Monday, September 6, 2021

ULLADHU NARPADHU

 உள்ளது நாற்பது --   நங்கநல்லூர்   J K   SIVAN 


தேகமும்  ஆத்மாவும். 

உடல்பஞ்ச கோச வுருவதனா லைந்து
முடலென்னுஞ் சொல்லி லொடுங்கு – முடலண்றி
யுண்டோ வுலக முடல்விட் டுலகத்தைக்
கண்டா ருளரோ கழறுவாய் – கண்ட 5

உங்களுக்கு தெரியுமா ?  மனித  உடல் பஞ்சகோசம் எனும் ஐந்து உறைகளைக்  கொண்டது.  இவையில்லாமல் மனிதன் இல்லை. அவன் உலகம் இல்லை.  அது சரி.  ''நான்'' எங்கிற  பிரமைக்கு இருப்பிடமாக இருக்கும் இந்த  தேகம் இல்லாமல் உலகம் உண்டா?  நன்றாக சிந்தியுங்கள்? உடல்  உலகம் ரெண்டுமே  ஸாஸ்வதமற்ற, மாறும்  மாயத் தோற்றம் என்பது புலப்படும்.

உடலை  மூடும் ஐந்து  கோஸங்கள்  பெயர் சொல்கிறேன்.  அன்னமயம், ப்ராண மயம் ,மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம்.  இந்த உறைகள்  தனித்தனியாக  உடலைப்  போர்த்துபவை அல்ல. 
ஒன்றில் மற்றொன்று கலந்தவாறு ஐந்தும் ஒன்று தான். அவற்றின் ஸ்வபாவங்களைக் கொண்டு நாம் அவற்றை வேறுபடுத்தி அறிகிறோம். 

அன்னமயகோசம்  இந்த சரீரம். நாம்  சாப்பிடும் உணவால்  உருவாவது.
ப்ராணமயகோசம் -  அன்னமய கோசத்திற்கும்  மனோமய கோசத்திற்கும் நடுவே  உள்ளது.  மண்டலம். 
மனோமய கோசம்:   இது   நமது சங்கல்ப விகல்பங்களால்   .ஆசைகள் எல்லாம் இங்கே உருவாகிறது.  மனம்  எப்படிப்பட்டது என்று தெரியுமல்லவா?
விஞ்ஞான மய கோசம்:  ,புத்தி, அஹங்காரம்  மற்றும்  ஞானேந்திரியங்கள் கொண்டது. கண், காது,மூக்கு, நாக்கு, தோல்.  இதன்  மூலம் தான் வெளி உலகை நாம் அனுபவிக்கிறோம்.
ஆனந்தமய கோசம்:   ஆஹா  நான்  ஆனந்தமாக தூங்கினேன் . மரக்கட்டை மாதிரி, ரெண்டு மூணு மணி ஆனதே தெரியலை.  --  இது தான் ஆனந்தமய கோசம். அஞ்ஞான நாசம் இல்லாததால், உண்மையான ஆத்மாவை அறியாததால் இது முக்தி நிலை ஆகாது.

இன்னொரு முறை சொல்கிறேன்.  அன்னமய கோசம் நாம் ஆகாரம் போட்டு வளர்க்கும் ஸ்தூலசரீரம்.  அடுத்தது  உடம்பு இல்லாத ஸூக்ஷ்ம சரீரம்.  ஆனந்தமய கோசம் என்பது  காரண சரீரம்.  உடம்பு, சூக்ஷ்ம சரீரம் தெரியாத  ஆழ்ந்தஉறக்கம்.   இதெல்லாம் ஒன்று சேர்த்து தான் தேகம் என்கிறோம்.இந்த ஐந்து  கோசங்களும் கொண்டது  மூன்று சரீரம் ஸ்தூல, சூக்ஷ்ம, காரண சரீரங்கள்.  இவை  ப்ரகிருதியை சேர்ந்தவை.  மாயை எனப்படுபவை.  நமது உண்மை ஸ்வரூபம் இதுவல்ல.  இருந்து ஒளிரும்  ஸத் சித் ஆனந்தம். ஸ்வயம்பிரகாசம். ஆத்மா. 

ஸ்தூல சரீரத்தின் செயல்கள் நாம் அறிந்தவை. சூக்ஷ்ம சரீரத்தின்  பசி தாகம்  கோபம் பகுத்தறிவு  தீர்மானிப்பது  போன்ற இயல்புகள்.  காரண சரீரத்தின்  தூக்கம், அறியாமை  இவை எல்லாமே  பிரகிருதியின் வெளிப்பாடுகள், இயக்கங்கள்.  எல்லாமே  பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டவை. உபாதி எனப்படுபவை.   ஆத்மாவுக்கு மேலே சொன்னஉபாதி  ஒன்றுமே கிடையாது.  அந்த ஆத்மாவை அறிவது தான் இறைவனை அறிவது.  மேலே  சொன்ன  மூன்று சரீர நிலையிலும்  ஆத்மா தனித்து  சம்பந்தம் இல்லாமல் இருந்து கொண்டு தான் எப்போதும்  இருக்கும். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...