கீதாஞ்சலி 52. J.K. SIVAN தாகூர்
52. கண்ணன் கொடுத்த கூர்வாள்
52. I thought I should ask of thee---but I dared not---the rose wreath thou hadst on thy neck. Thus I waited for the morning, when thou didst depart, to find a few fragments on the bed.And like a beggar I searched in the dawn only for a stray petal or two.
Ah me, what is it I find? What token left of thy love?It is no flower, no spices, no vase of perfumed water. It is thy mighty sword, flashing as a flame, heavy as a bolt of thunder. The young light of morning comes through the window and spread itself upon thy bed. The morning bird twitters and asks, `Woman, what hast thou got?' No, it is no flower, nor spices, nor vase of perfumed water---it is thy dreadful sword.
I sit and muse in wonder, what gift is this of thine. I can find no place to hide it. I am ashamed to wear it, frail as I am, and it hurts me when press it to my bosom. Yet shall I bear in my heart this honour of the burden of pain, this gift of thine.
From now there shall be no fear left for me in this world, and thou shalt be victorious in all my strife. Thou hast left death for my companion and I shall crown him with my life. Thy sword is with me to cut asunder my bonds, and there shall be no fear left for me in the world.
From now I leave off all petty decorations. Lord of my heart, no more shall there be for me waiting and weeping in corners, no more coyness and sweetness of demeanour. Thou hast given me thy sword for adornment. No more doll's decorations for me!
ஒரு சின்ன அட்வைஸ். தாகூர் மைசூர்பா இல்லை. வாயில் போட்ட உடனே கரைத்து விட. தாகூரை புரிந்து கொள்ள முதலில் விருப்பம் வேண்டும். அதோடு பொறுமை அவசியம். கருத்தை நேரடியாக தெளிவாகச் சொல்லமாட்டார். அழகிய உவமைகளில் உண்மையைச் சொல்வதில் மன்னன். ஆழ்ந்த சிந்தனையின் அழகிய எழுத்துகள். அதனால் தான் நோபல் பரிசு! அவரே வங்காள மொழியில் எழுதி அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து தந்தது வரப்பிரசாதம். ஒரு நாளைக்கு ஒரு கீதாஞ்சலி என்பதே ரொம்ப ஜாஸ்தி நமக்கு.
'' கிருஷ்ணா, உன்னை ஒன்று கேட்க நினைத்தேன். கேட்க தயக்கமாகவே இருந்தது இதுவரை. தயக்கம் மட்டுமா ? இல்லையப்பா, அச்சமும் கூட??
எது பற்றி கேட்கிறேன் என்கிறாயா. சொல்கிறேன். உன் கழுத்தில் அடர்த்தியாக பரிமளிக்கும் ரோஜாப்பூ மாலை பற்றி தான் . நேற்றே கேட்க நினைத்து இன்று காலை வரை பொறுத்திருந்தேன். நீ கிளம்பிப் போனபின் நீ நேற்று ராத்திரி படுத்திருந்த படுக்கையில் பார்த்தேன் சில ரோஜா இதழ்கள் கண்ணில் பட்டது.
ஒரு பிச்சைக்காரன் முதல்நாள் பசியோடு விடி காலையில் ஏதாவது கிடைக்காதா என்று தேடுவது போல் பார்த்து அந்த ரெண்டு மூன்று இதழ்களை எடுத்து வைத்துக் கொண்டேன்.
அது சரி , இப்போது என் கையில் என்ன ? உன் அன்பின் அடையாளமா? நிச்சயம் அது மலர் இல்லை, வாசனை திரவியமா என்றால் அதுவும் இல்லை? கமகமக்கும் சொம்பு நிறைந்த பன்னீரா? இல்லவே இல்லை. அது உன்னுடைய, நீ எனக்கு தந்த உன் வீர, கூர்மையான, உடைவாள். இந்திரனின் வஜ்ராயுதமா? கண்ணைப் பறிக்கும் மின்னலா? நெருப்புத் துண்டா? அக்னிக் குஞ்சா?
இந்த இளங்காலை நேரத்தில், நீ சயனித்த படுக்கை மீது இப்போது ஜன்னல் வழியாக நுழைந்த மெல்லிசான ஒரு சூரிய ஒளிக் கீறல்தனது பொன்னிற வண்ணத்தை இளம் சூட்டில் எவ்வளவு அழகாக படர வைக்கிறது.
கீச் கீச்சென்று ஒரு குட்டி வால் நீண்ட கருங் குருவி ஜன்னல் பக்கத்தில் எங்கோ மரத்தில் கண்ணுக்கு தெரியாமல் கிளையில் அமர்ந்த வாறே, ''ஹே பெண்ணே, உன் கையில் என்னடி அது? பூவிதழா? வாசனை திரவியம் எதுவோ வா ? பன்னீர் சொம்பா, ஓஹோ அது இனிமேல் உன்னுடைய கூர்வாள் தானே?''
நான் சிலையாக சுவற்றில் சாய்ந்து அமர்ந்துவிட்டேன். என் மண்டை காய்ந்து விடும்போல் இருக்கிறது யோசித்தேன் .
''இது என்னடா இப்படி ஒரு பரிசு உன்னிடமிருந்து எனக்கு? இதை எங்கே கொண்டுபோய் மறைத்து வைப்பேன்? இதை அணிந்து கொள்ள வெட்கம் பிடுங்கி தின்கிறது. நான் வலிமையற்றவள். சக்தியில் லாதவள். என் இதயத்தோடு அணைத்து வைத்துக் கொண்டால் இந்த வாள் , அப்பப்பா எவ்வளவு கூர்மையாக ஈட்டி போல் தாக்குகிறது. வலிக்கிறது. என் நெஞ்சு கிழிந்து விடுமோ? இருந்தாலும் பரவாயில்லை, உன்னுடைய இந்த பரிசை நான் என் இதயத்தில் பூட்டி வைத்துக் கொள்ளட்டுமா? நிச்சயம் அதை என் நெஞ்சில் ஆழமாக அணைத்து வைத்துக் கொள்வேன். அது எனக்கு கிடைத்த மரியாதை. கௌரவம். நீ கொடுத்த பரிசல்லவா?
இனி என் மனதில் பயமில்லை. நான் சுதந்திரமாக சிறகடித்து பறப்பேன். எதற்கும் எவரிடமும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. என் துன்பங்களிலிருந்து என்னைக் கைப் பிடித்து தூக்கும் பாதுகாப்பு நீ. மரணம் ஒன்றே என் தோழன் இனி என்று ஆக்கி விட்டாய். மரண தேவனுக்கு என் வாழ்க்கை எனும் கிரீடத்தை சூட்டி அலங்கரித்து அழகு பார்ப்பேன்.
நீ கொடுத்த வாளுக்கு நன்றி கிருஷ்ணா. இனி அதால் என் சொந்த பந்தங்களை வெட்டி வீசி எறிவேன் . நமக்கினி பயமில்லை, நமனை அஞ்சோம் என்று எல்லாம் உரக்கப் பாடுவேன். இனி எனக்கு அலங்காரம் ஒப்பனை எதுவும் தேவையில்லை. இனி ஒருமுறை கூட எங்கும் உனக்காக நான் காத்திருக்க மாட்டேன். மூலையில் உட்கார்ந்து அழமாட்டேன். இனி எனக்குள் ஒளிவு மறைவு இல்லை. வெட்கமோ அந்தரங்கமோ ஒன்றும் இல்லை. இலைமறைவு காய் மறைவு மனப்பான்மை இல்லை. எனக்கு இனி ஒரே ஆபரணம் என்னை காக்கும் உன் வீர வாள் மட்டுமே. . அதுவே போதும். வேறு பொம்மைச் சிங்காரம் எதுவுமே வேண்டாம், வெளிப்பகட்டும் வேஷமும் எனக்கு தேவையில்லை.
No comments:
Post a Comment