாக இருங்கள் '' என்று சுருக்கமாக ஒரு ஆசிர்வாதம்.
இதுபோல இன்னொரு சம்பவம் எனக்கு ஞாபம் வருகிறது. அருள்ஜோதி வள்ளலார் தனது தமையனார் வீட்டில் வசிக்கும்போது திண்ணையில் மாடப்பிறையில் அவர் ஒரு எண்ணெய் அகல் விளக்கடியில் நூல்களை படிப்பதும் எழுதுவதுமாக காலம் கழிப்பார். ஒருநாள் அண்ணி அவருக்கு விளக்கேற்ற மாடப்பிற அகலில் எண்ணெய் விட மறந்து விட்டார் போல் இருக்கிறது. ராமலிங்க அடிகளார் வீட்டிற்குள் சென்று அண்ணியாரிடம் எண்ணெய் கேட்கவில்லை. கிண்ணத்தில் இருந்த சிறிது ஜலத்தை விளக்கில் விட்டு ஏற்றினார். விளக்கு எரிந்து தீபப்ரகாசம் வீசியது. அவரது திருவருட்பா பாடல்கள் சில அன்றிரவு எழுதப்பட்டன என்பார்கள்.
மஹான்கள் சித்தர்கள். எதுவும் அவர்களா

ல் முடியும். ஆனால் தனது திறமைகளை சக்திகளை வெளிக்காட்ட மாட்டார்கள்.
கடற்கரையில் கலங்கரை விளக்குகள் இரவெல்லாம் எரியும். கலம் என்றால் கப்பல், படகு. கரை என்பது கடற்கரை. கடலில் மிதந்து வரும் கப்பலுக்கு கரை எங்கே இருக்கிறது என்று காட்டவே கலம்கரை விளக்கு. அதுபோல தான் மஹான்கள் ஞானிகள் ஆகியோர் சரித்ரம் நமக்கு உலக வாழ்க்கையில் எங்கே பாறைகள், மேடுகள், திட்டுகள் இருக்கிறது என்று அறிந்து அவற்றிலிருந்து விலகி சீராக. நேராக, நமது வாழ்க்கைப் பாதையில் கரையேற உதவுபவை. மஹான்கள் ஞானிகளின் சரித்ரம் படிக்கும்போது மனதில் பொறாமை,
தீய எண்ணங்கள்,கடுமை கொடுமை எல்லாம் விலகி, அன்பும், நேசமும் பாசமும் பக்தர்கள் நெஞ்சிலே வளருகிறது. அச்சம், சந்தேகம், பயம் எல்லாம் விலகும். ''யாம் இருக்க பயம் ஏன்'' என்று அதனால் தான் ஷீர்டி பாபா போன்ற மஹான்கள் சொல்லியிருக்கிறார்கள். குரு நாம ஸ்மரணை பாபங்களை விலக்கும். மோக்ஷத்தை அளிக்கும்.
ஒரு பகல் ஆரத்தி நேரத்தில் பகவான் சாய் பாபா சொன்னதை நினைவு கூறுவோம்:
''உனக்கு எங்கே விருப்பமோ அங்கே இரு, என்ன செய்ய விருப்பமோ அதைச் செய், ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள் . நீ எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் எனக்கு அது தெரியும். உன் உள்ளே இருப்பவன் நான். உன் இதயம் எனும் பீடத்தில் வாசம் செய்து ஆள்பவன். உயிருள்ள சகல ஜீவன்களிலும் நான் உள்ளேன். பிரபஞ்சத்தை இயக்குபவன். சகல உயிர்க்கும் நான் தாய். குணங்களின் ஆதாரம். புலன்களை இயக்குபவன். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹார கர்த்தா நான். என்னை சரணடைந்தவரைக் காப்பது என் கடன். அவர்களை ஒரு தீங்கும் அணுகாது. என்னை மறந்தவனைத் தான் உலக மாயை ஆட்டுவிக்கும். வாட்டும். கஷ்டம் தொடரும். காணும் யாவும் நானே ''
அடடே, பாபா சொல்வது கிருஷ்ணன் கீதையில் சொன்னதைப் போலவே அல்லவா இருக்கிறது!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...