Friday, September 4, 2020

ADVICE

 பொன்மொழிகள் வேண்டுமா ஸார்?

J K SIVAN

சிந்திப்பது என்றால் ஆக்க பூர்வமாக இருக்கவேண்டும். இதுவரை எத்தனை சிவாஜி கணேசன் படம் பார்த்திருக்கி றோம், எத்தனை தடவை இட்டலி தோசை இத்தனை வருஷம் சாப்பிட்டோம் என்று யோசிப்பது இல்லை.
நமக்கு எத்தனை பேரை தெரியும் என்பதை விட எத்தனை பேருக்கு நம்மை தெரியும் என்ற நிலை உருவாக வேண்டு மானால் நாம் ஏதாவது பிறருக்கு செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது என்றால் தீங்கு, கெடுதல் இல்லை ஸார் , நல்லது மட்டும். கெட்டது தீமை செய்தாலும் ''படுபாவி'' என்று செத்தப் புறமும் வெகு காலம் திட்டுவார்கள். ஹிட்லர், இடி அமின், போன்றவர்கள் இருக்கவே இருக்கிறார்களே உதாரணத்துக்கு.
இன்று சில பொன்மொழிகள் உதிர்த் தால் என்ன என்று தோன்றியது. இதை நினைத்துப்பார்க்கலாமே.
நமது வாழ்க்கைப் பாதையில், போட்டி எதிலும் இருக்கிறது. எனவே ஜாக்கிர தை யாக முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள், பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள். அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
வெட்டுவதிலும் கட்டுவதிலும் கூட சில வித்யாசம் இருக்கிறது. என்னை வெட்டாதீர்கள் அப்போது தான் உங்களுக்கு நிறைய மழை தருவேன் என்கிறது மரம்.. அதே சமயம், ஐயா கட்டாயம் என்னை வெட்டுங்கள் - அப்போது தான் அந்த மழை நீரை நான் உங்களுக்காக சேமிப்பேன் என்கிறது ஏரி குளம், கால்வாய், கிணறு சமாச்சாரங்கள்.
ஒரு சாத்வீக உண்மை. உங்கள் எழுத்தை படித்துவிட்டு முகநூலில் வாட்சப்பில் நிறைய ''கை கூப்பும்'' படங்களும், லைக் களும் வருவதால் அது ஹ்ருதய பூர்வ அன்பாகுமா?
உணவிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. நீ எவ்வளவு இட்டலி தோசை சாப்பிட்டாய், சாப்பிடுவாய் என்பதை அதற்கு தந்த சட்னி, மிளகாய்ப்பொடி யின் தரம் தான் தீர்மானிக்கிறது.
கல்வி பெற கற்பதற்கு புத்தகம் மட்டும் அல்ல, அதை எழுதும் 'நோட்டு புத்த கங்கள் தான் அதிகம் வாங்க வேண்டி இருக்கிறது. ரப் rough நோட்டு தான் அதிகமே செலவா கிய அனுபவம் இருக்கிறதா?!
M F ஹுசேன் என்பவர் மாடர்ன் ஆர்ட் என்று எதையோ குழந்தை கையில் பேனா கொடுத்தமாதிரி கிறுக்குவார் என்று தான் எனக்கு தோன்றியதே தவிர அதை கோடிக் கணக்கான பணம் கொட்டி போட்டி போட்டுக் கொண்டு வாங்குபவர்கள் அதில் எதைக் கண்டார்கள் என்று இனிமேலும் எனக்கு புரியப்போவதில்லை.
உலகத்தில் இந்தியா ஒரு பூஜ்யம் என்று சொல்பவர்கள், இதை உணருங்கள். மதிப்பு இல்லாத அந்த பூஜ்யத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி நமக்கு மதிப்பை பெற்று தந்தவர்கள் நமது முன்னோர்கள் இந்தியர்கள் தான். !!

வீட்டில் வளர்க்கும் ஜிம்மி, மணி, டைகர், என்று என்னென்னவோ பேர்கள் கொண்ட நாய் பூனை ஆடு மாடுகளுக்கு நம் மேல் இருக்கும் உண்மையான பாசம், நேசம், நட்பு, நம் வீட்டில் வந்து நன்றாக சாப்பிட்டு விட்டு கை ஈரம் காய்வதற்குள் நமக்கு பின்னால் பட்டாசு கொளுத்தும் சில மனிதர் களிடம், உறவுகளிடம், ஏன் இருப்ப தில்லை!

சுப்புணி பட்டாபி என்று காரணமே இல்லாமல் சோகமாக இருப்பவர்கள் உண்மையிலே ஒரு சாபக்கேடு. சிரித்துக் கொண்டே காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம். ஆனால் பாடுபடாமலேயே பைத்தியம் என்ற பட்டம் பெற நிறைய வாய்ப்பு உண்டு.
பள்ளிக்கூடத்தில் திருக்குறளை திருவருட்பா கம்பராமாயணம் எல்லாம் படித்தது நிச்சயம் வாழ்வில் முன்னேறு வதற்காக அல்ல. பரிட்சையில் மார்க் வாங்கி தேருவதற்காக . மற்றபடி அதை பின்னால் நினைவு கூர்ந்து மீண்டும் படித்து புரிந்து அனுபவிப்பவர்கள் தான் வாழ்க்கையில் தேறியவர்கள்.
வாழ்க்கையில் நல்லதோ கெட்டதோ அனுபவம் என்பதை பள்ளி, கல்லூரியில், கலாசாலையில் ஆசிரியர் குரு மூலம் பெறமுடியாது. நிச்சயம் அதை அனுபவிக்க நாம் பலமுறை தோல்வி அடைய வேண்டும். புரிந்துகொள்ள சில சமயம் நிறைய துரோகிகளும் உதவுகி றார்கள். இல்லையா ?

1000 ரூவா சம்பளம் வாங்கும்போது இருந்த பற்றாக்குறை என் ஸார் லட்ச ரூவா கிடைச் சாலும் இருந்து கொண்டே இருக்கு? இதுக்கு தான் நமக்கு எப்படி வாழணும் னு தெரியலேன்னு அர்த்தம்.

சினிமா தியேட்டர்கள் ஒன்றில் தான் ஏழைகள், வசதியில்லாதோருக்கு முதலிடம் கொடுத்து கௌரவித்தது. சின்னதாக காட்டும் விஷயங்கள் திரையில் பூதா கரமாக அவளுக்கு தெரிவது பின்னா லிருந்து பார்ப்ப வர்களுக்கு அனுபவிக்க முடியாது.

அழுவது அவசியம் வேண்டும். அழுகை உடல் நலத்துக்கு, உள்ள மேம்பாட்டுக்கு தேவை தான். அதற்காக ஒரு விஷயம் கவனிக்கவேண்டும். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழலாம் . ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக எப்போதும் அழுவது தப்பு. ரொம்ப தப்பு.
பலபேர் ஒப்புக்கொள்ளும் ஒரு உண்மை ஞாபகம் இருக்கிறதா? நியாயமாக, நேர்வழியில், நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டி யல் களுக்கு ஏன் வருவதில்லை..!!!!

நாம் உழைத்து முன்னேறவேண்டும் அதோ பாருங்கள் குப்புசாமி பலூன் வியாபாரியை. உயிரைக்கொடுத்து தன் குடும்பத்தை காப்பாற்றுகிறான். ஆமாம் ஸார் , அவன் விடும் ப்ராணவாயுவில் தான் அவன் விற்கும் பலூன்கள் பெரிதாக காட்சி அளிக்கின்றன. அதை விற்று தானே காசு பெறுகிறான் .

கிருஷ்ணா எல்லோரும் மரம் வெட்டு கிறார்கள். இதை தடுக்க நீ செய்ய வேண்டிய ஒரே யுக்தி ஒவ்வொரு மரத்திலும் ஒரு ரூபாய் காசாவது காய்க்க வேண்டும். நான் என்ன பணம் காய்ச்சி மரமா? என்று சிலர் சொல்கி றார்களே? உண்மையில் பணம் காய்ச்சி மரம் வேண்டாமா? எவனுமே கோடாலி உபயோகிக்க மாட்டான். ஏணி வாங்கி வைத்துக் கொள்வான்.

நிறைய சொல்ல ஆசை தான். அப்புறம் நீங்கள் என் எழுத்தை படிக்கவே மாட்டீர்கள் என்ற பயத்தில் நிறுத்திக் கொள்வதற்கு முன் ஒரே ஒரு பொன்மொழி.
நடு ராத்திரி ஆற்றிலிருந்து திருடிய மண் லாரியில் போகும்போது நீர் சொட்டிக் கொண்டே போகிறதே. அது நீரா ஸார்? இல்லவே இல்லை. இத்தனை காலம் கூடவே இருந்த ஆற்று நீரிடமிருந்து தன்னை பிரித்துக் கொண்டு போகிறார் களே என்ற அழுகை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...