வீட்டிற்கு அவசியமான ஒரு ரக்ஷை - J K SIVAN
நாம் தானம் தர்மம் செய்வதில்லை என்று யார் சொன்னது? எவ்வளவோ பொருள்களை நாம் அவ்வப்போது தர்மம் தானம், பரிசாக கொடுக்கிறோமே. ஒருவருமே இதை புகழவில்லையே? கல்வெட்டுகளில் நமது பெயர்களை ஏன் காணோம்?
''நீ எங்கே ஐயா தான தர்மம் மனதார செய்தாய்? நீ தானம் செய்கிற லக்ஷணத்துக்கு கல்வெட்டு வேறு கேட்கிறதோ?'' மனசாக்ஷி கேட்டது.
ஓஹோ அப்படியென்றால் நான் தானம் தர்மம் எதுவும் செய்யவில்லையோ?''
''இல்லை சுவாமி, நீங்கள் உங்களுக்கு தேவை இல்லாததை, உபயோகமில்லாததை மற்றவர்களுக்கு கொடுத்தவர். சின்னதாக போன டிரஸ், பழைய இனி தேவையில்லாத விஷயங்கள், படிக்காத, படிக்க விருப்பமில்லாத, பழைய கால புஸ்தகங்கள், வீட்டில் வைத்துக்கொள்ள இடமில்லாத சமாச்சாரங்கள், சாப்பிட்ட மீதி, வீட்டை அடைத்துக்கொண்டு கண்ணை உறுத்தும் வஸ்துக்கள், இதெல்லாம் மற்றவருக்கு கொடுப்பது தானமோ தர்மமோ அல்ல. உங்களிடம் இருக்கும் குப்பைகளை அகற்றுவது, இது தானமா தர்மமா? ஆனால் ஒருவகையில் இதுவும் நல்லது தான். கீழே குப்பையில் போடுவதற்கு பதிலாக மற்றவருக்கு கொடுப்பது. அதை பெரிதாக சொல்லிக்கொள்வது கொஞ்சம் ஓவர்.
எத்தனையோ பேர் உண்மையிலேயே தான தர்மம் செய்தவர்கள், செய்பவர்கள் இருக்கிறார்கள். ஒருவரைப் பற்றி மட்டும் சொல்கிறேன்.
வால்மீகி நமக்கு கொடுத்தது மிகச்சிறந்த பரிசு. அவருடைய சிறந்த கடின உழைப்பு. பக்தி பூர்வ படைப்பு. ராமாயணம். அதை அவர் விற்கவில்லை. வேண்டாமென்று ஒதுக்கி யாருக்கோ தரவில்லை. தன்னுடைய சிறந்த படைப்பைத் தான் பெருமையாக தந்திருக்கிறார்.
அதில் மிக அற்புதமான ஒரு பகுதி சுந்தரகாண்டம். ரிஷிகளெல்லாம் போற்றிய தீமையை விலக்கி, நன்மை தருகிற இன்னும் எத்தனையோ தலைமுறைகளுக்கு இவ்வாறு உதவும் அருமையான ஸ்லோகங்கள். வாழ்க்கைக்கு ஊன்றுகோல். சுந்தரன் என்பது ஸ்ரீ ஹனுமனை.
பக்தன் உட்கார்ந்து அவனை பாராயணம் பண்ணும்போது பகவான் நின்று ஆடிக் கொண்டு பரவசத்தோடு அதை ரசிக்கிறான் என்பார்கள். வேண்டியதை மனமுவந்து தருகிறான். அது தான் பரிசு. எத்தனையோ முறை கேட்டாலும் அலுக்காத இதிகாசம் ராமாயணம். எங்கு யார் எப்படி சொன்னாலும் அங்கே ராமாயணம் கேட்க ஹனுமான் ரெடி. அவனுக்கு ஒரு பலகை போட்டு வைத்திருக்கிறோம் அவன் வந்து அமர்ந்து கேட்க.
வேடன் வால்மீகி நாரதரை காட்டில் சந்தித்து அவரிடம் '''நீ இப்போது முதல் ''மரா மரா '' என்று மனதில் விடாமல் சொல்லு'' என்று உபதேசாம் பெற்று அவ்வாறே பலகாலம் தன்மீது புற்று உண்டாகி அதில் முழுதும் மூழ்கி மண்மேட்டில் புதைந்து மறைந்து இருந்ததை க்கூட அறியாமல் விடாமல் தியானித்ததின் பலனாக நமக்கு ராமாயணம் கிடைத்தது. கிட்டத்தட்ட கால் லக்ஷம் ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணத்
தில், பாலகாண்டம் , அயோத்தியாகாண்டம், ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தரகாண்டம், யுத்த காண்டம், உத்தரகாண்டம் என்று பகுதிகள்.
ஹனுமான் அடக்கமே உருவான அதி பலசாலி. ஒன்றுமே இல்லாத நாம் நம்மைப் பற்றி வீரன் சூரன் என்று நாமே புகழ்ந்து கொள்கிறோமே , மகா சக்திவாய்ந்த ஹநுமானுக்கு தனது சக்தியே தெரியாது. ஜாம்பவான் தான் ஊக்குவித்து உன்னால் கடலைத் தாண்ட முடியும் என்று அறிவுறுத்துகிறார். சுந்தரகாண்டத்தில் முக்கியமான சம்பவங்கள்:
விஸ்வரூபத்தோடு ராமநாமத்தை உச்சரித்துக்கொண்டு நூறு யோஜனை தூர கடலைத் தாண்டுவது,சுரசை எனும் ராக்ஷஸியை சமயோசிதமாக வெல்வது, நிழலைப் பிடித்து நிஜத்தை வசப்படுத்தி கொன்று தின்னும் ஸிம்ஹிகாவை கொல்வது , லங்கை காவல் தெய்வம் லங்கிணியை வெல்வது, சிறு குரங்கு வடிவில் லங்கையில் சீதையை எங்கும் தேடுவது, அசோக வனத்தில் சீதையை நமஸ்கரித்து ராமர் தந்த கணையாழியை அளிப்பது. ராவணனின் மாளிகைகளை சேதப்ப
டுத்தி வேண்டுமென்றே பிடிபட்டு, ராவணனை சந்திப்பது, அவனுக்கு நல்லுரை கூறுவது, வாலில் தீயுடன் லங்கையை அழித்து கடலைத் வந்து சீதை தந்த சூடாமணியை ராமரிடம் தருவது.
டுத்தி வேண்டுமென்றே பிடிபட்டு, ராவணனை சந்திப்பது, அவனுக்கு நல்லுரை கூறுவது, வாலில் தீயுடன் லங்கையை அழித்து கடலைத் வந்து சீதை தந்த சூடாமணியை ராமரிடம் தருவது.
ஹனுமான் யார்? வாயு புத்ரன், பிராணவாயு இல்லாவிட்டால் நாம் எதற்கும் உதவாத ஜடம். ராமாயணத்தில் பிராணவாயு ஹனுமான். சுந்தரகாண்டம் அவன் மஹத்வத்தை சொல்கிறது. கட்டாயம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய ஒரு பாராயண நூல்.
No comments:
Post a Comment