Friday, September 18, 2020

KARMA

 


 

 

 ஜாக்கிரதை,  சித்ரகுப்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான் 
                                                                        J K  SIVAN  

பயந்த ஸ்வபாவம். ஒரு வார்த்தை அதிர்ந்து பேசாதவர் நாகநாதய்யர். நல்லவர். படித்தவர். அவருக்கு ஏன் இவ்வளவு கஷ்டம் மேலே மேலே படுத்துகிறதே.  இது தான் தெய்வ சங்கல்பம். இதைத்தான் கர்ம பலன் என்பது.   தீயவன் சொக்கியமாக சுபிக்ஷமாக இருப்பது அவன் முன்வினை நற்பயன். வெள்ளைக்காரனைப் போல்  நமது அடுத்த தலை முறைக்கும்  கடவுள் , மறுபிறப்பு, கர்மா என்பதில்  நம்பிக்கை இல்லாமல் நூறு கேள்விகள்.

ஸ்வர்கம் நரகம் என்பவை அவனவன் தானே உண்டாக்கிக் கொள்வது தான்.  வெகுகாலமாக  சித்ர குப்தன் என்பவன் ரிட்டையர் ஆகாமல் இன்னும்  எல்லோர் கணக்கையும்  கமா , முற்றுப்புள்ளி விடாமல் கவனித்து எழுதி என்ன தண்டனை  எமதர்மனின் ரூல் பிரகாரம் என்று நிறைய  எண்ணெய் சட்டிகள் கொதிக்க
வைத்துக் கொண்டு  நமக்காக   காத்திருக்கிறான் என்ற பயம்  அநேகருக்கு இன்னும் இருக்கிறது. 
மூச்சை விட்டு இங்கிருந்து போகிற  ஜீவன்  கையைக் கட்டிக்கொண்டு  எமன் முன்னால் நிற்க அவனது பூலோக  வாழ்க்கை நிகழ்வுகளை ஒன்று விடாமல் சித்ர குப்தன் தனது நோட் புக்கிலிருந்து படிப்பான். 

''அடாடா,  நாம் இதெல்லாமா இப்படியெல்லாமா செய்தோம். யாருக்கும் தெரியாது என்று நினைத்தோமே, இந்த பயல் சித்ரகுப்தன் எப்படி பார்த்துவிட்டான்?''  என்று  திகைக்க,  நமது கர்மத்துக்கு,  செயலுக்கேற்ப ஸ்வர்கமோ நரகமோ நிச்சயம். கோடானு கோடி ஜனங்களின் வாழ்க்கை விஷயங்களை எப்படி  சி.கு.  எழுதுகிறான்? விஞ்ஞான பூர்வமாக அவன் இல்லவே இல்லை.  

ஸமஸ்க்ரிதத்தில் சித்ர குப்தன் என்றால்  '' மறைந்திருக்கும் உருவம்''.  எனவே சி .கு. ஒவ்வொருவர் மனத்திலும் மனசாக்ஷியாக  இருப்பவன். நாம் செய்யும், நினைக்கும்,  நல்லது கெட்டது தான் கர்மா.  அது   நமக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடக்கிறது. அதற்கேற்ப பலனை அனுபவிக்க வேண்டாமா?

ஒரு விஷயம் புரிந்து கொள்ளவேண்டும்.  நமது புத்தி நான் என்ன செய்கிறோமோ அதை எல்லாம்  செய்ய வைக்கிறது.   ''சித்தம்'' என்பது  பழக்கவழக்கம், செய்முறை,  நமது குணாதிசயங்களை நிர்ணயிப்பது. ''அஹங்காரம்''என்பது   நாம்  நமது நான்  என்ற சமாச்சாரங்கள் அதிகாரி அதை தான்  ஆங்கிலத்தில் ''ஈகோ(Ego என்கிறோம்.  சித்தத்தோடு ரொம்ப நெருங்கிய உறவு. உடல் நீத்தபிறகும்  ஜீவனோடு ஒட்டிக்கொண்டு பயணம் செய்வது.  இது தான் ஐயா  சித்ரகுப்தன் நமக்குள் இருப்பவன்.  மனதின் உட்கட்டு செயல்பாடுகள் . நாம் செய்த அத்தனை காரியங்களையும்  பதிவு செய்துகொள்வது. ஸம்ஸ்காரம்  அன்று வடமொழியில்.  உலகத்தில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அத்தனை சித்ரகுப்தர்கள் .  மனித மனம் எத்தனையோ கம்ப்யூட்டர்களை விழுங்கி ஏப்பம் விடும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...