நரகங்கள் - நங்கநல்லூர் J K SIVAN
நமக்குத் தெரிந்தவைகள் எல்லோருக்கும் தெரிந்தவையாக இருக்கும் என்பதால் நாம் சொல்வதை எவரும் கேட்பதில்லை. எழுதுவதை படிக்க மாட்டார்கள். ஆனால் தெரிந்ததோடு தெரியாதவற்றை யும் சேர்த்துச் சொன்னால் பிடிக்கும். அப்படி ஒரு தெரியாத விஷயத்தை முதலில் நாமே தெரிந்து கொள்ளும்போது ஒரு ஸ்வராஸ்யம் உண்டாகிறதல்லவா? அந்த சுவாரஸ்யத்தை தான் நான் எப்போதும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த பதிவில் உங்களை கொஞ்சம் பயமுறுத்த எனக்கு எண்ணம் இல்லை. ஆனால் அதில் கண்ட விஷயங்கள் படிப்பவர்களை பயமுறுத்தினால், பயப்பட வைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. கருட புராணம் எழுதியவரோ சொன்னவரோ தான் இதற்கு பொறுப்பாளி.
நாம் புண்யம் செய்தால் கிருஷ்ணன் தோள் மேல் கை போட்டுக்கொண்டு கதை பேசலாம் கேட்கலாம். நாம் தான் புண்யம் செய்வதே இல்லையே. நாம் மனதால், வாக்கால், உடம்பால் பாப கார்யங்களைத் தேடிப் பிடித்து தப்பில்லாமல் அவற்றை முழுதாக செய்பவர்கள். ஆகவே நமக்கு நரகத்தில் நிச்சயம் இடம் உண்டு. அந்த நரகம் என்பது ஒரே ஒரு ஹால் இல்லை. பலவகை அறைகள். அங்கே ஒவ்வொரு அறையிலும் பல வித வினோத தண்டனைகள் நமக்கு காத்திருக்கும் நாம் செய்த தப்புக்கு ஏற்றாற்போல் அந்தந்த நரக அறைக்குள் அனுப்புவார்கள். அவை என்ன என்பதை கருடபுராணம் சொல்கிறது.
தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரௌரம், மகா ரௌரம், கும்பிபாகம், காலசூத்திரம், அசிபத்திரவணம், சூகரமுகம், அந்தகூபம், சந்தசங்கிசம், கிருமிபோஜனம், சூரமி,
சலமரி, வஜ்ரகண்டகம், பூயோதம், வைதரணீ, பாணரோதம், வைச்சம், லாலாபஷம்,
விசிரியபானம், சாரமெயாதனம், ஷாரகார்த்தபம், ரஷோகுணபூசனம், சூலப்ரோதம்,
தெந்தசூகம், வடதிரூதானம், பரியாவர்த்தனம், சூசிமுகம். -
-- இந்த நீள லிஸ்ட் போதுமா? இனி இவை என்ன என்பதை அறிவோம்:
தாமிஸ்ரம் : இன்னொருத்தன் சொத்து, பொருளை அபேஸ் பண்ணினாயா? இதோ ஸார் உங்க இடம். இங்கே விஷம் நிறைந்த தொட்டி. அதில் தான் நீங்க உட்கார்ந்து கொள்ளவேண்டும், படுக்க வேண்டும், அது தான் பெட். தாகம் வாட்ட தண்ணீர் வேண்டும் என்று கேட்கும்போது உருட்டை கட்டை தடியால் அடிக்கப்படுவீர்கள். தாகம் தனியவேண்டாமா?
அந்ததாமிஸ்ரம் : பிள்ளை குட்டி, பெண்டாட்டி அம்மா அப்பா மாமா மாமி அத்தை எல்லாரையுமே குடும்பத்தில் துன்பப் படுத்தி, துடி துடிக்கச்செய்தீர்களா ஸார் , அப்படியென்றால் உங்கள் இடம் இங்கே தான் சார். இதன் பெயர் அந்த தாமிஸ்ரம். சுத்தமான இருட்டு உங்கள் கண்கள் பார்வையை இருட்டில் இழந்து விடுவீர்கள் ஸார்.
ரௌரம் - இந்த நரகத்தின் பெயர் நிறைய பேருக்கு தெரியும். போய்விட்டு வந்ததால் இல்லை. கேள்வி ஞானம். ஏனென்றால் போனால் திரும்பி வரமுடியாது. ரௌரவாதி நரகம் என்றால் இதை போன்று பல நரகங்கள் என்று அர்த்தம். ஹிம்ஸை பு ரிந்து பிராணிகளை வருத்திக்
கொலை செய்தவனுக்கு இங்கே இடம் ரிசர்வேஷன் செய்திருப்பார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் அவனை இங்கே சித்ரவதை செய்பவர்கள் வேறு யாருமில்லை. அவனால் கொல்லப்பட்ட, இம்சிக்கப்பட்ட பிராணிகளின் ஜீவன்கள் தான்.
மகா ரௌரம் :- காய்கறிகள் தங்கம் போல் விலை உயர்ந்தால், பெட்ரோல் சமையல் காஸ் எரிவாயு விலை ஆகாசத்தை தொட்டால், கொரோனா உன்னை விட்டேனா பார் என இன்னும் துரத்தினால், எங்கே பார்த்தாலும் லாக் டௌன் , வீட்டுக்குள் சிறை என்று வாழும் சென்னை போன்ற நகரங்கள் கூட ஒரு விதத்தில் நரகங்கள் தான். நரகத்திலே பெரியது ஒன்று இருக்கிறது. அதற்கு மஹா ரௌரம் என்று பெயர். டாஸ்நாக்கில் சுற்றுபவன், பொய் பேசுபவன், ஆகியோருக்காக அங்கே ஒரு பெரிய வாயகன்ற இரும்பு சட்டி நெருப்பில் காய்ந்து சிகப்பாக ஒளி வீசிக்கொண்டு அவர்களை உருளைக்கிழங்கு வறுவல் போல் வறுப்பதற்கு காத்திருக்கும்.
கும்பிபாகம் : இன்னொருத்தனின் உணவை தராமல் தட்டி பறித்தவன் பசியோடு இந்த கும்பிபாகம் என்ற நரகத்தில் பசியோடு எதுவுமே குடிக்கவோ, உண்ணவோ ஒன்றுமில்லாமல் தவிக்க விடப்படுவான். உண்ண ஏதாவது இருந்தால் அதையும் தட்டிப்பறிக்க பருந்துகள் கழுகுகள் அலைந்து கொண்டே இருக்கும். அவன் உணவை கொத்தி பிடுங்கும். நெருப்பை வைத்து உயிரினங்களைக் கொன்றவனை அங்கே பசியோடு உள்ள வெறி நாய்கள் கடித்துக் குதறும் .

காலசூத்திரம் : இந்த நரகத்தில் யார் மாட்டிக் கொள்வார்கள் தெரியுமா? பெற்றோருக்கும் , பிராமணருக்கும் துரோகம் செய்தவர்கள் பெரிய பெரிய தாமிர பத்திரங்களில் போட்டு மேலும் கீழும் நெருப்பால் பொசுக்கப்படுவார்கள்.
அசிபத்திரவம் : வேதம் காட்டும் சொல்லும் வழிமுறை, ஆசாரங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு முறை கேடான வாழ்க்கை வாழ்ந்தவர்களை கூர்மையான இலைகள் கிழிக்க அசிபத்திர நரகத்தில் ரோஸ்ட் செய்யப்படுவார்கள்.
சூரமி : தனக்கென்று உரிமை, உடைமை அற்ற, தகுதியற்ற ஆணையோ, பெண்ணையோ தவறான முறையில் கூடியவர்களை நீளமான தோல் சாட்டையால் சூடான நெருப்பில் கொதிக்கும் தூண்களில் கட்டி வைத்து வெளுத்து வாங்குவார்கள். இதைச் சொன்னால் இப்போதே எந்த தப்பும் பண்ணாமல் பெண்களைக் கண்டாலே தூர ஓடி சாமியாராக வாய்ப்பு உண்டு.
வஜ்ரகண்டம் : உயிரோடு கதற கதற பிராணிகளை வதைப்பவர்களை கூரான முட்கள் நிறைந்த இலவ மரத்தில் ஏற வைத்து வஜ்ரகண்டம் இன்னும் இந்த நரகத்தில் சித்ரவதை செய்வார்கள்.
பாணரோதம் : வாயில்லாத பிராணிகளை கொல்கிறவர்களை எம தூதர்கள் கூரான அம்புகள் எய்து உடலை துண்டு துண்டாக பிளப்பார்கள் இந்த நரகத்தில்.
வைச்சம் : யாகங்களில் பிராணி வதை புரிபவரை வைச்சம் எனும் நரகில் தள்ளி புரட்டி எடுப்பார்கள்.
தெந்தசூகம் : மக்களை, பிராணிகளை பயமுறுத்தி பிழைப்பவர்களை தெந்தசூகம் என்ற நரகில் சர்ப்பங்களை விட்டு கொத்த விடுவார்கள்.
வடதிரோதானம் : பிள்ளைகளை, குருடர்களை மற்ற உயிர்களை துன்புறுத்துவோரை வடரோதனம் நரகத்தில் அடைத்து துன்புறுத்துவார்கள். என்கிறது கருடபுராணம். இன்னும் விவரமாக உள்ளே சென்றால் வினோதமான ஆனால் பயமுறுத்தும் விஷயங்கள் வெளி வர நிறைய சான்ஸ் நிறைய 25க்கு மேல் நன்றாக பட்டியல் தந்ததில் ஒரு சிலவற்றை பற்றி தான் மேலே சொன்னேன். இன்னும் பயங்கர விஷயங்கள் இருக்கிறது. மேலே சொன்னவை ஒரு சில எமலோக யமனின் அரசாங்க பனிஷ்மென்ட் டிபார்ட்மெண்ட்கள். ஆங்காங்கே அனுபவமான அதிகாரிகள் இவற்றை நிறை
வேற்ற காத்திருக்கிறார்கள். போதுமா?
No comments:
Post a Comment