ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
''பார்த்தசாரதி வாழ்க்கைப் படகையும் ஒட்டு ...
கிருஷ்ணனுக்கு ஏன் இத்தனை பெருமை, மஹிமை. அவன் தர்மம், நேர்மை, நியாயம், அன்பு, பாசம், இவற்றின் உருவகம். நான் எங்குமிருக்கிறேன், எதிலுமிருக்கிறேன் என்று கிருஷ்ணன் சொல்வதன் அர்த்தம் என்ன? உண்மையில் அன்பு பாசம், எல்லோரிடமும் சரிசமமான நேர்மை நியாயம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ணன் இருப்பதாக அல்லவோ எடுத்துக் கொள்ளவேண்டும். அவற்றின் பெயர் தானே கிருஷ்ணன்?
''ஹே, கிருஷ்ணா, நான் எதைச் சொல்வேன், என்னத்தைச் செய்வேன் சொல்? என் அகம்பாவம் என்னை ஆட்டிவைக்கிறது. என் செயலுக்கு நீ தான் பொறுப்பேற்க வேண்டும். உனக்கு தான் எல்லாமே தெரியுமே. என் செயலால் எது ஆகும்? என் தகுதி என்ன? என்னால் இயன்றது என்ன? நானாக நினைத்தது எல்லாம் நிறைவேறவா முடியும்?
பெண்டாட்டி, பிள்ளை, சுற்றம் உறவு, எல்லாமே சந்தையில் கூட்டம் -- ஏதோ கொஞ்சநாள் ரயில் சம்பந்த உறவு. காலம் தான் தலை தெறிக்க வேகமாக ஓடுகிறதே. எல்லாமே எனக்கு மறந்து போயிற்றா, மறைந்து போயிற்றா?
பணத்துக்கு அடிமையாகி விட்டேனப்பா. எனக்கு எது செய்யவேண்டியது, எதை செய்யக்கூடாது என்று அறியும் அறிவு இல்லாமல் மழுங்கி போய்விட்டதே
என்னை இங்கேயிருந்து கழற்றி விட்டு விடப்பா, கண்ணப்பா, என் வாழ்க்கைத் தோணி நிறைந்து போய்விட்டது இனி எதற்கும் இதில் இடமில்லை. ஒரு சிறு கடுகை ஏற்றினால் கூட முழுகி விடும்.
எந்தநேரமும் நான் படகோடு நீரில் மூழ்கி மறையவேண்டும். வா வந்து காப்பாற்றி கரைசேர்த்து உன்னிடம் அழைத்துக் கொள் .
ஸூர் தாஸ் அற்புத கிருஷ்ண பக்தன். தன்னையே அர்ப்பணம் பண்ணிக்கொண்டு எவ்வளவு அழகாக பாடியிருக்கிறார் பாருங்கள்.';'
நாம் ஆச்சர்யம் மேலிட்டு ஆச்சர்யத்தோடு சந்தோஷமாக இருப்பதை ''மூக்கின் மேல் விரலை வைத்து'' என்று சொல்வோமே ஞாபகமிருக்கிறதா? என்னை ஆட்கொண்ட மிகப் பெரிய ஆச்சர்யம் ஒரு ஓவியனின் கற்பனா சக்தி . கண் பார்வை அற்ற ஸூர்தாஸ் மூச்சுக்கு முன்னூறு அல்ல மூவாயிரம் கிருஷ்ண நாம ஜபம் செய்பவர். அதை அழகிய கவிகளால் வெளிப் படுத்துபவர். அதை கேட்கும்போது நம்மை எங்கோ தேவ லோகத்தில் கொண்டு செல்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். குட்டியாக கிருஷ்ணனே நேரில் வந்து அவர் எதிரில் வந்து கால்களை மடக்கி சப்பணம் கட்டிக்கொண்டு பதவிசாக அமர்ந்துகொண்டு இடது கன்னத்தில் கை வைத்து குனிந்து அவர் கவி பாடுவதை ரசித்துக்கொண்டிருக்கிற மாதிரி எப்படி அந்த ஓவியனுக்கு வரையத்தோன்றியது. யாரிந்த பாக்கியசாலி ஓவியன்? கிருஷ்ணன் கண்களில் ஆச்சர்யம், புன்முறுவல்.
'ஹே ஸூர்தாஸ் தாத்தா, நான் செய்தது பெரிதல்ல, நீ அதை ராகமாக செவியினிக்க பாடி நேரில் நடந்ததைப் பார்த்தாற்போல் பாடுவது தான் அபூர்வம்'' என கிருஷ்ணன் சொல்வதைப் போல் ஓவியம் தீட்டிய நீ யார் அப்பா? ஆனால் நீ மிக உயர்ந்த கிருஷ்ண கடாக்ஷம் பெற்றவன் என்று மட்டும் நிச்சயமாக சொல்வேன்''

ஸூர்தாஸ் மீராபாய் போல் அற்புதமான கிருஷ்ண பக்தி கானங்கள் இயற்றி பாடியவர். இயற்கையிலேயே கண் பார்வை இழந்தவர்.
டில்லி பாதுஷா ஒளரங்க சீப் காலத்தில் வசித்தவர். கிருஷ்ணன் அவதரித்த மதுராவில் கிருஷ்ணா கத்ர தேவ் எனும் கிருஷ்ணன் ஆலயத்தில் வசித்து வாழ்ந்தவர். அது இப்போது கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படுகிறது. முஸ்லீம் அரசாட்சியில் இந்த ஆலயம் அழித்து தரைமட்டமாக்கப்பட்டது ஒரு அநியாயமான செயல். என்ன செய்வது?
तुम मेरी राखो लाज हरि
तुम जानत सब अन्तरयामी
करनी कछु न करी
तुम मेरी राखो लाज हरि
औगुन मोसे बिसरत नाहीं
पल चिन घरी घरी
तुम मेरी राखो लाज हरि
दारा, सुत, धन, मोह लिये हौं
सुध बुध सब बिसरी
अब मोरी राखो लाज हरि
सूर पतित को बेगि उबारो
अब मोरी नांव भरी
Tum meri rakho laz hari
Tum janat sab antaryami
Karni kuch na kari
Tum meri rakho laz hari
Awgun mose vichrat nahi
Pal chin ghadi ghadi
Ab prapanch ki ott bandhke
Apne preet ghadi
Tum meri rakho laz hari
Dara sut dhan moh liye hai
Sudh budh sab bisri
Ab meri naw ubhari
तुम मेरी राखो लाज हरि
तुम जानत सब अन्तरयामी
करनी कछु न करी
तुम मेरी राखो लाज हरि
औगुन मोसे बिसरत नाहीं
पल चिन घरी घरी
तुम मेरी राखो लाज हरि
दारा, सुत, धन, मोह लिये हौं
सुध बुध सब बिसरी
अब मोरी राखो लाज हरि
सूर पतित को बेगि उबारो
अब मोरी नांव भरी
Tum meri rakho laz hari
Tum janat sab antaryami
Karni kuch na kari
Tum meri rakho laz hari
Awgun mose vichrat nahi
Pal chin ghadi ghadi
Ab prapanch ki ott bandhke
Apne preet ghadi
Tum meri rakho laz hari
Dara sut dhan moh liye hai
Sudh budh sab bisri
Ab meri naw ubhari
No comments:
Post a Comment