Thursday, May 19, 2022

SURDAS

 ஸூர்தாஸ்  -     நங்கநல்லூர்  J K  SIVAN 


''எதுவும் உன்னால் ஆகும் ''

உடலில்  துன்பமும்,   உள்ளத்தில்  துயரமும் நம்மை வாட்டும்போது  நாம்  என்ன சொல்கிறோம்?  ''அம்மா  அப்பா''  என்று கத்துகிறோம்,  நம்மைப் பெற்ற  அம்மாவோ அப்பாவோ  நமக்கு  தங்களாலான  சிச்ருஷைகளை தான் செய்ய முடியும். படுக்கையில் தூக்கி போடுவார்கள், தடவி கொடுப்பார்கள், அணைப்பார்கள், கஞ்சி  காய்ச்சி வயிறை நிரப்புவார்கள் துயரத்தையோ துன்பத்தையோ போக்க முடியுமா? ஆறுதல் அளித்தால் துன்பம் தீருமா? கொஞ்சம்  அதன் வலியை பொறுத்துக்  கொள்ள மனதளவில்  உதவும். அவ்வளவு தான்.   ''ஐயோ ஐயையோ''    என்று கத்தினால் அப்பாவும் அம்மாவும் வருவார்களா அருகில்?

'' கிருஷ்ணா  கிருஷ்ணா'' என்றால் ஒருவன் எப்போதும்  ரெடியாக  காத்துக்கொண்டிருக்கிறேன் அருகே வந்து உதவ. அவன்  அதனால் தான் ''காக்கும் கடவுள்'' என்று பெயர் கொண்டவன்.

என்னப்பா  கிருஷ்ணா, நீ செய்யும் உதவிக்கு  காசு கேட்பவனோ, நான் கொடுத்தால் வாங்கி கொள்பவனோ
அல்ல. எதையும் எதிர்பாராமல்  மனதில் உன்மேல் அன்பும் நம்பிக்கையும் கொண்டவர்க்கு நீ உதவுபவன். ஏழை பணக்காரன், ஆண்  பெண், முதியோர் சிறியோர், குலம் கோத்ரம்  என்றெல்லாம்  வித்யாசம் பார்ப்பவன் இல்லை. 

உன் தாமரைத் திருவடிகளை மனதில்  நினைத்தாலே போதும்.   ஹரி, உன்னால்  முடவனை  எவரெஸ்ட் சிகரம் மேல் உச்சியில் ஏறி  நின்று சிரித்துக்கொண்டே கையசைக்க செய்வாய்.  ஐந்தடி தூரத்தில் வரும்  கார்  கண்ணுக்கு தெரியாதவனைக் கூட  அரை மைல்  தூரத்தில் மரத்தின் உச்சிக் கிளையில் கிளியைப்  பார்க்க செய்வாய்.   டமார செவிடனை  குசுகுசுவென்று தூர யாராவது பேசினால் கூட அந்த  ரஹஸ்யத்தை  தெளிவாகக் கேட்கச் செய்வாய்.   வாய் பேசா ஊமையை  காம்போதி ராகமாலிகை  ஆலாபனை பண்ண வைப்பாய்.   அனாதை இல்லத்தில் இருப்பவனை அரண்மனையில்  கிரீடம் சூட்டிக்கொண்டு  சிம்மாசனத்தில் தூக்கி உட்காரவைப்பாய்.  கிருஷ்ணா இந்த சூர்தாஸ் உன்னை எப்போதும்  இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி  வணங்கி  வழிபட செய்வாய்.  
என்ன ஒரு    அற்புதமான பாடல்  ஸூரதாஸ் பாடி இருக்கிறார்.

चरण कमल बंदौ हरी राई,
चरण कमल बंदौ हरी राई।

जाकी कृपा पंगु गिरि लांघे,
अन्धे को सब कुछ दरसाई।
चरण कमल बंदौ हरी राई,
चरण कमल बंदौ हरी राई।

बहिरौ सुनै मूक पुनि बोलै,
रंक चलै सिर छत्र धराई।
चरण कमल बंदौ हरी राई,
चरण कमल बंदौ हरी राई।

सूरदास स्वामी करुनामय,
बार बार बन्दौतिः पायी।
चरण कमल बंदौ हरी राई,

Charan Kamal bando hari rai
Jaki kripa pangu giri langhey Andhare ko sab kachhu darsai
 Bahiro sune mook puni bole Rank chale sir chhatra dharai Surdas swami karunamaya Barambar namo sir naayi
Charan kamal bando hari rai

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...