Thursday, September 16, 2021

SRIMAN NARAYANEEYAM

 ஸ்ரீமந் நாராயணீயம் --  நங்கநல்லூர் J K  SIVAN  --

54வது தசகம்.
54. காளீயன்  விஷம்.

இன்று எழுதும்  தசகம் காளீயன் எனும்  விஷ நாகம் பற்றியது.  இதை எழுத உட்கார்ந்த போது 
மனதில் ஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் உருவம்  தோன்றியது.  நான் சிறுவயதில் பார்த்து பிரமித்த ஒருவர் அவர் . அடேயப்பா,  அவரது குரல் கம்மலாக , ஆனால்  கம்பீர மாக,  ஜன ரஞ்சகமாக இருக்கும்.  ஒவ்வொரு வார்த்தையாக விட்டு விட்டு  ஒரு ஸ்வரத்தோடு  உச்சரித்து, கதை சொல்லும் தோரணை  பிரமாதம். எல்லோரையும் போல் என்னையம்  மயக்கியது . ராமாயண மஹாபாரத இதிகாசங்களை புரிந்து கொள்ளும் வயதில்லை அப்போது என்றாலும் அதில் ஆர்வம் ஜனித்தது. 

அப்பா அண்ணாக்களோடு நடந்து போவேன். கோடம்பாக்கம் சூளைமேடு, ஆற்காட் ரோட்டிலிருந்து ரயில்வே லைனை கடந்து, தெற்கே பசுல்லா ரோடு கடந்து லைன் ஓரமாக சென்றால் கிரிஃபித் ரோடு வரும். அதில் சாரதா வித்யாலயா பெண்கள் உயர்நிலைப் பள்ளி மைதானம் வரும். அங்கு இல்லா விட்டால் உஸ்மான் ரோட்டில் இப்போது தி.நகர் பேருந்து நிலையம் அருகே, சற்று முன்னாடி, சிவ விஷ்ணு ஆலயத்திலோ அவரது உபன்யாசம் நடந்து பலமுறை, பல சாயந்திரங்களில் கேட்டிருக் கிறேன். இரவு ஒன்பதுக்கு முடியும். பசியோடு நடந்து சூளைமேடு திரும்புவேன். அவர் உபன்யாசத்
தில் ராஜாஜி,  வி.வி. கிரி, ராவல் கிருஷ்ணய்யர், GNB,  ஆனந்தவிகடன் தேவன், கல்கி சதாசிவம், எம்.எஸ். எஸ். அம்மா தம்பதியர் எல்லோரையும் அங்கே பார்த்த ஞாபகம் வருகிறது. எல்லோரும் தரையில் தான் உட்காருவோம். ஜமுக்காளம் முழுதும் பரவி இருக்காது. துளி கூட அந்த கோவில் மண்டபத்தில் இடம் கிடைக்காது.அவ்வளவு கும்பல். 

கட்டை குட்டையாக தீக்ஷிதர்,நெற்றியில்  பட்டை பட்டையாக விபூதி,   கழுத்து தெரியாமல் நிறைய  ருத்ராக்ஷமாலைகள் , அப்பளாக் குடுமியோடு இருப்பார். சமஸ்க்ரித ஸ்லோகங்கள் வெள்ளமாக அவர் வாயிலிருந்து புறப்பட்டு எல்லோரையும் ஆனந்த பக்தி சாகரத்தில் மூழ்கடிக்கும். அர்த்தங்களை ஜம்மென்று சொல்வார். காட்சிகளை கண்முன்னே கொண்டு நிறுத்துவார். நேரம்போவதே தெரியாது. 1903ல் தஞ்சாவூரில் சேங்காலிபுரம் கிராமத்தில் பிறந்தவர். அப்பா சுப்ரமணிய தீக்ஷிதரிடம் வேதம் கற்றவர். அக்ஷராப்யாசம் பருத்தியூர் கிருஷ்ண சாஸ்த்ரியிடம். மாமனார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வேதங்கள் சாஸ்திரங்கள் தெரிந்துகொண்டது விஷ்ணுபுரம் சுவாமிநாத சாஸ்திரிகளிடம் .   இவர்தான் பரமாச்சார்யாளுக்கும் குருவாக போதித்தவர்.

தீக்ஷிதரிடம் நான் மயங்கினது நாராயணீயம் உபன்யாசத்தில் தான். கிருஷ்ணனை இளம் வயதில் என் நெஞ்சில் புகுத்திய ஒரு முக்கிய மனிதர் தீக்ஷிதர். இன்றும் கூட தீக்ஷிதரின் நாராயணீய, குருவாயூரப்ப ஸ்லோகங்கள் உலகத்தில் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகிறதே. அவருக்கென்றே ஒரு தனி குரல், ராகம். காந்தமென கவரும் பக்தி ரசம். நிறைய ஸ்லோகங்கள் இயற்றியிருக்கிறார். அதில் ஒன்று  ''குருவாதபுருஷ பஞ்சரத்னம்.''   பூங்குன்னம் என்ற கிராமத்தில் ஒரு மலையாள பையன். அவனுக்கு விடாமல் தலைவலி. எந்த மருந்தாலும் குணமாகவில்லை. அவன் தாத்தா அவனை குருவாயூருக்கு அழைத்து சென்றார். மூன்று நாள் அங்கே வாசம். பிரார்த்தனை. மேலே சொன்ன ஸ்லோகத்தை விடாமல் பாராயணம் செய்தபின் தலைவலி எங்கே போயிற்று?? தீக்ஷிதரின் மகிஷாசுர மர்த்தினி ஸ்லோகத்தை ''அயிகிரி NANDHINI என்று உரக்க சொல்லிக்கொண்டே தெருவில் ஓடியிருக்கிறேன். பிரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் 66வயதில் சன்யாசம் பெற்று சித்தியடைந்தார். அவரது அதிஷ்டானம் சின்ன திருப்பதியில் சேலம் பட்டணத்தில் இருக்கிறது. யூட்யூபில் அவர் குரல் எப்போதும் கேட்கலாம். அதைமாதிரி குரல் முன்பும் கேட்டதில்லை, இனியும் கேட்கப்போவதில்லை. அவரது நாராயணீயம் கதையை கொஞ்சம் இத்துடன் இணைத்துள்ள யூ ட்யூபில் கேளுங்கள்     

https://youtu.be/6dt1XrwAo8k

காளிங்கன் என்கிற  நாகம்  கருடனை ஒருமுறை துன்புறுத்தியது.  கருடன் ஆக்ரோஷத்தோடு  காளிங்கனை துரத்த, அவன் பிருந்தாவனம் ஓடிவந்துவிட்டான். அங்கே  கருடன் நுழையமுடியாதபடி ஒரு  ரிஷி  சாபம். காளிங்கன் தனது விஷத்தை  அங்கே  காளிந்தி  நதியில் கலந்து பலர் அந்த விஷநீர் பருகி மரணமடைந்தார்கள்.  கிருஷ்ணன்  காளிங்கனை விரட்டிவிட்டு விஷத்தை போக்கி அந்த கோபர்களை உயிர்ப்பித்தான்.  இனி ஸ்லோகங்கள்:

त्वत्सेवोत्कस्सौभरिर्नाम पूर्वं
कालिन्द्यन्तर्द्वादशाब्दम् तपस्यन् ।
मीनव्राते स्नेहवान् भोगलोले
तार्क्ष्यं साक्षादैक्षताग्रे कदाचित् ॥१॥

tvatsevOtkaH saubharirnaama puurvaM
kaalindyantardvaadashaabdaM tapasyan |
miinavraate snehavaan bhOgalOle
taarkshyaM saakshaadaikshataagre kadaachit || 1

த்வத்ஸேவோத்க꞉ ஸௌப⁴ரிர்னாம பூர்வம்
காலிந்த்³யந்தர்த்³வாத³ஶாப்³த³ம் தபஸ்யன் |
மீனவ்ராதே ஸ்னேஹவான்போ⁴க³லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷாதை³க்ஷதாக்³ரே கதா³சித் || 54-1 ||

குருவாயூரப்பா,  உனக்கு ஞாபகம் இருக்கிறதா? சௌபரி என்கிற  ரிஷி உன்னை நினைத்து  தவமிருக்க இந்த காளிந்தி நதியில் 12 வருஷம் நின்றுகொண்டிருந்தார். அப்போது ஒரு மீன் சிநேகிதம் ஏற்பட்டது.  அப்போது மேலே  கருடன் வட்டமிட்டுக்கொண்டிருந்தான். 

त्वद्वाहं तं सक्षुधं तृक्षसूनुं
मीनं कञ्चिज्जक्षतं लक्षयन् स: ।
तप्तश्चित्ते शप्तवानत्र चेत्त्वं
जन्तून् भोक्ता जीवितं चापि मोक्ता ॥२॥

tvadvaahaM taM sakshudhaM tR^ikshasuunuM
miinaM ka~nchijjakshataM lakshayan saH |
taptashchitte shaptavaanatra chettvaM
jantuun bhOktaa jiivitaM chaapi mOktaa || 2

த்வத்³வாஹம் தம் ஸக்ஷுத⁴ம் த்ருக்ஷஸூனும்
மீனம் கஞ்சிஜ்ஜக்ஷதம் லக்ஷயன் ஸ꞉ |
தப்தஶ்சித்தே ஶப்தவானத்ர சேத்த்வம்
ஜந்தூன் போ⁴க்தா ஜீவிதம் சாபி மோக்தா || 54-2 ||

 கருடன் அருகே வந்தான். அவன் கண்ணில் பசி  தெரிந்தது.ரிஷியின் சினேகிதி  மீனைக்  கண்டதும் நாக்கில் நீர் சுரந்தது.  மீனைக்காலி செய்தவன் எல்லாமீன்களையும் ஒன்றுவிடாமல்  தின்பதற்கு துடித்தான்.   ரிஷிக்கு ரொம்ப வருத்தம்.   ''அடே  கருடா, இனிமேல் இந்த காளிந்தி நதிப்பக்கம்  வந்து  எந்த மீனையாவது தொட்டால்  அது தான் உனது கடைசி சாப்பாடு. அடுத்த கணமே உனக்கு மரணம். இது நிச்சயம்.  ஓடு, எங்காவது போய் தப்பித்துக் கொள்'' என்று சாபமிட்டார். 

तस्मिन् काले कालिय: क्ष्वेलदर्पात्
सर्पाराते: कल्पितं भागमश्नन् ।
तेन क्रोधात्त्वत्पदाम्भोजभाजा
पक्षक्षिप्तस्तद्दुरापं पयोऽगात् ॥३॥

tasmin kaale kaaliyaH kshveladarpaat
sarpaaraateH kalpitaM bhaagamashnan |
tena krOdhaat tvatpadaambhOjabhaajaa
pakshakshiptaH tadduraapaM payO(a)gaat || 3

தஸ்மின்காலே காலிய꞉ க்ஷ்வேலத³ர்பாத்
ஸர்பாராதே꞉ கல்பிதம் பா⁴க³மஶ்னந் |
தேன க்ரோதா⁴த்த்வத்பதா³ம்போ⁴ஜபா⁴ஜா
பக்ஷக்ஷிப்தஸ்தத்³து³ராபம் பயோ(அ)கா³த் || 54-3 ||

அப்போது தான்  இந்த காளிங்கன் எனும் நாகம் அங்கே வந்தான். தனது விஷத்தால் நீரை விஷமாக்கி  கருடன் எந்த மீனையும்  திங்க  முடியாமல் செய்துவிட்டான்.  உனது சேவகன் சிறந்த பக்தன் கருடனுக்கு  காளிங்கன் மேல் கோபம் வந்தது.  இறக்கையை விரித்துக்கொண்டு காளிங்கனை கொல்ல  வந்தபோது  காளிங்கன் விஷநீரின் அடிக்கு சென்று பதுங்கி கொண்டான். கருடனால் காளிந்தி நதி நீரை தொடக்கூட முடியாது. ரிஷி சாபம் நினைவுக்கு வந்தது.

घोरे तस्मिन् सूरजानीरवासे
तीरे वृक्षा विक्षता: क्ष्वेलवेगात् ।
पक्षिव्राता: पेतुरभ्रे पतन्त:
कारुण्यार्द्रं त्वन्मनस्तेन जातम् ॥४॥

ghOre tasmin suurajaaniiravaase
tiire vR^ikshaa vikshataaH kshvelavegaat |
pakshivraataaH peturabhre patantaH
kaaruNyaardraM tvanmanastena jaatam ||4

கோ⁴ரே தஸ்மின்ஸூரஜானீரவாஸே
தீரே வ்ருக்ஷா விக்ஷதா꞉ க்ஷ்வேலவேகா³த் |
பக்ஷிவ்ராதா꞉ பேதுரப்⁴ரே பதந்த꞉
காருண்யார்த்³ரம் த்வன்மனஸ்தேன ஜாதம் || 54-4 ||

காளிங்கனின்  தொந்தரவு தாங்கமுடியவில்லை.  அவனது கொடிய விஷத்தால், கரையில் இருந்த மரங்கள்  செடிகொடிகள் எல்லாம் பட்டுப்போயின. மேலே  அந்த விஷநீர்  காற்றை சுவாசித்த பறவைகள் செத்து விழுந்தன.  கிருஷ்ணா  நீ பிருந்தாவனத்தில் இருந்தபோது இந்த விஷயம் உன் காதில் விழுந்து  நீ  அந்த உயிர்களுக்காக கருணை கொண்டாய்.  

काले तस्मिन्नेकदा सीरपाणिं
मुक्त्वा याते यामुनं काननान्तम् ।
त्वय्युद्दामग्रीष्मभीष्मोष्मतप्ता
गोगोपाला व्यापिबन् क्ष्वेलतोयम् ॥५॥

kaale tasminnekadaa siirapaaNiM
muktvaayaate yaamunaM kaananaantam |
tvayyuddaama griiShma bhiiShmOShmataptaa
gO gOpaalaa vyaapiban kshvelatOyam || 5

காலே தஸ்மின்னேகதா³ ஸீரபாணிம்
முக்த்வா யாதே யாமுனம் கானநாந்தம் |
த்வய்யுத்³தா³மக்³ரீஷ்மபீ⁴ஷ்மோஷ்மதப்தா
கோ³கோ³பாலா வ்யாபிப³ன் க்ஷ்வேலதோயம் || 54-5 ||

இப்படிப்பட்ட சமயத்தில் தான் வாதபுரீஸ்வரா, நீ ஒருநாள் கிருஷ்ணன் எனும் கோபனாக  பசுக்களை மேய்த்துக்கொண்டு  பலராமனுடனும் நண்பர்களோடும்   காட்டின் அடர்ந்த பகுதிகளில் திறிந்தாய். வெயில் சுட்டெரித்தது.  கன்றுக்குட்டிகள், பசுக்கள்  நண்பர்கள் எல்லோருக்குமே  தாகம்.   குடிக்க நீர் தேடினார்கள்.  காளிந்தி நதி நீரை வயிறு முட்ட குடித்துவிட்டார்கள். 

नश्यज्जीवान् विच्युतान् क्ष्मातले तान्
विश्वान् पश्यन्नच्युत त्वं दयार्द्र: ।
प्राप्योपान्तं जीवयामासिथ द्राक्
पीयूषाम्भोवर्षिभि: श्रीकटक्षै: ॥६॥

nashyajjiivaan vichyutaan kshmaatale taan
vishvaan pashyannachyuta tvaM dayaardraH |
praapyOpaantaM jiivayaamaasitha draak
piiyuuShaambhO varShibhiH shriikaTaakshaiH || 6

நஶ்யஜ்ஜீவான் விச்யுதான் க்ஷ்மாதலே தான்
விஶ்வான் பஶ்யன்னச்யுத த்வம் த³யார்த்³ர꞉ |
ப்ராப்யோபாந்தம் ஜீவயாமாஸித² த்³ராக்
பீயூஷாம்போ⁴வர்ஷிபி⁴꞉ ஶ்ரீகடாக்ஷை꞉ || 54-6 ||

ஆஹா  இது என்ன விபரீதம்,  நண்பர்கள், பசுக்கள் கன்றுகள் எல்லாமே ஒன்று விடாமல் கரையில் இறந்து விழுந்து கிடக்க  என்ன ஆபத்து  நேர்ந்தது இங்கு?  அச்சுதா, இரக்கம் நிறைந்த உன்  மனம் கலங்கி நின்றாய் நீ.   உன் கருணைப்பார்வையை அவர்கள்மேல் செலுத்திய அடுத்த கணமே  அனைத்தும், அனைவரும் உயிர் பெற்ற அதிசயம் நிகழ்ந்தது.

किं किं जातो हर्षवर्षातिरेक:
सर्वाङ्गेष्वित्युत्थिता गोपसङ्घा: ।
दृष्ट्वाऽग्रे त्वां त्वत्कृतं तद्विदन्त-
स्त्वामालिङ्गन् दृष्टनानाप्रभावा: ॥७॥

kiM kiM jaatO harShavarShaatirekaH
sarvaangeShvityutthitaa gOpasanghaaH |
dR^iShTvaagre tvaaM tvatkR^itaM tadvidantaH
tvaamaalingan dR^iShTanaanaa prabhaavaaH || 7

கிம் கிம் ஜாதோ ஹர்ஷவர்ஷாதிரேக꞉
ஸர்வாங்கே³ஷ்வித்யுத்தி²தா கோ³பஸங்கா⁴꞉ |
த்³ருஷ்ட்வா(அ)க்³ரே த்வாம் த்வத்க்ருதம் தத்³வித³ந்த-
ஸ்த்வாமாலிங்க³ன் த்³ருஷ்டனானாப்ரபா⁴வா꞉ || 54-7 ||

 புத்துயிர்   பெற்ற  கோபர்கள், பசுக்கள் கன்றுகள் எல்லாமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.  என்ன நடந்தது நமக்கு ?  எப்படி நமது மனதில் இத்தனை சந்தோஷம்.?நமது தேஹமே  ஆனந்தத்தில் பற க்கிறதே!  உன் எதிரே  எழுந்து நின்றார்கள். நீர் குடித்து மயங்கி கண் இருந்து விஷத்தால் மாண்டது அரைகுறையாக நினைவுக்கு வந்தது. இதற்கு முன் நீ நிகழ்த்திய  அதிசயங்களும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் நின்றது.   இப்போது அவர்கள் அனைவரும் பசுக்களோடு உயிர்பிழைத்தது உன்னால் தான் என்பது அறிந்தார்கள்.  உன்னை  அன்போடு பாசத்தோடு, நன்றியோடு இறுகக்கட்டி அணைத்தார்கள்.

गावश्चैवं लब्धजीवा: क्षणेन
स्फीतानन्दास्त्वां च दृष्ट्वा पुरस्तात् ।
द्रागावव्रु: सर्वतो हर्षबाष्पं
व्यामुञ्चन्त्यो मन्दमुद्यन्निनादा: ॥८॥

gaavashchaivaM labdhajiivaaH kshaNena
sphiitaanandaastvaaM cha dR^iShTvaa purastaat |
draagaavavruH sarvatO harShabaaShpaM
vyaamu~nchantyO mandamudyanninaadaaH || 8

கா³வஶ்சைவம் லப்³த⁴ஜீவா꞉ க்ஷணேன
ஸ்பீ²தானந்தா³ஸ்த்வாம் ச த்³ருஷ்ட்வா புரஸ்தாத் |
த்³ராகா³வவ்ரு꞉ ஸர்வதோ ஹர்ஷபா³ஷ்பம்
வ்யாமுஞ்சந்த்யோ மந்த³முத்³யன்னினாதா³꞉ || 54-8 ||

வாய் பேசாத பசுக்களுக்கும் நன்றி உணர்ச்சி உண்டே.  அவற்றின் கண்களில்  நண்றிக கண்ணீர் பெருகியது. உன்னிடம் அருகே வந்து முகர்ந்தன, நக்கின,  மெல்லிதாக  முனகின .உன்னைச் சுற்றி சுற்றி பிரதக்ஷணம் செய்தன.  ''அம்மா''  என்ற அவற்றின்  குரலில்  நீ தான்  இந்த உலகத்துக்கே  அம்மா என்பது  ரொம்ப ரொம்ப  அர்த்தபாவத்தோடு ஒலித்தது. 

रोमाञ्चोऽयं सर्वतो न: शरीरे
भूयस्यन्त: काचिदानन्दमूर्छा ।
आश्चर्योऽयं क्ष्वेलवेगो मुकुन्दे-
त्युक्तो गोपैर्नन्दितो वन्दितोऽभू: ॥९॥

rOmaa~nchO(a)yaM sarvatO naH shariire
bhuuyasyantaH kaachidaanandamuurchChaa |
aashcharyO(a)yaM kshvelavegO mukundetyuktO
gOpaiH nanditO vanditO(a)bhuuH || 9

ரோமாஞ்சோ(அ)யம் ஸர்வதோ ந꞉ ஶரீரே
பூ⁴யஸ்யந்த꞉ காசிதா³னந்த³மூர்சா² |
ஆஶ்சர்யோ(அ)யம் க்ஷ்வேலவேகோ³ முகுந்தே³-
த்யுக்தோ கோ³பைர்னந்தி³தோ வந்தி³தோ(அ)பூ⁴꞉ || 54-9 ||

உன்  சக கோப தோழர்கள் கிருஷ்ணா, உன்னை ஆலிங்கனம் செய்து முத்தமிட்டார்கள். மனமார நண்றியோடு வணங்கினார்கள். ''முகுந்தா,  நீ  என்ன மாயம் செய்தாயோ? எங்கள்  உடலில் எதை  பாய்ச்சினாயோ, அந்த ''விஷத்தின்'' சக்தி எங்களை புளகாங்கிதம் கொள்ள செய்கிறதப்பா. உடலெங்கும் மயிர்க்கூச்செறிகிறது. ஆனந்தம்  பீரிட்டு வருகிறது''.

एवं भक्तान् मुक्तजीवानपि त्वं
मुग्धापाङ्गैरस्तरोगांस्तनोषि ।
तादृग्भूतस्फीतकारुण्यभूमा
रोगात् पाया वायुगेहाधिवास ॥१०॥

evaM bhaktaanmuktajiivaanapi tvaM
mugdhaapaangaiH astarOgaamstanOShi |
taadR^igbhuuta sphiita kaaruNya bhuumaa
rOgaatpaayaa vaayugehaadhinaatha ||10

ஏவம் ப⁴க்தான்முக்தஜீவானபி த்வம்
முக்³தா⁴பாங்கைரஸ்தரோகா³ம்ஸ்தனோஷி |
தாத்³ருக்³பூ⁴தஸ்பீ²தகாருண்யபூ⁴மா
ரோகா³த்பாயா வாயுகே³ஹாதி⁴னாத² || 54-10

எண்டே குருவாயூரப்பா,  உன் பக்தர்கள்  மரித்தாலும் , உன் கடைக்கண் பார்வையால் புத்துயிர் தந்து  அவர்களை உயிர்ப்பிக்கிறவன். இவ்வளவு கருணை கொண்ட தெய்வத்தை எங்கே   காணமுடியும்? என் நோயையும் அவ்வாறே போக்கி ரக்ஷிப்பாய்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...