48வது தசகம்
48. மருத மரங்கள் சாய்ந்தன.
யசோதை விஷமக்கார கண்ணனை ஒரு பெரிய கல் உரலோடு இணைத்து கயிற்றால் கட்டி போட்டு விட்டாள் . அது அவனுக்கு அவள் தந்த தண்டனை. அதற்கு பிறகு நடந்த அதிசயத்தை இந்த தசகம் சொல்கிறது.
யசோதை விஷமக்கார கண்ணனை ஒரு பெரிய கல் உரலோடு இணைத்து கயிற்றால் கட்டி போட்டு விட்டாள் . அது அவனுக்கு அவள் தந்த தண்டனை. அதற்கு பிறகு நடந்த அதிசயத்தை இந்த தசகம் சொல்கிறது.
मुदा सुरौघैस्त्वमुदारसम्मदै-
रुदीर्य दामोदर इत्यभिष्टुत: ।
मृदुदर: स्वैरमुलूखले लग-
न्नदूरतो द्वौ ककुभावुदैक्षथा: ॥१॥
mudaa suraughaistvamudaara sammadaiH udiirya daamOdara ityabhiShTutaH |
mR^iduudaraH svairamuluukhale lagannaduuratOdvau kakubhaavudaikshathaaH ||
முதா³ ஸுரௌகை⁴ஸ்த்வமுதா³ரஸம்மதை³-
ருதீ³ர்ய தா³மோத³ர இத்யபி⁴ஷ்டுத꞉ |
ம்ருதூ³த³ர꞉ ஸ்வைரமுலூக²லே லக³-
ந்னதூ³ரதோ த்³வௌ ககுபா⁴வுதை³க்ஷதா²꞉ || 48-1 ||
குருவாயூரப்பா, உன்னைத் தனியே விட்டு விட்டு யசோதை உள்ளே சென்றுவிட்டாள் . கல் உரலோடு வயிறு கயிற்றில் கட்டப்பட்டு வீட்டின் பின் புறம் தோட்டம் உள்ள பகுதியில் நீ கட்டுண்டவனாக அமர்ந்திருக்கிறாய். இதுவும் உன் முன்னேற்பாடு என்பதை நீ மட்டுமே அறிவாய். தேவாதி தேவர்கள் புகழ்ந்து போற்றிப்பாடும் நீ யசோதையின் இந்த தண்டனையை காராணார்த்தமாக ஏற்றுக் கொண்டது உனக்கு தெரியும், உன்னால் எனக்கும் தெரியும். உன் மிருதுவான வயிறு தாம்புக்கயிற்றால் இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததை குனிந்து பார்த்து புன்னகைத்தாய். ''தாமோதரன்'' என்ற பெயர் உனக்கு நிலைத்ததன் அர்த்தம் என்ன?, தாமம் என்றால் கயிறு, உதரம் என்றால் வயிறு, வயிற்றில் கயிற்றால் கட்டுண்டவன் என்று பொருள் அல்லவா? சுற்றிலும் பார்த்தாய். இரு பெரிய மருத மரங்கள் அருகருகே உயர்ந்து எதிரே சற்று தூரத்தில் நின்றிருந்தது உன் கண்ணில் பட்டது.
कुबेरसूनुर्नलकूबराभिध:
परो मणिग्रीव इति प्रथां गत: ।
महेशसेवाधिगतश्रियोन्मदौ
चिरं किल त्वद्विमुखावखेलताम् ॥२॥
kubera suunurnalakuubaraabhidhaH parO maNigriiva iti prathaaM gataH |
maheshasevaadhigata shriyOnmadau chiraM kila tvadvimukhaavakhelataam || 2
குபே³ரஸூனுர்னலகூப³ராபி⁴த⁴꞉
பரோ மணிக்³ரீவ இதி ப்ரதா²ம் க³த꞉ |
மஹேஶஸேவாதி⁴க³தஶ்ரியோன்மதௌ³
परो मणिग्रीव इति प्रथां गत: ।
महेशसेवाधिगतश्रियोन्मदौ
चिरं किल त्वद्विमुखावखेलताम् ॥२॥
kubera suunurnalakuubaraabhidhaH parO maNigriiva iti prathaaM gataH |
maheshasevaadhigata shriyOnmadau chiraM kila tvadvimukhaavakhelataam || 2
குபே³ரஸூனுர்னலகூப³ராபி⁴த⁴꞉
பரோ மணிக்³ரீவ இதி ப்ரதா²ம் க³த꞉ |
மஹேஶஸேவாதி⁴க³தஶ்ரியோன்மதௌ³
இங்கே சற்று பின்னோக்கி சென்று ஒரு சரித்திரம் சொல்லவேண்டும்.
செல்வத்துக்கு அதிபதி குபேரன். அவனுக்கு நள கூபரன் என்று ஒரு பிள்ளை. மணிக்ரீவன் என்று ஒருவன். இருவரும் வெகு காலம் சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபக்தியால் உண்டான அழகிய உருவத்தை பெற்றவர்கள். இதனால் கர்வம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. உன்னை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கவில்லை. தான் என்கிற அகம்பாவம் அவர்களை ஆட்கொண்டது.
செல்வத்துக்கு அதிபதி குபேரன். அவனுக்கு நள கூபரன் என்று ஒரு பிள்ளை. மணிக்ரீவன் என்று ஒருவன். இருவரும் வெகு காலம் சிவபெருமானை நோக்கி தவமிருந்து சிவபக்தியால் உண்டான அழகிய உருவத்தை பெற்றவர்கள். இதனால் கர்வம் உச்சந்தலைக்கு ஏறிவிட்டது. உன்னை ஒரு பொருட்டாக அவர்கள் மதிக்கவில்லை. தான் என்கிற அகம்பாவம் அவர்களை ஆட்கொண்டது.
सुरापगायद्बहुयौवतावृतौ ।
विवाससौ केलिपरौ स नारदो
भवत्पदैकप्रवणो निरैक्षत ॥३॥
suraapagaayaaM kila tau madOtkaTau suraapagaayad bahuyauvataa vR^itau |
vivaasasau keliparau sa naaradO bhavatpadaika pravaNO niraikshata || 3
ஸுராபகா³யாம் கில தௌ மதோ³த்கடௌ
ஸுராபகா³யத்³ப³ஹுயௌவதாவ்ருதௌ |
விவாஸஸௌ கேலிபரௌ ஸ நாரதோ³
ப⁴வத்பதை³கப்ரவணோ நிரைக்ஷத || 48-3 ||
இந்த நளகூபர இளைஞர்கள் ஒரு சமயம் பல பெண்களோடு சேர்ந்து மது மயக்கத்தில் கேளிக்கைகளில் ஆட்டம் பாட்டுமாக களித்திருந்தனர். கங்கையில் இறங்கி அதன் புனிதத்துக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களது காமக் களியாட்டம் எல்லை கடந்திருந்தது. அந்த சமயத்தில் உனது சிறந்த பக்தரானான நாரத முனிவர் அங்கு வர நேர்ந்தது. தவத்திலும் பக்தியிலும் இணையற்ற உலகம் போற்றும் மஹ ரிஷி அல்லவா அவர்?
भिया प्रियालोकमुपात्तवाससं
पुरो निरीक्ष्यापि मदान्धचेतसौ ।
इमौ भवद्भक्त्युपशान्तिसिद्धये
मुनिर्जगौ शान्तिमृते कुत: सुखम् ॥४॥
bhiyaa priyaalOkamupaattavaasasaM purO niriikshyaapi madaandha chetasau |
imau bhavadbhaktyupashaanti siddhaye munirjagau shaantimR^ite kutaHsukham || 4
பி⁴யா ப்ரியாலோகமுபாத்தவாஸஸம்
புரோ நிரீக்ஷ்யாபி மதா³ந்த⁴சேதஸௌ |
இமௌ ப⁴வத்³ப⁴க்த்யுபஶாந்திஸித்³த⁴யே
முனிர்ஜகௌ³ ஶாந்திம்ருதே குத꞉ ஸுக²ம் || 48-4 ||
நாரதர் அங்கு வந்ததைக் கண்ட அந்த பெண்கள், அவசரமாக ஆடைகளை மேலே சுற்றிக்கொண்டு ஒதுங்கினார்கள். நளகூபர சகோதரர்கள் இதைக் கண்டார்கள். ஆனால் அவர்கள் இறுமாப்போடு தங்களது கேளிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நாரத ரிஷியை துளியும் லக்ஷியம் செய்யவில்லை. அவர்கள் அறிவை மது ஆக்கிரமித்துவிட்டது . நாரதர் கோபம் கொள்ளவில்லை. அவர்களுக்கு இதமாக சில வார்த்தைகள் கூறி உன்னை நினைத்து வழிபட அறிவுரை கூறினார். மனதை மாதவன் பக்கம் திருப்புங்கள் என்று மனதார கூறினார். தாழ்ந்த நிலையிலிருந்து உள்ளம் உயர்வு கொள்ள வழி கூறினார்.
युवामवाप्तौ ककुभात्मतां चिरं
हरिं निरीक्ष्याथ पदं स्वमाप्नुतम् ।
इतीरेतौ तौ भवदीक्षणस्पृहां
गतौ व्रजान्ते ककुभौ बभूवतु: ॥५॥
yuvaamavaaptau kakubhaatmataaM chiraM hariM niriikshyaatha padaMsvamaapnutam |
itiiritau tau bhavadiikshaNaspR^ihaaM gatau vrajaante kakubhaubabhuuvatuH || 5
யுவாமவாப்தௌ ககுபா⁴த்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்யாத² பத³ம் ஸ்வமாப்னுதம் |
இதீரிதௌ தௌ ப⁴வதீ³க்ஷணஸ்ப்ருஹாம்
க³தௌ வ்ரஜாந்தே ககுபௌ⁴ ப³பூ⁴வது꞉ || 48-5 ||
குருவாயூரப்பா, அப்புறம் நடந்தது உனக்கு தெரியும் என்றாலும் உன்னால் அதெல்லாம் அறிந்த நான் சொல்கிறேன் கேள். நாரதரின் நல்லுபதேசம் நளகூபரர்கள் செவியில் ஏறவே இல்லை. மது அவர்கள் மதியை மயக்கி ஆணவம் தலைக்கேறி விட்டதால் நாரத முனிவரை உதாசீனம் செய்தார்கள். ''நீங்கள் இருவரும் மருத மரங்களாக வெகுகாலம் வாழ்வீர்கள். என்றோ ஒருநாள் ஹரியின் கருணையால் நீங்கள் திரும்பவும் உங்கள் உருவத்தை பெற்று திரும்புவீர்கள்.'' என்று சாபமிட்டார் நாரத ரிஷி. அப்போது தான் அவர்களுக்கு புத்தி வந்தது. ஆஹா இப்படிச் செய்து விட்டோமே என்று வருந்தினாலும் விடிவு காலத்தை நோக்கி இரு மருதமரங்களாகி வ்ரஜ பூமியில் நந்தகோபன் வீட்டு பின்புறம் கொல்லைப்புறத்தில் நெடிதுயர்ந்து காலம் காலமாக உன் வரவை, கருணையை எதிர்பார்த்து நின்றார்கள்.
अतन्द्रमिन्द्रद्रुयुगं तथाविधं
समेयुषा मन्थरगामिना त्वया ।
तिरायितोलूखलरोधनिर्धुतौ
चिराय जीर्णौ परिपातितौ तरू ॥६॥
atandramindradruyugaM tathaavidhaM sameyuShaa mantharagaaminaa tvayaa |
tiraayitOluukhalarOdhanirdhutau chiraaya jiirNau paripaatitau taruu ||6
அதந்த்³ரமிந்த்³ரத்³ருயுக³ம் ததா²வித⁴ம்
ஸமேயுஷா மந்த²ரகா³மினா த்வயா |
திராயிதோலூக²லரோத⁴னிர்து⁴தௌ
சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ || 48-6 ||
समेयुषा मन्थरगामिना त्वया ।
तिरायितोलूखलरोधनिर्धुतौ
चिराय जीर्णौ परिपातितौ तरू ॥६॥
atandramindradruyugaM tathaavidhaM sameyuShaa mantharagaaminaa tvayaa |
tiraayitOluukhalarOdhanirdhutau chiraaya jiirNau paripaatitau taruu ||6
அதந்த்³ரமிந்த்³ரத்³ருயுக³ம் ததா²வித⁴ம்
ஸமேயுஷா மந்த²ரகா³மினா த்வயா |
திராயிதோலூக²லரோத⁴னிர்து⁴தௌ
சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ || 48-6 ||
கிருஷ்ணா, குழந்தையாக, கயிற்றால் வயிற்றில் கட்டுண்டு கல் உரலோடு நின்ற நீ ஒரு க்ஷண நேரத்தில் எதிரே நீண்டு உயர்ந்து நின்ற இரு மருத மரங்களின் சரித்திரத்தை உணர்ந்து கொண்டாய். திரும்பி பார்த்தாய் கல் உரல் அசையாமல்கெட்டியாக உன் வயிற்றோடு கயிற்றால் பிணைக்கப்பட்டு நின்றது. கல் உரலும், கிருஷ்ணா, நீ யும் இப்போது இணை பிரியாத ஜோடி. கல் உரலோடு மருத மரங்களை நோக்கி நகர்ந்தாய். இரு மருத மரங்களுக்கும் இடையே கொஞ்சூண்டு இடைவெளி. கொஞ்சமும் தயக்கமில்லாமல், பயம் எதுவுமில்லாமல், பெரிய கல் உரல் பின் தொடர அந்த மரங்களின் இடையே உன் சிறிய குழந்தை உருவத்தோடு நீ அந்தப்பக்கம் நுழைந்து சென்று விட்டாய். பெரிய கல்லுரலால் உன்னைத் தொடன்று அந்த பக்கம் நுழைந்து வரமுடியவில்லையே.
பல ஆண்டுகள் நின்று வயதான மரங்கள் அவை இரண்டும். பேரிடி போன்று கிருஷ்ணனின் பலத்தால் இழுக்கப்பட்ட அந்த கல்லுரல் அந்த மரங்களின் இடைவெளியில் புகமுடியாமல் மரங்களை இடித்தது. கல் உரல் பலமாக இடித்து தள்ளியதால் அந்த இரு மரங்களும் தடால் என்று வேரோடு சாய்ந்து விழுந்தன.
अभाजि शाखिद्वितयं यदा त्वया
तदैव तद्गर्भतलान्निरेयुषा ।
महात्विषा यक्षयुगेन तत्क्षणा-
दभाजि गोविन्द भवानपि स्तवै: ॥७॥
abhaaji shaakhidvitayaM yadaa tvayaa tadaiva tadgarbhatalaannireyuShaa |
mahaatviShaa yakshayugena tatkshaNaadabhaaji gOvinda bhavaanapi stavaiH || 7
அபா⁴ஜி ஶாகி²த்³விதயம் யதா³ த்வயா
ததை³வ தத்³க³ர்ப⁴தலான்னிரேயுஷா |
மஹாத்விஷா யக்ஷயுகே³ன தத்க்ஷணா-
த³பா⁴ஜி கோ³விந்த³ ப⁴வானபி ஸ்தவை꞉ || 48-7 ||
''அப்பா, குருவாயூரப்பா கோவிந்தா, உன் பலத்தால் அந்த இரு மருத மரங்களும் வேருடன் விழுந்தன. அவற்றிலிருந்து இரு பிரகாசம் நிறைந்த யக்ஷர்கள் வெளிப்பட்டனர். உன்னை தரிசித்து வணங்கினார்கள் . வெகுகாலமாக உனக்காக காத்திருந்த அவர்கள் நன்றி யுணர்ச்சி யோடு உன்னை மனதார வேண்டி போற்றினார்கள்.
इहान्यभक्तोऽपि समेष्यति क्रमात्
भवन्तमेतौ खलु रुद्रसेवकौ ।
मुनिप्रसादाद्भव्दङ्घ्रिमागतौ
गतौ वृणानौ खलु भक्तिमुत्तमाम् ॥८॥
ihaanya bhaktO(a)pi sameShyati kramaad bhavantametau khalu rudrasevakau |
muni prasaadaad bhavadanghri maagatau gatau vR^iNaanau khalubhaktimuttamaam
இஹான்யப⁴க்தோ(அ)பி ஸமேஷ்யதி க்ரமாத்
ப⁴வந்தமேதௌ க²லு ருத்³ரஸேவகௌ |
முனிப்ரஸாதா³த்³ப⁴வத³ங்க்⁴ரிமாக³தௌ
க³தௌ வ்ருணானௌ க²லு ப⁴க்திமுத்தமாம் || 48-8 ||
சிறந்த சிவ பக்தர்களான நளகூபரர்கள் உன் அருமை பெருமை உணர்ந்து உனது திருவடியில் விழுந்து வணங்கினார்கள். நாரதரின் ஆசியால் உன் பக்தர்களானார்கள். அவருக்கு நன்றி சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சியோடு உன் ஆசியோடு விண்ணுலகம் திரும்பினார்கள்.
तदैव तद्गर्भतलान्निरेयुषा ।
महात्विषा यक्षयुगेन तत्क्षणा-
दभाजि गोविन्द भवानपि स्तवै: ॥७॥
abhaaji shaakhidvitayaM yadaa tvayaa tadaiva tadgarbhatalaannireyuShaa |
mahaatviShaa yakshayugena tatkshaNaadabhaaji gOvinda bhavaanapi stavaiH || 7
அபா⁴ஜி ஶாகி²த்³விதயம் யதா³ த்வயா
ததை³வ தத்³க³ர்ப⁴தலான்னிரேயுஷா |
மஹாத்விஷா யக்ஷயுகே³ன தத்க்ஷணா-
த³பா⁴ஜி கோ³விந்த³ ப⁴வானபி ஸ்தவை꞉ || 48-7 ||
''அப்பா, குருவாயூரப்பா கோவிந்தா, உன் பலத்தால் அந்த இரு மருத மரங்களும் வேருடன் விழுந்தன. அவற்றிலிருந்து இரு பிரகாசம் நிறைந்த யக்ஷர்கள் வெளிப்பட்டனர். உன்னை தரிசித்து வணங்கினார்கள் . வெகுகாலமாக உனக்காக காத்திருந்த அவர்கள் நன்றி யுணர்ச்சி யோடு உன்னை மனதார வேண்டி போற்றினார்கள்.
इहान्यभक्तोऽपि समेष्यति क्रमात्
भवन्तमेतौ खलु रुद्रसेवकौ ।
मुनिप्रसादाद्भव्दङ्घ्रिमागतौ
गतौ वृणानौ खलु भक्तिमुत्तमाम् ॥८॥
ihaanya bhaktO(a)pi sameShyati kramaad bhavantametau khalu rudrasevakau |
muni prasaadaad bhavadanghri maagatau gatau vR^iNaanau khalubhaktimuttamaam
இஹான்யப⁴க்தோ(அ)பி ஸமேஷ்யதி க்ரமாத்
ப⁴வந்தமேதௌ க²லு ருத்³ரஸேவகௌ |
முனிப்ரஸாதா³த்³ப⁴வத³ங்க்⁴ரிமாக³தௌ
க³தௌ வ்ருணானௌ க²லு ப⁴க்திமுத்தமாம் || 48-8 ||
சிறந்த சிவ பக்தர்களான நளகூபரர்கள் உன் அருமை பெருமை உணர்ந்து உனது திருவடியில் விழுந்து வணங்கினார்கள். நாரதரின் ஆசியால் உன் பக்தர்களானார்கள். அவருக்கு நன்றி சொன்னார்கள். மிக்க மகிழ்ச்சியோடு உன் ஆசியோடு விண்ணுலகம் திரும்பினார்கள்.
ततस्तरूद्दारणदारुणारव-
प्रकम्पिसम्पातिनि गोपमण्डले ।
विलज्जितत्वज्जननीमुखेक्षिणा
व्यमोक्षि नन्देन भवान् विमोक्षद: ॥९॥
tatastaruuddaaraNa daaruNaarava prakampi sampaatini gOpamaNDale |
vilajjita tvajjananii mukhekshiNaavyamOkshi nandena bhavaan vimOkshadaH || 9
ததஸ்தரூத்³தா³ரணதா³ருணாரவ-
ப்ரகம்பிஸம்பாதினி கோ³பமண்ட³லே |
விலஜ்ஜிதத்வஜ்ஜனநீமுகே²க்ஷிணா
வ்யமோக்ஷி நந்தே³ன ப⁴வான்விமோக்ஷத³꞉ || 48-9 ||
இது இவ்வாறிருக்க, அந்த ரெண்டு நெடிய வயதான நீண்ட உயரமான இரு மருதமரங்களும் வேருடன் கீழே விழுந்தபோது நிலமே அதிரும்படியாக தடால் என்று சப்தம் கேட்டதால் கோபர்கள் கோபியர்கள் திடுக்கிட்டனர். என்ன இது செவிடு பொடியாகும் சப்தம் என்று யசோதையோடு சேர்ந்து கொல்லைப்புறம் அதிர்ச்சியோடு ஓடிவந்தார்கள். சிறிய குழந்தை நீ, உனக்கு பின்னால் கயிற்றில் கட்டப்பட்ட கல் உரல். இரண்டுக்கும் நடுவே இந்தப்பக்கம் ஒன்று அந்தப்பக்கம் ஒன்றாக இரு நெடிய பெரிய மருத மரங்கள் விழுந்து கிடக்கிறது. நந்தகோபன் ஓடிவந்து உன்னை கயிற்றிலிருந்து விடுவித்தான். முகம் தான் செய்த காரியத்தால் குன்றிப்போக தலை குனிந்து யசோதை சிலையாக நின்று கொண்டு உனைப் பார்த்தாள் .
महीरुहोर्मध्यगतो बतार्भको
हरे: प्रभावादपरिक्षतोऽधुना ।
इति ब्रुवाणैर्गमितो गृहं भवान्
मरुत्पुराधीश्वर पाहि मां गदात् ॥१०॥
mahiiruhOrmadhyagatO bataarbhakO hareH prabhaavaadaparikshatO(a)dhunaa |
iti bruvaaNairgamitO gR^ihaM bhavaan marutpuraadhiishvara paahi maamgadaat || 10
மஹீருஹோர்மத்⁴யக³தோ ப³தார்ப⁴கோ
ஹரே꞉ ப்ரபா⁴வாத³பரிக்ஷதோ(அ)து⁴னா |
இதி ப்³ருவாணைர்க³மிதோ க்³ருஹம் ப⁴வான்
மருத்புராதீ⁴ஶ்வர பாஹி மாம் க³தா³த் || 48-10 ||
हरे: प्रभावादपरिक्षतोऽधुना ।
इति ब्रुवाणैर्गमितो गृहं भवान्
मरुत्पुराधीश्वर पाहि मां गदात् ॥१०॥
mahiiruhOrmadhyagatO bataarbhakO hareH prabhaavaadaparikshatO(a)dhunaa |
iti bruvaaNairgamitO gR^ihaM bhavaan marutpuraadhiishvara paahi maamgadaat || 10
மஹீருஹோர்மத்⁴யக³தோ ப³தார்ப⁴கோ
ஹரே꞉ ப்ரபா⁴வாத³பரிக்ஷதோ(அ)து⁴னா |
இதி ப்³ருவாணைர்க³மிதோ க்³ருஹம் ப⁴வான்
மருத்புராதீ⁴ஶ்வர பாஹி மாம் க³தா³த் || 48-10 ||
''ஹா, தெய்வமே என் செல்வத்தை காப்பாற்றினாயே, அந்த மரங்கள் இந்த குழந்தை மேல் விழுந்திருந்தால் உயிர் தப்பியிருக்குமா, கோவிந்தா, நாராயணா, ஹரி, நீதான் காப்பாற்றினாய் என்று யசோதையோடு சேர்ந்து அனைவரும் உரக்க உன்னையே போற்றினார்கள். வயதான இந்த மரங்கள் தானாகவே விழும் வேளையில் உரலோடு இந்த குழந்தை அங்கே போய் சிக்கிக்கொண்டது, உயிர் தப்பியது ஏதோ அந்த மஹா விஷ்ணு அனுக்ரஹத்தால், பூர்வ புண்யத்தால் என்று அதிசயித்தார்கள். கண்களில் கண்ணீரோடு யசோதை தான் செய்த காரியத்துக்கு வருந்தி உன்னை வாரி முத்தமிட்டு இடுப்பில் உட்காரவைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் .
எண்டே குருவாயூரப்பா, நளகூபரர்களுக்கு காருண்யம் வழங்கிய நீ எனக்கும் நோய் தீர்த்து வாழ வகை செய்யப்பா'' என்று இந்த தசகத்தை மேப்பத்தூர் நாராயண பட்டத்ரி நிறைவு செய்கிறார்.
No comments:
Post a Comment