ஸ்ரீமந் நாராயணீயம் - நங்கநல்லூர் J K SIVAN --
59வது தசகம்
59. ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும்
இப்போது எல்லாம் ஸ்ரீ கிருஷ்ணன் கொஞ்சம் பெரிய பையன். அற்புதமாக புல்லாங்குழலில் கானம் செய்கிறான். கையிலோ இடுப்பிலோ புல்லாங்குழல் இல்லாமல் அவனைப் பார்க்க முடிகிறதில்லை. அவன் இசையைக் கேட்டு மயங்காத உயிர்கள் இல்லை . பிருந்தாவன உயிர்கள் அத்தனையும் அவன் அடிமையாகியதில் என்ன ஆச்சர்யம்?
ब्रह्म तत्त्वपरचिन्मुदात्मकं वीक्ष्य सम्मुमुहुरन्वहं स्त्रिय: ॥१॥
tvadvapurnava kalaaya kOmalaM premadOhana masheShamOhanam |
brahmatattva parachinmudaatmakaM viikshya sammumuhuranvahaM sitrayaH || 1
த்வத்³வபுர்னவகலாயகோமலம்
ப்ரேமதோ³ஹனமஶேஷமோஹனம் |
ப்³ரஹ்மதத்த்வபரசின்முதா³த்மகம்
வீக்ஷ்ய ஸம்முமுஹுரன்வஹம் ஸ்த்ரிய꞉ || 59-1 ||
ஆஹா, குருவாயூரப்பா, கிருஷ்ணனாக நீ தரும் அந்த அற்புத தரிசனத்திற்கு தான் எத்தனை மஹிமை. அன்றலர்ந்த தாமரை என்பார்களே அது உன் முகம் தான் அப்பா. ஒவ்வொருநாளும் உன்னைக் காணும் கண்கள் பாக்யம் பெற்றவை. அது பெரும் ஆனந்தத்தை சொல்ல முடியாது. சொல்லி முடியாது. இந்த ரெண்டுமே அருமையான வாக்கியங்கள். சொல்லமுடியாது என்றால் சொல்ல வார்த்தைகள் இல்லை என்று அர்த்தம், சொல்லி முடியாது என்றால் சொல்லிக்கொண்டே போனால் அதற்கு முடிவே இல்லை என்று அர்த்தம். ஒரு சின்ன கொக்கி 'ல' மேல் போட்டால் இத்தனை அர்த்தமா? ஆஹா, தமிழே உன் ஆழம், அர்த்த புஷ்டி என்னை மயக்குகிறது. கிருஷ்ணன் மாதிரி தான் நீயும். பிருந்தாவன கோபியர்கள் கண்ணனைக் கண்டு அவனை ஏன் சுற்றிக் கொண்டே இருந்தார்கள் என்று இப்போது தான் புரிகிறது. அழகிய மலரை யாருக்கு தான் பிடிக்காது?
मन्मथोन्मथितमानसा: क्रमात्त्वद्विलोकनरतास्ततस्तत: ।
गोपिकास्तव न सेहिरे हरे काननोपगतिमप्यहर्मुखे ॥२॥
manmathOnmathita maanasaaH kramaattvadvilOkanarataa statastataH |
gOpikaastava na sehire hare kaananOpagati mapyaharmukhe || 2
மன்மதோ²ன்மதி²தமானஸா꞉ க்ரமா-
த்த்வத்³விலோகனரதாஸ்ததஸ்தத꞉ |
கோ³பிகாஸ்தவ ந ஸேஹிரே ஹரே
கானநோபக³திமப்யஹர்முகே² || 59-2 ||
கிருஷ்ணா, தேன் தேடும், குடிக்கும், வண்டாக அத்தனைபேரும் உன்னை சூழ்ந்துகொண்டு உன்னை ரசித்தார்கள். நீ காலை வேளைகளில் காட்டுக்கு பசுக்களோடு போகிறாயே மாலை வரை உன்னை பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் முகத்தில் ரேகையிட்டது.

निर्गते भवति दत्तदृष्टयस्त्वद्गतेन मनसा मृगेक्षणा: ।
वेणुनादमुपकर्ण्य दूरतस्त्वद्विलासकथयाऽभिरेमिरे ॥३॥
nirgate bhavati dattadR^iShTayaH tvadgatenamanasaa mR^igekshaNaaH |
veNunaada-mupakarNya duurataH tvadvilaasa kathayaa(a)bhiremire || 3
நிர்க³தே ப⁴வதி த³த்தத்³ருஷ்டய-
ஸ்த்வத்³க³தேன மனஸா ம்ருகே³க்ஷணா꞉ |
வேணுனாத³முபகர்ண்ய தூ³ரத-
ஸ்த்வத்³விலாஸகத²யாபி⁴ரேமிரே || 59-3 ||
அமைதியான, நிசப்தமான பிருந்தாவன மேய்ச்சல் காட்டிலிருந்து நீ ஒலிக்கும் அற்புதமான வேணு கானம் காற்றினிலே வரும் கீதமாக அவர்கள் செவியில் வந்து விழும்போது தன்னை மறந்த ஆனந்த நிலையில் இருந்தார்கள். மனதை அவர்கள் தயிர் கடைவது போல் அது கடைந்தது. உன்னைக் கண்டபோதெல்லாம் கண் இமைக்காமல் தேவர்கள் போல் பார்த்துக்கொண்டே இருக்க தோன்றிற்று.
काननान्तमितवान् भवानपि स्निग्धपादपतले मनोरमे ।
व्यत्ययाकलितपादमास्थित: प्रत्यपूरयत वेणुनालिकाम् ॥४॥
kaananaanta-mitavaan bhavaanapi snigdhapaadapatale manOrame |
vyatyayaakalita paadamaasthitaH pratyapuurayata veNunaalikaam || 4
உனக்கு என்று வழக்கம் ஏற்படுத்திக் கொண்டாய் கிருஷ்ணா. பண்டீர வனத்தில் அந்த பெரிய ஆலமர வேர் சிம்மாசனத்தில் நீ கையில் புல்லாங்குழலோடு ஒய்யாரமாக உட்காரும் தோரணை! .அடடா எப்படி வர்ணிப்பேன். அப்புறம் வேணுகான கச்சேரி தொடருமே . கால் மேல் கால் போட்டுக் கொண்டு அடர்ந்த மரங்களின் சுகமான நிழலில் நறுமண மலர்கள் வாசத்தோடு கிருஷ்ண மஹாராஜாவின் தேன் ஒழுகும் வம்ஸி (கிருஷ்ணனின் குழல்) கீதம் ஒலி பரப்பாகுமே !.

கானநாந்தமிதவான்ப⁴வானபி
ஸ்னிக்³த⁴பாத³பதலே மனோரமே |
வ்யத்யயாகலிதபாத³மாஸ்தி²த꞉
ப்ரத்யபூரயத வேணுனாலிகாம் || 59-4 ||
मारबाणधुतखेचरीकुलं निर्विकारपशुपक्षिमण्डलम् ।
द्रावणं च दृषदामपि प्रभो तावकं व्यजनि वेणुकूजितम् ॥५॥
maarabaaNadhuta khechariikulaM nirvikaara pashupakshi maNDalam |
draavaNaM cha dR^iShadaamapi prabhO taavakaM vyajani veNukuujitam || 5
மாரபா³ணது⁴தகே²சரீகுலம்
நிர்விகாரபஶுபக்ஷிமண்ட³லம் |
த்³ராவணம் ச த்³ருஷதா³மபி ப்ரபோ⁴
தாவகம் வ்யஜனி வேணுகூஜிதம் || 59-5 ||

மாரனின், மதனின் அம்புகளை விட கூர்மையாக இதயத்தை துளைக்கும் சக்தி வாய்ந்தது உன் வேணு கானம். மனிதர்களை மட்டும் அல்ல, கேட்கும் அனைத்து ஜீவராசிகளின் இதயத்தையும் கவரும் காந்த சக்தி கொண்டது. இல்லாவிட்டால் உன்னைச் சுற்றி பசுக்கள், கன்றுகள், மான்கள், மயில்கள் பறவைகள் என்று எத்தனையோ, ஏன், மரங்களின் மலர்கள் கூட மகிழுமா? கல்லும் கரையும்,கனியும், கீதம் என்பது இது தான்.
वेणुरन्ध्रतरलाङ्गुलीदलं तालसञ्चलितपादपल्लवम् ।
तत् स्थितं तव परोक्षमप्यहो संविचिन्त्य मुमुहुर्व्रजाङ्गना: ॥६॥
veNurandhra taralaanguliidalaM taalasanchalita paadapallavam |
tatisthataM tava parOkshamapyahO sanvichintya mumuhurvrajaanganaaH || 6
வேணுரந்த்⁴ரதரலாங்கு³லீத³லம்
தாலஸஞ்சலிதபாத³பல்லவம் |
தத்ஸ்தி²தம் தவ பரோக்ஷமப்யஹோ
ஸம்விசிந்த்ய முமுஹுர்வ்ரஜாங்க³னா꞉ || 59-6 ||
புல்லாங்குழல் வாசிக்கும் நளினம் பார்க்கவே அற்புதமாக இருக்கும். புல்லாங்குழல் வித்வான்
களை கவனியுங்கள். மூங்கில் குழலின் துளைகள் மேல் விரல் நுனிகள் நர்த்தனம் ஆடும் அழகே அழகு. (என்னுடைய நெருங்கிய உறவினர், புல்லாங்குழல் வித்துவான், கலைமாமணி, ஸ்ரீ KR கணபதி அவர்கள் அருகிலே அமர்ந்து அவர் வீட்டில் தனிமையில் வாசிக்கும்போது அவர் விரலசைவுகளில் மனதைப் பறிகொடுத்திருக்கிறேன்.)கிருஷ்ணன் வாசிக்கும் அழகை, விரல்களின் தாள நர்த்தனத்தை எப்படி சொல்வது? கால்களும் ஆனந்தமாக தாளம் போடும். நீ காட்டில் இப்படி வாசிப்பதை நேரில் காணமுடியாமல் வீட்டில் மனக்கண்ணால் கோபியர்கள் ரசித்து மயங்கி விழுந்தார்கள். நாங்கள் ஏட்டில் ரசித்து மகிழ்கிறோம்.
निर्विशङ्कभवदङ्गदर्शिनी: खेचरी: खगमृगान् पशूनपि ।
त्वत्पदप्रणयि काननं च ता: धन्यधन्यमिति नन्वमानयन् ॥७॥
nirvishanka bhavadanga darshiniiH khechariiH khagamR^igaan pashuunapi |
tvatpadapraNayi kaananaM cha taaH dhanyadhanyamiti nanvamaanayan || 7
நிர்விஶங்கப⁴வத³ங்க³த³ர்ஶினீ꞉
கே²சரீ꞉ க²க³ம்ருகா³ன்பஶூனபி |
த்வத்பத³ப்ரணயி கானநம் ச தா꞉
த⁴ன்யத⁴ன்யமிதி நன்வமானயன் || 59-7 ||
பிருந்தாவனத்தில் நீ வாழ்ந்த காலத்தில் வாழக் கொடுத்துவைத்திருந்த ஈ , எறும்பு, கொசு, புழு கூட என்னைவிட பல கோடி மடங்கு பாக்கியம், புண்ணியம் செய்திருக்கிறது கிருஷ்ணா, அவை வாழ்ந்தது பிருந்தாவனம் எனும் வெறும் மண்ணல்ல. பூலோக வைகுண்டம், ஸ்வர்க பூமியில். எங்குமே ஆனந்தம். கடவுளோடு சேர்ந்து வாழும் அதிர்ஷ்டம். இப்போதாவது ஒரு முறை நீ வாழ்ந்த ''அந்த '' பூமியை மிதித்து வணங்க மனதில் தீராத ஒரு ஆசை. என்றோ ஒருநாள் நிறைவேறுமா?

आपिबेयमधरामृतं कदा वेणुभुक्तरसशेषमेकदा ।
दूरतो बत कृतं दुराशयेत्याकुला मुहुरिमा: समामुहन् ॥८॥
aapibeyamadharaamR^itaM kadaa veNubhuktarasasheShamekadaa |
duuratO bata kR^itaM duraashaye-tyaakulaa muhurimaaH samaamuhan || 8
ஆபிபே³யமத⁴ராம்ருதம் கதா³
வேணுபு⁴க்தரஸஶேஷமேகதா³ |
தூ³ரதோ ப³த க்ருதம் து³ராஶயே-
த்யாகுலா முஹுரிமா꞉ ஸமாமுஹன் || 59-8 ||
அதர பான ருசியை 'வாயில் முத்தமிட்டாண்டி'' என்று பாரதி கண்ணனைப் பற்றி எழுதும் கண்ணம்மா பாட்டில் ரசித்து இருக்கிறோமே. அதை உண்மையிலேயே கண்ணனை வாயில் முத்தமிட்டு கோபியர்கள் பிருந்தாவனத்தில் ஆனந்தானுபவம் பெற்றவர்கள். அந்த மூங்கில் புல்லாங்குழம் பெற்ற பாக்யம் நாங்கள் பெறவில்லையே என்று ஏங்கியவர்கள் எண்ணற்றவர்கள்.

प्रत्यहं च पुनरित्थमङ्गनाश्चित्तयोनिजनितादनुग्रहात् ।
बद्धरागविवशास्त्वयि प्रभो नित्यमापुरिह कृत्यमूढताम् ॥९॥
pratyahancha punaritthamanganaaH chittayOni janitaa danugrahaat |
baddharaagavivashaaH tvayi prabhO nityamaapuriha kR^ityamuuDhataam || 9
ப்ரத்யஹம் ச புனரித்த²மங்க³னா-
ஶ்சித்தயோனிஜனிதாத³னுக்³ரஹாத் |
ப³த்³த⁴ராக³விவஶாஸ்த்வயி ப்ரபோ⁴
நித்யமாபுரிஹ க்ருத்யமூட⁴தாம் || 59-9 ||
நாளொரு வண்ணமும் பொழுதொரு அழகுமாக வளர்ந்து வரும் உன் மேல் பிருந்தாவன வாசிகளுக்கு அளவு கடந்த அன்பும் பாசமும் அவ்வாறே வளர்ந்து வந்தது. உன்னோடு கூடவே எப்போதும் இருக்கவேண்டும் என்ற அடக்கமுடியாத ஆவல் அதிகரித்தது.

रागस्तावज्जायते हि स्वभावा-
न्मोक्षोपायो यत्नत: स्यान्न वा स्यात् ।
तासां त्वेकं तद्द्वयं लब्धमासीत्
भाग्यं भाग्यं पाहि मां मारुतेश ॥१०॥
raagastaavajjaayate hi svabhaavaan
mOkshOpaayO yatnataH syaannavaasyaat |
taasaantvekaM taddvayaM labdhamaasiidbhaagyaM
bhaagyaM paahi vaataalayesha ||10
ராக³ஸ்தாவஜ்ஜாயதே ஹி ஸ்வபா⁴வா-
ந்மோக்ஷோபாயோ யத்னத꞉ ஸ்யான்ன வா ஸ்யாத் |
தாஸாம் த்வேகம் தத்³வயம் லப்³த⁴மாஸீத்
பா⁴க்³யம் பா⁴க்³யம் பாஹி மாம் மாருதேஶ || 59-10 ||
[** வாதாலயேஶ **]
எண்டே குருவாயூரப்பா, பிருந்தாவன வாசிகள் அனைவருமே அதிர்ஷ்டசாலிகள், புண்ணியம் செய்த ஜீவன்கள். ஜீவன் முக்தி அடைந்தவர்கள். உன் ஒளியும், ஒலியுமே மோக்ஷத்தை தரும் பாக்யம் பெற்றவர்கள். பல யுக தவம் செய்யவேண்டியதே இல்லையே. என்னையும் உன் அருளால் நோய் தீர்த்து ரக்ஷிப்பாய்.
No comments:
Post a Comment