ரமணரும் மரணமும் J K SIVAN
நான் மதுரையை விட்டு கிளம்புவதற்கு ஒன்றரை மாதம் முன்னால், திடீரென்று நடந்த, என் வாழ்க்கையையே மாற்றிய ஒரு சம்பவம் என்ன என்று சொல்கிறேன்.
1891ல் திண்டுக்கல்லில் எங்க மாமாவின் வீட் டு முதல் மாடியில் தான் நான் எப்போதும் காணப்படுவேன். எனக்கு உடம்பு வியாதி ஒன்றுமில்லை. ஆனால் நான் ஒரு கும்பகர்ணன். தூக்கப்பிரியன் . தூங்கினால் மரக்கட்டை.
ஒருநாள் நான் அப்படி தூங்கும்போது ஒரு பெரிய கும்பல் என்னை எழுப்புகிறது. கதவை பிடிக்கிறார்கள், கத்துகிறார்கள். எப்படியோ கதவை திறந்துகொண்டு உள்ளே என்னிடம் வந்து என்னை ஆட்டி அசைத்து எழுப்புகி றார்கள். ஒருவழியாக என்னை எழுப்பி விட்டார்கள். நல்ல தூக்கம் நல்ல ஆரோக்கி யத்துக்கு அடையாளம். இரவுகளில் நான் அரைத்தூக்கத்திலும் இருப்பேன். நான் பலசாலி. என்னுடைய நண்பவர்கள் நான் விழித்துக்கொண்டிருக்கும் போது என்னைச் சீண்டமாட்டார்கள். தூங்கிவிட்டால் அவர்களுக்கு கொண்டாட்டம் என்ன என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். அடிக்கலாம், கடிக்கலாம், தரதர வென்று கையை காலை இழுக்கலாம், கீழும் மேலும் தள்ளலாம். தூக்கம் கலைந்து எழுந்த பிறகு அவர்கள் சேஷ்டை கேள்விப்பட்டால் கோபம் கொள்ள மாட்டேன். சிரித்துக்கொண்டு பொறுத்துக்கொள்வேன்.
இரவு நடந்தது மறுநாள் காலையில் மறந்து விடும். இதனால் என் உடல்நிலை ஆரோக்யம் கெடவில்லை.
ஆகவே அந்த ஒருநாள் நான் தனியாக உட்கார்ந்து இருந்தேன். ஆனால் ஏனோ என்னை மரண பயம் பிடித்துக் கொண்டது. வியர்த்துக் கொட்டியது. அவ்வளவு தான் இனிமேல் நான் இல்லை என்று நடுங்கினேன். ஏன் இப்படி ஒரு பயம், எண்ணம், என்று அப்போது எனக்கு விளக்கதெரியாது. ஏன் இந்த திடீர் மரண பயம் என்று சிந்திக்கவும் தோன்றவில்லை. '' நான் மரணமடை யப்போ கிறேன். சரி அப்போது என்ன செய்வேன்? என்ன செய்யவேண்டும்?'' என்று எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக உறுத்தியது.
இந்த எண்ணம் என் மனதில் ஊடுருவியது. எந்த டாக்டரையும் போய் பார்க்கவில்லை. வீட்டிலோ வெளியிலோ பெரியவர்கள் யாரிடமும் சொல்லி விளக்கம் கேட்கவும் இல்லை. இதற்கு ஒரு முடிவு , விடை, நாமே கண்டுபிடிக்க வேண்டும் என்று மனம் கெட்டிப்படுத்திக் கொண்டே இதை என்
மனதில் இருத்தி விடை தேடியபோது தனிமை தேவைப்பட்டது. ''ஓஹோ நம்மை மரணம் தாண்டிவிட்டது. நெருங்கிவிட்டது. அப்படி என்றால் என்ன, இறப்பது என்பது என்ன? எனக்கு கண்ணில் படும் இந்த உடம்பு தான் சாகப்போகிறது. இதை நாமே பயிற்சி செய்வோம். நாமே நடித்துப் பார்ப்போம்'' என முடிவெடுத்தேன்.. என் கைகால்களை விரைத்துக் கொண்டேன். மரக்கட்டை போல் ஆக்கிக் கொண்டேன். செத்த பிணங்கள் பார்த்திருக்கிறேன். அதில் ஒன்று இது. அசையாமல் மூச்சை இழுத்து பிடித்தேன். சத்தம் வெளியே வராமல் வாயை மூடிக் கொண்டேன். ''நான்'' என்றோ வேறு சத்தமோ போடக்கூடாது. அப்புறம் என்ன பண்ணினேன், என் உடம்பிட ம் சொன்னேன்:
''ஓஹோ இந்த உடம்பு இறந்து போய்விட்டது. அதை எடுத்துக் கொண்டு போகப் போகிறார் கள். ஸ்மசானத்தில் எரித்துவிடுவார்கள். எரிந்து சாம்பல் ஆகியது. என் உடம்பு செத்து, எரிந்தும் போய்விட்டதே.
அப்போது '' நான் யார்'' இறந்து எரிக்கப்பட்ட உடலா? அது தான் இல்லையே. அப்போது நான்? இந்த உடல் இல்லை, நான் உள்ளே இருந்த, உடலை விட்டு வெளியே வந்த ஆவியா? ஓஹோ அதை மரணம் தொட முடிய வில்லையா? அப்படியென்றால் நான் தான் ''அது'' மரணமற்ற ஆத்மா . பளீச் பளீச் என்று இந்த பெரிய வேதாந்தம் என் மனத்திரையில் உண்மையை பேசாத படமாக ஒளி காட்டியது. நான் தான் அப்போ உண்மையில் இருப்ப வன். என் உடம்பு புரிந்த அனைத்து செயல் பாடுகள் எல்லாம் எனக்கு தெரியும். அப்போதி லிருந்து என் உள்ளே நான் புரிந்து கொண்ட தெரிந்து கொண்ட அந்த ''நான் '' என்னைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றையும் தனக்கு சம்பந்தமில்லாமல் கண்டு கொள்ள ஆரம்பித் தது. மரணமோ அதைப் பற்றிய பயமோ விலகியது. அந்த ''நான்'' பற்றியே மனம் சுற்றி சுற்றி வந்து ஆராய்ந்தது. அதோடு தன் வயமானது. மீதி எண்ணங்கள் வந்து போனது. ஒரு பாட்டுக்காரன் பாடும்போது எப்படி சங்கதிகள், ஆலாபனைகள் வந்து போகுமோ அது போல. அவன் எந்த ஸ்தாயியில் உச்சமோ மத்யமமோ அவனது சுருதி, பின்னால் தம்புராவின் ஆதார ஸ்ருதியில் தங்கியிருக்குமோ அப்படி ஒரு நிலை.எது வேண்டுமானாலும் அதை சுற்றி ஆடட்டும் பாடட்டும் பேசட்டும் படிக்கட்டும் எழுதட்டும் எதுவேண்டுமானாலும் பண்ணட்டுமே. எனக்கென்ன சம்பந்தம்? நான் ''நான்'' தான். உடம்பு இல்லாத வேறே ஆசாமி.
இந்த அனுபவத்துக்கு முன்பு எனக்கு உடம்பைத் தாண்டி இந்த ''நான்'' தெரியாது. அது பற்றி எண்ணியதே இல்லை. ஆர்வமும் இருந்ததில்லை. இப்போது என் மனது எப்போதும் அந்த ''நான்'' பற்றியே யோசித்து, ரசித்து ஆனந்திக்கிறது. ''
சாதாரண எல்லோரையும் போல் இருந்த வெங்கட்ராமன் எப்படி மகரிஷி ராமணராக ஒருநாள் மாறினான் என்று பகவானே சொன்னது தான் மேலே.
தமிழ் தெரியாதவர்களுக்கு ஆங்கிலத்திலும் கீழே தந்திருக்கிறேன்.
-----------------------------------------------------------------------
This is what Maharishi Ramana explained about his ''experience of death"
“It was about six weeks before I left Maduraifor good that the great change in my life took place. It was so sudden. One dayI sat up alone on the first floor of my uncle’s house. I was in my usualhealth. I seldom had any illness. I was a heavy sleeper. When I was in Dindigulin 1891 a huge crowd had gathered close to the room where I slept and tried torouse me by shouting and knocking at the door, all in vain, and it was only bytheir getting into my room and giving me a violent shake that I was roused frommy torpor. This heavy sleep was rather a proof of good health. I was alsosubject to fits of half-awake sleep at night. My wily playmates, afraid totrifle with me when I was awake, would go to me when I was asleep, pull me tomy feet, take me all round the playground, beat me, cuff me, sport with me, andbring me back to my bed and all the while I would put up with everything with ameekness, humility, forgiveness and passivity unknown in my waking state. Whenthe morning broke I had no remembrance of the night’s experience. But thesefits did not render me weaker or less fit for life, and were hardly to beconsidered a disease. So on that day, as I sat alone, there was nothing wrongwith my health. But a sudden and unmistakable fear of death seized me. I felt Iwas going to die. Why I should have so felt cannot be explained by anythingfelt in the body. Nor could I explain it to myself then. I did not howevertrouble myself to discover if the fear was well grounded. I felt ‘I am going todie,’ and at once set about thinking out what I should do. I did not care toconsult doctors or elders or even friends. I felt I had to solve the problem myselfthen and there.“The shock of death made me atonce introspective, or ‘introverted’. I said to myself mentally, i.e., withoututtering the words, ‘Now, death has come. What does it mean? What is it that isdying? This body dies.’ I at once dramatised the scene of death. I extended mylimbs and held them rigid as though rigor-mortis had set in. I imitated acorpse to lend an air of reality to my further investigation. I held my breathand kept my mouth closed, pressing my lips tightly together so that no soundmight escape. Let not the word ‘I’ or any other word be uttered! ‘Well then,’said I to myself, ‘this body is dead. It will be carried stiff to the burningground and there burnt and reduced to ashes. But with the death of the body, am“I” dead? Is this body “I”? This body is silent and inert. But I feel the fullforce of my personality and even the sound “I” within myself, apart from thebody. So “I” am a spirit, a thing transcending the body. The material bodydies, but the spirit transcending it cannot be touched by death. I am thereforethe deathless spirit’. All this was not a mere intellectual process, butflashed before me vividly as living truth, something which I perceivedimmediately, without any argument almost. ‘I’ was something real, the only realthing in that state, and all the conscious activity that was connected with mybody was centred on that. Then ‘I’ or my ‘self’ was holding the focus ofattention by a powerful fascination from that time forwards. Fear of death hadvanished once and for ever. Absorption in the Self has continued from thatmoment right up to this time. Other thoughts may come and go like the variousnotes of a musician, but the ‘I’ continues like the basic or fundamental Sruti note (drone) which accompanies andblends with all other notes. Whether the body was engaged in talking, readingor anything else, I was still centred on ‘I’. Previous to that crisis I had noclear perception of myself and was not consciously attracted to it. I had feltno direct perceptible interest in it, much less any permanent disposition todwell upon it. The consequences of this new habit were soon noticed in mylife.”
No comments:
Post a Comment