Monday, September 13, 2021

sriman naarayaneeyam



 ஸ்ரீமந்  நாராயணீயம்  - நங்கநல்லூர்  J K SIVAN --

52வது தசகம்.

52. எல்லாம் உன் மாயையே.

திரிமூர்த்திகள் என்று ஹிந்துக்கள் வணங்குவது சிருஷ்டி, ஸ்திதி, லயம்  எனும் படைத்தல், காத்தல் , அழித்தல் ஆகிய மூன்று தொழில்களை விடாமல் செய்து வரும்  ப்ரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூவர்  மட்டுமே.  இதில் ப்ரம்மா  அப்பப்போது கொஞ்சம்  தவறுகள் செயது தண்டிக்கப்படுபவர்.   அதனால் அவருக்கு  என்று  தனியாக ஒரு கோவில் கூட  ஹிந்துக்கள்  தொழுவதற்கு இல்லை. சிவன்  கோவில்களில் கோஷ்டத்தில்  கோவில் ப்ராஹாரத்தில்  ஒரு குட்டி சந்நிதியோடு மட்டும் பிரம்மாவை காண்கிறோம்.   இந்த ப்ரம்மா  பிருந்தாவனத்தில் வளரும் கண்ணனின்  வளரும் புகழை, பெருமையைப்  பற்றி கேள்விப்பட்டு,  யார் இந்த  யாதவ சிறுவன் கிருஷ்ணன்,  இவ்வளவு வல்லமை கொண்டவன். அவனது சக்தியை  சோதிப்போம் என்று தீர்மானித்தார். ஒருநாள்  கிருஷ்ணன் மற்ற  யாதவ சிறுவர்களோடு பசுக்கள், கன்றுகளை மேய்க்க பிருந்தாவனம் சென்றபோது பசுக்கள், கன்றுக்குட்டிகள், யாதவ சிறுவர்கள் அனைவரையும்,  கிருஷ்ணனைத்   தவிர, கடத்தி விண்ணுலகத்தில் ஒளித்து  வைத்துவிட்டார்.  அவர்களை மீட்க ஒரு வருஷகாலம்  ஓடிவிட்டது.  பிருந்தாவனத்தில்  அப்போது நடந்ததைத் தான் இந்த  தசகத்தில் நாராயண பட்டத்ரி குருவாயூரில் கிருஷ்ணன் எதிரே அமர்ந்து அவனுக்கு பாடிக்காட்டி  பழைய ஞாபகத்தை ஆனந்தமாக கிருஷ்ணன் ரசிக்கச்  செய்கிறார். 

अन्यावतारनिकरेष्वनिरीक्षितं ते
भूमातिरेकमभिवीक्ष्य तदाघमोक्षे ।
ब्रह्मा परीक्षितुमना: स परोक्षभावं
निन्येऽथ वत्सकगणान् प्रवितत्य मायाम् ॥१॥

anyaavataaranikareShvaniriikshitaM te
bhuumaatirekamabhiviikshya tadaaghamOkshe |
brahmaa pariikshitumanaaH sa parOkshabhaavaM
ninye(a)tha vatsakagaNaan pravitatya maayaam || 1

அன்யாவதாரனிகரேஷ்வனிரீக்ஷிதம் தே
பூ⁴மாதிரேகமபி⁴வீக்ஷ்ய ததா³க⁴மோக்ஷே |
ப்³ரஹ்மா பரீக்ஷிதுமனா꞉ ஸ பரோக்ஷபா⁴வம்
நின்யே(அ)த² வத்ஸகக³ணான்ப்ரவிதத்ய மாயாம் || 52-1 ||

அகாசுரன்  மாண்டான், அவன் கடைசி நேரத்தில் தவறை உணர்ந்து கிருஷ்ணனை சரணடைகிறான்  அவன் கிருஷ்ணனால்  முக்தி அடைகிறான். கிருஷ்ணா,  உனது இந்த  கிருஷ்ணாவதாரத்தில் தான் நீ  உனது பராக்கிரமத்தை, சக்தியை,  அதிகமாக வெளிப்படுத்தியிருக்கிறாய்.  ப்ரம்ம தேவன் இதைக்  கண்டு அதிசயித்தார். உன்  சக்தியை பரிசோதிக்க வேண்டும் என்று மனதில்  எண்ணம்  கொண்டார். பிரம்மனுக்கும் மாயாசக்தி ஞானம் உண்டே. அதை பிரயோகித்து   ஒருநாள்  பிருந்தாவனத்தில், உன் நண்பர்கள், எல்லா பசுக்கள், கன்றுகள் என்று ஒன்று விடாமல் அனைத்தையும் மறைந்து போகச் செய்துவிட்டார்.   அனைவரையும், அனைத்தையும் சத்யலோகத்திற்குக்  கொண்டு சென்று  ஒளித்து  வைத்துவிட்டார்.  நீ என்ன செய்கிறாய் பார்ப்போம்?

वत्सानवीक्ष्य विवशे पशुपोत्करे ता-
नानेतुकाम इव धातृमतानुवर्ती ।
त्वं सामिभुक्तकबलो गतवांस्तदानीं
भुक्तांस्तिरोऽधित सरोजभव: कुमारान् ॥२॥

vatsaanaviikshya vivashe pashupOtkaretaan
aanetukaama iva dhaatR^imataanuvartii |
tvaM saamibhukta kabalO gatavaamstadaaniiM
bhuktaamstirOdhita sarOjabhavaH kumaaraan || 2

வத்ஸானவீக்ஷ்ய விவஶே பஶுபோத்கரே தா-
நானேதுகாம இவ தா⁴த்ருமதானுவர்தீ |
த்வம் ஸாமிபு⁴க்தகப³லோ க³தவாம்ஸ்ததா³னீம்
பு⁴க்தாம்ஸ்திரோதி⁴த ஸரோஜப⁴வ꞉ குமாரான் || 52-2 ||

யாதவ கோப சிறுவர்களையோ,   பசுக்களையோ,  கன்றுகளையோ,  எங்குமே எதுவுமே   திடீரென்று காணோமே, என்ன மாயமிது?  வேறு யாரோ ஒரு ராக்ஷஸன் வந்து அவன் கைங்கர்யமா இது? என்று கிலேசத்தை  கிருஷ்ணா  நீ உணர்ந்தாய். யோசித்தாய்.  

वत्सायितस्तदनु गोपगणायितस्त्वं
शिक्यादिभाण्डमुरलीगवलादिरूप: ।
प्राग्वद्विहृत्य विपिनेषु चिराय सायं
त्वं माययाऽथ बहुधा व्रजमाययाथ ॥३॥

vatsaayita stadanu gOpagaNaayitastvaM
shikyaadi bhaaNDa muralii gavalaadiruupaH |
praagvadvihR^itya vipineShu chiraaya saayaM
tvaM maayayaa(a)tha bahudhaa vrajamaayayaatha || 3

வத்ஸாயிதஸ்தத³னு கோ³பக³ணாயிதஸ்த்வம்
ஶிக்யாதி³பா⁴ண்ட³முரலீக³வலாதி³ரூப꞉ |
ப்ராக்³வத்³விஹ்ருத்ய விபினேஷு சிராய ஸாயம்
த்வம் மாயயாத² ப³ஹுதா⁴ வ்ரஜமாயயாத² || 52-3 ||

எனகெல்லாம் தேடிப்பார்த்தும் உனக்கு  எப்படி  எங்கே  உன் தோழர்கள், எல்லா பசுக்கள் கன்றுக ளோடு மறைந்தன என்று ஆச்சர்யமும் திகைப்பும்  இருந்தது.  ஆனால்  ஒன்று புரிந்தது.  இதற்கு காரணம் யாராவது ஒரு ராக்ஷசனாக நிச்சயம்  இருக்க முடியாது.   ராக்ஷஸனாக இருந்தால் அவன் உன்னையல்லாவோ முதலில் தேடுவான்? பசுக்களோ  கன்றுகளோ, உன் தோழர்களோ ஒருவருமே பயத்தில் குரல் எழுப்பவில்லை. ஆபத்துக்கான  அறிகுறி எங்குமே  தென்படவே இல்லையே?  இது வேறு யாரோ சக்தி வாய்ந்த ஒருவரின் வேலை. அதை கண்டுபிடித்து எல்லோரையும் மீட்கும் வரை  கிருஷ்ணா  நீயே  உன் தோழர்களாகவும்  உருவெடுத்து, நீயே  அனைத்து பசுக்களாகவும் கன்றுகளாகவும் உருவெடுத்து அவரவர் வீட்டுக்கு  சென்றாய்.  உன் வீட்டிலும் இருந்தாய்.  வருஷம் ஒன்று ஓடிவிட்டதே.  உனது 
இந்த அவதாரம் உன் பக்தர்கள் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது.  

त्वामेव शिक्यगवलादिमयं दधानो
भूयस्त्वमेव पशुवत्सकबालरूप: ।
गोरूपिणीभिरपि गोपवधूमयीभि-
रासादितोऽसि जननीभिरतिप्रहर्षात् ॥४॥

tvaameva shikya gavalaadimayaM dadhaanO
bhuuyastvameva pashuvatsaka baalaruupaH |
gOruupiNiibhirapi gOpavadhuumayiibhiH
aasaaditO(a)si jananiibhiratipraharShaat ||4

த்வாமேவ ஶிக்யக³வலாதி³மயம் த³தா⁴னோ
பூ⁴யஸ்த்வமேவ பஶுவத்ஸகபா³லரூப꞉ |
கோ³ரூபிணீபி⁴ரபி கோ³பவதூ⁴மயீபி⁴-
ராஸாதி³தோ(அ)ஸி ஜனநீபி⁴ரதிப்ரஹர்ஷாத் || 52-4 ||

பிருந்தாவனத்தில்  யாருக்குமே   நடந்தது  எதுவும் தெரியாது. அவரவர் வீட்டில் கோபர்கள் கோபியர்கள் தமது பிள்ளைகள், பசுக்கள், கன்றுகள், வழக்கம் போல்  தினமும்  வெளியே சென்று  மாலையில் வீடு திரும்புவதை தான் அறிந்தார்கள்.  எல்லாம்  நீ தான் என்று உன் ஒருவனுக்கு தான் தெரியும்.  வழக்கம்போல்  கூத்தும் பாட்டும், கும்மாளமும், வீட்டில் சந்தோஷமும் எங்கும் நிலவியது.
  
जीवं हि कञ्चिदभिमानवशात्स्वकीयं
मत्वा तनूज इति रागभरं वहन्त्य: ।
आत्मानमेव तु भवन्तमवाप्य सूनुं
प्रीतिं ययुर्न कियतीं वनिताश्च गाव: ॥५॥

jiivaM hi ka~nchidabhimaana vashaatsvakiiyaM
matvaa tanuuja iti raagabharaM vahantyaH |
aatmaanameva tu bhavantamavaapya suunuM
priitiM yayurnakiyatiiM vanitaashcha gaavaH || 5

ஜீவம் ஹி கஞ்சித³பி⁴மானவஶாத்ஸ்வகீயம்
மத்வா தனூஜ இதி ராக³ப⁴ரம் வஹந்த்ய꞉ |
ஆத்மானமேவ து ப⁴வந்தமவாப்ய ஸூனும்
ப்ரீதிம் யயுர்ன கியதீம் வனிதாஶ்ச கா³வ꞉ || 52-5 ||

அதற்கு முன்  எல்லோரும் தத்தம்  சுயநலத்தால்  தமது குழந்தைகள், பசுக்கள், கன்றுகள் என்ற வித்த்யாசத்தோடு வாழ்ந்திருந்தனர். நீயே  எல்லாமாக  மாறியதும்  அவர்கள் மனதில் காரணமில்லாமல் அன்பும், பாசமும் அளவற்ற சந்தோஷமும்  உண்டாயிற்று.  காரணம் தெரியாமல்  அளவற்ற  மகிழ்ச்சியை அனுபவித்தார்கள். 

एवं प्रतिक्षणविजृम्भितहर्षभार-
निश्शेषगोपगणलालितभूरिमूर्तिम् ।
त्वामग्रजोऽपि बुबुधे किल वत्सरान्ते
ब्रह्मात्मनोरपि महान् युवयोर्विशेष: ॥६॥

evaM pratikshaNa vijR^imbhita harShabhaara
niHsheSha gOpagaNa laalita bhuuri muurtim |
tvaamagrajO(a)pi bubudhe kila vatsaraante
brahmaatmanOrapi mahaan yuvayOrvisheShaH || 6

ஏவம் ப்ரதிக்ஷணவிஜ்ரும்பி⁴தஹர்ஷபா⁴ர-
நிஶ்ஶேஷகோ³பக³ணலாலிதபூ⁴ரிமூர்திம் |
த்வாமக்³ரஜோ(அ)பி பு³பு³தே⁴ கில வத்ஸராந்தே
ப்³ரஹ்மாத்மனோரபி மஹான்யுவயோர்விஶேஷ꞉ || 52-6 ||

பலராமனுக்கும் கூட  இந்த ரஹஸ்யம் ஒரு வருஷத்துக்கு பிறகு தான் தெரிந்தது. எல்லோரும், எல்லா பசுக்களும் கன்றுகளும் உன்னையே  தேடுவது ஏன் என்று புரிந்தது.  பலராமனும்  நீயும் ஒருவரே தான் என்றாலும் கிருஷ்ணா  நீ  வித்யாசமானவனாக தான் அறியப்பட்டாய். 

वर्षावधौ नवपुरातनवत्सपालान्
दृष्ट्वा विवेकमसृणे द्रुहिणे विमूढे ।
प्रादीदृश: प्रतिनवान् मकुटाङ्गदादि
भूषांश्चतुर्भुजयुज: सजलाम्बुदाभान् ॥७॥

varShaavadhau nava puraatana vatsa paalaan
dR^iShTvaa vivekamasR^iNe druhiNe vimuuDhe |
praadiidR^ishaH pratinavaan makuTaangadaadi
bhuuShaamshchaturbhuja yujaH sajalaambudaabhaan || 7

வர்ஷாவதௌ⁴ நவபுராதனவத்ஸபாலான்
த்³ருஷ்ட்வா விவேகமஸ்ருணே த்³ருஹிணே விமூடே⁴ |
ப்ராதீ³த்³ருஶ꞉ ப்ரதினவான்மகுடாங்க³தா³தி³
பூ⁴ஷாம்ஶ்சதுர்பு⁴ஜயுஜ꞉ ஸஜலாம்பு³தா³பா⁴ன் || 52-7 ||

ஒரு வருஷம் கழித்து  பிரம்மா  பசுக்களையும், கன்றுகளையும், கோப சிறுவர்களையும்  திரும்ப கொண்டு வந்து பிருந்தாவனத்தில் விட்டு விட்டார்.   நாம்  கடத்திச் சென்ற  அனைவரும், அனைத்தும் எப்படி இங்கு ஏற்கனவே  இருக்கிறது.  வித்தயாசமே தெரியாத  இன்னொரு ஜோடி எப்படி எங்கே இருந்து வந்தது என்று வியந்தார். பிரம்மாவுக்கு  நீ யார் என்று காட்ட  உனது சதுர்புஜங்களோடும் கிரீடம், உன் நீல நிற சரீரத்தோடும்  தரிசனம் கொடுத்தாய்.    அந்த ஒருகணத்தில்  ப்ரம்மா திடுக்கிட்டு,  திகைத்தார்.  ஏனென்றால்  அனைத்து பசுக்கள், கன்றுகள், கோப சிறுவர்கள்  எல்லாமே  மஹா விஷ்ணுவாக  அவருக்கு காட்சி தந்ததே.  அதிசயித்தார். உன் பெருமையை மஹிமையை உணர்ந்தார். வணங்கினார். 

प्रत्येकमेव कमलापरिलालिताङ्गान्
भोगीन्द्रभोगशयनान् नयनाभिरामान् ।
लीलानिमीलितदृश: सनकादियोगि-
व्यासेवितान् कमलभूर्भवतो ददर्श ॥८॥

pratyekameva kamalaa parilaalitaangaan
bhOgiindra bhOgashayanaan nayanaabhiraamaan |
liilaa nimiilitadR^ishaH sanakaadi yOgi
vyaasevitaan kamalabhuurbhavatO dadarsha || 8

ப்ரத்யேகமேவ கமலாபரிலாலிதாங்கா³ன்
போ⁴கீ³ந்த்³ரபோ⁴க³ஶயனான்னயனாபி⁴ராமான் |
லீலானிமீலிதத்³ருஶ꞉ ஸனகாதி³யோகி³-
வ்யாஸேவிதான்கமலபூ⁴ர்ப⁴வதோ த³த³ர்ஶ || 52-8 ||

உன்பரிணாமம் எங்கும்  பசுக்களாக, கன்றுகளாக, யாதவ சிறுவர்களாக  தோன்றியது.  மஹாலக்ஷ்மி தேவி  உன் திருவடிகளை வருடிக் கொண்டிருந்தாள் .   அங்கும் சிலர் காணப்பட்டார்கள்.  எங்கும்  ஆதிசேஷன் பாய்போல் விரிந்து உன்னை ஏந்திக்கொண்டிருந்தான். அங்கும் சில காணப்பட்டன. சில  உன்னோடு  அறைக்கண்  மூடி  யோகநித்ரையில் ஆழ்ந்திருந்தன. சனகர், சனத் குமாரர்ரிஷிகள் உன்னை சிரமேற்கரத்தோடு  வணங்கும்போது   சிலர்  தாங்களும்  அவர்களோடு  சேர்ந்து  உன்னை  வணங்கினார்கள். 

नारायणाकृतिमसंख्यतमां निरीक्ष्य
सर्वत्र सेवकमपि स्वमवेक्ष्य धाता ।
मायानिमग्नहृदयो विमुमोह याव-
देको बभूविथ तदा कबलार्धपाणि: ॥९॥

naaraayaNaakR^itiM asankhyatamaaM niriikshya
sarvatra sevakamapi svamavekshya dhaataa |
maayaa nimagna hR^idayO vimumOha yaavat
ekO babhuuvitha tadaa kabalaardhapaaNiH || 9

நாராயணாக்ருதிமஸங்க்²யதமாம் நிரீக்ஷ்ய
ஸர்வத்ர ஸேவகமபி ஸ்வமவேக்ஷ்ய தா⁴தா |
மாயானிமக்³னஹ்ருத³யோ விமுமோஹ யாவ-
தே³கோ ப³பூ⁴வித² ததா³ கப³லார்த⁴பாணி꞉ || 52-9 ||

ப்ரம்மா சுற்று முற்றும் பார்த்தார்  எங்கும் மஹா விஷ்ணுவாக  நீயே தெரிந்தாய்.  உன்னைச் சூழ்ந்து அவர் கவர்ந்து சென்ற  யாதவ சிறுவர்கள்,  பசுக்கள், கன்றுகள்,  ஏன் பிரம்மாவே  கை  கூப்பி வணங்கி நின்றதும் தெரிந்தது. உன் மாயையில் ப்ரம்மா மதி மயங்கி நின்றார்.  கலங்கினார் . அப்போது நீ மீண்டும் யாதவ சிறுவனாக  புல்லாங்குழல் கொண்ட கிருஷ்ணனாக  ப்ரம்மாவின் முன்பாக தோன்றினாய்.   கையில் ஒரு கவளம் உணவு, அதில் பாதி சாப்பிட்டுக்கொண்டு  இருந்தாய்..

नश्यन्मदे तदनु विश्वपतिं मुहुस्त्वां
नत्वा च नूतवति धातरि धाम याते ।
पोतै: समं प्रमुदितै: प्रविशन् निकेतं
वातालयाधिप विभो परिपाहि रोगात् ॥१०॥

nashyanmade tadanu vishvapatimmuhustvaaM
natvaa cha nuutavati dhaatari dhaama yaate |
pOtaiH samaM pramuditaiH pravishanniketaM
vaataalayaadhipa vibhO paripaahi rOgaat ||10

நஶ்யன்மதே³ தத³னு விஶ்வபதிம் முஹுஸ்த்வாம்
நத்வா ச நூதவதி தா⁴தரி தா⁴ம யாதே |
போதை꞉ ஸமம் ப்ரமுதி³தை꞉ ப்ரவிஶன்னிகேதம்
வாதாலயாதி⁴ப விபோ⁴ பரிபாஹி ரோகா³த் || 52-10 |

எண்டே குருவாயூரப்பா,  ஒன்றும் பேசமாலேயே  இப்படி பிரம்மாவை ஒரு வழிக்கு கொண்டுவந்து விட்டாய். அவரது  அகந்தை ஒழிந்தது.  உன்னைத்  திரும்ப திரும்ப பணிவோடு  நமஸ்கரித்தார்.  மன நிறைவோடு அவர் சத்யலோகத்துக்கு திரும்ப செய்தாய்.  காதும் காதும் வைத்தாற்  போல்   ஒருவருஷம்  பசுக்களோ, யாதவ சிறுவர்களோ, கன்றுக்குட்டிகளோ காணாமல் போனதும், திரும்பி வந்ததும் யாருக்கும் தெரியாமல் காரியத்தை கச்சிதமாய் முடித்து பிரமனின் அகந்தையையும் ஒடுக்க உன் ஒருவனால் மட்டுமே முடிந்தது.     நீ என் வியாதியையும்  நீக்கி என்னையும் ஸம்ரக்ஷிக்கவேண்டும்  கிருஷ்ணா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...