ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN --
43வது தசகம்
43. காற்றாக வந்து மூச்சு காற்று நின்றவன்
கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு ஆட்டக்காரன் அவுட் ஆனபின் இன்னொருவன் உள்ளே இருந்து மட்டையை சுழற்றிக்கொண்டே மைதானத்தில் இறங்குவான். ஒவ்வொருவனும் அசகாய சூரன், முந்தைய ஆட்டக்காரனை விட இவன் அதிக சாமர்த்திய சாலி என்ற எதிர்பார்ப்பை உருவாக்குவான். அது போல் தான் இன்னொரு ராக்ஷஸன் கிருஷ்ணனைக் கொல்ல கோகுலம் பிருந்தாவனம் வந்துவிட்டான். இவன் பெயர் த்ரிணாவர்த்தன். நினைத்த வடிவம் எடுக்கும் சக்தி படைத்தவன்.
त्वामेकदा गुरुमरुत्पुरनाथ वोढुं
गाढाधिरूढगरिमाणमपारयन्ती ।
माता निधाय शयने किमिदं बतेति
ध्यायन्त्यचेष्टत गृहेषु निविष्टशङ्का ॥१॥
tvaamekadaa gurumarutpuranaatha vODhuM
gaaDhaadhiruuDha garimaaNamapaarayantii |
maataa nidhaaya shayane kimidaM bateti
dhyaayantyacheShTata gR^iheShu niviShTashankaa ||1
த்வாமேகதா³ கு³ருமருத்புரனாத² வோடு⁴ம்
கா³டா⁴தி⁴ரூட⁴க³ரிமாணமபாரயந்தீ |
மாதா நிதா⁴ய ஶயனே கிமித³ம் ப³தேதி
த்⁴யாயந்த்யசேஷ்டத க்³ருஹேஷு நிவிஷ்டஶங்கா || 43-1 ||
''ப்ரபோ, குருவாயூரப்பா, ஒருநாள் ஒரு அதிசயம் நடந்ததே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? '' என்று கேட்ட நாராயண பட்டத்ரி மேலே தொடர்கிறார்:

ஒரு நாள் சாயங்காலம் வழக்கம்போல் உன்னோடு வாசலில் விளையாடிக்கொண்டே உன் தாய் யசோதை உன்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொள்ள முயன்றாள். முடியவில்லை.
''என்னடா ஆயிற்று உனக்கு, உன்னை தூக்கவே முடியவில்லையே. எப்படி இவ்வளவு ''கன வான்'' ஆகிவிட்டாய்?'' அவளுக்கு விடை தெரியவில்லை. அதற்குள் வேறே வேலையில் புத்தி போய்விட்டது. உன்னை வாசலில் விளையாட விட்டுவிட்டு உள்ளே போய்விட்டாள்.
तावद्विदूरमुपकर्णितघोरघोष-
व्याजृम्भिपांसुपटलीपरिपूरिताश: ।
वात्यावपुस्स किल दैत्यवरस्तृणाव-
र्ताख्यो जहार जनमानसहारिणं त्वाम् ॥२॥
taavadviduuramupakarNita ghOra ghOSha
vyaajR^imbhi paamsupaTalii paripuuritaashaH |
vaatyaavapuH sa kila daityavarasitraNaavartaakhyae
jahaara janamaanasahaariNaM tvaam || 2
தாவத்³விதூ³ரமுபகர்ணிதகோ⁴ரகோ⁴ஷ-
வ்யாஜ்ரும்பி⁴பாம்ஸுபடலீபரிபூரி
வாத்யாவபு꞉ ஸ கில தை³த்யவரஸ்த்ருணாவ-
ர்தாக்²யோ ஜஹார ஜனமானஸஹாரிணம் த்வாம் || 43-2 ||
''அப்போது தூரத்தில் ஏதோ ஒரு பெரிய சப்தம் கேட்டது. ஆமாம் உன்னைக் கொல்ல அடுத்த வனை கம்ஸன் அனுப்பியிருக்கிறானே, அவன், த்ரிணாவர்த்தன் என்ற பெயர் கொண்ட ராக்ஷஸன். பெரிய சக்தி வாய்ந்த புயல் வடிவத்தில் வந்துவிட்டான். நாம் இப்படி புயல் ரூபத்தில் சென்றால் எல்லா இடத்தையும் நமது சக்திக்குள் கொண்டுவந்து விட முடியும். அந்த கிருஷ்ணன் தப்ப முடியாது'' என்ற எண்ணம் அந்த அசுரனுக்கு. எங்கும் காற்றில் மண்ணும் கல்லும் பறந்தது. சுற்றி சுழன்றது. மரங்கள் தலை அசைத்து விழுந்தன. மாடு கன்றுகள் அலறி ஒதுங்க இடம் தேடின.
பயங்கர சூழல் காற்றாக வந்து உன்னை அப்படியே தூக்கிக் கொண்டு போய் கம்ஸன் எதிரே போய் ''தொப்'' என்று போட உத்தேசம் அவனுக்கு.
उद्दामपांसुतिमिराहतदृष्टिपाते
द्रष्टुं किमप्यकुशले पशुपाललोके ।
हा बालकस्य किमिति त्वदुपान्तमाप्ता
माता भवन्तमविलोक्य भृशं रुरोद ॥३॥
uddaamapaamsu timiraahata dR^iShTipaate
draShTuM kimapyakushale pashupaala lOke |
haa baalakasya kimiti tvadupaantamaaptaa
maataa bhavantamavilOkya bhR^ishaM rurOda ||3
உத்³தா³மபாம்ஸுதிமிராஹதத்³ருஷ்
த்³ரஷ்டும் கிமப்யகுஶலே பஶுபாலலோகே |
ஹா பா³லகஸ்ய கிமிதி த்வது³பாந்தமாப்தா
மாதா ப⁴வந்தமவிலோக்ய ப்⁴ருஶம் ருரோத³ || 43-3 ||
''காற்றில் மண், புழுதி சத்தை, சருகு எல்லாம் நிரம்பி சுழன்று எங்கும் திரையாக கண்ணை மறைத்தது. கோபியர்களுக்கு, என்ன ஆயிற்று திடீரென்று இப்படி மண்ணும் புழுதியும் காற்றில் கலந்து கண்ணை மறைக்கிறதே, நிற்க முடியாமல் தள்ளாடுகிறதே, காற்று தூக்கிக் கொண்டு போய் எங்கோ போடும் போலிருக்கிறதே'' என்று அதிர்ச்சி ஆச்சர்யம். கோபர்களுக்கு எதனால் இந்த காற்று என்று புரியவில்லை. இதற்கு முன்பு வந்தது கிடையாதே . புழுதிப் படலம் கண்ணை மறைத்தது. கொஞ்சம் தெளிவானதும் யசோதை ஓடிவந்தாள். உன்னை அவள் விட்ட இடத்தில் நீ இல்லை கிருஷ்ணா. எங்கே போனாய் இந்த காற்று வெளியில்? அழ ஆரம்பித்தாள். அவள் கூக்குரல் கேட்டு மற்றவர்களும் ஒருவாறு அவள் இருக்குமிடத்தை தேடிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள்.
तावत् स दानववरोऽपि च दीनमूर्ति-
र्भावत्कभारपरिधारणलूनवेग: ।
सङ्कोचमाप तदनु क्षतपांसुघोषे
घोषे व्यतायत भवज्जननीनिनाद: ॥४॥
taavatsa daanavavarO(a)pi cha diinamuurtirbhaavatka-
bhaara paridhaaraNaluuna vegaH |
sankOchamaapa tadanu kshatapaamsughOShe
ghOShe vyataayata bhavajjananii ninaadaH ||4
தாவத்ஸ தா³னவவரோ(அ)பி ச தீ³னமூர்தி-
ர்பா⁴வத்கபா⁴ரபரிதா⁴ரணலூனவேக³꞉ |
ஸங்கோசமாப தத³னு க்ஷதபாம்ஸுகோ⁴ஷே
கோ⁴ஷே வ்யதாயத ப⁴வஜ்ஜனநீனினாத³꞉ || 43-4 ||
த்ரீணாவர்த்தன் புயலின் வேகத்தை குறைத்தான். காரணம். உன்னைத்தூக்கிக்கொண்டு போகவேண்டும் என்ற முயற்சியில் தூக்கியவன் கழுத்தில் நீ உட்கார்ந்து கொண்டாய். உன் எடை, பளு , அவனால் தாங்கமுடியவில்லையே, எப்படி வேகமாக பறப்பான்? களைத்து,கண் இருட்டி, மதி மயங்கி மூச்சு விடமுடியாமல் போயிற்று. கோகுலம் முழுதும் தும்பு, தூசு, புழுதி, மண். கலந்த காற்று. காற்றின் பலத்த சத்தம். உன் தாய் யசோதையின் சோக ஓலம் எங்கும் கேட்டது.
रोदोपकर्णनवशादुपगम्य गेहं
क्रन्दत्सु नन्दमुखगोपकुलेषु दीन: ।
त्वां दानवस्त्वखिलमुक्तिकरं मुमुक्षु-
स्त्वय्यप्रमुञ्चति पपात वियत्प्रदेशात् ॥५॥
rOdOpakarNana vashaadupagamya gehaM
krandatsu nandamukha gOpa kuleShu diinaH |
tvaaM daanavastvakhilamuktikaraM mumukshustvayyapramu~
nchati papaata viyatpradeshaat ||
ரோதோ³பகர்ணனவஶாது³பக³ம்ய கே³ஹம்
க்ரந்த³த்ஸு நந்த³முக²கோ³பகுலேஷு தீ³ன꞉ |
த்வாம் தா³னவஸ்த்வகி²லமுக்திகரம் முமுக்ஷு-
ஸ்த்வய்யப்ரமுஞ்சதி பபாத வியத்ப்ரதே³ஶாத் || 43-5 ||
நந்தகோபன், மற்றும் அநேக கோபர்கள், எல்லா இடங்களிலும் தேடினார்கள். கவலை அதிகமாயிற்று, குழந்தை கிருஷ்ணன் எங்கே காணோம்? அந்த நேரம் த்ரிணா வர்த்தன் , மூச்சு திணறி, உன்னை விட்டால் போதும் என்று தீர்மானித்து பிடியை தளர விட்டான். கோகுலத்தில் நீ பொத்தென்று மேலே இருந்து கீழே விழுந்தாய்.
रोदाकुलास्तदनु गोपगणा बहिष्ठ-
पाषाणपृष्ठभुवि देहमतिस्थविष्ठम् ।
प्रैक्षन्त हन्त निपतन्तममुष्य वक्ष-
स्यक्षीणमेव च भवन्तमलं हसन्तम् ॥६॥
rOdaakulaastadanu gOpagaNaa bahiShThapaaShaaNapR^
iShThabhuvi dehamatisthaviShTham |
praikshanta hanta nipatantamamuShya vakshasyakshiiNameva
cha bhavantamalaM hasantam ||6
ரோதா³குலாஸ்தத³னு கோ³பக³ணா ப³ஹிஷ்ட²-
பாஷாணப்ருஷ்ட²பு⁴வி தே³ஹமதிஸ்த²விஷ்ட²ம் |
ப்ரைக்ஷந்த ஹந்த நிபந்தமமுஷ்ய வக்ஷ-
ஸ்யக்ஷீணமேவ ச ப⁴வந்தமலம் ஹஸந்தம் || 43-6 ||
உன்னை விடும்போதே த்ரீணாவர்த்தன் நீ கழுத்தை கனமாக இறுக்கியதால் மூச்சு நின்று தானும் கோகுல மண்ணில் தடால் என்று உயிறற்ற உடலாக கீழே விழுந்தான். நந்தகோபன் , கோபர்கள், கோபியர்கள், யசோதை மற்றும் எல்லோருமே ஓடிவந்தவர்கள் அங்கே உயிரற்ற பிரம்மாண்ட ராக்ஷஸன் ஒருவன் உடலையும் அதன் மேல் வழக்கம்போலவே சிரித்துக்கொண்டு விளையாடும் உன்னையும் கண்டார்கள். உன் காயமோ, அடியோ , ரத்தம் ஒரு சொட்டோ காணோம்.

''பகவானே, வயிற்றில் பாலை வார்த்தாயே'' என்று உன்னை காப்பாற்றியதாக எங்கோ உள்ள அனைவரும்.
ग्रावप्रपातपरिपिष्टगरिष्ठदेह-
भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् ।
आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य
गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम् ॥७॥
graavaprapaata paripiShTa gariShThadehabhraShTaasu
duShTadanujOpari dhR^iShTahaasam |
aaghnaanamambujakareNa bhavantametya
gOpaa dadhurgirivaraadiva niilaratnam ||7
க்³ராவப்ரபாதபரிபிஷ்டக³ரிஷ்ட²தே ³ஹ-
ப்⁴ரஷ்டாஸுது³ஷ்டத³னுஜோபரி த்⁴ருஷ்டஹாஸம் |
ஆக்⁴னானமம்பு³ஜகரேண ப⁴வந்தமேத்ய
கோ³பா த³து⁴ர்கி³ரிவராதி³வ நீலரத்னம் || 43-7 ||
நந்தகோபனும் யசோதையும் பயப்படாமல் அந்த ராக்ஷஸன் உடல் அருகே வந்து உன்னை வேகமாக தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். நீ துளியும் பளு, கனம் இல்லாமல், சின்ன குழந்தையாக மாறிவிட்டாயே. உன்னை த்ரிணாவர்த்தன் உடலிலிருந்து தூக்கிக்கொண்டு போது ஏதோ ஒரு பெரிய மலை மீதிருந்து சிறிய ஒளிவீசும் நீலக்கல்லை எடுப்பது போல் இருந்தது கிருஷ்ணா, என்கிறார் நாராயண பட்டத்ரி. விளையாட்டாக உன் சிறு கைகளால் அந்த ராக்ஷஸன் உடலை அடித்துக்கொண்டிருந்தாய். அந்த அடியே கூட அவனை கொன்றிருக்கும்.
भ्रष्टासुदुष्टदनुजोपरि धृष्टहासम् ।
आघ्नानमम्बुजकरेण भवन्तमेत्य
गोपा दधुर्गिरिवरादिव नीलरत्नम् ॥७॥
graavaprapaata paripiShTa gariShThadehabhraShTaasu
duShTadanujOpari dhR^iShTahaasam |
aaghnaanamambujakareNa bhavantametya
gOpaa dadhurgirivaraadiva niilaratnam ||7
க்³ராவப்ரபாதபரிபிஷ்டக³ரிஷ்ட²தே
ப்⁴ரஷ்டாஸுது³ஷ்டத³னுஜோபரி த்⁴ருஷ்டஹாஸம் |
ஆக்⁴னானமம்பு³ஜகரேண ப⁴வந்தமேத்ய
கோ³பா த³து⁴ர்கி³ரிவராதி³வ நீலரத்னம் || 43-7 ||
நந்தகோபனும் யசோதையும் பயப்படாமல் அந்த ராக்ஷஸன் உடல் அருகே வந்து உன்னை வேகமாக தூக்கிக் கொண்டு போய்விட்டார்கள். நீ துளியும் பளு, கனம் இல்லாமல், சின்ன குழந்தையாக மாறிவிட்டாயே. உன்னை த்ரிணாவர்த்தன் உடலிலிருந்து தூக்கிக்கொண்டு போது ஏதோ ஒரு பெரிய மலை மீதிருந்து சிறிய ஒளிவீசும் நீலக்கல்லை எடுப்பது போல் இருந்தது கிருஷ்ணா, என்கிறார் நாராயண பட்டத்ரி. விளையாட்டாக உன் சிறு கைகளால் அந்த ராக்ஷஸன் உடலை அடித்துக்கொண்டிருந்தாய். அந்த அடியே கூட அவனை கொன்றிருக்கும்.
एकैकमाशु परिगृह्य निकामनन्द-
न्नन्दादिगोपपरिरब्धविचुम्बिता ङ्गम् ।
आदातुकामपरिशङ्कितगोपनारी-
हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम् ॥८॥
ekaikamaashu parigR^ihya nikaamanandannandaadi
gOpa parirabdha vichumbitaangam |
aadaatukaama parishankita gOpanaarii
hastaambujaprapatitaM praNumO bhavantam ||8
ஏகைகமாஶு பரிக்³ருஹ்ய நிகாமனந்த³-
ந்னந்தா³தி³கோ³பபரிரப்³த⁴விசும் பி³தாங்க³ம் |
ஆதா³துகாமபரிஶங்கிதகோ³பனாரீ-
ஹஸ்தாம்பு³ஜப்ரபதிதம் ப்ரணுமோ ப⁴வந்தம் || 43-8 ||
என் தேன்வமே, உன்னை வணங்குகிறேன். உன்னை எவ்வளவு ஆசையோடு , பாசமோடு மனதில் சந்தோஷத்தோடு, நிம்மதியாக அந்த கோப கோபியர்கள் மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டார்கள். முத்தமாரி பொழிந்தார்கள். எவ்வளவு பாக்கியசாலிகள் அந்த ஒன்றுமறியாத சாதாரண பசுமேய்க்கும் இடையர்கள்.
भूयोऽपि किन्नु कृणुम: प्रणतार्तिहारी
गोविन्द एव परिपालयतात् सुतं न: ।
इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं
सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव ॥९॥
bhuuyO(a)pi kiM nu kR^iNumaH praNataartihaarii
gOvinda eva paripaalayataat sutaM naH |
ityaadi maatarapitR^i pramukhaistadaaniiM
sampraarthitastvadavanaaya vibhO tvameva ||9
பூ⁴யோ(அ)பி கின்னு க்ருணும꞉ ப்ரணதார்திஹாரீ
கோ³விந்த³ ஏவ பரிபாலயதாத்ஸுதம் ந꞉ |
இத்யாதி³ மாதரபித்ருப்ரமுகை²ஸ்ததா³னீம்
ஸம்ப்ரார்தி²தஸ்த்வத³வனாய விபோ⁴ த்வமேவ || 43-9 ||
நந்தகோபனும் யசோதையும் மற்று மெல்லோரும் ''இருகரம் சிரம் மேல் கூப்பி ''கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, எத்தனையோ ஜென்மங்கள் நாங்கள் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்கள் குழந்தையை, செல்வத்தை, காப்பாற்றிக் கொடுத்தாயே , கருணாசாகரா' என்று உன்னை கையில் ஏந்தியவாறு உன்னைக் கூப்பிட்டு உன்னைக்காப்பாற்ற வேண்டி எங்கேயோ கும்பிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, உனக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. ''
न्नन्दादिगोपपरिरब्धविचुम्बिता
आदातुकामपरिशङ्कितगोपनारी-
हस्ताम्बुजप्रपतितं प्रणुमो भवन्तम् ॥८॥
ekaikamaashu parigR^ihya nikaamanandannandaadi
gOpa parirabdha vichumbitaangam |
aadaatukaama parishankita gOpanaarii
hastaambujaprapatitaM praNumO bhavantam ||8
ஏகைகமாஶு பரிக்³ருஹ்ய நிகாமனந்த³-
ந்னந்தா³தி³கோ³பபரிரப்³த⁴விசும்
ஆதா³துகாமபரிஶங்கிதகோ³பனாரீ-
ஹஸ்தாம்பு³ஜப்ரபதிதம் ப்ரணுமோ ப⁴வந்தம் || 43-8 ||
என் தேன்வமே, உன்னை வணங்குகிறேன். உன்னை எவ்வளவு ஆசையோடு , பாசமோடு மனதில் சந்தோஷத்தோடு, நிம்மதியாக அந்த கோப கோபியர்கள் மாற்றி மாற்றி தூக்கி வைத்துக் கொண்டார்கள். முத்தமாரி பொழிந்தார்கள். எவ்வளவு பாக்கியசாலிகள் அந்த ஒன்றுமறியாத சாதாரண பசுமேய்க்கும் இடையர்கள்.
भूयोऽपि किन्नु कृणुम: प्रणतार्तिहारी
गोविन्द एव परिपालयतात् सुतं न: ।
इत्यादि मातरपितृप्रमुखैस्तदानीं
सम्प्रार्थितस्त्वदवनाय विभो त्वमेव ॥९॥
bhuuyO(a)pi kiM nu kR^iNumaH praNataartihaarii
gOvinda eva paripaalayataat sutaM naH |
ityaadi maatarapitR^i pramukhaistadaaniiM
sampraarthitastvadavanaaya vibhO tvameva ||9
பூ⁴யோ(அ)பி கின்னு க்ருணும꞉ ப்ரணதார்திஹாரீ
கோ³விந்த³ ஏவ பரிபாலயதாத்ஸுதம் ந꞉ |
இத்யாதி³ மாதரபித்ருப்ரமுகை²ஸ்ததா³னீம்
ஸம்ப்ரார்தி²தஸ்த்வத³வனாய விபோ⁴ த்வமேவ || 43-9 ||
நந்தகோபனும் யசோதையும் மற்று மெல்லோரும் ''இருகரம் சிரம் மேல் கூப்பி ''கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, எத்தனையோ ஜென்மங்கள் நாங்கள் உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். எங்கள் குழந்தையை, செல்வத்தை, காப்பாற்றிக் கொடுத்தாயே , கருணாசாகரா' என்று உன்னை கையில் ஏந்தியவாறு உன்னைக் கூப்பிட்டு உன்னைக்காப்பாற்ற வேண்டி எங்கேயோ கும்பிடுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது, உனக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது. ''
वातात्मकं दनुजमेवमयि प्रधून्वन्
वातोद्भवान् मम गदान् किमु नो धुनोषि ।
किं वा करोमि पुनरप्यनिलालयेश
निश्शेषरोगशमनं मुहुरर्थये त्वाम् ॥१०॥
vaataatmakaM danujamevamayi pradhuunvan
vaatOdbhavaanmama gadaan kimu nO dhunOShi |
kiM vaa karOmi punarapyanilaalayesha
nishsheSha rOgashamanaM muhurarthaye tvaam ||10
வாதாத்மகம் த³னுஜமேவமயி ப்ரதூ⁴ன்வன்
வாதோத்³ப⁴வான்மம க³தா³ன்கிமு நோ து⁴னோஷி |
கிம் வா கரோமி புரனப்யனிலாலயேஶ
நிஶ்ஶேஷரோக³ஶமனம் முஹுரர்த²யே த்வாம் || 43-10 ||
எண்டே குருவாயூரப்பா, வாயு உருவத்தில் வந்த ராக்ஷஸனைக் கூட உன்னை விட்டு ஓடாமல் கெட்டியாக பிடித்து கழுத்தில் ஏறி அமர்ந்து அவனை மூச்சு விடமுடியாமல் நெருக்கிக் கொன்ற உனக்கு வாயுவினால் அவஸ்தை படும் என் வாத நோயை தீர்ப்பது பெரிய வேலையா? தெய்வமே, என் மேல் கருணை கொண்டு என் வாயு உபத்ரவத்தையும் நீக்குவாயாக.
No comments:
Post a Comment