Monday, May 9, 2022

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் -- நங்கநல்லூர்  J K   SIVAN

வில்வவனம்  எங்கே இருக்கு?

அன்னிக்கு  வழக்கத்தை விட அதிக  கூட்டம். குருவாரம்.  மஹா பெரியவா  மௌனம் இல்லை.  எல்லோருடனும் பேசறார் இது போதுமே  பக்தர்கள் கூட்டத்துக்கு.  வரிசையாக  ஹனுமார் வால் மாதிரி  பக்தர்கள் சாரி சாரியாக  பொறுமையாக கைகளில் பிரம்பு தட்டுகளுடன் பைகளுடன் , குழந்தை குட்டிகளுடன் நின்றார்கள். பெண்களுக்கு இன்னொரு ஹனுமார் வால் .

இதோ  பெரியவா கிட்டே நெருங்கி வந்தாச்சு. பெரியவா  அருகே  சிலர்,  சிதம்பரத்திலிருந்து வந்த தீக்ஷிதர்கள்.  அவர்களில்  ஒருவர் கையில் தட்டு நிறைய பழங்கள், முந்திரி  திராக்ஷை,  நடராஜ  பிரசாதம், அதன் நடுவே ஒரு மஞ்சள் குங்குமம்  தடவிய  ஒருபக்க மஞ்சள், ஒருபக்க ரோஸ்  கலர் பத்திரிகை பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது.  

தீக்ஷிதர்களில் தலைவரோ பெரியவரோ யாரோ ஒருவர்  ஸ்லோகங்கள்  சொல்லிவிட்டு.  ''பெரியவா வந்து நடத்திக் கொடுக்கணும்'' என்ரூ அந்த  பத்திரிகையை தட்டோடு நீட்டுகிறார்.    

''ஓஹோ சிதம்பரம் நடராஜா கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழா ?''   பெரியவா புன்னகையோடு பத்திரிகையை எடுத்து முன்னும் பின்னும் பார்த்துவிட்டு  முழுதும் வாசித்தார்.
அவர் எக்ஸ்ரே xray  கண்ணில்  ஒரு வாசகம் பட்டுவிட்டது.

 “சர்ம கஷாயம்’ னு  போட்ருக்கேளே  என்ன அர்த்தம்?''
 யாரும் பதில் சொல்ல முன்வரவில்லை.

”அர்த்தம் தெரிந்தவர்கள்  யாராவது   சர்ம கஷாயத்தைப் பற்றிச் சொல்லுங்கோ ''  என்கிறார் பெரியவா.

புலவர் வெங்கடேசன் என்ற பக்தர்:   'சர்ம கஷாயம்”  ஒரு  ஸம்ஸ்கிருத வார்த்தை' ன்னு மட்டும் தெரியறது. அர்த்தம் தெரியலே''
 
 ''ஆமாம் .“சர்ம கஷாயம்’   ஸம்ஸ்கிருத வார்த்தை தான். ஆலமரம், அரசமரம், அத்திமரம், பலாமரம் போன்ற பால் துளிர்க்கும் மரங்களில் இருந்து மரப்பட்டைகளை சேகரித்து இடித்து தண்ணீரில் போட்டு ஒரு மண்டலம் (41நாட்கள்) நன்றாக ஊற வைப்பார்கள். அந்த கஷாயத்தை கலசங்களில் நிரப்புவார்கள். பூஜையில் வைத்து வேதமந்திரங்களை ஜெபித்து விக்ரகங்களுக்கும், கலசங்களுக்கும் அபிஷேகம் செய்வார்கள், அது தான் சர்ம கஷாயம் ''  -  மஹா பெரியவாளே  அர்த்தம் சொன்னார்.

இன்னொரு  ருசிகர சம்பவம் சொல்கிறேன்:
ஒரு நாள் மஹா பெரியவா  தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின்  தனிப்பாடல்கள்  புஸ்தகம் வாசித்துக் கொண்டிருந்தபோது  
அதில் ஒரு பாடல்:

”பக்குவமாக கவிநூறு செய்து பரிசுபெற
முக்காண மெதிர் பல்காலும்போட்டு முயன்றிடினும்
அக்கட போவெனும் லோபரைப் பாடி அலுத்து வந்த
குக்கலை ஆண்டயருள் வில்வவனத்து குயிலம்மையே!”

கடைசி வரியில் வரும்  ''வில்வவனம்'' எந்த ஊரில் இருக்கிறது?  என யோசித்தார்.  வில்வவனம் என்று சிவஸ்தலங்கள் நிறைய  இருக்குமே. இந்த பாட்டில்  வரும் வில்வவனம் எங்கே இருக்கு?  

பாரிசிலிருந்து ஆராய்ச்சியாளர் மூலியன் வேன்ஸான் அனுப்பிய கையெழுத்துப்பிரதியான வில்வவன புராணத்திலும் இந்த வில்வவனம் பற்றி எழுதியிருந்ததும் அவர்  .ஞாபகத்துக்கு வந்தது.   வில்வவனம்  இருக்கும்  ஒவ்வொரு ஸ்தலமாக   மனதில் அலசிக்கொண்டிருந்தவருக்கு  புதுச்சேரியில் இருக்கும் வில்லியனூர்  என்கிற பெயர்  நெருடிற்று.   ஓஹோ  இந்த பாடலில்  இப்பாடலில்  வருகிற  வில்வவனம் வில்லியனூர் தான் என்பது  உறுதியாயிற்று.  


வில்லியனூர் கிராமத்தில் ரெண்டு ஏக்கர் பரப்பில்  பெரிய சிவாலயம் தான் காமீஸ்வரர், கோகிலாம்பா தரிசனம் தரும் 12ம்  நூற்றாண்டு  சிவக்ஷேத்ரம்.  ஒரு காலத்தில் எங்கும் வில்வமரங்கள் படர்ந்த அடர்ந்த வில்வவனம் தான் இப்போது வில்லியனூர் ஆகிவிட்டது 

மஹா பெரியவா  மஹாபெரியவா தான் என்பதில் என்ன சந்தேகம்!



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...