சித்தர்கள் மஹான்கள் J K. SIVAN
சிவவாக்கியர்
வாருங்கள் சிவவாக்கியரே
மழை பெய்தால் மனதுக்கு சந்தோஷம். வான் மழை விடாது பெய்க என்று வாழ்த்து வார்கள் அப்போ தெல்லாம். இப்போதும் அல்ல எப்போதும் மழை அவசியம். செப்டெம்பர் மாதம் முடியப்போகிறது இன்னும் மழை. இந்த வருஷம் இதற்கு அடுத்த வருஷம் பாதிக்கு மேல் மேல் தண்ணீர் லாரிகள் வேகமாக எ தெருவில் ஓடாது என்று நம்பலாம். இப்போதெல்லாம் மின்வெட்டு குறைந்தாலும் மின் கட்டணம் உயர்ந்து கொண்டே போகிறது. ஒன்று இருந்தால் இன்னொன்று இல்லை என்ன செய்வது.
''தாத்தா நீங்க சொல்ற விஷயங்கள் எல்லாமும் மழை போல் ரொம்ப குளுகுளு வென்று ரொம்ப
மன நிறைவு தருது'' என்கிறான் என் எதிரே அமர்ந்திருக்கும் பழைய நண்பர் மாணிக்க முதலியார் பிள்ளை சோமு. மாணிக்க முதலியார் 84வது வயதில் திடீரென்று ஒருநாள் அந்த பரம சிவனைப் பார்க்கவேண்டும் என்று கைலாய பதவி அடைந்து விட்டார்.
' சோமு , இது நான் சொல்றதில்லே. மஹான்கள் நிறைய பேர்சொன்னது நான் அப்பப்போ முடிந்த அளவுக்கு ஞாபகப்படுத்தறேன் எல்லாருக்கும். அவ்வளவுதான்.''
'சிவன் ஐயா, நீங்கள் எத்தனை முறை சொன்னாலும் அலுக்காத மெய்மறக்கச் செய்யும் சிவவாக்யர் பாடல்கள் ஒன்றிரண்டு இன்று சொல்லுங்களேன். அவர் பாடல்கள் எனக்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது எப்போதும்'' என்றான் சோமு.
மாணிக்க முதலியார் ஒரு மரக்கடை முதலாளி. துடைப்பம், விரட்டி வியாபாரம் என்று தொடங்கி இருபது வருடங்களில் மூன்று கிளைகளோடு பெரிய மரக்கடைகளுக்கு நாகப்பட்டின த்தில் முதலாளி. இப்போது

வியாபாரம் பிள்ளைகள் கையில் என்று விட்டு விட்டு ஆன்மீகப் பயிற்சியில் ஈடுபட்டவர். அருமையான ஒரு நண்பர் எனக்கு. இழந்துவிட்டேன் சமீபத்தில்.
''சோமு எனக்கும் சிவ வாக்கியர் ரொம்ப பிடிக்கும். சொல்றேன். கல்கண்டு திங்க சொல்றே .கசக்குமா?''
என்னுடைய பழைய பச்சை கலர் டயரியை புரட்டினேன். தொண்டையைக் கனைத்துக் கொண்டு பாடத் துவங்கினேன். ஓதுவார்கள் பாடும் ராகம் எல்லாம் எனக்கு பாட வராது.
'மாறு பட்டு மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய்
ஊரு பட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே,
மாறு பட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும்
கூறு பட்டுத் தீர்க்கவோ குருக்கள் பாதம் வைத்ததே.''
''என்ன அர்த்தம் புரியுதா சோமு ?
' என்னவோ மணி, வண்டு, எச்சில் , கல், -- அபிஷேகம் மாதிரி ஏதோ...... விளக்கம் நீங்களே சொல்லுங்க தாத்தா
'' தேன் அபிஷேகம் சிவலிங்கத்துக்கு பண்றதைச் சொல்றார் சிவ வாக்கியர். ''முட்டாள்களே, வழி தவறி எங்கெங்கோ போய் காட்டுக்குள் தேடி, வண்டுகளின் எச்சில் மூலம் சேகரிக்கப்பட்ட தேனை, வெயிலிலும் மழையிலும் உலர்ந்து நனைந்த சிவலிங்கம் என்கி ற பழைய கல்லின் மேல் கொட்டி வணங்குகிறீர்களே,

புரிந்து கொள்ளுங்கள், தேவர்களுள் உள்ள பிணக்கை தீர்த்தவனும் அடி முடி காணாத ஜோதியுமான என்னை அறிய முயலுங்கள்.நான் கல்லில்மட்டும் இல்லையே'' என்கிறார் சிவன்''.
சிவ வாக்கியரை ஏதோ கலர் சட்டை போட்ட நாத்திகவாதி என்று அவசர அவசரமாக முத்திரை குத்தாதே சோமு. கொஞ்சம் புரட்சியான எண்ணங்களை தைர்யமாக சொல்பவர்.ஆனாலும் அவர் சிறந்த தெய்வ பக்தர். பின்னால் அவரே திரு மழிசை ஆழ்வாராக வைணவ பக்தரானார் என்றும் சொல்வதுண்டு. இன்னும் ஒன்று சொல்லவா. இதோ இந்த பாடலைப் பார்ப்போமா ?

''சுரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவ வாக்கியம்
தோஷ தோஷ பாவமாயை தூரதூரஓடவே
கரியதோர் முகத்தை உற்ற கற்பகத்தை கைதொழக்
கலைகள் நூற் கண் ஞானமும் கருத்தில் வந்துதிக்கவே
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி ஒதிடும் பிழை பொறுக்கவேண்டுமே
இதற்கென்ன அர்த்தம் தெரியுமா?
இந்த அஞ்செழுத்து மந்திரம் இருக்கிறதே ''ஓம்நமசிவாய'. ' இதன் சக்தி அளவிட முடியாதது. முதலும் முடிவும் இல்லாதது மட்டுமல்ல. அதுவே எல்லாமு மானது. முப்பத்து முக்கோடி தேவரும் வணங்கும் சிவனை இந்த நாம மந்திரத்தோடு உச்சரித்தால், தோஷம், பாவம், மாயை, துன்பம் சகலமும் விலகும். ஓடிவிடும். கரிய முகத்தோடு கூடிய சிவன் ஞான சிகரம். மோன விளிம்பு. ஏதோ அறியேன் பேதையாக பிதற்றுபவன் சிவவாக்கியம் என்று தவறாக எதையாவது சொல்லியிருந்தால் க்ஷமிக்கவேண்டும் .அவனுக்கே பித்தன், பேயன் சுடலையான் என்று தானே பெயர்...
இன்னும் மேற்கொண்டு சொல்கிறேன். இன்றைக்கு இது போதும்.
No comments:
Post a Comment