ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN --
64வது தசகம்
64. ''கோவிந்தா, கோவிந்தா '' என்னே உன் திவ்ய தரிசனம்...
தேவேந்திரன் கிருஷ்ணன் வேறு யாருமில்லை மஹா விஷ்ணுவான ஸ்ரீமந் நாராயணனின் அவதாரம் என்பதை உணர்ந்து தனது தவறுக்கு வருந்தி கிருஷ்ணனை வணங்கினான். அனைத்து தேவர்களும் கிருஷ்ணனைப் பிரார்த்தித்தனர்.
आलोक्य शैलोद्धरणादिरूपं प्रभावमुच्चैस्तव गोपलोका: ।
विश्वेश्वरं त्वामभिमत्य विश्वे नन्दं भवज्जातकमन्वपृच्छन् ॥१॥
aalOkya shailOddharaNaadi ruupaM prabhaavamuchchaistava gOpalOkaaH |
vishveshvaraM tvaamabhimatya vishve nandaM bhavajjaatakamanvapR^ichChan || 1
ஆலோக்ய ஶைலோத்³த⁴ரணாதி³ரூபம்
ப்ரபா⁴வமுச்சைஸ்தவ கோ³பலோகா꞉ |
விஶ்வேஶ்வரம் த்வாமபி⁴மத்ய விஶ்வே
நந்த³ம் ப⁴வஜ்ஜாதகமன்வப்ருச்ச²ன் || 64-1 ||
வ்ரஜபூமி கோபர்களுக்கு இப்போது நன்றாக புரிந்துவிட்டது. கோவர்த்தன கிரியை ஏழுநாட்கள் ஒரு சுண்டு விரலால் தூக்கி நிறுத்தி அவர்களை ஆநிரைகளோடு காத்தருளிய கிருஷ்ணன் சாதாரண மானுடன் இல்லை. தங்களை உய்விக்க வந்த தெய்வம் என்று உள்ளுணர்வு அவர்களுக்குள் உணர்த்தியது. மட்டற்ற மகிழ்ச்சியில் கண்ணனின் அருமைபெருமைகளை புகழ்ந்து நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள்.

எல்லோரும் ஒன்று கூடி நந்தகோபனிடம் சென்று ஆவலோடு என்ன கேட்டார்கள் தெரியுமா? ''நந்தகோபா, உன் மகன் கிருஷ்ணனின் ஜாதகத்தை பார்த்தாயா, அதில் அவனைப் பற்றி என்ன சொல்கிறது? விசேஷ ஜாதகனாக அவன் இருக்கவேண்டுமே? ஆவலாக இருக்கிறது அவனைப் பற்றி சொல்லப்பா?''
गर्गोदितो निर्गदितो निजाय वर्गाय तातेन तव प्रभाव: ।
पूर्वाधिकस्त्वय्यनुराग एषामैधिष्ट तावत् बहुमानभार: ॥२॥
पूर्वाधिकस्त्वय्यनुराग एषामैधिष्ट तावत् बहुमानभार: ॥२॥
gargOditO nirgaditO nijaaya vargaaya taatena tava prabhaavaH |
puurvaadhikastvayyanuraaga eShaamaidhiShTa taavadvahumaana bhaaraH || 2
க³ர்கோ³தி³தோ நிர்க³தி³தோ நிஜாய
வர்கா³ய தாதேன தவ ப்ரபா⁴வ꞉ |
பூர்வாதி⁴கஸ்த்வய்யனுராக³ ஏஷா-
மைதி⁴ஷ்ட தாவத்³ப³ஹுமானபா⁴ர꞉ || 64-2 ||
குருவாயூரப்பா, உன் தந்தை நந்தகோபன் சொன்ன பதில் இது தான்.

''ஆமாம் கிருஷ்ணன் ஒரு தனிப்பிறவி. விசேஷமானவன். அவன் பிறந்தபோது குலகுரு கர்க முனிவர் வந்தது, அப்போது அவர் அவனுக்கு பெயர் வைத்தது. அவனைப் பற்றி உயர்வாக சொன்னது அத்தனையும் ஒன்றுவிடாமல் நந்தகோபன் சொன்னான். கோபர்கள் ''ஆ'' வென்று வாய் பிளந்து கிருஷ்ணா உன் அருமை பெருமைகளை அறிந்தார்கள். அவர்களே அனுபவித்த உன்னுடைய எத்தனையோ சாகசச் செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாக மனத்திரையில் தோன்றின. அவர்களுக்கு உன்மீது பக்தியும் பாசமும் முன்னிலும் அதிகமாகப் பெருகியது.
ततोऽवमानोदिततत्त्वबोध: सुराधिराज: सह दिव्यगव्या।
उपेत्य तुष्टाव स नष्टगर्व: स्पृष्ट्वा पदाब्जं मणिमौलिना ते ॥३॥
उपेत्य तुष्टाव स नष्टगर्व: स्पृष्ट्वा पदाब्जं मणिमौलिना ते ॥३॥
tatO(a)vamaanOdita tattvabOdhaH suraadhiraajaH saha divyagavyaa |
upetya tuShTaava sa naShTagarvaH spR^iShTvaa padaabjaM maNi maulinaa te || 3
ததோ(அ)வமானோதி³ததத்த்வபோ³த⁴꞉
ஸுராதி⁴ராஜ꞉ ஸஹ தி³வ்யக³வ்யா |
உபேத்ய துஷ்டாவ ஸ நஷ்டக³ர்வ꞉
ஸ்ப்ருஷ்ட்வா பதா³ப்³ஜம் மணிமௌலினா தே || 64-3 ||
கிருஷ்ணா, உனக்கு தெரியும் தேவேந்திரன் மாயையால், அதுவும் உன் சங்கல்பத்தால், சற்று மதி மயங்கி ஆணவத்தில் தவறு செய்தவன், அதுவும் ஒரு நன்மைக்கே என்று. இப்போது இந்திரன் ஆணவம் நீங்கியவனாக அனைத்து தேவர்களோடும் உன்னை நேரில் காண ஓடிவந்தான். வரும்போது காமதேனுவையும் அழைத்து வந்தான். ஸாஷ்டாங்கமாக அனைவரும் உன் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்.
स्नेहस्नुतैस्त्वां सुरभि: पयोभिर्गोविन्दनामाङ्कितमभ्यषिञ्चत् ।
ऐरावतोपाहृतदिव्यगङ्गापाथोभिरिन्द्रोऽपि च जातहर्ष: ॥४॥
snehasnutaistvaaM surabhiH payObhiH gOvinda naamaankitamabhyaShi~nchat |
airaavatOpaahR^ita divya gangaa paathObhirindrO(a)pi cha jaataharShaH || 4
ஸ்னேஹஸ்னுதைஸ்த்வாம் ஸுரபி⁴꞉ பயோபி⁴-
ர்கோ³விந்த³னாமாங்கிதமப்⁴யஷிஞ்சத் |
ஐராவதோபாஹ்ருததி³வ்யக³ங்கா³-
பாதோ²பி⁴ரிந்த்³ரோ(அ)பி ச ஜாதஹர்ஷ꞉ || 64-4 ||
தேவேந்திரன் காமதேனுவின் திவ்ய க்ஷீரத்தால் , உனக்கு பாலபிஷேகம் செய்தான். உளமார அனைவரும் இந்திரனோடு சேர்ந்து ''கோவிந்தா கோவிந்தா '' என வாய் மணக்க கூவினார்கள். இந்திரன் ஆனந்தத்தில் தன்னை மறந்து கூத்தாடினான். தனது வாகனமான ஐராவதத்தின் மேல் பக்தி, மரியாதையோடு குடம் குடமாக கொண்டு வந்திருந்த கங்கை போன்ற புனித தீர்த்தங்களால் தானே உனக்கு அபிஷேகம் செய்தான்.

जगत्त्रयेशे त्वयि गोकुलेशे तथाऽभिषिक्ते सति गोपवाट: ।
नाकेऽपि वैकुण्ठपदेऽप्यलभ्यां श्रियं प्रपेदे भवत: प्रभावात् ॥५॥
jagattrayeshe tvayi gOkuleshe tathaa(a)bhiShikte sati gOpavaaTaH |
naake(a)pi vaikuNTha pade(a)pyalabhyaaM shriyaM prapede bhavataHprabhaavaat || 5
ஜக³த்த்ரயேஶே த்வயி கோ³குலேஶே
ததா²(அ)பி⁴ஷிக்தே ஸதி கோ³பவாட꞉ |
நாகே(அ)பி வைகுண்ட²பதே³(அ)ப்யலப்⁴யாம்
ஶ்ரியம் ப்ரபேதே³ ப⁴வத꞉ ப்ரபா⁴வாத் || 64-5 ||
கிருஷ்ணா, நீ மூவுலகும் ஆள்பவன். உன்னை கோகுலநாதனாக, கோகுல நாயகனாக அனைவரும் வாழ்த்தி போற்றினார்கள். மலர்களால் உன் பாதார விந்தங்களை அர்ச்சித்தார்கள். கோகுலம் செய்த பாக்யம் வைகுண்டம் கூட பெற்றிருக்காது என்று தோன்றுகிறது கண்ணா இந்த வைபவங்களைக் கண்டபோது. அதைப்பற்றி அறியும்போது''
कदाचिदन्तर्यमुनं प्रभाते स्नायन् पिता वारुणपूरुषेण ।
नीतस्तमानेतुमगा: पुरीं त्वं तां वारुणीं कारणमर्त्यरूप: ॥६॥
नीतस्तमानेतुमगा: पुरीं त्वं तां वारुणीं कारणमर्त्यरूप: ॥६॥
kadaachidantaryamunaM prabhaate snaayan pitaa vaaruNapuuruSheNa |
niitastamaanetu magaaH puriintvaM taaM vaaruNiiM kaaraNa martyaruupaH || 6
கதா³சித³ந்தர்யமுனம் ப்ரபா⁴தே
ஸ்னாயன் பிதா வாருணபூருஷேண |
நீதஸ்தமானேதுமகா³꞉ புரீம் த்வம்
தாம் வாருணீம் காரணமர்த்யரூப꞉ || 64-6 ||
குருவாயூரா, உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அது ஒரு ஆச்சர்யமான சம்பவம். உனக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன் கேள். ஒரு முறை வருணனின் சேவகன் ஒருவன் உன் தந்தை நந்தகோபன் யமுனையில் விடியற்காலையில் ஸ்னானம் செய்த்துக்கொண்டிருந்தபோது கடத்திக் கொண்டு போய்விட்டான். இந்த பூமியில் நீ அவதாரம் செய்ததே நல்லவர்கள் எல்லோரையும் நேரடியாக காப்பதற்கு தானே. அவ்வளவு சுலபத்தில் இது நடக்க விடுவாயா? நேராக வருணனை விண்ணுலகில் சென்று சந்தித்து உன் தந்தையை மீட்க சென்றாயே.
ससम्भ्रमं तेन जलाधिपेन प्रपूजितस्त्वं प्रतिगृह्य तातम् ।
उपागतस्तत्क्षणमात्मगेहं पिताऽवदत्तच्चरितं निजेभ्य: ॥७॥
उपागतस्तत्क्षणमात्मगेहं पिताऽवदत्तच्चरितं निजेभ्य: ॥७॥
sasambhramaM tena jalaadhipena prapuujitastvaM pratigR^ihya taatam |
upaagatastatkshaNamaatmagehaM pitaa(a)vadattachcharitaM nijebhyaH || 7
ஸஸம்ப்⁴ரமம் தேன ஜலாதி⁴பேன
ப்ரபூஜிதஸ்த்வம் ப்ரதிக்³ருஹ்ய தாதம் |
உபாக³தஸ்தத்க்ஷணமாத்மகே³ஹம்
பிதா(அ)வத³த்தச்சரிதம் நிஜேப்⁴ய꞉ || 64-7 ||
''கிருஷ்ணா, நீ வந்திருக்கிறாய் என்ற சேதி அறிந்ததும் வருணன் ஓடோடி வந்து உன் பாத கமலங்களில் விழுந்தானே. அவனுக்கு தெரியாது அவன் சேவகன் செய்த தவறு. ஆகவே வருந்தினான். உன்னிடம் மன்னிப்பு கோரினான். உன் தந்தையை உன்னோடு அனுப்பினான்.

க்ஷண காலத்தில் இதெல்லாம் நடந்தது. நந்தகோபன் கோகுலத்திற்கு உன்னோடு திரும்பி வந்தான்.
இந்த நிகழ்ச்சியை மற்ற கோபர்களுக்கு இப்போது நந்தகோபன் உன் பெருமைகளை சொல்லிக்கொண்டு வரும்போது, ஞாபகப்படுத்தி சொன்னான்.
हरिं विनिश्चित्य भवन्तमेतान् भवत्पदालोकनबद्धतृष्णान् ॥
निरीक्ष्य विष्णो परमं पदं तद्दुरापमन्यैस्त्वमदीदृशस्तान् ॥८॥
निरीक्ष्य विष्णो परमं पदं तद्दुरापमन्यैस्त्वमदीदृशस्तान् ॥८॥
hariM vinishchitya bhavantametaan bhavatpadaalOkana baddhatR^iShNaan |
niriikshya viShNO paramaM padaM tad duraapamanyaistvamadiidR^ishastaan || 8
ஹரிம் வினிஶ்சித்ய ப⁴வந்தமேதான்
ப⁴வத்பதா³லோகனப³த்³த⁴த்ருஷ்ணான் |
நிரீக்ஷ்ய விஷ்ணோ பரமம் பத³ம் த-
த்³து³ராபமன்யைஸ்த்வமதீ³த்³ருஶஸ்தான் || 64-8 ||
கொஞ்சமும் சந்தேகத்துக்கே இடமில்லாமல் அனைத்து கோப கோபியர்களும் நீ மஹா விஷ்ணுவின் அவதாரம் என தெரிந்துகொண்டார்கள். அவர்கள் செய்த பாக்யம் வ்ரஜபூமியில் அவர்களை வாழ்விக்க வந்தவன் நீ என்று புரிந்து கொண்டார்கள். ஹரி , எவ்வளவு புண்யம் பண்ணியவர்கள் அந்த மக்கள் என்று நினைக்கும்போது வைகுண்டநாதா, அவர்கள் நீ வாழும் அந்த திவ்ய ஸ்தலத்தை தரிசிக்க ஆவல் கொண்டார்கள். ஆஹா என்ன பாக்யம் அவர்களுக்கு க்ஷணகாலம் அவர்களுக்கு ஜீவன்முக்தர்கள் போல வைகுண்ட தரிசனமே கிடைத்தது. ஆம். நீ தான் கோகுல பிரிந்தாவனத்தையே பூலோக வைகுண்டமாக மாற்றிவிட்டாயே ''
स्फुरत्परानन्दरसप्रवाहप्रपूर्णकैवल्यमहापयोधौ ।
चिरं निमग्ना: खलु गोपसङ्घास्त्वयैव भूमन् पुनरुद्धृतास्ते ॥९॥
चिरं निमग्ना: खलु गोपसङ्घास्त्वयैव भूमन् पुनरुद्धृतास्ते ॥९॥
sphuratparaananda rasapravaaha prapuurNa kaivalya mahaapayOdhau |
chiraM nimagnaaH khalu gOpasanghaaH tvayaiva bhuuman punaruddhR^itaaste || 9
ஸ்பு²ரத்பரானந்த³ரஸப்ரவாஹ-
ப்ரபூர்ணகைவல்யமஹாபயோதௌ⁴ |
சிரம் நிமக்³னா꞉ க²லு கோ³பஸங்கா⁴-
ஸ்த்வயைவ பூ⁴மன் புனருத்³த்⁴ருதாஸ்தே || 64-9 ||
கோவர்தன கிரியை நீ உயர்த்தி அனைவரையும் காத்தருளிய போது எங்கும் ஓடியது ஓவென்று நீர் வெள்ளம். இப்போது அவர்கள் அனைவரும் மூழ்கியது ஆனந்த வெள்ளத்தில். தெய்வீகமான உன் திவ்ய தரிசனத்தில் எல்லோரும் பரமானந்த முக்தியடைந்தவர்களாக தென்பட்டார்கள். உன் ஸாக்ஷாத் ஸ்வரூபத்தை நொடியில் காட்டி அவர்களை மகிழ்வித்தாயே தெய்வமே. மீண்டும் அவர்களை பழைய கோபர்களாக மாற்றி வாழவைத்தாய்.

करबदरवदेवं देव कुत्रावतारे
निजपदमनवाप्यं दर्शितं भक्तिभाजाम् ।
तदिह पशुपरूपी त्वं हि साक्षात् परात्मा
पवनपुरनिवासिन् पाहि मामामयेभ्य: ॥१०॥
तदिह पशुपरूपी त्वं हि साक्षात् परात्मा
पवनपुरनिवासिन् पाहि मामामयेभ्य: ॥१०॥
karabadaravadevaM deva kutraavataare
nijapadamanavaapyaM darshitaM bhaktibhaajaam |
tadiha pashuparuupii tvaM hi saakshaat paraatmaa
pavana puranivaasin paahi maamaamayebhyaH ||10
கரப³த³ரவதே³வம் தே³வ குத்ராவதாரே
பரபத³மனவாப்யம் த³ர்ஶிதம் ப⁴க்திபா⁴ஜாம் | [** நிஜபத³மனவாப்யம் **

ததி³ஹ பஶுபரூபீ த்வம் ஹி ஸாக்ஷாத்பராத்மா
பவனபுரனிவாஸின் பாஹி மாமாமயேப்⁴ய꞉ || 64-10 ||
பவனபுரனிவாஸின் பாஹி மாமாமயேப்⁴ய꞉ || 64-10 ||
பவனபுர நிவாஸா, பரமாத்மா, கிருஷ்ணா, இது வரை உனது எந்த அவதாரத்திலும் உனது நிஜ ஸ்வரூபத்தை , உனது ஸ்ரீ வைகுண்டத்தை பக்தர்கள் எவரும் தரிசனம் செய்ய கொடுத்து வைக்க வில்லையே. . இந்த கிருஷ்ண அவதாரத்தில் கோகுல பிருந்தாவன வ்ரஜபூமியில் மாடு மேய்க்கும் கோபர்கள் கோபியர்கள் அல்லவோ அந்த அதிர்ஷ்டம் பெற்றவர்கள். எண்டே குருவாயூரப்பா, நீ பரமாத்மா என்பதை வெளிப்படுத்தியது அவர்கள் எத்தனையோ ஜென்மத்தில் செய்த புண்ய கர்மபலன். அப்பனே என் நோய் தீர்த்து எனக்கும் அருள்புரிவாய்.
தொடரும்
No comments:
Post a Comment