Tuesday, September 15, 2020

PATTAMANGALAM GURU

 

பட்டமங்கலம் குரு  J K SIVAN

சகல ஞானமும் தருபவர்  குரு தக்ஷிணா மூர்த்தி.  இவர்  கல் ஆல மரத்தடியில் தெற்கு நோக்கி  அமர்ந்து மெளனமாக சனகாதி முனிவர்களுக்கு  சின் முத்திரை காட்டி ஞானம் புகட்டியவர்.வியாழன் என்றுமே  குருவாரம்.  யோக தக்ஷிணாமுர்த்தி, வீணா தக்ஷிணா முர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி என்றெல்லாம் வழிபடுகிறோம். பன்னிரண்டு  ஜ்யோதிர் லிங்கங்களில் உஜ்ஜயினியில் உள்ள மஹாகாளேஸ்வரர் தக்ஷிணாமுர்த்தி.  மிகப் பழைய தக்ஷிணாமுர்த்தி ஆலயம்  தஞ்சாவோர் தஞ்சாவூர் பூந்தோட்டத்தில் உள்ளது. 

பட்ட மங்கலம்  முதலில் பட்ட மங்கை என்ற பெயரில் இருந்த காரணம் கார்த்திகைப் பெண்கள் அறுவர் சாபம் பெற்று இந்த ஊரில் தவம் இருந்து ஆயிரமாண்டுகள் சென்று, பரமசிவன் இங்கு வந்து  தக்ஷிணாமூர்த்








தியாக அவர்களுக்கு உபதேசம் செய்வித்து அவர்கள் விமோச்சனம் பெற்றதாக திருவிளையாடல் புராணம் சொல்கிறது. சிவன் கால் பட்டதால்  பட்ட, ஆறு பெண்கள் இருந்ததால் மங்கை. பட்டமங்கை கொஞ்சம் கொஞ்சமாக பட்டமங்கலமாகிவிட்டது. 

நமது முகநூல் அன்பர் வாசகி  தேவகோட்டை  வித்யா ஸ்ரீனிவாசன் சமீபத்தில் பட்டமங்கலம் சென்று அங்கே தான் தரிசித்த தக்ஷிணா மூர்த்தி கோவில் படங்கள் சிலவற்றை அனுப்பி இருந்தார்.  அந்த ஆலயத்தைபற்றி சில விவரங் கள் தருகிறேன்.   மிகப்பெரிய  விருக் ஷமாக சிறு விதத்திலிருந்து புறப்பட் ட அந்த மஹா பெரிய  ஆலமரம் கண்ணுக்கு விருந்து.

தமிழ்நாட்டில் சிவகங்கை ஜில்லாவில் காரைக்குடி  போகும் வழியில்   பட்டமங்க லம்  கிராமத்தில்அற்புதமான  மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வெளியே   தனியாக  ஒரு  சந்நிதியில்  இருப்பவர்   தக்ஷிணாமூர்த்தி.  மதுரையிலிருந்து 65 கி.மீ.  விசேஷம் இங்கே  என்னவென்றால் தக்ஷிணாமுர்த்தி வழக்கம் போல தெற்கு நோக்காமல் கிழக்கே பார்த்து வீராஸனத்தில்  அமர்ந்துஇருக்கிறார்.  பிறை  கொன்றை மலர்  சூடி  அக்னி ஏந்தியவாறு புன்னகை.

சென்னையிலிருந்து செல்பவர்கள் திருச்சி திருப்பத்துர் வழியாகவும் பட்டமங்கலம் செல்லலாம். மதுரையிலிருந்து காரில் சென்றால்  கிட்டத்தட்ட 2 மணி நேரம். திருச்சியிலிருந்து  3மணி நேரம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...