கொஞ்சம் யோசிப்போமா? J K SIVAN
மனித ஸ்வபாவம் விசித்திரமானது .
1.சார், நான் இந்த காரியம் செய்யப்போகிறேன் என்று ஒரு விஷயத்தை ஒருவர் சொல்கிறார். அல்லது செய்கிறார் என்றவுடன் நமக்கு என்ன எண்ணம் தோன்றுகிறது? நமக்கு அப்படி அவர் செய்யக்கூடாது, செய்வது/செய்தது பிடிக்கவில்லை, என்றால் அந்த மனிதர் மீது கோபம் உண்டாகிறது.
2. அவர் அப்படி செய்ய நினைப்பது,செய்த காரியம், நமக்கு ''அவர் அப்படி செயதிருக்க வேண்டாமே, சரி நாம் என்ன செய்யமுடியும் என்று பேசாமல் ஒப்புக்கொண்டால் நாம் சகிப்பு தன்மை கொண்டவர்கள்.
3. நம்மிடம் இல்லாத திறமை, நம்மால் முடியாததை, அவர் செய்யப்போகிறார், செயது விட்டார் என்றால் நமது மனதில் அவர் மேல் பொறாமை உண்டாகிறது.
4. நம்மால் முடியாததை, அவர் செய்ய நினைப்
பது, செய்த காரியம், நமக்கு அவரால் செய்ய முடிகிறது, திறமை இருக்கிறது கெட்டிக்காரர் என்று ஒப்புக்கொள்ள முடிந்தால், நாமும் அது போல், அவர் போல் செய்ய ஒரு தூண்டுதல், ஒரு புத்துணர்ச்சி, உற்சாகம், உந்துதல் உண்டாகிறது.
மேலே சொன்னதில் நான்காவது மனப்பான்மை நம்மிடம் இருந்தால் ரொம்ப நன்றாக நம் வாழ்க்கை ஓடும். இல்லையென்றால் ரெண்டாவதாக சொன்ன சகிப்பு தன்மையாவது இருந்தால் தொந்தரவில்லை . மற்றது நம்மை தீர்த்து கட்டிவிடும்.
No comments:
Post a Comment