Friday, September 24, 2021

PESUM DHEIVAM

 பேசும் தெய்வம்-   நங்கநல்லூர்   J K SIVAN


80. லோகோபகாரி  மஹா பெரியவா.

இந்துக்களாகிய நமது வாழ்வில்  அக்னி எனும் தீ  ஒரு விசேஷ பங்கு ஏற்கிறது.  பிறந்தது முதல் இறந்தது வரை அக்னிக்கு நமது வாழ்வில் முக்கிய பங்கு உண்டு.  பிறக்கும்போது  கணபதி ஹோமம்,  நாமகரணம், ஜாதகரணம், நவகிரஹ ஹோமம், ஆயுஷ் ஹோமம்  எல்லாமே அக்னியோடு தான்.  உபநயனத்தின் போது,  ஒவ்வொரு பிறந்தநாளிலும்  வீடுகளில் அடிக்கடி  ஒரு  கணபதி ஹோமம்,   நவகிரஹ ஹோமம், மிருத்யுஞ்ஜய ஹோமம் பண்ணுகிறவர்கள் உண்டு.  சில வீடுகளில்  சுதர்ஸன  ஹோமம் பண்ண வசதியும் இருக்கலாம்.  சுபகாரியங்களிலும்   கோவில்களில் வழிபாட்டுக்கும் ஹோமம் இல்லாமல் இல்லை.   விவாஹ காலத்தில்  அக்கினியை சாக்ஷியாக வைத்துக் கொண்டு ஹோமம். வீட்டில் ஔபாசனம் ஆரம்பித்துக்கொண்டு ஆயுள்பரியந்தம்  நித்ய ஹோமம் பண்ணுகிற  அக்னி ஹோத்ரிகளும் உண்டு. 
 வருஷத்தில் ஆறு கர்மாக்கள் ஔபாசனாக்கினியால் பண்ண வேண்டும்.

ஒரு பிள்ளை பிறந்தபின் மயிர் நரைப்பதற்கு முன் அக்னிஹோத்ரம் செய்யவேண்டும். பிள்ளை பிறக்காவிட்டால் அக்னிஹோத்ரம்  இல்லை.

ஸந்யாசிக்கு சாதுர்மாஸ்யம் என்று ஒன்று உண்டு. அது ஒரே இடத்திலிருந்து பண்ண வேண்டியது. கிருஹஸ்தனுக்கு அது ஒரு யாகம். அக்கினியாதனம், அக்னிஹாத்திரம், தரிசபூர்ணமாஸம், ஆக்ரஹாயணி, சாதுர்மாஸ்யம், பசுபந்தம், சௌத்ராமணி என்னும் ஏழும் ஹவிர் யக்ஞங்கள்.

ஒவ்வொருவரும் 21 வகை யஞங்களை   செய்துவரவேண்டும். இவை பாக யஜ்ஞ, ஹவிர் யஜ்ஞ, சோம யஜ்ஞ என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பாக யஜ்ஞம் ஏழிலும், முதல் ஐந்து ஹவிர் யஞங்களும் யஞங்களிலும் உயிர்ப்பலி கிடையாது. வாஜபேய யஜ்ஞம் முதல்தான் உயிர்ப்பலி உண்டு. பிராமணர்கள் செய்யக்கூடிய பெரிய யஞமான வாஜபேய யஞத்தில் 23 பிராணிகளும், க்ஷத்ரியர்கள் செய்யும் மிகப்பெரிய யாகமான அஸ்வமேதத்தில் நூறு பிராணிகளும்  பழைய காலத்தில்  பலியிடப்பட்டன.   அப்படி யாகம் செய்தவர்கள் பெயரோடு வாஜ்பேயி என்ற பட்டம் ஒட்டிக்கொண்டது. நமது 10வது பிரதமர்  அடல் பிஹாரி வாஜ்பாய் இப்படி யாகம் செய்யவில்லை. ஆனால் அவர் முன்னோர்கள் பெயரோடு அது தொடர்ந்து வந்தது. அப்படி தான்  திரிவேதி, சதுர்வேதி  என்ற பெயர்களும்.  வேதம் என்றாலே என்ன என்று தெரியாதவர்களுக்கும் கூட அந்த குடும்ப பெயர் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதர்வ வேதம் யாகங்களை, அமைதிக்கான சாந்திகம், பலத்துக்கான பௌஷ்திகம், எதிரிகளை நாசம் செய்வதற்காண ஆபிசாரிகம் என மூன்று வகையாகப் பிரித்துள்ளது.

இராமபிரானைத் தோற்கடிக்க இந்திரஜித், நிகும்பலை யாகம் (ஆபிசார வகை) செய்ய முயன்றான்.
‘’காமதேனு போன்று யாகங்கள், மனிதனுக்கு விரும்புவதைக் கொடுப்பவை என்றும் மனிதனைப் படைத்தபோதே பிரம்மா அவர்களுக்கு யாகங்களை அளித்ததையும் பகவத் கீதை ஸ்லோகம்  சொல்கிறது.  

யாகங்கள் செய்வதன் மூன்று நோக்கங்கள்  1. எல்லா உயிரினங்களும் நலமுடன் வாழப் பிரார்த்திப்பது 2.இறந்தபின்னர் மேலுலகத்தில் சுகமாக வாழ 3. எல்லாவற்றையும் விட மேலாக, பிரதிபலன் எதிர்பார்க்காமல், உலக நலனுக்காக இதைச் செய்வது நமது கடமை என்று எண்ணிச் செய்வது.  இது தான் இப்போது கூட  மழைவேண்டி நாம் செய்யும் லோகக்ஷேம யாகங்கள் வகைப்பட்டது. 
யஜ்ஞங்கள் மூன்று தினுஸு, யஜ்ஞம் என்பது யாக.  வேதத்தில் ஏறக்குறைய 400 வகை யாகங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. 
ஒவ்வொரு பிராமணனும் செய்யவேண்டிய யஞங்கள் 21. அவைகளில் பாக யஜ்ஞங்கள் ஏழு.  பாக்கி உள்ளவை 14. யாகங்களைப் பற்றிய விஷயங்கள் வேதங்களில் நிறைய சொல்லப்பட்டிருக்கின்றன.
ஸோம யாகங்கள் ஏழு. அக்னிஷ்டோமம் முதல் யாகம். அதைச் செய்தவர்கள் ஸோமயாஜி. கடைசியில் இருப்பது வாஜபேயம். அதைச் செய்தவர்கள் வாஜபேயர்கள். வாஜபேயம் பண்ணினவர்களுக்கு அவப்ருத ஸ்நான காலத்தில் அரசர்கள் சுவேதச் சத்திரம் (வெண்குடை) பிடிக்க வேண்டும். திருவாங்கூர், மைசூர் இந்த ராஜ்யங்களில் அவர்களுக்கு சுவேதச் சத்திரம் கொடுக்கிறர்கள்.

ஸோம யாகம் பண்ணும்பொழுது ஸோமலதைச் சாற்றைப் பிழிந்து ஸோமபானம் செய்வார்கள். ஸோமலதையும் கிருஷ்ணாஜினமும்( மான் தோல்) இப்பொழுது மலையாளத்தில்தான் கிடைக்கின்றன. .  மற்ற இடங்களில் இல்லை. நம்பூதிரிகளில் பத்துக் குடும்பத்தில் ஒருவராவது ஸோம யாகம் பண்ணுகிறர்ர்கள். யஜ்ஞம், தானம், தபஸ், இவைகளைச் செய்வதினால் சித்த சுத்தி உண்டாகிறது,   ஜோதிஷ்டோமம் ஜன்மாவில் ஒருதடவையாவது பண்ணவேண்டும்.
 சோமயாகம் செய்பவர்களை  சோமயாஜி என்று சொல்வதுண்டு

பரமாத்மாவை அறியப் பிரயத்தனப் படுகிறவர்கள் யஜ்ஞம், உபவாசம் முதலியவைகள் எல்லாவற்றையும் பரமேசுவரப் ப்ரீதியாகப் பண்ணவேண்டும்ம். பூர்வ ஜன்மத்தில் யாகங்கள் பண்ணினவன் இந்த ஜன்மத்தில் விவேகத்தைப் பெறுகிறான். 

 திருநெல்வேலி,  அரியநாயகிபுரம் ஆர்.அனந்தகிருஷ்ண சாஸ்திரி 1936 ல் எழுதிய மகாமேரு யாத்திரையில் ஒரு இரவு முதல் நூறு இரவு வரை நடத்தப்படும் (சதராத்ர்க் க்ரது) பற்றி சிரௌத சூத்திரங்களால் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்.

நைமிசாரண்யம் காட்டில் நடந்த ரிஷிகள் கூட்டத்தில்  12  வருஷம் தொடர்ந்து நடத்தப்பட்ட யாகங்கள் பற்றி  புராணங்கள் சொல்கிறது.   ராஜாக்கள் நிகழ்த்திய  அஸ்வமேத யாகம், ராஜசூய யாகங்கள் பெரிய சமாச்சாரங்கள். . இதில் நூறு வகை மிருகங்கள் பலியிடப்படும். ராஜாவின்யாகக் குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ அவை எல்லாம் ராஜவுக்குச் சொந்தம். அதை மறுப்பவர்கள் குதிரையைப் பிடித்து கட்டிப்போடலாம். பின்னர் பெரிய யுத்தம் நேரிடும். 200 வகையான பிராணிகள், பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் முதலியன தீயில் இடப்படும். இறுதியில் நாடு நாடாகச் சென்று திரும்பிய குதிரையும் பலியிடப்படும். குழந்தை இல்லாததால் தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் பண்ணி தான்  ராமலக்ஷ்மணர்கள் நான்கு சகோதரர்கள் பிறந்தார்கள். 

1932ல்  மஹா பெரியவா வாஜபேயம் ஸ்வாமிகள் என்பவருக்கு  வெண் பட்டுக் குடை பரிசளித்தார். இப்போதெல்லாம் காலம் மாறிவிட்டது. யாக யஞங்கள் செய்வது குறைந்துவிட்டது.  மடத்தில் யாகங்கள் செய்யும்போது பண்டிதர்களை, வித்வான்களை  கௌரவிப்பது வழக்கம். யோகக்ஷேமத்துக்காக,  மக்கள் சுபிக்ஷத்துக்காக  யாக யஞங்கள்  பண்ணவேண்டியது அவசியம். யாக யஞங்கள் பண்ணுபவர்களை  அன்போடு அழைத்து கௌரவிப்பார். மஹா பெரியவாளுக்கு பிடித்த ஒருவர்  தண்டாங்கரை  அப்பாதுரை தீக்ஷிதர்.  25 வருஷகங்களுக்கு மேலாக  யாகங்கள் விடாமல் நடத்தியவர்.  வாஜபேய யாகங்கள் போல  பெரிய யாகங்களை சிறப்பாக நிகழ்த்தியவர். அவருக்கும்  மைலாப்பூரில்  மஹா பெரியவா  வெண் பட்டுக்குடை  பரிசளித்திருக்கிறார்.  அந்த காலத்தில் ராஜாக்கள்  யாகம் நிகழ்த்தும்   மஹரிஷிகளுக்கு  வெண்கொற்றக்குடைகள் பரிசளித்தார்கள்.  மகாராஜாவுக்கு  சமம் அந்த மஹரிஷிகள். ஏன், இன்னும் உசத்தி கூட. 

மஹா பெரியவா  மற்றும்  இருவர்களுக்கும்  இதே போல் வெண்பட்டுக் குடைகள் அளித்தார். அவர்கள் சேங்காலிபுரம் நாராயண வாஜ்பேயர் , அவர் சகோதரர்  வெங்கடேச வாஜபேயர். 

1933ம் வருஷம்  மாட்டு பொங்கல் தினத்தன்று  கோபூஜை நடந்தது.  ஸ்ரீ  A.K. ரங்கநாத ஐயர், ஒரு ஸ்லேட் தொழிற்சாலையை  சென்னை  அருகே   திருமங்கலத்தில் நடத்திவந்தார்.  தினமும் மடத்தில்  விடிகாலை சூரியோதயம்  முன்பு கோ பூஜை நடப்பது வழக்கம்.  மாட்டு பொங்கல் அன்று சாயந்திரம் ஒரு விசேஷ  கோ பூஜை. அதில்  பசுக்களோடு  எருமைகளும்  உண்டு.    மாட்டு பொங்கலன்று ஹரிஜன தலைவர்  ராவ் பகதூர்   M.C   ராஜா திருமங்கலத்துக்கு  குடும்பத்தோடு வந்து மஹா பெரியவாளை தரிசனம் செய்தார்.  மஹா பெரியவா அவரை அன்போடு வரவேற்றார்.  ஹரிஜன நலனுக்கு  என்ன ஏற்பாடுகள் திட்டங்கள் செய்யவேண்டும் என்பதை ஆர்வத்தோடு விளக்கினார்.  மடத்தின் உதவிகள்  பல வருஷங்களாக  அவர்கள் நலவாழ்வுக்கு  செய்யப்படுவதை எடுத்துரைத்தார். பொதுவாழ்வில் நேர்மை, தியாக சிந்தனை, அன்பு இருக்கவேண்டியதின் அவசியத்தை ஸ்ரீ ராஜாவுக்கு அறிவுரை கூறியதில்  ராஜாவுக்கு. மஹாபெரியவாளிடமிருந்து பிரசாதங்கள் பெற்று விடைபெறும்போது  ராஜாவின் மனைவி ஒரு ஆட்சியரமான செயலை செய்தார்.  மஹா பெரியவா நின்றிருந்த இடத்தில் இருந்து  சிறிது மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக்  கொண்டு தனது சேலையின் முந்தானையில் முடிந்து வைத்துக் கொண்டார். அவர் கண்ணில் ஆனந்தக்  கண்ணீரை  சேலைத் தலைப்பால்  துடைத்துக் கொண்டார்.   அங்கிருந்தவர்களுக்கும்  அந்த  அம்மாளின் கணவர்  ராஜாவுக்கும் இது ஆச்சர்யம், 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...